Friday, December 10, 2010

யாழ்ப்பாணம்! மேட்டுக்குடி!! தலித்தியம்!!!


ண்மைக்காலமாக அதுவும் புலம்பெயர்ந்து எழுதிவரும் எழுத்தாளர்களின் எழுத்துக்களை பார்த்தீர்களேயானால் யாழ்ப்பாணத்தின் சாதி அமைப்பை விமர்சிக்கும் எழுத்துக்கள், குறிப்பாக தலித்திய எழுத்துக்கள் என்ற வரையறைககுள் நின்று பலர் மத்தியில் காரசாரமாக விவாதிக்கப்பட்டுவருவதை காணக்கூடியதாக இருக்கின்றது. குறிப்பாக யாழ்ப்பாணம், மேட்டுக்குடியினர் என்று பரவலாக வசைபாடும் தன்மையினையும், பல வரலாற்று ஆதாரங்களை சான்றுகளாக முன்வைக்கப்படுவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
சாதிகள் இல்லையடிபாப்பா.. என்ற பாரதியாரின் வாக்குக்கு என்னிடமும் எதிர்கருத்துக்கள் கிடையாது. “சாதிகள் எங்கே வரையறுக்கப்படுகின்றதோ அங்கே மனிதம் செத்துவிட்டது” என்ற கருத்து என் மனதில் அசைக்கமுடியாத நம்பிக்கை.
ஆனால் சாதியத்தை எதிர்க்கின்றோம் வெறுக்கின்றோம் என்ற போர்வையில் குறிப்பட்ட ஒரு சாதியினரை தாக்குவதும், பழைய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து தமது எழுத்துக்களில் சொருகுவதும் ஒருபோதும் ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.

கடந்த 35வருட இருண்ட நாட்களில் தலைகளில் வந்து விழுந்த ஷெல்கள் சாதிபார்த்து பிரித்துவந்து விழவில்லை. அதேபோல இழப்புக்களும், ஆற்றமுடியாத மனவடுக்களும் சாதிகள் பார்த்து வரவும் இல்லை.
இன்றைய நிலையில் ஒட்டுமொத்த தமிழர்களும் எமது எதிர்காலத்தை வலுவாக நிர்ணயிக்கவேண்டியுள்ளகாலத்தில், அதேவேளை நவீனத்துவமாக கால ஓட்டத்துடன் எமது சமுதாயமும், வெளிவந்து உலகத்தை உற்றுநோக்கிவரும் காலத்தில், இந்த சாதி, வர்க்க, பிரதேச வாத அடிப்படைகள் தன்பாட்டிற்கு அடிபட்டுபோய் இல்லாமல்போய்விடும் நிலையில்.
ஏதோ எழுதுகின்றோம் என்ற போர்வையில் யாழ்ப்பாண சாதி அமைப்பை விமர்சிப்பதும், தலித்தியம் என்றால் என்ன? என்று புரியாதவர்கள் சிலர்கூட தலித்தியம் கதைக்கின்றோம் என்று எப்போது பார்த்தாலும் மேட்டுக்குடி வர்க்கத்தின், மேட்டுக்குடி சிந்தனைகள் என்று ஒரே பல்லவி பாடுவதும் ஆரோக்கியமாக அமையாது என்பதே உண்மை.

தான் ஒரு தலித் என்று கூறி எழுதுவதன்மூலமும், அல்லது பேசுவதன்மூலமும், இந்தப்பிரிவில் தான் ஒரு இலக்கியவாதி அல்லது பேச்சாளனாக மற்றவர்கள் கவனிக்கும் ஒருவனாக வரவேண்டும் என்ற எண்ணம் எழுதும் பலரின் அடிமனதில் உள்ளது என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றாலும் அதுவும் ஒரு ஆழ்மனத்தில் உள்ள காரணம் என்பது உண்மையே.
அதேவேளை தலித்துக்கள் இல்லாதவர்கள்கூட சாதிபேசதங்கள் இல்லை, அனைவரும் ஒருவரே என்று எழுதியும்பேசியும் வருகின்றனர். இது வரவேற்கக்கூடிய ஒன்றே என்றாலும், நான் அறிந்தவர்கள் உட்பட அனைவரும் வாய்ச்சொல்லில் வீரர்களாகவே உள்னர். வெளிப்படையாக சொல்வதென்றால், என்னதான், அவர்கள் சாதிகள் இல்லை என பேனாக்கள் எழுதினாலும், மேடைகளில் முழங்கினாலும் திருமணம்மூலம் கலந்துபோகவோ, அல்லது தம்குடும்பங்கள் கலந்துபோவதையோ ஒருபோதும் விரும்பாதவர்களாக “ஊருக்கு உபதேசமடி கண்ணே நமக்கு இல்லை” என்ற அடிப்படையிலேயே உள்ளனர்.

இவ்வாறான எழுத்துக்களை பார்த்து மனம் நொந்து எதுவும் பேசமால் போனவர்களில் ஒருவனாகவே நானும் இருந்தேன். ஆனால் அண்மையில் பலரது பதிவுகள், நல்லூர் மேட்டுக்குடி வர்க்கத்தினர் என, ஒரு ஊர்சமுதாயத்தைப்பற்றியும், திரிபுபடுத்திய பல தகவல்களையும் எழுதுவதாலேயே
இவர்களின் தலித்தியம் என்ற எழுத்துக்கள் ஆரோக்கியமாக அல்லாமல் வெறும் சாதியத்தையும் தனிமனித வெறுப்புக்களையும் கொட்ட ஆரம்பித்துள்ள நிலையிலுமே என்னையும் சற்று எழுத வைக்கின்றது.

நல்லூர் மேட்டுக்குடி வர்க்கம் அபாயகரமானது, ஆறுமுகநாவலரில்தொடங்கி அவர்பற்றி விமர்சித்துச்சென்று, போராட்டத்திற்கு என்றும் அவர்கள் ஆதரவு வழங்கியதில்லை என்பதுமட்டுமன்றி பல திரிபுச்செய்திகள் உட்பட பல குற்றச்சாட்டுக்கள் பலரது எழுத்துக்களில் அடுக்கப்பட்டதை பார்த்தேன்.
60களின் முற்பட்ட காலத்தில் தீண்டாமை, கீழ்ச்சாதியினர் கோவிலுக்குள் அனுமதிக்கப்படாமை என்பன இருந்தன என்பது மறுக்கமுடியாத உண்மைதான்.
அதேபோல சாதிக்கட்டமைப்பு உச்சத்தில் நின்று கரணம்போட்ட நடவடிக்கைகள் வருத்தமானவை என்பதுடன், மனிதம் அங்கு செத்துக்கொண்டிருந்தது என்பதையும் நிரூபிக்கின்றது.
ஆனால் இன்று நல்லூரில் நிலை அப்படி அல்ல. சாதிபேதங்களை யாரும் பார்ப்பது கிடையாது என்பதே உண்மை. இன்று வளர்ந்துவரும் சந்ததிகள் சாதிகள் என்றால் என்ன? என்று கேட்கும் நிலை உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். சில பெருசுகள் இன்றும் தமது அடிமனதில் தமது சாதி வக்கிரகங்களை அவர்கள் மீதும் திணிக்க எத்தனித்தாலும், நடுவயதை உடையவர்கள் அவற்றை தவறு எனச்சுட்டிக்காட்டும் சம்பவங்களை பல சந்தர்ப்பங்களில் நேரடியாகவே பார்த்திருக்கின்றேன்.

புலம்பெயர் யாழ்ப்பாண தலித்திய எழுத்தாளர்கள் இன்று நல்லூர் மேட்டுக்குடியினர் என்பவர்கள்மீது சாட்டிய குற்றங்களையும், தற்போதைய நிலையையும் பார்ப்போம்.
கோவிலுக்குள் அன்று கீழ்சாதியினர் அனுமதிக்கப்படவில்லை. உண்மைதான் மறுக்கமுடியாது. ஆனால் இன்று பிரசித்தி பெற்ற நல்லூர் ஆலயத்திலேயே, சொந்த ஊர்காரர்களைவிட முகம் தெரியாத பலரே வந்து தொண்டுகளை செய்கின்றார்கள், சுவாமி காவுகின்றார்கள், திருவிழா செய்கின்றார்கள், இதை எழுதும் நான் உட்பட ஊர்க்காரர்கள் ஒதுங்கிநின்று வேடிக்கையே பார்க்கின்றோம்.
அன்று நல்லூர் வீரமாகாளி அம்பாள் ஆலயத்தில் சமபந்தி போசனம் என்று அறிவித்துவிட்டு அதில் அமர்ந்து சாப்பிட அமிர்தலிங்கமே தங்கி நின்றார்.
உண்மைதான் கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் இன்றும் அந்த நிலை இல்லை. ஒரு கோவில் அன்னதானம் என்றால் சகலரும் இறைவன் முன்சமன் என்ற நிலை காணப்படுகின்றது.

மேட்டுக்குடியினர் தாமே மேலோங்கிநின்றனர், போராட்டத்திற்குக்கூட ஆதரவு தரவில்லை என்ற குற்றச்சாட்டு.
பொதுவாக இவர்கள் குறிப்பிடும் மேட்டுக்குடியினர், பரம்பரையாக வந்த சொத்து, திருமணத்தின் பயனாக உள்வாங்கப்படும் சீதனச்சொத்து, தனக்கான ஒருவீடு, ஊதியத்திற்கான வயற்காணிகள், தமக்கான கௌரவமான ஒரு அரச தொழிலோ அல்லது அதற்கு சமமான தொழில் என்ற வரையறைக்குள் வாழ்ந்தவர்கள். அந்த வாழ்க்கை முறையிலேயே பழக்கப்பட்டவர்கள். தமது சொத்துக்களே போனாலும் சரி தமது குழந்தைகள் கல்விகற்று உயர்நிலைக்கு வரவேண்டும் என்ற எண்ணத்தைக்கொண்டு செயற்பட்டவர்கள். இந்த நிலையில் யுத்தம் ஒன்று திணிக்கப்பட்டு இந்த கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டவேளைகளில் செய்வதறியாது திகைத்து நின்றதே உண்மை. மாறிவரும் உலக நியதிற்கேற்ப தனியே ஆயுதப்போராட்டத்தால் உரிய பயனை அடைந்துவிடமுடியாது என்பதை அறிந்தவரர்களாகக்கூட இருந்திருக்கலாம்.
ஆனால் போராட்டத்திற்கு எந்தவொரு ஆதரவையும் அவர்கள் வழங்கவில்லை என்பது ஒரே அடியாக ஏற்கமுடியாத குற்றச்சாட்டு.

1960 களின் பின்னர் கொமினிஸ சிந்தனைகள் இலங்கையிலும், யாழ்ப்பாணத்திலேயும்கூட வலுப்பெற்று வந்தவேளையில்க்கூட அந்த சிந்தனைகளை நல்லூர் மேட்டுக்குடியினர் ஏற்கவில்லை எனவும் அவர்கள் எப்போதும் ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பின்னால்த்தான் நின்றார்கள் என்றும் இவர்களால் கூறப்படுகின்றது. மிகத்திறமையானவரின் பின்னால் படித்தவர்க்கம் செல்வதை சாதிப்பார்வையில் பார்ப்பதே விரோதமானது என்று நினைக்கின்றேன். அதேவேளை கொமினிஸ சிந்தனைகள் அரசடியையும், ஆனைக்கோட்டையையும் மட்டுமே சுற்றி நின்றதை இவர்கள் மறுப்பார்களா? காரணம் அங்கு ஒரு குழு மட்டுமே ஆதிக்கம் செலுத்தியதே அதன்காரணம்.

பழைய கதைகள், சாதியங்கள் என்பவற்றை குழிதோண்டி புதைக்கக்கூடாது ஏனென்றால் எப்போதுவேண்டும் என்றாலும் அது மீள எழுந்துவிடலாம். அவற்றை பெற்றோல் ஊற்றி எரித்துவிடவேண்டும். சாதியத்திற்கு எதிராக எழுதுகின்றோம் என்று மேட்டுக்குடி என்று ஒரு வர்க்கத்தினரை தொடர்ந்தும் விமர்ச்சித்துப்போவதும் சாதிய எழுத்துக்களே. தலித்திய எழுத்துக்கள் என்றால் என்ன என்பதை புரிந்துகொண்டு ஆரோக்கியமான பாதையில் இதுபோன்று எழுதுபவர்கள்பயணிக்கவேண்டும். சாதிகள் இல்லாமல்போவதற்கான ஆவனவற்றை செய்யவேண்டும். இனிவரும் சமுகம் சாதிகள், வர்க்க, பிரதேசவாதங்கள் அற்ற ஒரு சமுதாயமாக வரவேண்டும்.
இவற்றின்மூலமாகவே நாம் எமக்கான பிரதான பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ளமுடியுமே தவிர, மீண்டும் மீண்டும் ஒரே குட்டைக்குள் நின்று பழய கதைகளை பேசவும், பழிதீர்க்கவும் உரிய காலம் இதுவல்ல.

10 comments:

ம.தி.சுதா said...

தமிழன் முன்னேறமைக்கு பல காரணம் உண்டு அதில் முக்கியம் அனது தான் இந்த சாதியம்.. இது பார்ப்பனர் வருகையின் பின்னர் தான் வந்தது என்று பெரியார் சொன்னாலும் பெரியார் கருத்தக்களை தம் பிரபல்யத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள்..

நான் இங்கு சொல்லப் போவது பலருக்கு ஆத்திரத்தை கிளப்பலாம் அனால் இவை பொய்யானது என யாரும் சொல்லுங்களேன்.. தமிழன் போன இடம் எல்லாம் கோயில் கட்டி தனது ஆதிக்கத்தையும் பண வருவாயையும் மெம்படுத்தவே முற்பட்டிருக்கிறான்.

Anonymous said...

நல்லூர் மேட்டுக்குடி மனம் குமுறுதோ?

Unknown said...

//மீண்டும் மீண்டும் ஒரே குட்டைக்குள் நின்று பழய கதைகளை பேசவும், பழிதீர்க்கவும் உரிய காலம் இதுவல்ல//
உண்மை! நல்ல கருத்து! :-)

pichaikaaran said...

பழைய பிரச்சினைகளை பேசும் நேரம் இதுவல்ல என்ற பாசிடிவ் சிந்தனை வரவேற்கதக்கது

டிலான் said...

//சாதியத்திற்கு எதிராக எழுதுகின்றோம் என்று மேட்டுக்குடி என்று ஒரு வர்க்கத்தினரை தொடர்ந்தும் விமர்ச்சித்துப்போவதும் சாதிய எழுத்துக்களே//

மிகச்சரியான உண்மை அண்ணை.

ARV Loshan said...

நியாயமான கருத்து. பல இடங்களில் எரிச்ச்ச்லூட்டிய ஒரு விஷயத்தைக் கொட்டி இருக்கிறீர்கள்.
எப்போது பார்த்தாலும் சமதர்மம்,சமவுடமை பேசும் பலருக்கு இந்த யாழ்ப்பானாத்து உயர் சாதீயம்,வெள்ளாளத்துவம் என்பதெல்லாம் மெல்லும் அவல் விஷயங்கள்.


ஆனால் இப்போது இந்தக் கட்டுக்களை எல்லாரும் சேர்ந்து உடைக்கும் நேரத்திலும் மீண்டும் பழசைக் கிளற வேண்டுமா என்பதை அழகாக சுட்டிக் காட்டியுள்ளீர்கள்.

தங்களைப்போலவே சாதிகள் இரண்டே.. ஆண் பெண் தான் என்ற கட்சி தான் என்னுடையதும்.
துணிச்சலான நேர்மைக்கும் வாழ்த்துக்கள்.



LOSHAN
www.arvloshan.com

என்.கே.அஷோக்பரன் said...

//ஆனால் சாதியத்தை எதிர்க்கின்றோம் வெறுக்கின்றோம் என்ற போர்வையில் குறிப்பட்ட ஒரு சாதியினரை தாக்குவதும், பழைய நிகழ்வுகளை மீண்டும் மீண்டும் தோண்டி எடுத்து தமது எழுத்துக்களில் சொருகுவதும் ஒருபோதும் ஆரோக்கியமானதாக அமையப்போவதில்லை என்பதில் அசைக்கமுடியாத நம்பிக்கை உண்டு.//

Hats Off!
இந்தக் கருத்துக்காகவே உங்களைக் கட்டியணைத்து வாழ்த்துத்தெரிவிக்க வேண்டும்.

சாதிகள் வேண்டாம் என்பவர்கள் முதலில் சாதி பற்றி பேசுவதை நிறுத்தவேண்டும். “மேட்டுக் குடி எனப்படுவோர் தலித்கள் எனப்படுவோரை சாடுதல் தவறென்றால் தலித்கள் மேட்டுக்குடியினரைச் சாடுதலும் தவறேயாகும்” - இரு தரப்பும் சாதி மைய வாதங்களை விட்டொழிக்கவேண்டும்.

இதைச் சொன்னா எங்களைத் திட்ட ஒரு கூட்டம் இருக்கும் - அவர்களை எல்லாம் கணக்கிலெடுத்தால் எதுவம் உருப்படமாட்டாது!

உங்கள் ஆதங்கம் தான் எனக்கும்.... இப்படித்தான் சிலர் சேர்.பொன்.ராமநாதனையும் இப்போதை திட்டித்தீர்க்கிறார்கள்... எல்லாவற்றுக்கும் சாதி முகம் போட்டு பிழைப்பை நடத்த விளையும் ஒரு கூட்டம்....

Kiruthigan said...

18 தலைமுறைகள் முன்நோக்கி ப்பார்த்தால்... எல்லோரும் ஒரே குடும்பத்தோரே..!
இன்றய கணினி காலகட்டத்திலும் இணையங்களில் சாதிபற்றி குழுவாக பீற்றிக்கொள்பவர்களை கண்டிருக்கிறேன்..!
வேறு வேலை இல்லாதவர்கள் இவர்கள்.
உலகம் முன்னேறினாலும் இவர்கள் பின்னோக்கியே செல்ல விருப்புகிறவர்கள்.
சாதிபற்றி பேசுபவர்கள் மற்வர்களை ஒதுக்கி வைத்தது அந்தக்காலம் மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் நாம் நாதியற்ற சாதிப்பிசாசுகளை ஒதுக்கிவைப்போம்.

KANA VARO said...

என்னதான், அவர்கள் சாதிகள் இல்லை என பேனாக்கள் எழுதினாலும், மேடைகளில் முழங்கினாலும் திருமணம்மூலம் கலந்துபோகவோ, அல்லது தம்குடும்பங்கள் கலந்துபோவதையோ ஒருபோதும் விரும்பாதவர்களாக “ஊருக்கு உபதேசமடி கண்ணே நமக்கு இல்லை” என்ற அடிப்படையிலேயே உள்ளனர்.//

இந்த நிலைமை இன்றும் இருப்பது வருந்தத்தக்கது. அவசரமான இன்றைய காலத்தில் பலர் பல்வேறு தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு சாதிகளை கணக்கில் எடுப்பதில்லை. ஆனாலும் சில வயோதிபர்கள் எதிர்வரும் சமூகத்துக்கும் சாதி என்ற ஒன்றை கொண்டு செல்ல எத்தனிக்கிறார்கள்,. இதை இளையவர்கள் புரிந்து கொண்டு செயற்பட வேண்டும்.

Unknown said...

நண்பர் கூறியது போன்று மனிதனை மனிதனாக வாழவிடுங்கள்,உரிமைகள்,உணர்வு அற்றுவாழும் எம்சமூகத்திடம் மீண்டும் திணிக்கவேணாம் பதிவாளர்களே, எம்மினத்தையே தின்னும் இனமாக வாழாதீர்கள்
நட்புடன்

உங்கள்
சிவனடியான்

LinkWithin

Related Posts with Thumbnails