Monday, November 30, 2009

ஒரு கரு நான்கு கதைகள்!



முன்கதைச்சுருக்கம்:

[அழகான மாலையொன்றில் கடற்கரையில் நண்பர்கள் நால்வர்(நிலாரசிகன்,அடலேறு,ஜனா,
அதிபிராதபன்) சந்தித்தோம். அப்போது ஜனா ஒரு சிறுகதைக்கான மிகச்சிறந்த கருவை எடுத்துரைத்தார். அம்மா அப்பா குழந்தை மற்றும் ஓர் இராணுவ வீரன் - இவர்கள்தான் கதையில் நடமாடும்
பாத்திரங்கள். நாங்கள் நால்வரும் ஒரே கதையை வெவ்வேறு கோணத்தில் எழுதி இருக்கிறோம்.
குழந்தையின் பார்வையில் சொல்லப்பட்ட கதையாக நிலாரசிகனும்,
அம்மாவின் பார்வையாக அதிபிரதாபனும்,அப்பாவின் பார்வையாக அடலேறுவும்,இராணுவ வீரனின்
பார்வையாக ஜனாவும் எழுதி இருக்கிறோம். நான்கு கதைகளும் ஒரே நேரத்தில் வலையேற்றம் செய்யப்படுகின்றன.
மற்ற மூவர்களுக்கான சுட்டி கதையின் முடிவில் கொடுக்கப்பட்டிருக்கிறது. வாசித்து உங்களது பின்னூட்டத்தை
பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.]

“புத்தம் சரணம் கச்சாமி”

நான் கோப்ரல் லயந்த கர்ணாகொட.
சொந்த இடம் நொச்சியாகம அனுராதபுரம்.

யுத்தம் முடிந்துவிட்டது என சக இராணுவ வீரர்களின் (“ஜெய வேவா”) வெற்றிக்கோசங்கள் என் காதுகளை வந்தடைந்த நாள். உண்மையில் நான் பெரு மகிழ்ச்சி அடைந்தேன். என் நினைவுகளில் சிறுகச்சிறுக நான் என் கிராமத்தில் கட்டிக்கொண்டிருக்கும் வீடும், என் மனைவி சாமிலியும், ஐந்துவயதை தொட்ட என் செல்ல மகள் காமலியும் நினைவுகளில் வந்துபோனார்கள். இவை எல்லாவற்றையும் மேலாக என் உயிருக்கு 90 சதவீதமான ஆபத்து தவிர்கப்பட்டுவிட்டது என்பதே அப்போது என் சந்தோசத்திற்கு முக்கியமான காரணமாக இருந்தது.
அடுத்து தெய்வ புண்ணியத்தாலோ என்னமோ நான் கடந்த ஆறுமாத காலத்திற்கு முன்னதாக வன்னி பெருநிலப்பரப்பில் உள்ள உயிலங்குளம் மோதல்களில் தலையில் காயமடைந்த நிலையில் வவுனியா மருத்துவமனையில் சிகிற்சை பெற்று, கடந்த மாதம்தான் பணிக்கு திரும்பியதால், இறுதி யுத்தத்திற்காக அனுப்படவில்லை.

இறுதி யுத்த களத்திற்கு செல்லவில்லை என்றாலும், வவுனியா பிரதான முகாமில் பணியில் இருந்த என்னால், இறுதி நாட்களில் நடந்த யுத்தத்தின் கோரங்களை ஊகிக்க முடிந்தது. மரணமடைந்தும், காயமடைந்தும் வரும் இராணுவ வீரர்களின் தொகை உச்சத்தில் வந்துகொண்டிருந்தபோதே அங்கே நடப்பது ஒரு பூகம்பம் என்பதை அப்போதே புரிந்துகொண்டிருந்தேன். இறந்த நிலையில் வந்து குவிந்த ஒவ்வொரு இராணுவ வீரனின் உடலை கடக்கும்போதும், பெருங்கவலைகளுக்கு மத்தியிலும் என்னை காப்பாற்றியதற்காக புத்த பகவானுக்கு மானசீகமாக நன்றிகளை கூறிக்கொண்டிருந்தேன்.

அடடா..இந்தியாவின் நேரடி நெறியாள்கையில், சீனாவின் முழு ஆசீர்வாதத்துடனும் தேவையான வளத்துடனும், பாகிஸ்தானின் நவீன ரக ஆயுதங்களின் அணிவகுப்புடனும், ரஷ்யாவின் ராங்கிகளுடனும், இன்னும் பல பிறநாடுகளின் பின் பலத்துடன், இந்திய செய்மதி தகவல் வழங்கலுடன் என பெரும் உலக பலம் கொண்டு நின்ற எம்முடன், தனித்து நின்று மோதி இத்தனை இராணுவ வீரர்களுக்கு சேதம் விளைவித்த எதிரணியினரை நினைத்தால் அப்போது எனக்கு மலைப்பாவே இருந்தது.

வெற்றிக்கழிப்பிலும், கொண்டாட்டங்களிலும் ஒருவாரம் போனது. இந்த நிலையில்த்தான் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து அரசாங்கத்தினால் அமைத்துக்கொடுக்கப்பட்ட கொட்டகைகளில் அடைக்கப்பட்ட மக்களை காவல்காக்கும் கடமைக்கு என்னையும் நியமித்து அங்கு செல்லும்படி பணிப்பும் வந்திருந்தது. அங்கிருந்து வந்தவர்களை பார்க்க என ஒரு ஏழனத்துடனும், ஒருவித சந்தோசத்துடனும்தான் நான் அங்கே சென்றிருந்தேன்.
பாரிய முள்வேலியால் சுற்றிவர அடைக்கப்பட்ட பெரியதொரு நிலப்பரப்பில் சிறு சிறு கூடாரங்களுக்குள் மக்கள் கூட்டம் அடைக்கப்பட்டிருந்தார்கள். கிளர்ச்சியாளர்களும் மக்கள் மத்தியில் இருக்கலாம் என்றும் எனவே கடுமையாகவே அவர்களுடன் நடந்துகொள்ளவேண்டும் என மேலிடத்தினரால் நாம் அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.

அங்கு நான் இதுவரை பார்த்திராத வித்தியாசமான பல காட்சிகளையும், வேதனையான பல முகங்களையும், காயமடைந்த நிலையில் முனகும் பலரையும் பார்த்தேன். என்னமோ தெரியவில்லை இவர்களும் எங்கள் நாட்டவர்கள்தான் என்ற எண்ணம் எனக்கு கடுகளவும் வரவில்லை என்பதே உண்மை.
என் காவல் நிலையத்திற்கு முன்னால் இருந்த கூடாரத்தினுள்; உள்ளே நடப்பது அனைத்தும் எனக்கு தெளிவாக தெரியும்படி இருந்தது.
அங்கே மூன்று முதிய பெண்களும், இரண்டு முதிய ஆண்களும், எப்போதும் சிணுங்கலுடன் ஒரு அழகான சிறுமியும் தெரிந்தார்கள். ஏதோ ஒரு உந்துதலின் காரணமாக நான் அந்த இடத்தில் அருகில் சென்று கவனித்தேன்.
அங்கிருந்த மூதாட்டி ஒருவருக்கு சிங்களம் தெரியும் என்பதால் என்னிடம் சிங்களத்தில் பேசினார்;.

மக்கள் அனைவரும் இடம்பெயர்ந்து வரும் வழியில் இந்த சிறுமி பெற்றோர்களை தொலைத்துவிட்டு, பரிதவித்து நின்றதாகவும், கடும் குண்டு வீச்சுக்கு மத்தியில் அங்கே நின்றால் ஆபத்து என, தாம்தான் இந்த குழந்தையினை தூக்கி வந்ததாகவும், வரும் வழியில் பல்லாயிரக்கணக்கான மக்களின் பிணங்களை கடந்தே வந்ததாகவும், இந்த சிறுமியின் பெற்றொரும் இறந்துபோயிருக்கலாம் என்று சொல்லி, இத்தனை கோரங்கள் கொடுமைகளையும் பார்த்துவிட்டோம், இறைவா இந்த பிறப்பில் நீ எங்களுக்கு செய்த அற்புதங்கள் போதுமய்யா, மீண்டும் ஒரு பிறப்பை மட்டும் தந்துவிடாதே, தந்தாலும் மனிதராக, அதுவும் தமிழனாக பிறவியை தந்துவிடாதே என அந்த மூதாட்டி சொல்லி அழுதாள்.
கைகளில் ஒரு பொம்மையை வைத்துக்கொண்டே அடுத்த மூதாட்டியின் பின்னால் ஒட்டிக்கொண்டு அச்சத்துடன் என்னை சரிந்தபடி பார்த்தாள் அந்த சிறுமி.

மிகத்தெளிவான அவளது கண்களும், ஒழுங்காகச்சீவாமல், பிசிறு பிசிறாக இருந்த அவள் தலைமுடியும், களையான முகமும் முதல் முதலாக என் இதயத்தில் இரக்கம் கொள்ளவைத்தது.
அவளது கைகளில் இருக்கும் பொம்மை மிகவும் அழுக்காக இருந்தது. ஆனால் அவள் அந்த பொம்மையினை ஒருபோதும் கைவிடுவதற்கு தயாரானதாக தெரியவில்லை. அவளது கண்களில் மட்டும் ஏதோ ஒரு செய்தி காத்திருந்ததுபோல எனக்கு தோன்றிக்கொண்டே இருந்தது. என்னவென புரிந்துகொள்ளமுடியாத ஒரு பார்வை அது. அந்த பார்வைக்கு அர்த்தம், ஏக்கமா?, கோபமா?, வெறுப்பா?, பயமா? என புரிந்துகொள்ளமுடியவில்லை.

மாலை மங்கி இருள் சூழ ஆரம்பித்தது. அங்கிருக்கும் முதியவர்களுடன் அந்த சிறுமி எதற்கோ அடம்பிடித்துக்கொண்டிருப்பது புரிந்தது. அருகில் சென்று பார்த்தேன். அவள் அந்த அழுக்கான பொம்மையினை வைத்திருப்பதை தவிர்க்க அந்த முதியவர்கள் எடுத்த முயற்சியினாலத்தான்; அவள் சிணுங்கினாள் என்பது புரிந்தது.
ஆனால் அந்த பொம்மைக்குள் அந்த சிறுமியின் எத்தனை அழகிய நினைவுகள் ஒழிந்திருக்குமோ என்ற எண்ணம் எனக்கு பொறிதட்டியது. இந்த பொம்மையை எப்படியாவது சிறுமியிடமிருந்து பெற்று. அதை சுத்தம் செய்து கொடுக்கவேண்டும் என்று மனதுக்கு பட்டது. அந்தச்சிறுமியை வெருட்டுவதுபோல பயம்காட்டி, அந்த பொம்மையை பிடுங்கிவந்து எந்தன் காவலரனில் வைத்தேன். நாளை அதை சுத்தம் செய்து அவளுக்கு கொடுக்கலாம் என்று. சத்தம் இல்லாமல் அவள் தேம்பித்தேம்பி அழுவது எனக்கு தெரிந்தது, மனதில் பெரும் வேதனை சூழ்ந்துகொண்டது.

இரவு 9 மணி இருக்கும் வெளியில் ஒரு மணிநேர சுற்றுக்காவலுக்கு நான் போய்வரவேண்டி இருந்தது. என் இடத்திற்கு வேறு பிரிவு இராணுவத்தினர் அந்த ஒரு மணிநேரத்திற்கு நிற்பார்கள். ஒரு மணி நேர சுற்றுக்காவல் நடவடிக்கையினை முடித்துக்கொண்டு திரும்பும் வேளையில் ஆவலாக, வந்து பொம்மையை பார்த்தேன் பொம்மையை காணவில்லை. சிறுமியை நினைத்து, அவள் நித்திரையாகியிருப்பாள் என முடிவெடுத்துக்கொண்டேன். கூடாரத்தின் பின்னால் தூரத்தில் ஒரு இராணுவ வீரன் சிறுமியை கூடாரத்தை நோக்கி அழைத்து வருவதை கண்டேன். அவன் அந்த சிறுமியை கூடாரத்தில் விட்டுவிட்டு, வெளியேறிவிட்டான்.
உடனடியாக சிறுமியை அவன் அழைத்துவந்த திசைநோக்கி சென்று பார்த்தேன் சற்று தொலைவில் முள்வேலியில் அந்த பொம்மை துண்டுதுண்டாக பிய்க்கப்பட்டிருந்தது.

மனதில் ஏதோ எல்லாம் செய்ய. வந்து என் காவல் நிலையத்தில் உக்கார்ந்துகொண்டேன். சற்று முன் எனக்கு சிங்களத்தில் கடைசியாக அந்தக்கிழவி சொன்ன கடைசி வசனத்தின் அர்த்தம் தெளிவாக புரியமுடிந்தது.
முதல் முதலாக என்னில் எனக்கே வெறுப்பு வந்தது.
இங்கேயே இந்தளவு கேவலாமாக நடப்பவர்கள், யுத்தமுனையில் இந்த மக்களை எப்படி எல்லாம் சீரழித்திருப்பார்கள் என மனம் நினைத்துப்பார்த்துமே உடல் நடுங்கியது. முதல் முதலாக நெஞ்சம் உண்மையின் பக்கம் நின்று பதை பதைத்தது. இருட்டுக்குள் கிடந்தவன் முகத்தில் பிரகாசமான ஒளி திடீரென ஒளிர்ந்தால் எப்படி கூசுமோ அப்படி மனதும், உடலும் கூசியது.

எப்படியோ அன்றிரவை கழித்தேன். மறுநாள் அவசரமாகச்சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு, அவசர அவசரமாக என் நிலைக்கு ஓடிவந்தேன்.
காரணம் என் கண்முன்னால் நடக்கும் அநியாயங்களையாவது முடிந்தவரை தடுத்துவிடலாம் என்ற துணிவுடன்.
அங்கே அந்த மக்கள் அனைவரும் நீண்ட வரிசையில் நின்றார்கள், ஏனெனில் தொண்டு நிறுவன அமைப்பு ஒன்று அவர்களுக்கு உணவாக ரொட்டிகளை கொடுத்துக்கொண்டிருந்தது. அந்தச்சிறுமி எங்கே என்று என் கண்கள் தேடின. அவளை அந்த வரிசையில் காணவில்லை. முளங்காலுக்குக்கீழே சொறண்டப்பட்டு, மாமா.. என்ற மழலை மொழியுடன், தன் கையில் இருந்த பண்ணை எனக்கு நீட்டியபடி, வஞ்சகம் இல்லாமல் என் முகத்தைப்பார்த்து புன்னகைத்துக்கொண்டிருந்தாள் அவள்.

புத்தன் போதிமர நிழலில் ஞானம் பெற்றபோது என்ன நிலை அடைந்தான் என நான் படித்ததுண்டு, அந்த நிலையினை அந்தக்கணம் நான் அடைந்தேன். என்னையும் அறியாமல் தாரை தாரையாக என் கண்களில் நீர் வழிந்தோடிக்கொண்டிருந்தன. என் கையில் இருந்த ஆயுதம் கையை விட்டு நழுவிய அதேகணம், நான் வாஞ்சையுடன் அவள் கன்னங்களை தொட்டபோது…
“புத்தம் சரணம் கச்சாமி” என்ற ஒலி என் காதுகளில் மட்டும் கேட்டது.
- ஜனா

மற்ற மூன்று கதைகள்:
வேலியோர பொம்மை மனம் -நிலாரசிகன்
சுடர் - அதி பிரதாபன்
மரப்பாச்சி பொம்மை- அடலேறு

Sunday, November 29, 2009

ஞாயிறு ஹொக்ரெயில். (29.11.2009)

ஒரு கருவில் நான்கு பதிவர்களின் கதை.
பதிவுலகில் புதிய முயற்சி.
நான்கு பதிவர்கள் (நிலாரசிகன், எவனோ ஒருவன் அதி பிரதாபன், அடலேறு, ஜனா)
சென்னை, கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள கடற்கரை ஒன்றில் பல மணித்தியாலங்களாக பல்வேறு பட்ட விவாதங்களை முன்னெடுத்துக்கொண்டு சென்றபோது உதித்த கரு ஒன்றினை வைத்து, வேறு வேறு கோணங்களிலும், அந்த கதையில் வரும் நான்கு பாத்திரங்களாக ஒவ்வொருவரும் எழுதுவதாகவும் எடுக்கப்பட்ட முடிவு, தற்போது முழுமைபெற்றுள்ளது.
நாளை திங்கட்கிழமை இந்த புதுமுயற்சியில் இந்த பதிவர்கள் நால்வரும் இணைந்து ஒரே நேரத்தில் பதிவுகளை இட தீர்மானித்துள்ளார்கள் என்பதையும், கண்டிப்பாக வாசிப்பபவர்களுக்கு இது ஒரு புதிய அனுபவமாக இருக்கும் என்பதையும் நம்பிக்கையுடன் கூறிக்கொள்கின்றேன்.

பிரகாஷ்ராஜ்ஜின் உணர்வு.
பிரகாஷ்ராஜின் நடிப்பு மட்டும் இன்றி அவரது எழுத்துக்களும் மிக அற்புதமாக இருக்கும் என்பது பல தமிழ்நாட்டு வார சஞ்சிகைகளில் அவரது தொடர்களை படித்திருக்கும் அனைவருக்கும் தெரிந்திருக்கும்.
இது தவிர அவர் ஈழ மக்களின் மேல் உண்மையான மதிப்பும், உணர்வும் பாசமும் கொண்டவர் என்பதும், சில உண்மைகளை அச்சமில்லாமல் வெளியிட தயங்குபவர் இல்லை என்பதும் சிலருக்கு தெரிந்திருக்கலாம்.
தமிழ் என்று தெரிவித்து, தமிழச்சி பால் குடித்தவன் என்றெல்லாம் திரைப்படப்பாடல்களில் காட்டி பணம் பாhத்து, யாழ்ப்பாண மண்ணின் பாசையிலேயே பேசி நடித்து அதிலும் அதிக இலாபம் அடைந்து, ஈழ மக்கள் பற்றி தனிப்பட்ட ரீதியில் வாயே திறக்காமல் இருக்கும் சுத்த தமிழ் நடிகர்களுக்கு மத்தியில் பிரகாஷ்ராஜ் ஒரு குண்டுமணி.


பிரகாஷ்ராஜ் தெனாலி இணைய இதழில் “தொடுவானம்” என்ற பெயரில் தொடர்ந்தும் எழுதிவருகின்றார்.
இதனைப்படிக்க
இங்கே சொடுக்கவும்

குறும்படம்.(BlastOff!)

நமக்கு பல கதைகளை தயார்செய்து வைத்துக்கொண்டு ஒரு குறும்படம் எடுப்பதற்கே படாதபாடு படவேண்டிய நிலையே இன்றும் உள்ளது. ஆனால் வெள்ளைத்தோல்கள் குறும்படங்களை எடுத்து அடுக்கிவிட்டு. இப்போது பெரும்பாலும் அனிமேசன் குறும்படங்களை பல செய்திகளை சொல்லவைத்து எடுத்து, வியப்பினை ஊட்டுகின்றார்கள்.

நான்போகிறேன் மேலே மேலே
சென்னை 600028 இன் யாரோ..யார் நெஞ்சில் இங்கு யாரோ என்ற பாடலின் பின்னர் கிட்டத்தட்ட இரண்டு வருடங்களின் பின்னர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், சின்னக்குயில் சித்திரா (இவர் எப்பொதும் குரலால் சின்னக்குயில்தான்) ஆகியோர் பாடிய “நான் போகிறேன் மேலே மேலே பூலோகமே கீழே” என்ற பாடல் கேட்கும்போது இசை இனிக்கின்றது. நாணயம் திரைப்படத்தில் ஜேம்ஸ் வசந்தின் இசையில் இந்தப்பாடல் சுகமாக ஒலிக்கின்றது. தற்போது இசை ஆவலர்களின் ரிங்கிங் ரோனாகவும் இந்தப்பாடல் மாறியுள்ளது குறிப்படத்தக்கது.
அதெப்படி ஆயிரம் நிலவே வாவில் இருந்து நான் போகின்றேன் மேலேமேல வரை, எஸ்.பி.பியின் வயது ஏறினாலும் குரல் மெருகேறிக்கொண்டு போகின்றது என்பதுதான் பெரிய ஆச்சரியமாக உள்ளது.

உலகின் பிரபலமான 100 பேரில் மாயா அருட்பிரகாசம்.

மாதங்கி அருட்பிரகாசம் (மாயா) என்ற இயற்பெயரை கொண்ட, ஈழத்தைச்சேர்ந்த
பிரித்தானியாவில் பிறந்து வளர்ந்தவரான ஒரு தமிழ்ப்பெண் இவர்.
ஈழ மக்களின் உணர்வுகளையும் வேதனைகளையும், ஈழத்தவர்களின் மறப்போர் விபரத்தையும் இவர் தனது பாடல்கள்மூலம் வெளிக்காட்டியிருந்தார்.
2008ஆம் ஆண்டுக்கான கிராமி விருதுக்கு இவரது பெயரும் பரிந்தரைக்கப்பட்டிருந்தது.
Piracy Funds Terrorism (2004)
அருளர் (Arular, 2005)
பில்போர்ட் 200
போன்ற பல இசைத்தொகுப்புக்களையும் இவர் வெளியிட்டுள்ளார்.
சிறந்த 100 பேர் பட்டியிலில் 42 ஆவது இடத்தினை இவர் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஒஸ்கார் விருது கிடைத்த சிலம்டாக் பில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த 100பேர் பட்டியலில் ஏ.ஆர்.ரஹ்மானும் இடம்பெற்றுள்ளார். அவர் 59அவது இடத்தில் உள்ளார்.
100 பேர் பட்டியலையும் மேலோட்டமாகப்பார்க்க..

சர்தாஜி ஜோக்
ஷர்தாஜியும் அவரது மனைவியும் கோப்பி சொப் ஒன்றுக்கு சென்று இரண்டு சுடு கோப்பிகள் வாங்கி குடித்தனர். விலை மனுவைப்பார்த்த ஷர்தாஜி….
கெதியாக கோப்பியை குடி என்றார்….ஏன் என்று கேட்ட மனைவிக்கு அங்கு தொங்கிக்கொண்டிருந்த விலை மனுவைக்காண்பித்தார் நம்ம ஷர்தாஜி
ஹெட் கோப்பி -05 ரூபா
கூல் கோப்பி -10 ரூபா.

Saturday, November 28, 2009

100 முக்கியமான பிரபலங்கள். (ரைம்ஸின் கணிப்பு)

ரைம்ஸ் பத்திரிகையின் கருத்துக்கணிப்பில் இந்த ஆண்டுக்கான (2009) உலகின் முக்கியமான 100 பேர் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை அறிந்திருப்பீர்கள். அந்த நாறுபேரும் கிழே உள்ளனர். அவர்கள் பற்றி விபரங்களை அறிய பெயரில் கிளிக் செய்க.

01. எட்வேர்ட் கெனடி

02. கோர்டன் பிரவுண்

03. கிறிஸ்ரின் லாஹர்ட்


04. தோமஸ் டார்ட்

05. ஆவிக்டர் லியிர்பர்மன்

06. ஜாஹ_ன் ஹ_ஸ்மன்

07. நவுறிஷி அல் -மல்ஹி

08. கிலாரி கிளின்டன்

09. சுசிலோ பம்பங் யுதோயோனா

10. பொறிஸ் ஜோன்ஸன்

11. நொரா அல்-பைஸ்

12. எலிசெபெத் வர்ரென்

13. போல் கஜமி

14. நிகலொஸ் ஷாகொசி

15. அங்கெலா மார்கெல்

16. வாங் குவிஸ்கான்

17. ஸி ஜிங்பிங்

18. டேவிட் மக்கிறனன்ட்

19. அஷ்பக் ஹலானி

20. பாரக் ஒபாமா

21. பிஷ் ஸ்ரோன், எவன் வில்லியம்ஸ் (ருவிஸ்ரர் பசங்க)

22. ரி.பூன் பிக்கன்

23. ரெட் ரேனர்

24. ரெஸ்ஸா ரோஸ்

25. கார்லொஸ் ஸ்லிம்


26. பிரட் பிட்


27. மெரிடித் வெட்னி


28. சுஸ் ஓர்மன்


29. லவ்ரன் ஷலாஸ்னிக்


30. திமோத்தி ஹெய்த்னர்


31. நந்தன் நில்கனி


32. ஸ்ரெல்லா மெக்கார்ட்னி


33. ஸேமஜ டைமொன்


34. சிய்லா பெயார்


35. மூட்


36. அலக்ஸாண்டர் மெட்வெட்டேவ்


37. அலன் முலாலி


38. ரொபின் சாஸ்


39. ஜக் மா


40. பேர்னி மட்டோவ்


41. ருஷ் லிம்பவுத்


42. எம்.ஐ.ஏ (மயா அருட்பிரகாசம்)


43. சாம், டான் ஹவுஸ்சர்ஸ்


44. கேட் வின்ஸ்லேட்


45. வேர்னர் ஹேர்ஷொக்


46. வில்லியம் ஹென்றிஜ்


47. பெனிலொப் கிரஸ்


48. லாங்க் லாங்க்


49. ஜோன் லெஜன்ட்


50. எலிசபெத் டெய்லர்


51. ஹஸ்ரோவோ டட்டமெல்


52. ஜெவ் ஹெனடி


53. ரவிஸ் ஸிமைலி


54. த வியூ


55. ஷக் எவ்ரோன்


56. ரினா பே


57. ரொம் ஹங்க்ஸ்


58. ஜய் லெனோ


59. ஏ.ஆர்.ரஹ்மான்


60. யுடித் ஜமிஷன்


61. மிஷ்சல் ஒபாமா


62. செஸ்லி பி.சுல்லன்பேர்கர்


63. ரிச்சார்ட் பிலிப்ஸ்


64. செத் பேர்க்லி


65. மிஷ்செல் ஏவிஸ்


66. லெனார்ட் அபீஸ்


67. ஹடிசாட்டோவோ மணி


68. ரிச் வர்ரன்


69. வான் ஜோன்ஸ்


70. சோமாலி மம்


71. ரபீல் நடால்


72. சுரஜா பக்ஷட்


73. ஜேவ் பிஷோஸ்


74. ரைகர் வூட்


75. ஜோர்ஜ் குலூனி


76. பிரடி ஹஸ்ரவ்ஸன்


77. சிஸ்ரர் மேரி ஸ்குலின்


78. ஓப்ரா வின்ப்பிரே


79. சாரா பலின்


80. மன்னி பக்குயாவோ


81. நவ்ரியல் ரொஹ்பினி


82. அமொரி லவிங்


83. ஜோன் பவறியோ


84. டமிஷா மொயோ


85. டான் பாபர்


86. ஜோய்ச்சிரோ நம்பு


87. ரொனால்ட் ப்ரியர்


88. மார்ட்டின் லிண்ட்ஸ்ரோம்.



89. புhர்பரா ஹோகன்


90. டேவிட் ஷெவ்


91. ஸ்ரிபன் ஷ_


92. போல் றுக்மன்


93. ஹோன்னி ஹெடிகார்ட்


94. டானியல் நொஸிரா


95. ஸ்ரீபன் ஸ்ருட்னர், வெப் மில்லர்


96. நிக்கலொஸ் கிறிஸ்ரக்கிஸ்


97. டோத் மெல்டன்


98. போல் எக்மான்


99. சாய் அகாஷி


100. நேட் சில்வர்



இந்த பதிவு எனது நூறாவது பதிவாகும். எனது நூறாவது பதிவினை ஏதாவது வித்தியாசமான தகவலாக பதிவேற்றம் செய்யவேண்டும் என்று எண்ணியபொழுது திடீர் என கிளிக்கான இந்த ஆண்டின் உலகின் மிகமுக்கியமான 100பேர் என்ற தலைப்பில் ரைம்ஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவான நூறு பெயரை என் நாறாவது பதிவுக்கு கொண்டுவரவேண்டும் என்ற எண்ணம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இந்த நூறாவது பதிவில், ஆரம்பம் முதல் எனக்கு உறுதுணையாக இருந்த நண்பர்கள். பதிவுலக நண்பர்கள், வாசகர்கள், திரட்டிகள், ஊடகங்கள், என அனைவருக்கும் எனது மனம் கனிந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்.

LinkWithin

Related Posts with Thumbnails