யாழ்ப்பாணத்தின் புகழ்பூத்த முதன்மை சங்கீத வித்வானும், உலகப்புகழ் பெற்றவருமான சங்கீத பூசஷணம் லயனல் திலகநாயகம் போல் அவர்கள் நேற்று இயற்கை எய்திய செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.
தமிழகத்தின் அண்ணாமலை பலக்லைக்கழகத்தில் சங்கீத மேற்பட்டத்தை பெற்று, அங்கு கல்வி கற்றவர்களில் யாழ்ப்பாணத்தைச்சேர்ந்த முதலாவது “சங்கீத பூஷணம்” என்ற பட்டத்தை முறைப்படி பெற்றவர் இவராவார்.
இவர், சுர ராகநய விநோத சுரபி, இலங்கை அரசின் கலாபூஷணம், கலைச்செம்மல் ஆகிய பட்டங்களையும் பெற்று கௌரவிக்கப்பட்டுள்ளார்.
நீண்ட நாட்களாக யாழ்ப்பாணம் மத்திய கல்லாரி சங்கீத ஆசிரியராக இருந்து, அப்போது அங்கு கல்வி கற்ற எங்கள் மீதெல்லாம், அளவு கடந்த அன்புகொண்டு, சங்கீதப்பால் சொரிந்து, இந்த காக்கைகளையும் சுரம்பாடும் குயில்களாக மாற்றிய என் பெருமதிப்புக்குரிய என் குருநாதரும் அவரே ஆவார்.
இலங்கையில் ரூபவாஹினி தொலைக்காட்சி, மற்றும் இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனம் என்பவற்றின் முதற்தர கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.
இலங்கை தவிர, இந்தியா, சிங்கப்பூர், மலேசிய மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் இசை கச்சேரிகளை நடத்திய இவர் யாழ்ப்பாண கர்நாடக இசை வரலாற்றில் மிக முக்கியமான இடத்தை பெற்றுள்ளார்.
இறுதியாக உதவிக்கல்விப்பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வு பெற்றுக்கொண்ட இவர் நேற்று சனிக்கிழமை (05.12.2009) இயற்கை எய்தியபோது அவரது வயது 68.
ஒரு உன்னதமான, பாராட்டி வளர்த்த ஒரு குருநாதரை தொலைத்துவிட்ட பரிதவிப்புடன், அவரது பிரிவில் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருடன் அவரது மாணவனான நானும் இணைந்துகொள்கின்றேன்.
தமிழே உன்னை தாலாட்டி மகிழ்ந்தே பாடுவேன்…
அமரர்.எல்.திலகநாயகம் அவர்களுடைய கச்சேரியில் இருந்து…
இந்திய பிரதான கட்சிகள் கையில் எடுத்திருக்கும் பிரமாஸ்திரங்கள்.
இந்திய பிரதான கட்சிகளில் ஆளும் கட்சியான காங்கிரசும், பிரதான எதிர்க்கட்சியான பி.ஜே.பியும் தற்போது ஒருவரை ஒருவர் தாக்க பிரமாஸ்திரங்களை மாறி மாறி ஏவத்தொடங்கியுள்ளனர் என்பது இப்போது தெரியவருகின்றது.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாள் இன்றாகும். பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணியில் பி.ஜே.பிக்கு முக்கியபங்கு உண்டு என எப்போதோ அறிந்த விடயத்தை, தற்போது அறிக்கையாக்கி காங்கிரஸ் கொக்கரித்து, பி.ஜே.பி மேல் இனி தலையெடுக்கமுடியாதபடி பாரிய அடியும், அழுத்தமும் கொடுக்க முனைந்துகொண்டிருக்கும் வேளையில், பி.ஜே.பி. காங்கிரஸை வீழ்த்த எடுத்துள்ள பிரமாஸ்திரம் ஈழப்பிரச்சினை. அதாவது ஈழத்தில் இந்த அழிவுக்கும், அங்கு நடந்த அவலங்களுக்கும் காங்கிரஸ் கட்சியே காரணம் என்ற மற்றும் ஒரு எப்போதோ அறிந்த விடயத்தையும் அஸ்திரங்களாக கைகளில் எடுத்துள்ளனர்.
நாடாளுமன்றத்தில் நேற்று முன்னைய தினம் பி.ஜே.பி. ஈழத்தமிழர்கள் மேல் காட்டிய அளவு கடந்த திடீர் அக்கறையும், புதுப்பிக்கப்பட்ட காலாச்சார, இரத்த உறவும் ஆச்சரியத்தையே உண்டாக்கியுள்ளது.
இதிலும் சுஸ்மா சுவராஜ் அம்மையார் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு, தனது தாய்மையின் உணர்வையும், இரத்த உறவு தாகத்தையும், இடைக்கிடையே தமிழிலும், பாரதியார் பாடல் வரிகளை குறிக்கோள் இட்டு பேசிய அக்கறையினையும் கண்டு, அங்கிருந்த ம.தி.மு.க கட்சியினரே திகைத்துப்போய்விட்டனராம். அத்தனை ஆவேசமாக, ஈழத்தின் அவலங்களையும், அதற்கு காரணமாக இருந்த காங்கிரஸையும் ஒரு பிடி பிடித்திருக்கின்றார்.
உண்மையில் சந்தோசம்தான், கொலை செய்யப்படும்போது தடுக்காமல், பிணம் எரிந்துகொண்டிக்கும்போது, கொலைக்கு உடந்தையானவர்களைப்பார்த்து கத்துவதில் ஈழத்தமிழர்களுக்கு ஏதும் நன்மைகள் கிடைத்துவிடப்போவதாக தெரியவில்லை.
குறும்படம்.
நாங்கள் பூமியின் கீழே (சிங்களக் குறும்படம்)
சர்தாஜி ஜோக்
ஷர்தாஜி -நான் இறப்பதென்றால் எனது பெரிய தந்தையாரைப்போல தூங்கிக்கொண்டே சுகமாக இறக்கவேண்டும். அவர் இறக்கும்போது 44பேர் அவர் கூடவே இறந்தார்கள் தெரியுமா?
மற்றவர் - அதெப்படி உன் பெரியப்பா தூங்கத்தில் அல்லவா இறந்தார்??
ஷர்தாஜி – ஆம்…அவர் பஸ் வண்டி ரைவராக அல்லவா இருந்தார்.
6 comments:
நானும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி பழைய மாணவன் என்ற ரீதியில் எமது இசையாசியர் போல் மாஸ்ரரை நன்றாக அறிவேன். அற்புதமான ஒரு மனிதரும்கூட. கிறிஸ்தவராக இருந்தாலும், இந்து மத நிகழ்ச்சிகளில் அவர் காட்டும் அதீத பற்றும், உணர்ந்து பாடும் திறனும் கண்டு திகைத்திருக்கின்றேன். பாசத்துடன் மாணவர்களை அணுகும் ஒரு நல்ல ஆசானை நாம் இழந்துள்ளோம். அவரின் ஒரு மாணவனான தங்கள் துயருடன் நானும் இணைந்துகொள்கின்றேன்.
காக்டெயில் நல்லாயிருக்கு.
இன்னும் கொஞ்சம் சேர்த்திருக்கலாம் ஜனா.
நானும் மத்திய கல்லூரி பழைய மாணவன். எமது ஆசிரியரான அவர்கட்கு எனது ஆழ்ந்த தூயரத்தை தெரிவித்துகொள்கின்றேன்
உங்களுடைய பதிவுகளில் எனக்கு குறும்படம் பார்க்க மிகவும் ஆர்வம். தொடரட்டும் ஜனா அண்ணா; இந்த குறும்படத்தில் காட்டப்பட்டது போல எமது வேதனைகள் இன்னும் பல பல......
ஏன் ஜனா அண்ணா இன்னும் பதிவை காணவில்லை?
இன்று தான் அறிந்தேன். எனது ஆழ்ந்த அஞ்சலிகள்.
விக்கிப்பீடியாவில் திலகநாயகம் போல்.
Post a Comment