Monday, June 27, 2011

வலசை –Winged Migration


பறவைகளின் பறப்பியல், அவற்றின் பறத்தல் ஒழுங்கு, காலநிலை அறிதல், பறத்தல் முறை என்பன எமக்கு பெரும் ஆச்சரியத்தையும், புதிரையும் ஏற்படுத்தும் ஒரு விடயமாகவே இருக்கின்றது. இது பற்றிய ஆராட்சிகளும், ஆராய்வுகளும் இன்று பல ஆச்சரியங்களையும், புதிர்களையும் ஏற்படுத்துவனவாக உள்ளன.
சில இடங்களில் மனிதனைவிட அறிவு குறைந்தன என்று வரையறைக்குள் உள்வாங்கப்படும் அந்த பறவை இனங்கள், சில விடயங்களில் மனிதனை விஞ்சும் குணாதிசியங்களை கொண்டுள்ளமையும் மூக்கின்மேல் விரல்வைக்க செய்வனவாக உள்ளன.

யாழ்ப்பாண மண்ணில் பல்வேறு இடங்களுக்கு பயணப்படும்போது, இடையில் காணப்படும் வெளிகள், கடலேரிகளை அண்டிய இடங்களில் என் வாழ்க்கையில் காணாத பல புதிய பறவையினங்களை ஒவ்வொருநாளும் காணக்கூடியதாக இருப்பதே இந்த பதிவை எழுத காரணமாக இருந்தன.
பல வர்ணங்களிலும், பல உயர அகலங்களிலும், பல புதிய பறவையினங்களை தற்போது காணக்கூடியதாக உள்ளன.
இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் கடந்த 30 வருடங்களுக்கு மேலான காலங்களாக இடம்பெற்றுவந்த மோசமான யுத்தங்கள் காரணமாக இந்தப்பக்கம், வந்தொதுங்காத பல பறவையினங்கள், அவை ஓய்ந்ததன் காரணமாக தற்போது இந்தப்பிரதேசங்களுக்கு ஒதுங்குகின்றன என்றே எண்ணுகின்றேன்.

அது என்ன வலசை என்று நீங்கள் தலையங்கத்தை வைத்து யோசிப்பீர்கள் என்பது எனக்கு நன்றாகத்தெரியும், அதாவது பலதரப்பட்ட பறவையினங்கள், பருவநிலை வேறுபாட்டை குறியீடாக வைத்து, தமக்கான தட்பவெட்பத்தை நோக்கி குடியகல்தல் அல்லது இடம்பெயர்தல் என்பதன் சரியான தமிழ் பெயர்தான் வலசை.
இந்த குடியகல்தல் என்பது பல ஆயிரக்கணக்கான மைல்களை தாண்டியதாக இருப்பதும், பெரும் துருவங்கள், மகாசமுத்திரங்கள், பெரும் சிகரங்களைத்தாண்டியே அவை இந்த மாபெரும் குடியல்வுகளை நடத்துவதும் மிகப்பெரும் அதிசமாகவே படுகின்றது.

பருவகாலங்கள், தாம்சார்ந்த இடத்தின் காலநிலைதவிர, தூர இடங்களின் காலநிலைகளை நன்கறிதல், தமக்கு ஒவ்வாமையான காலங்களில், தோதான ஒரு காலநிலையுள்ள மிகத்தூரத்தில் உள்ள இடத்திற்கான பயணத்தை மேற்கொளத்திறமையாக திட்டமிடல், பெருங்குழு ஒன்று சேர்தல், அதற்கான முன்னாயத்தங்களை ஒழுங்காக செய்தல், பெரும் பயறப்பொன்றுக்கு தயாராதல், அதிகளவிலான உணவுகளை உண்டு தமக்கும், இறகுகளுக்கும் சக்தியை உள்வாங்கல், குழுக்களாக இணைந்து அதற்கான ஒத்திகையினை மேற்கொள்ளல், என அதிசயப்படத்தக்க விடையங்களை அவை செய்கின்றன.

தமது இனப்பெருக்க காலங்களையும், தமக்கு தோதான இடமாக ஆர்ட்டிக் வட அரைக்கோளத்திலும், மித வெப்ப வலய இடங்களிலும் இருக்கும் இந்தப்பறவைகள், கூதிர்க்காலங்களில் வெப்ப வலயங்களை நோக்கி பெரும் பறப்பை மேற்கொளத்தொடங்குவதாக கூறப்படுகின்றது.
இவற்றின் பறப்பு அலாதியானது. ஒவ்வொரு குழுவையும் வழிநடத்திச்செல்ல ஒரு கப்டன், துணைக்கப்டன் என்பவர்கள் இந்த பறவைகளில் இருப்பார்கள் என்றும் அந்த பறவைக்கூட்டத்தின் பாதை, காலநிலை, முகில்களின் தன்மை, பறக்கும் கோணம், பறக்கும் வடிவமைப்பு என்பவற்றை இவர்களே தீர்மானிப்பார்கள் எனவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள்.
பொதுவாக எதிர்க்காற்றினை கிழித்து, பறக்கும் சுமை தெரியாமல், இலகுவாக பறந்துவர அவர்கள் V வடிவத்தில் பறப்பதையே பெரும்பாலும் கைக்கொள்வதாக தெரிகின்றது.

ஆர்ட்டிக் வட அரைவட்டம், சைபீரிய, ரஷ்ய குளிர்மேட்டுநிலப்பறவைகளே எமது நாடுபோன்ற இடங்களுக்கு பெரும்பாலாக வருவதாக கூறப்படுகின்றது.
இப்படி வரும் அவர்களுக்கு பெரும்சிரமமாக தடையை ஏற்படுத்துவது எவரெஸ்ட் கிரம் உள்ள இமையமலையை அண்டிய பிரதேசமே.
எனினும் அவை இந்தப்பிரதேசத்தை கடப்பதற்கு அகக்குறைந்தது மூன்று நாட்களாவது தேவைப்படுவதாக கூறப்படுகின்றது.
சைனாவின் எல்லைவழியாக எந்துகுவியும் பறவைகள் குழுக்கள், அந்தப்பகுதியிலேயே அடைக்கலம் அடைந்து, காற்றின் தன்மைகள் குறைந்து, பனிச்சாரல்கள் இல்லாத நேரங்களில், தெளிவான முகில்கள் அவதானிக்கக்கூடிய வேளைகளிலேயே மேலெழுந்து மெதுவாக இந்த சிகரத்தை கடந்து தொடர்ந்து பயணிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

யுத்தம் நடந்த காலங்களில்க்கூட 'சினெப்' என்ன சைபீரியப்பறவையினை சாதாரணமாக எமது வயல்வெளிகளிலும், நீர்ச்சுனை உள்ள பிரதேசங்களிலும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது. அந்த நாட்களில் வேட்டைக்காரர்கள் அதை சுட்டு விற்பனை செய்வதையும் கண்டிருக்கின்றேன்.
எனினும் இப்போது பெருமளவிலான பறவைகள் இங்கே வரத்தொடங்கியுள்ள நிலையில், பறவைகள் வேட்டையாடப்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமை பாராட்டப்படவேண்டிய ஒரு அம்சமே.
அதேபோல வடக்கு பிரதேசத்தில் பறவைகள் தொடர்பான கருத்தரங்குகள், மாநாடுகள் என்பன அண்மையில் இடம்பெற்றுவருவதும், பறவைகள் தொடர்பான ஒரு வழிப்புணர்வு மக்களுக்கு சில ஊடகங்கள் மூலம் கொண்டு செல்லப்படுவதும் மேலும் வரவேற்கத்தக்க அம்சமே.

இன்று இலங்கையின் வடபுலத்தே, முக்கியமாக சுண்டிக்குளம் பிரதேசத்தில் பறவைகள் இயற்கை சரணாலயம் ஒன்று இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
அதேபோல வல்வை வெளியை அண்டிய நீர்ச்சுனை பிரதேசம், மண்டைதீவு, அராலியை அண்டிய பிரதேசம் என்பனவற்றில் பல பறவைகள் வந்து குவிவதையும், புதிய விதவிதமான பறவைகளையும் அவதானிக்கமுடிகின்றது.

பறவைகள் பல விதம், ஒவ்வொன்றும் ஒரு விதம் என்று கண்ணாதாசன் இதை அனுபவித்ததனால்த்தான் சொல்லிச்சென்றானோ தெரியவில்லை. பறவையியல் சம்பந்தமாக Winged Migration என்ற ஆவணப்படம் பல புதிய தகவல்களையும், பறப்பியலின் பரினாமங்களையும் சொல்லிநிற்கின்றது. அறிவுப்பசி உள்ளவர்களுக்கு ஒரு விருந்தாகவும் அந்த ஆவணம் உள்ளது..
சிறிது நேரமெடுத்து இந்த சிறந்த ஆவணப்படத்தையும் கொஞ்சம் பார்த்துப்போங்களேன்...








Sunday, June 26, 2011

வேற்றுமொழிக்கதைகள்>>>>மந்திர வயலின்.

மாபெரும் வயலின் மேதையும் இசையமைப்பாளருமான பகாநினி ஒரு மந்திர வயலினை பெறுவதற்காக பிசாசிடம் தனது ஆன்மாவை விற்ற கதையினை அறியாதவர்கள் யாராவது இருக்கமுடியுமா? பெரும் நாத்திகரான, சமய பற்றற்ற நல்தொரு கவிஞருமான ஹென்ரிச் ஹைனே இந்த கதையில் ஒன்றிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தார். இந்த புனிதமற்ற செலும், அதன் விபரீதமும் எப்படி முடிவுக்கு வந்தது, இறுதியில் வென்றது யார்? மனிதனா அல்லது மனித குலத்தின் நிரந்தரப்பகைவனான பிசாசா என்பதை ஒரு சிலரே அறிந்திருப்பார்கள்.
ஹங்கேரிய நாடோடிகள் மத்தியில் இம்மாதிரியேயான ஒரு பழமையான கதை நிலவிவருகின்றது. நீங்களும் நம்பினால் நம்புங்கள், அந்தக்கதை தான் இது...
இதோ அந்தக்கதை...

இளம் நிகோஷோவுக்கு அந்த ஆண்டு தனது வாழ்க்கை மிகவும், கடுமையானதாகவும், கசப்பானதாகவும் இருந்தது. கடன் சுமையும் துரதிஸ்டமும், சின்னஞ்சிறு நிராசைகளும், அவரை வெனிஸ் நகரில் இருந்து வியன்னாவுக்கு விரட்டி அடித்தன. அங்கே அவர், அங்குமிங்கும், இசைக்கருவி வாசித்து தன் வயிற்றுப்பாட்டை கவனித்துக்கொண்டார். கல்யாண நிகழ்வுகளில் வாசித்தார், அல்லது தனது மலிவாகன வயலினைக்கொண்டு கீழ்த்தரமான மதுபானக்கடைகளில் வாசித்து வந்தார். அவர் கந்தலாடை உடுத்தியிருந்தபடியால், உயர்தரமான உணவு விடுதிகளில் அவர் அனுமதிக்கப்படவில்லை.

அக்டோபர் 21 ஆம் நாள் அவரது வாழ்வில் ஒரு மோசமான, சபிக்கப்பட்ட நாள் எனலாம். அன்று அதிகாலையில் இருந்தே, ஆலங்கட்டி மழைபோல் பெருமழை, இடைவிடாது, பெய்துகொண்டிருந்தது. இளைஞனது, பாழாய்ப்போன செருப்புகள், பனிச்சேற்றிலும், நீரிலும் மூழ்கி நனைந்தன. ஓவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அவரைச்சுற்றிலும் சேறும் சகதியும், ஊற்று நீர்போல், பீரிட்டு அடிக்கும். பகாநினியும் நனைந்துவிட்டார். உடலெல்லாம் ஒரே சகதரி.
சதுப்பு நிலத்தில் புரண்டெழுந்த ஒரு சின்னஞ்சிறு சுருட்டை முடிநாய்போல் அவர் தோற்றம் இருந்தது.

மங்கலான ஒரு மாலைநேரம், அரிதாகத்தோன்றிய வெளிச்சமும், கடும் மழையினூடே பாதையை அவருக்கு காண்பிக்கவில்லை, இதுமாதிரியான ஒரு மாலை நேரத்தில் எவரேனும் ஒருவரின், துயரத்தையோ, வறுமையையோ கண்டதும் மனம் தானாக, இரக்கத்தை தேடும். அதேவேளை குளிரையும், தனிமையையும், இருமடங்கு இருப்பதாகவே நினைப்பான் ஒரு ஏழை.

அன்று நாள் முழுக்க பகாநினி ஒரு காசுகூட சம்பாதிக்கவில்லை, மாலைநேரத்தில்தான், குடிகார தகரவேலைக்காரன் ஒருவன், புகைபிடிக்கும் குழாயின் சாம்பலை மதுக்கோப்பைக்குள் கொட்டி அரைக்கோப்பை பீர் கொடுத்தான்.

இன்னொரு இடத்தில் இனிமேல் நீ எங்கேயும் வயிலின் வாசிக்கக்கூடாது அதற்காக உனக்கு, மூன்று க்ரைட்ஜெஸ் தருகின்றேன் என்று கூறிய மாணவன் ஒருவன், குடிபோதையில் அம்மூன்று நாணையங்களை பகாநினியின் மீது சுண்டி எறிந்தான்.

இருக்கட்டும் நான் பணக்காரன் ஆகும்போது உன்னை ஒரு கை பார்க்கின்றேன் என்று பற்களை கடித்துக்கொண்டு கறுவினார் பகாநினி. உண்மையில் எத்தகைய துரதிஸ்டங்கள் இருப்பினும், பகாநினி தனது இசைஞானத்தில் ஐயமே இல்லாதிருந்தார்.
'எனக்கு நாகரீகமான ஆடைகளும் சரியான சந்தர்ப்பமும், அருமையான ஒரு வயலினும் கிடைத்தால், இந்த உலகத்தையே வியப்பில் ஆழ்த்திவிடுவேன்' என்று நினைத்துக்கொண்டார்.
மதுபானக்கடையின் தரையினை பகாநினி சேறும் சகதியும் கொண்டு அசுத்தப்படுத்திவிட்டதனால், அவர்கள் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

மூன்று க்ரைட்ஜஸ்களைக்கொண்டு ஒரு சிறிய கோதுமை ரொட்டியை வாங்கி மென்று தின்னவாறே நடந்துவந்த அவர், ஒருவழியாக மாடியிருந்த தனது சிறிய அறைக்கு சோர்வுடன் வந்து சேர்ந்தார். நம்பிக்கை இழந்து பித்துப்பிடித்த மனநிiயில் இருந்தார். பரிதாபத்திற்குரிய, ஈரமான தன் வயலினை ஒரு மூலைக்கு உதைந்து தள்ளினார். புலம்பி அழுதார்.
தன் மார்பில் அறைந்துகொண்டு அழுதார்.
கடவுளே... நீ இல்லை. என்னை நீ ஏன் படைத்தாய் அதிலும் இசைஞானம் உள்ளவனாக ஏன் படைத்தாய். இத்தனை துயரங்களை நான் அடைந்தபோதும் உனக்கு என்மீது கருணை இல்லை. நீ இல்லை..இல்லை இல்லவே இல்லை என்று கத்தியவன் திடீர் என்று...

ஓ... பிசாசே நீ உண்மையிலேயே நீயாவது இருக்கின்றாய் என்றால், இப்போதே என் முன்னால் வா.. ஒரு பெருமிதத்திற்குரிய மனித ஆன்மாவை அதன் படைப்பாக்கத்திறமையுடன் மலிவாக விலைக்கு வாங்கிக்கொள்ளலாம் சீக்கிரமாக வந்துவிடு.
இல்லாவிட்டால், இந்த பரிதாப்பத்திற்குரிய ஜென்மத்திடமிருந்து எதையும் நீயாவது பெறமுடியாது போய்விடும். பிசாசு உடனடியாகவே அவர் முன்னால் தோன்றியது.

இளைஞனே..நான் சொல்வதைக்கேள் என்றது அமைதியாக அந்தப்பிசாசு. உன்னுடைய ஆன்மாவுக்கு பதிலாக வேறென்ன பெற விரும்புகின்றாய் என்று அது கேட்டது.
பணம், தங்கம்...
ஒரு பிசாசிடமிருந்து பணம் கேட்பதைவிடவும், சுலபமானது எதுவும் இல்லை. புகழ் வேண்டாமா உனக்கு? என மறுபடியும் அது வினவியது.
முட்டாள்தனம்..பணம் கொடுத்தால், புகழைக்கூட விலைக்கு வாங்கிவிடலாம்.. என்றார் பகாநினி.
அப்படியல்ல நண்பனே... நீ அவ்வாறு நினைப்பதும் சரியல்ல. உன்னைப்புகழ்பாடித் துதிப்பவர்களைத்தான் நீ தங்கத்தை கொடுத்து விலைக்கு வாதங்கமுடியும். காசுக்காக உன்னை சுற்றித்திரியும் கூட்டத்தை தாண்டி உன் புகழ் ஒரு நாளும் பரவாது. காதலைப்போன்று வேறு ஏதாவது வேண்டுமென்றால் கேள்...

நாசமாய்போக. காதல்தான் காசு கொடுத்தால் மிகச்சுலபமாக கிடைக்கக்கூடியது.

எந்தவொரு காதலும் அப்படித்தான் என்று உண்மையிலேயே நீ நினைக்கின்றாயா?
என்னருமை இளம் நிக்கோலோ.. எந்தவொரு காதலும் விற்பனைக்குரியதாக இருக்குமானால் இந்த உலகமும், பிரபஞ்சமும், பிசாசினுடைய எல்லையற்ற அதிகார வரம்புக்குள் வந்திருக்கும். ஒரு பங்கரமான இரகிசயத்தை உனக்கு கூறட்டுமா?
பிசாசு ஏன் அவ்வளவு துரதிஸ்டசாலியாக இருக்கின்றது என்று நீ அறிய விரும்புகின்றாயா? ஏனென்றால், பிசாசு நீண்ட காலமாக காதலுக்காக ஏங்கிக்கொண்டிருக்கின்றது ஆனால் அதனால், காதலிக்கவே முடியாது.

இளைஞனே.. நாம் இருவருக்கும் இலாபம் தரக்கூடிய நேர்மையான விசயத்தை என்னோடு பேசிமுடிக்க நீ விரும்பினால், நீ ஆரம்பத்தில் ஆசைப்பட்டாயே நாகரிகமான ஆடைகள், சரியன சந்தர்ப்பம், அருமையான வயலின் இவற்றை தவிர வேறு எதையும் கேட்காதே.

சில நிமிடங்கள் யோசித்துபார்த்த பகாநினி பின்னர் முடியாவாக இவ்வாறு கூறினார்.
நான் எடுத்த முடிவை மாற்றிக்கொள்ளப்போவதில்லை.
அந்தப்பிசாசு அமைதியாக அவருக்கு முன்னே குனிந்து ஒரு பெரிய பழைய பெட்டியை எடுத்து மேசைமீது வைத்தது, பின்னர் அதை மிகவும் கவனத்துடன், பகாநினியிடம் ஒப்படைத்தது. இதோ இந்த வயிலினைப்பார்... இலவசமாக இதை நீ வாசித்துப்பார்க்கலாம்.

வயலினை எடுத்து வாசிக்கத்தொடங்கியபோதுதான், அவர் தன்னிடமிருந்த மிகப்பெரிய திறமையினை முதன்முறையாக உணர்ந்தார் எனலாம்.
எஜமானரே உங்கள் சேவைக்கு காத்திருக்கின்றேன். உங்கள் அறிவார்ந்த ஆலோசனைக்கு நன்றி உடையவனாக இருப்பேன் ஆனால் நீங ;கள் திடீர் என்று என்மீது ஒரு சோகப்பார்வை வீசியது ஏன் என்று சொல்லுங்கள். நான் உங்கள் மனதை புண்படுத்திவிட்டேனா என்று கேட்டார் பகாநினி.

வெளிப்படையாகச்சொன்னால், என்று கூறி தனது ஆசனத்தில் இருந்து எழுந்த பிசாசு, நான் எதிர்பார்த்ததைவிடவும், மிக அதிக அளவில் வரம்பெற்ற திறமை, உன்னிடமிருப்பது கண்டுதான் சற்று கலக்கம் அடைந்தேன். இருப்பினும் நான் இப்போதே சொல்லிவிடுகின்றேன். இது உன் வயலின். இந்த சிறிய பை நிறைய தங்கக்காசுகள் உள்ளன. இப்போதைக்கு உனக்கு இது போதுமானது நாளைக்கு தையல்காரர் உனக்கு நல்லாடை தருவார். சிறப்பாக முடி திருத்தும் ஒருவர் வியன்னாவில் இருந்து வந்துசேர்வார். சீக்கிரம் நீ ஓர் இசைப்போட்டியில் கலந்துகொள்ளப்போகிறாய் என்று கூறிய பிசாசு, இப்போது இங்கே கையெழுத்திடு.
சரி.. உனக்கு என் நல்லாசி இளைஞனே வரட்டுமா!
நாம் மீண்டும் சந்திப்போமா என்று கேட்டார் பகாநினி. அது எனக்கு தெரியாது என்றது அந்த பிசாசு.

வயலின் கலைஞரை அது ஒரு நாளும் வஞ்சிக்கவில்லை. அந்தப்பிசாசு சொன்னதுபோலவே யாவும் நடந்தன. மன்னரின் வாரிசு, நடத்திய இசைப்போட்டியில் அவரது புகழ் மேலோங்கியது. அது இறுதிவரை மங்காமல் பிரகாசித்தது. ஆனாலும் நிக்கலோ பகாநினி, இவ்வுலகில் மிகவும் துரதிஸ்ட சாhலியாகவே இருந்தார். திருப்தி தராத உணாச்சிகள் தற்பெருமை, பணத்தாசை, ஆகியன யாவும் கீழ்தரமான மட்டுமீறிய கஞ்சத்தனத்துடன் சேர்ந்துகொண்டன. அவர் தமது இசைக்குறிப்புக்களை மிகக்கடினமான முறையில் எழுதுவார், அவற்றை அவர் மட்டுமே புரிந்துகொண்டு வாசிக்கமுடியும். பிறரால் முடியாத அளவுக்கு அவை கடினமானதாக இருக்கும் ஆனால் எல்லையில்லாத கலையானது எதிர்காலத்தில் அவரைவிடத்திறமையான, அவரைவிடச்சிறப்பான வாசிக்கக்கூடிய ஒரு இசைக்கலைஞரை உருவாக்கும் என்பதையும் அவர் நன்கு அறிந்திருந்தார். எனவே எதிர்காலத்தில் உருவாகப்போகும் அந்த புதிதான இளைஞனை அவர் வெறுத்தார். அவர் இலட்சாதிபதியானார். ஆனாலும் தெருவில் கிடக்கும் துண்டுத்தாள்களையும், வேண்டாத பொருட்களையும் பொறுக்கிக்ககொண்டே இருந்ததார் அவரது அன்றாட உணவுச்செலவு மிகக்குறைவே

அவரது அற்புதமான இசைத்திறனால் கவர்ந்து ஈர்க்கப்பட்ட அழகிய பெண்கள் பலர், தங்கள் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அவர்வசம் ஒப்படைக்க முன்வந்தனர். ஆனால் அவரோ அவர்களை வெறுத்து விலக்கினார். ஏன் எனில் தன்னிடமுள்ள தங்கத்திற்காகவே அவர்கள் தன்னை நாடுவதாக கருதினார். ஓர் உயர் குடிமாது, நகர கவுன்ஸில் மேஜரின் மனைவி தனது , புகழ், செல்வம், காதலை அவருடன் பகிர விரும்பி, தன் கணவனை விவாகரத்து செய்யவும், அதனால் ஏற்படப்போகும் பழியை தாங்கவும் தயாராகவே இருந்தாள். அவளிடம் சில காசுகளை விட்டெறிந்த பகாநினி உன்னுடைய கணவன் இந்த மூன்று க்ரைட்ஜெஸ்களை ஒருநாள் எனக்கு கொடுத்தான், எதற்கு தெரியுமா? நான் வயலினை வாசிக்காது இருக்க. இவற்றினை அவனிடம் கொடுத்துவிடு, நீயும் இங்கிருந்து செல், எனக்கு வேறு வேலை உள்ளது என்றார்.

நீங்கள் எல்லாம் என் பணத்தினையே நாடுகின்றீர்கள், அல்லது எனது புகழின் நிழலில் குளிர் காய விரும்புகின்றீர்கள் என முரட்டுத்தனமாகக்கூறி பல உண்மையான நண்பர்களைனயும் இரசிகர்களையும் அவர் இழந்தார். அவர் உண்மையிலேயே துயரில் மூழ்கியிருந்தார். பெரிதும் துன்பத்தில் மிதந்தார்.
மன நின்மதி மட்டும் அவருக்கு கிட்டவே இல்லை. அவரால் யாரையும் நம்ப முடியவில்லை. அவரது ஆயுள் முடிவு நெருங்கியபோது பிசாசும் அவரிடம் வந்து சேர்ந்தது.

நான் தயார் எஜமானரே.. ஆனால் ஓர் உண்மையினை சொல்லுகின்றேன். என் வாழ்க்கையில் சந்தோசமே இல்லை.
அந்தப்பிசாசும் சோர்வுடன் எதிர்ப்பு தெரிவித்தது. வெளிப்படையாகச்சொல்லவேண்டுமானால் உன்னால் எனக்கு எந்தவித லாபமும் இல்லை இருவருமே பரஸ்பரம் இலாபம் தராத விவகாரத்தில் ஈடுபட்டு அதன் முடிவை வந்தடைந்துள்ளோம்.
இந்த ஒப்பந்தப்பட்டியலைப்பார் உன் பெயர் இதில் இல்லை. அது அழிந்துபோய்விட்டது. யாரோ ஒருவரால் அது நீங்கப்பட்டது. அவர் பெயரை நாம் வாய்விட்டு கூறவும் உரிமை கிடையாது.
நான் இப்போது என்ன செய்வது மன்றாடினார் பகாநினி.

ஓன்றுமே செய்யமுடியாது என்ற பிசாசு நண்பனே..
இனி ஒன்றுமே செய்யமுடியாது உன்னுடைய எல்லா இசை நிகழ்ச்சிகளின்போதும் நான் கூடவே இருந்து வந்துள்ளேன். அதற்காக என் தலைவர்கள் என்னை ஏசியிருந்தனர். சரி அதுபோகட்டும், நாம் எவரது பெயரை உச்சரிக்க உரிமை இல்லையோ அவருடனும் நீ இருந்துள்ளாய் உண்மையான கலைத்திறன் அவரிமிருந்தே உனக்கு வந்துள்ளது நம்மிடமிருந்து அல்ல.
இந்த கணக்கு வழக்குகளை யார் தீர்த்து வைப்பது? விடைகொடு நான் வருகின்றேன். வயலினை உன்னிடம் விட்டு செல்கின்றேன் என்னைப்பற்றி ஒன்றும் கவலைப்படாதே.. இது என்னுடைய தலைவருக்கும் எனக்கும் ஏற்பட்ட சிறு தொந்தரவு அவ்வளவு தான் விடைபெறுகின்றேன்.

காலையில், மாபெரும் இசை மேதை பகாநினி இறந்து கிடந்தார் அவரது முகத்தில் பெருமிதம் தவழ்ந்து. உதடுகளில் புன்னகை பிரசாகித்தது. அந்த மந்திர வயலின் நிரந்தரமாக மறைந்து போயிருந்தது.

மூலக்கதை ஆசிரியர் - ஆலக்ஸாண்டர் குப்ரின் (1929)

இந்தக்கதையினை பசுமைக்குமார் தமிழக்காக்கம் செய்துள்ளார், எனினும் மூலக்கதையில் விடுபட்ட சில விடையங்களை நான் சேர்த்துள்ளேன்.

Thursday, June 23, 2011

ஹொக்ரெயில் - 23.06.2011

கோமாளி முகமூடியுடன் ஒரு கிரிமினல்!

'ஐயோ ஈழத்திலே என் இனம் அழிகின்றது, என்னை விடுங்கோ நான், அவாளை காப்பாற்றவேண்டும், இல்லையேல் இந்த சமுத்திரத்திலேயே ஜலசமாதி அடையவேண்டும்' என்று கத்திக்கொண்டே ஈழ மக்களை காப்பாற்ற கடலில் இறங்கியவர்தான் இவர்.
பெரும் பாலும் இவரது செயற்பாடுகள் அனைத்தும் முன்னுக்குப்பின் விரோதமாகவும், குழப்பம் நிறைந்ததாகவும் கோமளித்தனமானதாகவுமே இருக்கும்.
இராமர் பாலம் முதல், சிதம்பரம் கோவில் பிரச்சினை வரை இவர் ஆடாத கூத்துக்கள் கிடையாது. தெரிவிக்காத பைத்தியகாரத்தனமான கருத்துக்களும் கிடையாது.
இத்தனைக்கும் இவர் கல்வி அறிவில், கல்வித்தரத்தில் உயர்ந்தவர், புகழ்மிக்க ஒரு பொருளியலாளர்.

இத்தனை தராதரமும், கல்வி நிலையில் உயர்ந்தவருமான இவர் ஏன் கோமாளித்தனமாக இருக்கின்றார் என பெரும்பாலானவர்கள் ஆச்சரியமாக இவரை நோக்கியதுண்டு.
இந்தக்கேள்விகளுக்கெல்லாம் சிகரம் வைத்தால்ப்போல இருப்பது 'ராஜீவ் கொலை'.
இந்தக்கொலையில் ஒரு சூத்திரதாரி, அல்லது ஒருங்கிணைப்பாளராக இவர் இருக்கின்றார் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் பலர் மத்தியில் இருந்துவந்தது, அதேவேளை இவர் ஒரு சி.ஐ.ஏ புள்ளி என்ற கருத்தும் நிலவிவந்தது.
இந்த இறுக்கமான நிலையில் சுப்பிரமணியன் சுவாமி ஆகிய இவரால் அவசரமாக எழுதப்பட்டதுதான், The Assassination of Rajiv Gandhi: unanswered questions and unasked queries என்ற புத்தகம். இதில்கூட விடுதலைப்புலிகள் என்ற மட்த்திற்கு அப்பால் இந்தக்கொலை சந்தேகம் வேறு திசையில் போகக்கூடாது என்று சுவாமி, அதீத அக்கறை கொண்டதும், எப்படியாவது அவர்களுடனேயே இந்த வழக்கு பூர்த்தியாகவேண்டும் என்ற அபிலாசையுடன் செயற்பட்டமையும் தெளிவாக புரிகின்றது.

இருந்தபோதிலும், தற்போது கசியும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின், அது குறித்த சில திட்டங்களை அறிந்தவர்களின் காலங்கடந்த வாக்குமூலங்கள் சுப்பிரமணியன் சுமாமியின் பக்கம் வெளிப்படையான குற்றச்சாட்டுக்களாக வெளிவரத்தொடங்கிவிட்டன.
'ராஜீவ் காந்தியின் மரணம் என்னை இந்தப்பிறப்பில் அதிரவைத்த, என்னைக்கோபப்படவைத்த செயல், அதற்கு காரணமான விடுதலைப்புலிகளின் தலைவர் அழிக்கப்பட்டதன் பின்னர்தான், நான் ராஜீவ் காந்தியின் சமாதி இருக்கும் இடத்தில் அஞ்சலி செலுத்துவதாக சபதம் இட்டிருந்தேன், அது இப்போது நிறைவேறிவிட்டது, எனவே நான் ராஜீவ் காந்திக்கு அஞ்சலி செலுத்தி என் சபதத்தை முடித்துக்கொண்டேன்' என்று கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் சுப்பிர மணியன் சுவாமி ஒரு ஸ்டேட்மன்ட் விட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மனிதர்கள் பலவிதம், ஒவ்வொருவரும் ஒவ்வொரு குணாம்சங்களை கொண்டவர்கள், ஆனால் தன்னை ஒரு கோமாளியாக உலகத்தின் கண்ணுக்கு காட்டிக்கொண்டு உள்ளே பக்கா கிரிமினலாக செயற்படுபவர்தான் சுவாமி என்பது இப்போது பலருக்கும் புரியத்தொடங்கியுள்ளது.

நேற்று விஜய் 37.

'நாளைய தீர்ப்பு' திரைப்படம் வெளியான உடன் ஒரு பிரபலமான சஞ்சிகையில் விஜய் பற்றிய வமர்சனம் 'அப்பாக்கள் செல்வாக்கால் இப்போது சினிமா நுளைவு சுலபமாகிவிட்டது, இந்த முகத்தையெல்லாம் இரண்டரை மணித்தியாலங்கள் எப்படித்தான் சகித்துகொள்வதோ தெரியாது' என்றிருந்தது.
எனினும் அதே சஞ்சிகையில் பல தடவைகள் இந்த ஆண்டின் வெற்றி நடிகன் விஜய், மக்கள் தெரிவு விஜய் என்று பின்னர் முகப்படத்துடன் ஆக்கங்கள் வெளியாகியிருந்தன.
ஓவ்வொருவருக்கும் ஒவ்வொரு இரசனைகள் இருக்கும், அதனால் மற்றவர்களின் இரசனைகளை கொச்சைப்படுத்திவிட முடியாது.
ஏன் இதை எழுதிக்கொண்டிருக்கும் எனக்கும் விஜய் தூரப்பட்டவர்தான், இருப்பினும் விஜய் உடைய நடனத்தையும், மெனாரசியத்தையும் நான் இரசிப்பது உண்டு.
வசீகரா, சச்சின் ஆகிய விஜய்யின் படங்கள் எனக்கு பிடித்த படங்கள்.

தான் எதிர்பார்க்காமலேயே தனக்கான ஒரு இமேஜ் ஒன்று மக்கள் மத்தியில் உருவாகப்பட்டவர் எம்.ஜி.ஆர், அதேபோல பேர் சொல்லக்கூடிய சில படங்களில் தன் நடிப்பு திறமைகளையும் காட்டிநின்ற ரஜினி தான் விரும்பாமலேயே அந்த ட்ரக்குக்கு இழுத்து செல்லப்பட்டிருந்தார், ஆனால் எனக்கு இந்த ட்ரக்தான் வேண்டும் என்ற குறிக்கோளுடன் அந்த ட்ரக்கை பிடிக்க ஓடிக்கொண்டிருப்பவர் விஜய்.
நடனம், பாடும் திறமை, ஸ்டன்ட் திறமை என்பவற்றை அதிகம் கொண்டிருக்கும் விஜய்க்கு இனிவரும் காலங்கள் ஏறுமுகமாக இருக்கட்டும்.

இந்தவாரக்காட்சி


அரச பணியாளர்களா? அரசியல்வாதிகளா?
தற்போதைய காலத்தில் எல்லாம், அரசியல் வாதிகள் தவிர அரசாங்க அதிகாரிகளும் அரசியல் நடாத்தவும், அரசியல் பேசவும், அரசியல்வாதிகள்போல நடக்கவும் தொடங்கியுள்ளனர். இலங்கை முழுவதும் இந்த நோய் தற்போது பரவி விஸ்வரூபம் எடுத்து நிற்கின்றது.
அரசாங்கங்கள் மாறலாம், ஆனால் அரசு என்றும் மாறாது. அரசாங்கங்கள், ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கமாகவோ, அல்லது ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கமாகவோதான் காலம்காலமாக இருந்தது இருக்கவும்போகின்றது இலங்கையில்.
ஆனால் அரச பணியாளர்கள் அரசு என்ற நிரந்தரமான அந்தஸ்தை பெற்றவர்கள், ஒரு வகையில் அவர்கள் அரசியல் வாதிகளைவிட உயர்ந்தவர்களாகவே நோக்கவும் படுகின்றனர்.
ஆனால் இன்றைய கட்டத்தில் அரசாங்க உத்தியோகத்தர்களும் அரசியலை கையில் எடுத்துக்கொண்டு அரசியல்வாதிகள்போல் செயற்படுவதை காணக்கூடியதாக உள்ளது.

பகிரங்கமாகவே அரசியல்வாதிகள்போல பொதுமேடைகளில் பேசுவதும் இதன் உச்சமான கட்டமாக இடம்பெற்றுவருகின்றது குறிப்பிடத்தக்கது.
ஒரு கட்சியை ஆதரிப்பதோ அல்லது அதற்கு விஸ்வாசமாக இருப்பதோ அவரவர் தனிப்பட்ட விடயமாகும். ஆனால் பொதுவான தன் அதிகாரத்தை கட்சி சார் நலத்திற்காகவும், அரசியல் களமாகவும் அதிகார துஸ்பிரயோகம் செய்வது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒருவிடயமே ஆகும்.
அரச பணியாளர்கள் என்ற பெயர்தான் என்றாலும், அவர்கள் மக்கள் சேவகர்கள் என்பதுவே உண்மையான தன்மை.
இதை உணராதன்மையும், 'என் இடத்தில் நான்தான் ராஜா' என்ற தன்மையும் பொதுமக்களை சலிப்புக்கும், கோபத்திற்குமே உள்ளாக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
உயர்மட்ட அரசாங்க அதிகாரிகள் இன்று ஜனாதிபதியை விட உயர்ந்தவர்களாக காட்டப்படுவதும், அப்பட்டமாக அரசியல் செய்வதன் தாக்கங்களுமே இது அரசாங்க அதிகாரிகள் மட்டத்திலும் அரசியல் நடத்துபவர்களாக நாடாளாவியரீதியில் கொடிய நோயாக பரவவும் காரணமாக அமைந்துவிட்டதோ என்னமோ!

யாழ்ப்பாணக்குடா நாடும் சீரில்லா மின்சாரமும்.

யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை மின்சாரம் என்பது எப்போதும் நினைத்தால் தலைக்குள் 'சாக்' அடிக்கும் ஒரு சாமாசாரமாகவே உள்ளது.
ஓவ்வொரு கட்ட யுத்தங்களின்போதும் நிறுத்தப்படும் மின்சாரம், சில வருடங்கள் கழித்து மீண்டும் வரும், பின்னர் மீண்டும் நிற்கும்.
எனினும் 1996 ஆம் ஆண்டுக்கு பின்னர் யாழ்ப்பாணக்குடாநாட்டிற்கு மின்சாரம் 24 மணித்தியலாமும் வழங்கப்படுவதாக முழக்கம் போட்டு அறிவிக்கப்பட்டது.
ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை யாழ்ப்பாணத்தில் சீரான மின்சாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. (என் வயதை உடைய மாணவர்கள் எமது சாதாரணதர, மற்றும் பல்கலைக்கழகத்திற்கு புகுவதற்கான உயர்தரப்பரீட்சைகளை, மண்ணெண்ணையும் வேண்டுமென்றே நிறுத்தப்பட்ட சூழ்நிலைகளில் குப்பி விளக்குகளை வைத்தே படித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது)
1996 முதல் இன்றுவரை இங்கே இந்த விடயத்தில் எதைத்தான் பிடுங்கிறார்களோ தெரியாது.
ஒரு நாயில் குறைந்தது 6 தடவைகளாவது மின்வெட்டு சர்வசாதாரணமாக இடம்பெறும். இதற்குள் திருத்தவேலை, திருத்தவேலை என்று வாரத்தில் ஒருநாள் 8 மணித்தியால மின்வெட்டு அமுலில் இருக்கும், அந்த ஜெனரேட்டர் வருது, இந்த ஜெனரேட்டர் வருது என்று பத்திரிகைகளில் செய்திகள் வரும் ஆனால் இன்றுவரை
எரிச்சலூட்டும் மின்வெட்டு வெட்டப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.
சாதாரணமாக நான் பணிபுரியும் அலுவலகத்தில் அலுவலக நேரத்தில், இருக்கும் மின்சாரம் நின்றால் தானியக்கமாக இயங்கும் ஜெனரேட்டர் குறைந்தது 3 தரமாவது ஒரு நாளில் இயங்குகின்றது.
பணி முடிந்து மாலை வந்து பதிவெழுதினால், ஒரு பதிவை எழுத தொடங்குவதில் இருந்து இணையேற்றுவதற்கிடையில் 4 தரம் மின்சாரம் நின்று நின்றுவரும்.
இங்கிருக்கும் நிலைமையை பார்த்தால் ஆர்க்காட்டார் எவ்வளவோ தேவலைப்போல!

மியூஸிக் கபே

சிகரங்களின் சந்திப்புக்கள் என்றும் புதுமையானவை என்பதுடன், அற்புதமான அனுபவங்களையும் தந்துவிட்டு சென்றுவிடும். அந்தவகையில் தமிழ் திரை இசையுலகச்சக்கரவர்த்திகள் இருவரும் இணையும் ஸ்வர இன்பம் ஒரு அலாதியான அனுபவமே...
கே.ஜே.ஜேசுதாஸ் ஸ்வரங்கள் சொல்ல, எஸ்.பி.பி. ஆலாபனை செய்யும் இந்த அற்புதமான சந்தர்ப்பம் இனி ஒருதடவை காதுகளுக்கு வாய்க்குமா என்பது சந்தேகமே..
கொஞ்சம் இந்த இசையில் நனைந்துபாருங்கள்....


உதயன் வெளியீடாக 'இனிது இனிது'
யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் உதயன் பத்திரிகை நிறுவனத்தின் வெளியீடாக 'இனிது இனிது' என்ற மாத சஞ்சிகை வெளிவந்துள்ளது.
பொதுவாக இலங்கையில் பல சஞ்சிகைகள் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்ட மனக்கஸ்டமான நிகழ்வுகளே அதிகமாக இருக்கின்றது.
உரியபடி வாசகர்களை சென்றடையாமை, இலக்கு வாசகர்கள் (Target Readers) யார் என்ற தெளிவு இல்லாமை, கடினமான எழுத்தாடல்கள், வாசகர் நட்பு எழுத்து (Reader Friendly writing) என்பன இல்லாமையே இதற்கான பிரதான காரணங்களாக இருக்கலாம் என்பது என் எண்ணம்.
பொதுவாகவே அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்கள் கொண்ட சஞ்சிகைகள் தமக்கான ஒரு இடத்தை நிற்சயம் பிடித்துவிடும் என்பதில் எந்தவித மாற்று கருத்துக்களும் எவருக்கும் இருக்காது என்று நினைக்கின்றேன்.

அந்த வகையில் முதலாவது இதழாகவும், ஜூன் மாத இதழாகவும் வெளிவந்துள்ளது உதயன் வெளியீட்டு நிறுவனத்தின் 'இனிது இனிது'

எழுத்தாளர்கள் - இதழாசியர் தனது திறமையை அல்லது தன்னிடமிருக்கும் 'கொள்ளவை' மற்றவர்களுக்கு காண்பிக்கமுயலும்போது வாசகன் சிரமமப்படும்நிலை ஏற்படுகின்றது. 'சீரியஸான' வற்றை மட்டும் வாசிக்கசெய்யும் நோக்கிலான இதழ்கள் பரந்துபட்ட வாகர்களிடமிருந்து அந்நியப்படுவதை அவதானிக்கமுடிகின்றது.

முக்கியமான விடையங்களை அறிந்துகொள்ள விழைபவர்கள்கூட சுவாரஸ்யமான வாசிப்பையே அதிகம் விரும்புகின்றனர். இதனாலேயே அரசியல் பக்தி எழுத்தாளர்கள்கூட தங்களின் நடையை மாற்றிக்கொள்ள முயற்சிக்கின்றனர். அரசியல் விடையங்களைக்கூட ஒரு கதையைப்போல் சொல்ல முற்படுகின்றனர்.
இவ்வாறான வாசகனின் உளவியலுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுத்து அதன் வடிவங்களில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றது.

அந்தவகையில் வாசகர்களின் உளவியலை புரிந்துகொண்டு அவர்களுடன் உறவுகொள்ள 'இனிது இனிது முயலும்'. என தமது முதலாவது ஆசிரியர் தலையங்கத்தில் இதழாசிரியர் தெரிவித்திருக்கின்றார்.

முக்கியமான உள்ளடங்கல்களாக 'வெறுப்பினால் கிடைத்த வெற்றி' என்ற தலையங்கத்தில் தமிழக தேர்தல் குறித்த பார்வை, 'காதலின் மொழி கஸல்' என்னும் கஸல் கவிதை விருந்து, 'ஒசாமா பின்லேடன் தொடக்கமும், முடிவும்' என்ற கட்டுரை, 2040 ஆம் ஆண்டில் இறந்தவர்கள் மீண்டும் உயிர்த்தெழுவார்கள்..?
என்ற ஒரு விஞ்ஞான ஆக்கம், ஜப்பான் பூகம்பமும், சுனாமியும் உலக அழிவுக்கான ஒத்திiயா? என்ற பீதிக்கேள்வியுடனான ஒரு பார்வையும், புதுமைப்பித்தனின் பொன்னகரம், மர்லின் மன்றோவின் மறுபக்கம், பிரசன்ன விதானகே இன் 'ஆகாச குசும்' திரைப்பட விமர்சனம் என பல்வேறு அம்சங்களை இந்த முதலாவது நூல் சுவாரஸ்யம் குன்றாமல் தந்துநிற்கின்றது.

ஆசிரியரின் தலையங்க வரிகள், திட்டமிட்டு, ஸ்திரமான அத்திவாரத்துடனும், நம்பிக்கையுடனுமே இந்த மாத இதழ் வெளியிடப்படுவதை உறுதிபடத்தெரிவிக்கின்றது. அதற்கேற்றவகையிலேயே ஸ்வாரஸ்யம் குன்றாத உள்ளடங்கல்கள் உள்ளன.
எனினும் மாத இதழ் அதுவும் ஒரு பிரபலமான நிறுவன வெளியீடு தெரிந்தோ தெரியாமலோ விட்டுவிட்ட தவறு. முதலாவது இதழிலேயே இதழ் பற்றிய தகவல்கள் (ஆசிரியர், இணையாசிரியர்கள், பக்கவடிவமைப்பாளர்கள், சித்திரங்கள், கணினி வடிவமைப்பு, வெளியீடு, அச்சகம் போன்றன உள்ளடங்கிய அம்சங்கள்)
வெளிவராமையே. மற்றும்படி 'இனிது இனிது' இனிமையாகவே உள்ளது.
புதிதாக மலர்ந்திருக்கும் 'இனிது இனிது' மாத சஞ்சிகைக்கு இலங்கை பதிவர்கள் சார்பாக என் நல்வரவுகளும், வாழ்த்துக்களும்.

ஜோக் பொக்ஸ்
கடுமையான இதயநோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர் ஒருவர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அவர் ஒரு லாட்டரி ரிக்கட் பைத்தியம். நாள் தவறாமல் பல லாட்ரிகளை வாங்கி தன்னுடனேயே வைத்திருப்பதே அவரது பழக்கம். எதை கைவிட்டாலும் லாட்டரி ரிக்கட்களை அவர் கைவிட்டது கிடையாது.
இந்த நிலையில் இறுதியாக அவர் எடுத்திருந்த லாட்ரி ரிக்கட்டுக்கு 10 கோடி ரூபா பெறுமதியாண பணம் விழுந்திருந்தது. இதை சொல்லவேண்டும் என்று அவரது உறவினர்கள் மருத்துவமனையில் குழுமிவிட்டார்கள். இதை அறிந்த மருத்துவர். அவர் இதயநோயாளியாக இருப்பதால், அளவுக்கதியமான சோக செய்தியோ, அல்லது அளவுக்கதிகமான சந்தோச செய்தியோ அவருக்கு தெரிவிக்கப்பட்டால் அவர் மரணம் அடைந்துவிடுவார். எனவே நான் அதை பக்குவமாக சொல்கின்றேன் என்றார்.
அதன் பின்னர் அந்த நோயாளியை அணுகிய வைத்தியர்
என்ன ஐயா! எப்படி இப்ப சுகங்கள்! என்று விசாரித்துவிட்டு, ஒரு பேச்சுக்கு கேட்கின்றேன் உங்களுக்கு ஒரு லாட்டரி ரிக்கட்டில் இனி 10 கோடி விழுந்தால் என்ன செய்வீர்கள் என்றார்.
அதற்கு பதிலளித்த லாட்டரி ரிக்கட் நோயாளி..
என்ன டாக்டர் என்னை மரணத்தில் இருந்து மீட்ட தெய்வம் நீங்கள் அதை அப்படியே உங்கிடம் தந்துவிடுவேன் என்றார்...
உள்ளே 'தொம்' என்று ஒரு சத்தம் கேட்டது..
எல்லோரும் எட்டிப்பார்த்தபோது டாக்டர் அப்படியே நெஞ்சை பிடித்தபடி மரணித்துப்போய் கிடந்தார்.

Tuesday, June 21, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - குறுநாவல் இறுதிப்பாகம்



ன்ன சத்தம் இது என்று ஊகிப்பதற்கு முன்னதாகவே பெருமளவிலான குதிரைகளில் பறங்கியர் கண்ணில் எதிர்ப்பட்டவர்கள் அனைவரையும், சுட்டுக்கொன்றும், வெட்டிக்கொண்டும் வந்துகொண்டிருந்தனர், என்ன செய்வது என அறியாமலே பவுணன், தையல்முத்து, வெள்ளையன் ஆகியோர் கதிகலங்கிப்போய் நின்ற பொழுதுகளில் பறங்கியர்படை, அங்காடிக்குள் நுளைந்த அந்த நிமிடமே அங்காடிக்காவலாளியின் தலை வாசலில் உருண்டது. அசையவே முடியாத நினையில் மரணம் எவ்வாறு நெருங்குகின்றது என்பதை உணர்ந்த பவுணன், ஒருதடவை தையல்முத்துவையும், வெள்ளையனையும் பார்த்துக்கொண்டான். வெள்ளையன் அந்தப்பொழுதுகளில் என்ன நினைத்தானோ தெரியவில்லை, மாட்டுவண்டியின் அச்சாணியை இழுத்து நெருங்கும் ஒரு பறங்கிய குதிரைவீரனை நோக்கி ஓடி அவன் மார்பில், ஆழமாக அச்சாணினை திணித்துவிடுகின்றான். இரத்தம் கசிய அந்தப்பறங்கியன் குதிரையில் இருந்து வீழ்கின்றான், அந்த நிமிடமே பின்னால் நின்ற ஒரு பறங்கியனின் துப்பாக்கி வெடித்து வெள்ளையனின் கழுத்தை பதம் பார்க்கின்றது. மற்ற பறங்கியன் சுட்டது அவன் மார்பில் பாய வெள்ளையன் சரிகின்றனான்.


வெள்ளையன் காட்டிய தைரியமோ என்னமோ தையல்முத்தை நெருங்கிய பறங்கியன்மீது ஒரு பண்டமுடிச்சை தூக்கி எறிந்துவிட்டு அவன் சாய ஓடிச்சென்று அவன் கையில் இருந்த வாளைப்பறித்து அவனை வெட்ட பவுணன் முற்படும்போது, தையல்முத்தின் அலறல் கேட்கின்றது. பறங்கியனின் வாளைப்பறித்து அவன் தலையினை உடலில் இருந்து விடுவித்துவிட்டு திரும்புகின்றான் பவுணன், தையல்முத்தின் முகமே தெரியாதபடி முகம்முழுவதும் குங்குமம்போல இரத்தம் கசிந்துகிடக்க, பண்டமுடிச்சு ஒன்றுடன் சரிந்து இறுதி மூச்சினை இழுத்துவிட்டாள் அவள். அவளிடம் ஓடிவரும்போது, பாரிய சத்தத்துடன் தனது பின்தலையில் ஏதோ பாய்ந்ததுபோல உணர்கின்றான் அவன், ஓடமுடியாமல் அவனது கால்கள் சோர்வடைகின்றன, அவனது தோழில் அவனது சொந்த இரத்தம் விழுந்துகொண்டிருந்தது. அப்படியே குப்புறவிழுந்து ஏற்கனவே உயிரை விட்டுவிட்டு கிடந்த வெள்ளையனையும், அப்போதூன் இவன் திசைநோக்கி பாhத்தபடியே உயிரை விட்டுவிட்ட அவன் உயிர்மனையாள் தையல்முத்தையும் பார்த்துக்கொண்டான். இந்த நேரத்தில் மூச்சு எடுப்பது அவனுக்கு சிரமமாகின்றது, மெல்ல மெல்ல காட்சிகள் இருண்டு, முழுவதுமே இருட்டிவிட்டது.


னைவரும் ஓடிவந்து நுளைந்து சில விநாடிகள் தான் இருக்கும், ஏதோ கனவில் நடப்பதுபோலவும், திடீரென ஒவ்வொரு அசைவுகளும் மெதுவாக நிகழ்வதுபோலவும் அவனுக்கு தோன்றியது. பேரிடிபோல தொடர்ச்சியாக பல முழக்கங்கள், வெளியில் இருந்து அவன் கண்ணுக்கு தெரிந்தது பாரிய தூசி மண்டலம். காதுகளில் அவலக்குரல்கள், ஒருமித்த மணத்திற்கெதிரான குரலாகவும், மரணபய குரலாகவும் அவனுக்கு கேட்கின்றது. என்னப்பா இது என்று துஸ்யந்தி நடுங்கியபடி சொன்னது காதில் கேட்டது. பக்கத்தில் பாணைத்தூக்கியபடியே, உச்சக்கட்ட பீதியில் காண்டீபன் எச்சிலை உமிழ்ந்ததும் அவனுக்கு தெரிந்தது.
இத்தனையும் நடந்து அடுத்த செக்கன், தேவாலயமே மாறிப்போயிருந்து. “வருந்திப்பாரம் சுமப்பவர்களே என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு ஆறுதல் அளிப்பேன்” என்ற வாக்கியமே பொய்யாகிப்போனது.

கர்ணகொடூரம் என்பதன், அவலம் என்றால் என்ன என்பதன், முழு அர்த்தம் இறக்கும் தறுவாயில் காண்டீபனால் உணரப்பட்டது. ஏதா ஒரு உந்துவிசையில் சரியும்போது அவனின் கண்ணுக்கு முதலில் பட்டது, அந்த பாண் பெட்டிதான் பாண்களின்மேல் இரத்தங்களும், மனித தசைப்பிசிறுகளும் கிடந்தன. மல்லாக்காக சரிந்துகொண்டிருக்கின்றான் பிரசாந்தன், காண்டீபனின் நெஞ்சும், தலையும் மேலே தூணில் தொங்கிக்கொண்டிருந்ததை காண்கன்றான். அப்படியே தரையில் அவன் உடல் படுகின்றது. துஸ்யந்தியின் உடையை வைத்து இது துஸ்யந்தி என்பதை உணர்கின்றான். இந்த காட்சியுடன், தையல்முத்தும், வெள்ளையனும் இறந்துகிடக்கும்போது தனக்கு அறிவு இழக்கும் நிலை தோன்றியதும், சமகால நிகழ்வும் அந்தப்பொழுதுகளில் நினைவுக்கு வருகின்றது. ஒரு கணம் மரணம் அடையும், மரணம் அடைந்துகொண்டிருக்கும்போதும் பயம் கொள்கின்றான். காட்சிகள் மறைகின்றது கண்ணில் இருந்து, அவலக்குரல்கள் தொடர்ந்து கேட்கின்றன. மெல்லமெல்லமாக அவையும் தூரத்திலே கேட்பதுபோல தோன்றுகின்றது, அதன்பின் ஒரு போதும் கேட்டிராத நிரந்தமான மொளனத்தின் ஒலி மட்டும் கேட்கின்றது.



கென்போமாக இது அந்த கிரகத்தில் இருந்துவரும் சமிக்கைதான் என்றான் சௌரவ். சுற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அந்த தூரகோள் செயற்பாட்டு கருவிக்கு அந்த கிரகத்தில் இருந்து அடுக்கடுக்காக செய்திகள் வரத்தொடங்கின.
இருவரும் அந்த செய்திகளை அறியும் பொருட்டு தம்மை மறந்தவர்களாக பல வழிகளிலும் முயன்றுகொண்டிருந்தார்கள்.
விழிகளை மூட முடியாமல் பிரமைபிடித்தவள்போல இது கனவா? நனவா? என்ற மிரட்சியில் இருந்து மீள விருப்பமில்லாமவளாக மிரண்டுபோய் அதை கவனித்துக்கொண்டிருந்தாள் ஷமி...

'உங்கள் கிரகத்திற்கு உங்களால் வைக்கப்பட்ட பெயர் 'ஏர்த்' இதை நாம் உங்கள் ஆண்டு கணக்குப்படி 1500 வருடங்களுக்கு முலாகவே கண்டு பிடித்துவிட்டோம். ஆனால் உங்களுக்கும் எங்களுக்குமான தூரம் உங்கள் கணக்குப்படி பல இலட்சம் ஒளி ஆண்டுகள் என்பதால் எமது செய்திகளை உங்களுக்கு அனுப்ப முடியவில்லை, இப்போது கூட உங்கள் தரத்திற்கு எமது செய்திகளை அனுப்ப மிகவும் சிரப்படுகின்றோம் சுமார் 562 வருடங்களுக்கு முன்னதாக நாங்கள் உபயோகித்த கருவியினால்த்தான் இப்போது நீங்கள் புதிதாக உருவாக்கிய இதுபோன்ற கருவியுடன் தொடர்புகொள்ள முடிகின்றது.
உங்களை மிகத்துல்லியமாக நாங்கள் அவதானிக்கின்றோம்.
நீங்கள் பயப்படத்தேவையில்லை, நாங்கள் நீங்கள் நினைத்தும் பார்க்காத அளவுக்கு மேன்மைப்பட்டவர்கள், எங்கள் கிரகத்தில் ஜனன மரணங்கள் இல்லை, உடைகளை மாற்றுவதுபோல நாமே எமது உடல்களை உங்கள் கணக்குபடி 25 வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொள்கின்றோம்.
எமக்கு தேச எல்லைகள் கிடையாது, யுத்தங்கள் கிடையாது. ஒரு வகையில் உங்களைப்பார்த்தால் எங்களுக்கு பயமாகவும் உள்ளது.

இதுவே அந்த கிரகத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருக்கும் செய்திகளாக இவர்கள் இருவரும் பதிவு செய்துகொண்டிருந்தனர்.
ஆனால் வெளியில் அவர்களுக்கு தெரியாமலே ஒரு பெரிய ஒப்பரேஷன் நடந்துகொண்டிருந்தது, சீன அதிவிரைவு விமானப்படையினர் இவர்களின் இடத்தை சுற்றி வளைத்துக்கொண்டு, இரகசியமாக உள்ளே நுளையும் படைநடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
பாதுகாப்பு சமிக்கை பிளாஸ் பண்ண ஆரம்பித்து, மாதவ், சௌரவ், ஷமி மூவரும் சுதாகரிப்பதற்கு முன்னதாகவே பாதுகாப்பு கதவை உடைத்துக்கொண்டு சீனப்படையினர் உள்ளே வந்துவிட்டனர்.

உள்ளே வந்த தளபதி, புருவத்தை உயர்த்தி பார்த்தபடி திரையை நோட்டம் விடுகின்றான், இந்த நடவடிக்கை அந்தக்கிரகத்தில் அவதானிக்கப்பட்டு, தகவல்கள் இடை நிறுத்தப்படுகின்றன. ஓடிவந்த தளபதி, மாதவ், சௌரவ் இருவரையும் அடித்து விழுத்திவிட்டு, பதிவு செய்த பெட்டகத்தை பக்குவப்படுத்துகின்றான்.
அவன் மூளைக்குள் செயற்படும் கட்டளைக்கருவி மூலம் அவன் உயர்மட்டத்தினரால் நிர்வாகிக்கப்படுகின்றான் என்பது புரிந்தது.

மாதவ், எப்போதும் காட்டாத முகபாவத்துடன் ஷமியையும், சௌரத்தையும் பார்க்கின்றான், அந்த அங்காடிக்கொலையும், புக்காரக்குண்டும் உங்களுக்கு நினைவுக்கு வருகின்றதா என்று இருவரையும் கேட்கின்றான். அவர்கள் இருவரையும் உன்னிப்பாக பார்க்கின்றான், அவர்கள் முகத்திலேயும் அப்படி ஒரு மாற்றம், மூவருக்குமே ஒரு புன்சிரிப்பு ஒரே நேரத்தில் வருகின்றது.

அந்தச்சீனப்படைத்தளதி, கத்திக்கொண்டே தனக்கு தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு தனது படையினர் அனைவரையும் வெளியேற்றிவிட்டு, அந்த கதவருகே சென்று இவர்களைப்பார்த்து, கோபப்பார்வை ஒன்றை வீசிவிட்டு, தான் வெளியேறி போகையில், உள்ளே ஒரு சிறிய பெட்டியை வீசுகின்றான், அதிலிருந்து பச்சைநிற வாயு ஒன்று வெளியாகின்றது. சௌரத் ஏதோ பேச முற்படுகின்றான்..
முவர் இருந்த இடத்திலும், சாம்பல்களே மிச்சமாக இருக்கின்றது.


(சரி…இந்த இறுதிப்பகுதி கொடூரமானதாக இருக்கின்றது என எண்ணுவீர்கள், அனால் சில கொடூரங்களை எழுத்துக்களால் சிறிதளவே கொண்டுவரமுடியும். இதில்; பாத்தரங்களே புனைகதை அதவிர இந்த இரண்டு சம்பவங்களும் உண்மை. ஈழத்தில் 1505ஆம் ஆண்டு பறிக்கப்பட்ட தமிழனது சுதந்திரம் இன்று ஐந்து நூற்றாண்டுகள் கழிந்தும் கிடைக்காமல், அவலத்தின்மேல் அவலங்களை மட்டுமே உலகம் அவனுக்கு பரிசாக கொடுத்துக்கொண்டிருக்கின்றது)

நன்றி

Monday, June 20, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - 4. குறுநாவல்


ஹாய்…மாதவ்.. “எனி இம்புறூமென்ட்ஸ்”? என்று கேட்டாவாறே வந்தாள் ஷமி. நான் உனது செய்தி வரும் வரும் என எதிர்பார்த்துக்கொண்டே இருந்தேன் என்றாள் அவள். உதட்டை பிதுக்கி காட்டினான் மாதவ். அப்பறம் என்ன செய்ய உள்ளாய்? இது எவ்வளவு பெரிய அதுவும் முக்கியமான வியடம் தெரியுமா? என்றாள் அவள். நீ போனவுடன் நான் சௌரத்துடன் தொடர்பு கொண்டேன் நாளை வருவதாக சொன்னான். பார்ப்போம் அவன் வரும்வரை ஏதாவது செய்து பார்க்க முற்படுகின்றேன். என்றான் மாதவ்.

சௌரத்தை பற்றிப்பேசும்போதுதான் அவனுக்கு சௌரத் இறுதியாகச்சொன்ன வசனம் நினைவு வந்தது. ஜெஸ்…அவர்கள் சிலவேளைகளில் எமது உரையாடலைக்கூட கேட்கலாம்….உடனடியாக அவன் மூளையில் உந்தவே சுய மற்றும் வெளிப்புற பாதுகாப்பு நெட்வேர்க் செயற்பாட்டை புதிதாக உருவாக்கி தனது வலையமைப்பில் புகுத்த அவன் முடிவெடுத்து அதில் மூழ்க ஆரம்பித்தான். நேரங்கள் பறந்துகொண்டிருந்தன. இடைக்கிடை ஷமியும் பல வழிகளில் அவனுக்கு ஒத்துளைப்பு வழங்கிக்கொண்டிருந்தாள். அதிகாலை இரண்டுமணி ஷமி தூங்கப்போய்விட்டாள்…

மாதவ் உலகத்தையே மறந்து தனது செயற்பாட்டில் மட்டும் முழுக்கவனத்துடன் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவனது கடிகார சிக்னல் ஒலித்தது.
ஹாய்…மாதவ்…நான் சௌரத் உன் வீட்டின் முன்னால்த்தான் நிற்கின்றேன். உனது பாதுகாப்பு லேசர் கதிரை நிறுத்து நான் உள்ளே வருகின்றேன் என்றான். உள்ளே வந்து மாதவ்விடம் இருந்து சகலத்தையும் அறிகின்றான். உனது தூரகோள் தொடர்பாடல் தரவில் எப்படி அந்த சிக்னல் பதியாமல்ப்போயிருக்கும்? அப்படி என்றால் அந்த கோளில் உள்ளவர்களின் தொழிநுட்பம் எம்மைவிட உயர்ந்ததாக இருக்கவேண்டும். இதுதான் எனக்கு தோன்றுகின்றது. அப்படி மட்டும் இருந்துவிட்டால் உடனடியாக தொடர்புகளை அவர்களுடன் மேற்கொண்டு அவர்களால் எங்கள் பூமிக்கு ஆபத்து எற்படாமல் பார்ப்பது எங்களின் முதல்க்கடமை என்றான் அவன்.

ஜெஸ்…சௌரத் நான் எதை நினைத்தேனோ அதையே நீ சொல்லுகின்றாய்..என்றான் மாதவ். இருவரும் மாறிமாறி அந்த அக்ரோ வெளியில் அந்தக்கோளுடன் செய்திகளையும் சமிக்கைகளையும் அனுப்பிக்கொண்டிருந்தனர். திடீர் என அந்தக்கோள் அவர்களது சுவர்த்திரையில் பிரசாகமாகின்றது…உள்ளே வந்த ஷமியும் ஆச்சரியத்தில் வாயைப்பிழந்தபடியே உட்காருகின்றாள். ரட்ஸி…ரட்ஸி.. என பிசிறலான ஒரு ஒலிச்சமிக்கை அந்தக்கோளில் இருந்து கிடைக்கின்றது. பிரமித்துப்போனபடியே…திரும்பி மாதவ்வைப் பார்க்கின்றான் சௌரவ்…


இராஜவிதியால் வண்டியைத்திருப்பி, பிரதான பாதையால் மேற்கு நோக்கி மாட்டு வண்டியை திருப்பினான் பவுணன். மாலை நேரம் கூடு திரும்பும், குருவிகளின் ரீங்காரங்களையும், இருபக்க மரங்கள், மற்றும் கண்ணில் தென்படும் பனங்கூடல்களுக்கு நடுவில் இளஞ்சிவப்பு நிறத்தில் ஒரு பெரிய பழம்போல மறைந்துகொண்டிருந்த சூரியனையும்பார்த்து மகிழ்ச்சியில் முகமலர்ந்தாள்; தையல்முத்து.
தூரத்தில் பல வண்டில்கள் செல்வதை சுட்டிக்காட்டியபடியே இன்று அங்காடி கழைகட்டும்போலதான் இருக்கு அம்மான் என சொன்னான் வெள்ளையன்.
“அப்படித்தான் நினைக்கின்றேன், இன்றைய அங்காடியில் மாமந்திரி அவர்கள் கலந்துகொண்டு தற்போதைய நிலைமைகள் பற்றியும், அரசரின் வணிகர்களுக்கான செய்தினையும் தெரிவிக்கவுள்ளதாக நானும் கதை அறிந்தேன் என்றான் பவுணன்.

ஒருவாறு திருநெல்வேலி இரவு அங்காடியினை வந்தடைந்தார்கள் மூவரும், பவுணனைக்கண்டதும், மேல்த்திசை வடபுறத்தே மடைவிரி பவுணன்! என்றார் அங்காடிக்காவலர். குறிப்பிட்ட இடத்திற்கு அருகில் வண்டிலை நிறுத்திவிட்டு இறங்கினர் மூவரும், தையல்முத்தும், வெள்ளையனும் வண்டியில் இருந்து பொருட்களை இறக்கி அந்த இடத்தில் அடுக்க, வண்டியில் இருந்து இரண்டு மாடுகளையும் விடுவித்து, அருகில் இருந்த தென்னையில் கட்டினான் பவுணன்.
காதுக்கெட்டும் தூரத்தில் இதுவரை அவர்கள் கேட்டிராத வெடிச்சத்தங்களும், குதிரைகளின் குழம்பொலிகளும், மக்களின் அவலக்குரல்களும் ஒலித்துக்கொண்டு, இருந்தன.. அந்தச்சத்தங்கள் தற்போது அவர்கள் பக்கத்தில் வந்துகொண்டிருப்பதுபோல இருந்தன..


பெட்டியின் பாரம் தாங்காமல் மோட்டச்சயிக்கிளின் பின்பக்கம் இருந்து சரியப்போன காண்டீபனை பார்த்த துஸ்யந்தி, என்ன காண்டீபன் அண்ணை! என்று கூறியவாறே ஓடிச்சென்று அந்தப்பாண் பெட்டியை விழாத படி பிடித்துக்கொண்டாள். இங்க சும்மா வரமனமில்லை அதனாலதான் நானும் பிரசாந்தனும் முத்தண்ணையின்ட பேக்கரியில் பாணும் கொஞ்சம் பணிசும் கட்டி வந்தோம் என்றவாறு மோட்டார் சைக்களில் இருந்து பாண்பெட்டியை துஸ்யந்தியின் உதவியுடன் தூக்கி கிழே வைத்தான் காண்டீபன்.
ஒமோம்…அதுவும் சரிதான் அதுதான் நானும், பெரிய மச்சாளுடன் கணக்கெடுக்க வரேக்கயே, பெரிய வாளியில தேத்தண்ணி ஊத்திவந்து கொடுக்கலாம் என்று வந்தோம், ஆனால் அது இங்க காணாது, அதுதான் இருந்ததை முதல்ல சின்னனுகளுக்கு கொடுத்தனாங்கள், சனங்கள் இன்னும் வந்துகொண்டுதான் இருக்குதுகள். பாவங்கள் கனக்க சனங்கள் காயப்பட்டுதுகளாம் என்றாள் துஸ்யந்தி.

சரி…இப்ப கொண்டுவந்த பாணையும் பணிசையும் நீ சொன்னதுபோல முதல்ல சின்னனுகளுக்கு கொடுப்பம் பிறகு பெரியாக்களுக்கு ஏதும் செய்யலாம்தானே என்றான் பிரசாந்தன். மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு பெட்டியையும் தூக்கிக்கொண்டு அவர்கள் சேர்ச்சின் உள்ளே சென்று. பெட்டியை பிரித்தனர். நல்ல காலத்திற்கு விபரம் அறிந்து முத்தண்ணை பாண்களை கால் றாத்தலாக நாலுதுண்டுகளாக பிரிக்கக்கூடியதாகவே வெட்டி அடுக்கியிருந்தது நல்லதாய்ப்போச்சு என நினைத்துகொண்டு, அங்கிருந்த சிறுவர்களுக்கு பாண் பணிசுகளை கொடுக்கத்தொடங்கினர் மூன்றுபேரும். கொஞ்ச நேரத்தில், வெளியில் இருந்த பலர் தலைதெறிக்க தேவாலயத்திற்கள் ஓடிவருவதைக்கண்டு திடுக்கிட்டான் பிரசாந்தன். அவர்களின் ஓட்டத்தை தொடர்ந்து சிறி லங்கா விமானப்படையினரின் தாக்குதல் விமானமான புக்காரா கீழே பதியும் ஓசை மிக மிக அருகில் கேட்டுக்கொண்டிருந்தது.
தொடரும்....

Saturday, June 18, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - 3. குறுநாவல்


கை காலை அலம்பிவிட்டு வாருங்கள்… களி சமைத்துவைத்திருக்கின்றேன் என்றவாறே கொல்லைப்புறம் இருந்த சிறுகுடிலுக்குள் வாழைக்குலையை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள் அவள்.
அவன் கை கால் நினைக்க அவளும் வந்து முகம் நனைத்துவிட்டு அவனுக்கு களி படைத்துவிட்டு…மெல்ல கதையை ஆரம்பித்தாள்..
என்னங்க…பறங்கியன் எங்களை அடிமைப்படுத்த எண்ணியுள்ளானாம்…மாதோட்டை, தொண்டை எல்லாம் அவர்கள் ஆளுமைதானாமே? சைவர் கோவில் எல்லாம் இடித்து பறங்கிமதக் கடவுளரைத்தான் இனித் தொழுக என்று அணைபிறப்பித்தனராம்.
எம்மன்னன் சங்கிலி.. ஒரு படையுடன் சென்று மாதோட்டையில் பறங்கியர், பறங்கி குருமார் பலரை தலையறுத்து வந்ததாக குந்தவை சொன்னாள் என்றாள். குந்தவையின் கணவனும் ஒரு படைவீரன் என்பது பவுணனுக்குத்தெரியும்.
பறவாய் இல்லை…எனக்கும் வெள்ளைக்கும் தெரியாத பல தகவல்கள் இவளுக்கு கிடைத்துள்ளதே என எண்ணியவாறே…பாவுணன் சொன்னான்
ஓம்…தையல்...அதுதான் நிலைமை. பறங்கியர் எந்த நேரமும் போர் தொடுக்கலாம்…மாமந்திரியும் நேற்று நல்லையில் வணிகர் மத்தியில் தகவல் சொன்னதாக வெள்ளை சொன்னான். அவர்கள் ஏதோ பெரும் இடியோசை போடும் ஆயுதங்கள் எல்லாம் கைவசம் வைத்துள்ளனராம்.. ஒன்று நுர்றுபேரைக் கொல்லும் வல்லமை கொண்டது என்று மக்கள் பேசுகின்றனர். அதுதான் எனக்கும் பயமாக உள்ளது என்றான்.

அவன் உண்டபின் அவளும் தானும் சிறிது உண்டுவிட்டு, தொழுவத்தில் நின்ற ஆடு, மாடுகளுக்கு இலை,குழைகள் பறித்துப்போட்டுவிட்டு இருவரும் சிறிது இளைப்பாறினர்.
பின்னர் சரி பிள்ளை….. நீ உலையை வை…நான் வயல்வரை போய் களைகள் பிடிங்கிவிட்டு வாறேன்…மாலை திருநெல்வேலியில் அங்காடியாம் வண்டிகட்டி போய்விட்டுவருவோம். வெள்ளையும் வருவதாக சொல்லி இருக்கின்றான் என்று தலையில் துணியை சுற்றிக்கொண்டு வயலுக்கு புறப்பட்டான் பவுணன்.


நெல் பிஞ்சுபிடித்து தலைகுனிந்த பெண்போல் இருந்த நெற்பயிர்களைக்கண்டு பேரானந்தம் கொண்டான் பவுணன். சின்னக்குழந்தையை அள்ளி அணைப்பதுபோல சில நெற்கதிர்களை கண்மூடியபடியே…அணைத்துக்கொண்டான்…
தான் சிறுவனாய்…வாழை மடலை இருபக்கம் சீவி…ஆட்டி ஆட்டி பட பட என்று சத்தம் கேட்க இதேவயலில் ஓடித்திரிந்ததும், அவன் ஐயனும், சின்னையன்மார்களும் வயலில் வேலை செய்த காலங்கள் அவன் மனதில் சிறிதுநேரம் வந்துவிட்டுப்போனது.
வயலில் இறங்கி நெல்லுடன் பிடுங்கப்பிடுங்க முளைத்துவரும் களைகளை பிடுங்கி வெளியில் ஒரு இடத்தில் குவித்துக்கட்டி… உடைப்பெடுத்த பாத்திகளை சரிக்கட்டிவிட்டு சிறிதுநேரம் வயல்கரையோரம் நின்ற பூவரசம் மரத்தின்கீழ் இளைப்பாறிவிட்டு. மீண்டும் களைகளை தூக்கி தான் கொண்டுவந்த வாழைநாரினால் இறுக்கக்கட்டி தோளில்ப்போட்டுக்கொண்டு வீடுநோக்கி நடக்கத்தொடங்கினான் பவுணன்.

அவன் வீதியால் நடந்துவர உச்சி வெயில் நெற்றிக்கு நேரே நின்றது. மணல் வீதியல் மண் கால்களைச்சுட்டது. வேகநடை நடந்தே வீடுவந்துசேர்ந்தான் பவுணன்.
பிடுங்கிவந்த களைகளை களைந்து ஆடுமாடுகளுக்கு போட்டுவிட்டு, வீட்டின் பின்னால் இருந்த பொதுக்கிணற்றடிக்குச்சென்று நன்றாக குளித்துவிட்டு வந்து வீட்டுத்திண்ணையில் உக்கார்ந்துகொண்டான்.
பின்னர் தையல்முத்துவுடன் மதிய உணவு அருந்திவிட்டு முற்றத்து வேப்பமரத்தின் கீழே பனையோலைப்பாயைப் போட்டுவிட்டு சிறிதுநேரம் தூங்க அயத்தமானான்.
தையல்முத்து சிறுபாத்திகட்டி நனையப்போட்டிருந்த தென்னை ஓலைகளை கிடுகுகள் ஆக்குவதற்காக வெளியில் இழுத்து பின்னிக்கொண்டிருந்தாள்.

“ஐயா…ஐயா…” என தையல்முத்து எழுப்பவும் திடுக்கிட்டெழுந்தான் பவுணன். என்ன பகலிலேயே அப்படி ஒரு ஆழ்ந்த உறக்கம்? பாருங்கள் மாலை சாயப்போகின்றது. அங்காடிக்குப்போகவேண்டும் என்று சொன்னீர்களே?? இந்தாருங்கள் இதைக்குடித்துவிட்டு ஆயத்தமாகுங்கள் என சொல்லி பசும்பாலை பனம்வெல்லத்துடன் கலந்து அவனுக்கு கொடுத்தாள் தையல்முத்து. எழுந்திருந்து குடித்துவிட்டு.
சரி தையல் நான் வண்டியைக்கட்டி ஆயத்தமாகின்றேன். நீயும் தயாராகு என்று விட்டு வந்து. தனது இரண்டு நாம்பன் மாடுகளையும் வண்டியில்ப்பூட்டி விட்டு. பனைமரத்தில் நாண்கயிற்றைக்கட்டிவிட்டு. கை கால் அலம்பி துடைத்து. வேட்டியுடன் உடலைமூடிச் சால்வையும் அணிந்துகொண்டு.
நெற்துணிமுடிச்சக்களை வண்டியில் எற்றிவிட்டு தையல்முத்தையும் எற்றிக்கொண்டு வெள்ளையின் இல்லப்பக்கம் வண்டியை திருப்பினால் பவுணன். அந்த வேளைகளில் அந்த ஊரிலேயே அவனிடம் மட்டுமே மாட்டுவண்டி இருந்து. அவன் எப்போது வண்டிகட்டிப் புறப்பட்டாலும் மாட்டுவண்டியைப் பிடித்துக்கொண்டு அம்மணமாக சில சிறுவர்கள் அதன்பின்னால் சிலதூரம் ஓடிவருவது வாடிக்கை.
வெள்ளையின் வீட்டின் முன்னால் வண்டில் நிற்க…வெள்ளையும் கையைக்காட்டிவிட்டு வந்து அவனது ஒடியல் முடிச்சை வண்டியில் போட்டவிட்டு தானும் ஏறிக்கொண்டான்.
அங்காடி நோக்கிய அவர்கள் பயணம் தொடங்கியது.


அன்றைய நாள் வேலைகளாக முக்கியமாக பலபேரின் சம்பள நிலுவைகளுக்கு செக் எழுதவேண்டி இருந்தது. வந்தவுடன் அந்த வேலைகளில் படபட வென ஈடுபட்டான் பிரசாந்தன்.
அந்தப்பக்கம் ஏதாவது கதை சொல்லவேண்டும் என்ற ஆவலுடன் வந்த ஓ.ஏ.கூட அவன் வேலை செய்யும் பிஸியைப்பார்த்து ஒன்றும் பேசாமல் தனது இருக்கைப்பக்கம் போய்விட்டார்.
ஒருவாறு ஒரே மூச்சாக பக்கத்தில் என்ன நிகழ்கின்றது என்பதுகூடத்தெரியாமல் செக் போடவேண்டிய பலரில் பாதிப்பேரின் செக்களை எழுதிமுடித்துவிட்டான் அவன்…
பிரசாந்தன்…பிரசாந்தன்…என்ற ஓ.ஏயின் அழைப்பு அவனை அவரை நோக்கிப்பார்க்க வைத்தது. என்ன இப்ப என்று அதட்டுவதுபோல இருந்தது அவனது பார்வை “பன்ரெண்டே முக்காலகப்போகுது தம்பி. நாங்கள் சாப்ட்டுவிட்டு வரப்போறம். நீ வந்தநேரத்தில் இருந்து படு பிஸியாக இருக்கின்றாய்…கவனம் பக்கத்தில ஷெல் விழுந்தாலும் உனக்கு இப்ப கேக்காதுபோல” என இழித்துவிட்டு. நீயும் கொண்டுவந்த சாப்பாட்டை எடுத்தச்சாப்பிடு என்றுவிட்டுச்சென்றார் ஓ.ஏ.

கைகளை உதறி….முகத்தை கைகளால் அழுத்தி வருடிக்கொண்டே எழுந்து போய் கைகளுவிட்டு வந்து, சாப்பாட்டு பெட்டியைத்திறந்து சாப்பிடத்தொடங்கினான் அவன். சும்மா சொல்லக்கூடாது துஸ்யந்தியின் கைப்பக்குவம் தனிதான் என்று மனதுக்குள்ளேயே தன் மனைவியை மெச்சினான் பிரசாந்தன்.
ருசியின் சுவையோ…அல்லது பசியின் கிண்டலோ…மழமழவென்று சாப்பிட்டு முடித்துவிட்டு கைகழுவிவிட்டு. கச்சேரிக்கு வெளியில் வந்து பழையபூங்காவுக்கு எதிரில் இருந்த தற்காலிக எரிபொருள் கடையில் ராக்கிகளில் போத்தல்கள் அடுக்கப்பட்டிருந்த விதத்தைப்பார்த்தபடியே..3 அவுண்ஸ் பெற்றோலை கேட்டு தனது சூப்பிப்போத்தலை நீட்டினான். கடைக்காரர் அதை மிகக்கவனமாக வாங்கி 3 அவுண்ஸ் நிறப்பி விட்டு 300 ரூபா வாங்கிக்கொண்டார்.

மீண்டும் பணிமனை வந்து விட்ட இடத்தில் இருந்து மிகுதிப்பாதிப்பேரின் செக்களை எழுத அரம்பித்தான் பிரசாந்தன். இடையில் அலுப்புத்தட்ட ஆரம்பித்ததுதான் என்றாலும் இன்று எப்படியாவது இதை முடித்துவிடுவதுதான் என்ற வைராக்கியத்துடன் எழதிக்கொண்டிருந்தான். இன்னும் ஒரு பத்துபேரின் செக்கள் எழுதி முடிக்க இருந்த நேரத்தில் 4.30 மணியாகி அனைவரும் வீடுசெல்ல பறப்பட்டனர். அவசரமாக ஒரு 05 நிமிடத்திற்குள் அவற்றையும் முடிதது பியோனை அழைத்து ஏ.ஜி.ஏயிடம் கொடுக்கும்படி தெரிவித்துவிட்டு வாகம் நிறுத்தும் இடத்திற்கு வந்து 3அவுன்ஸ் நிறப்பட்ட சூப்பிப்போத்தலில் இரண்டு துளிகளை குளாயில் விட்டுவிட்டு கிக்கரை அடித்தான் பிரசாந்தன். அட புதுப்பெற்றோல் கனக்க இருக்கு என்ற தைரியத்திலோ என்னமோ ஸ்ராட் பண்ணவில்லை மோட்டார்சைக்கிள். மீண்டும் ஒரு துளி விட்டுவிட்டு உதைந்தான். ம்ம்கூம்…முரண்டு பிடித்தது அது.
ஓ….ஊதமறந்தவிட்டனே…தம் கட்டி ஒரு ஊது ஊதிவிட்டு கிக்கரை அடித்தான்..முழு மண்ணெண்ணை புகையையும் கக்கிக்கொண்டு ஸ்ரார்ட் பண்ணியது வாகனம்.

தேவை இல்லாமல் ஒரு எட்டு ஒன்று போட்டுவிட்டு வீதிக்கு வந்து வீட்டை நோக்கி விரைந்தான் அவன். கிழக்கு பக்கத்தைத்தவிர, மற்ற மூன்று பக்கத்திலும் ஷெல் மற்றும் குண்டுச்சத்தங்கள் கேட்டுக்கொண்டுதான் இருந்தன. ஏன் இன்று காலையில் இருந்து வானத்தில் அச்சுறுத்தும் அசுரர்கள் வரவில்லை என மனதுககுள் கேள்வி எழுப்பியபடியே சென்றுகொண்டிருந்தான்.
வீட்டை அடைந்ததும்…வாசல் பூட்டியிருந்தது. பக்கத்து வீட்டு அக்காவிடம் துஸ்யந்தி எங்கே போயிருக்கின்றாள் எனக் கேட்டான்.
தம்பி…அங்க சென்.பீற்றர்ஸ் தேவாலயத்தில் கனக்க சனம் இடம்பெயர்ந்து வந்திருக்குதுகளாம். அதுதான் உங்கட பெரியக்கா விதானை, கணக்கெடுக்க துஸ்யந்தியைக் கூட்டிக்கொண்டு போயிருக்கின்றா என்றா அந்த அக்கா.


ம்ம்ம்…பாவங்கள் எப்பத்தான் அந்தச்சனங்களுக்கு ஒரு நின்மதி கிடைக்கப்போகுதோ தெரியாது என்று சொல்லிக்கொண்டு அவனும் பறப்பட்டான் தேவாலயத்தை நோக்கி.
போகும் வழியில் யாரோ பின்னால் இருந்து கைதட்டி அழைக்கவே திரும்பிப்பார்தான்…வேறு யாரும் அல்ல சாத்யாத் காண்டீபன்தான்..மச்சான் எங்க போறாய்? என்ற படியே வந்தான்…
இல்லை மச்சான் துஸ்யந்தி, அக்காவுடன் பீற்றர்ஸ் சேர்ச்சில வந்திருக்கின்ற சனங்களை கணக்கெடுக்க போய்ட்டாளாம்…அதுதான் நானுமத் அங்கபோய் சனங்களை பார்ப்பம் என்று வெளிக்கிடுறன்.. அப்படியே ஏதாவது சாப்பாட்டு சாமான்களும் வாங்கிக்கொண்டு போவம் எணடு என்றான் அவன்.
அதுக்கென்ன மச்சான்…நானும் வாறன் வா…முத்தண்ணையிட்ட ஒரு 50 றாத்தல் பாணும் சொஞ்ச பணிசும் வாங்கிக்கொண்டு போவம் என்ற படியே அவன் பின்னால் ஏறினான் காண்டீபன்.

முத்தண்ணையின்ட பேக்கரியில் நிறுத்தி பாண் கேட்டனர்.. தம்பி ஒரு பெட்டில அடுக்கித்தாறன் கொண்டுபோங்கோ என்று முத்தண்ணை பாண்களை அடுக்கியும் அதுக்குமேல் பணிஸ்களை வைத்தும் கொடுத்தார். வாங்கிக்கொண்டு இவர்கள் சேர்ச் வாசலில் போய் நிற்க எதேட்சையாக துஸ்யந்தியும் வெளியில் வந்தாள்.


அந்தநாள் மாலையே..மீண்டும் மீண்டும் அந்த அக்ரோ தொகுதிக்குள்ளேயே செய்திகளை அனுப்பி அனுப்பிப்பார்த்துக்கொண்டிருந்தான் மாதவ். எந்தவித முன்னேற்றமும் இல்லை. அவனுக்கு பைத்தியமே பிடிக்கும்போல இருந்தது.
அவன் மனதில் மட்டும் அந்த நீல நிறத்தில் சுழன்றுகொண்டிருந்த அந்தக்கோளில் இருந்து பிசிறிப் பிசிறி வந்த சமிக்கை அலை மட்டும் திரும்பித் திரும்பி வந்துகொண்டிருந்தது.
புதிய நுட்பங்கள் பலவற்றையும் பிரயோகித்து பார்த்தான் எதற்கும் சாதகமான சமிக்கை தெரியவில்லை. இது பற்றி மேலும் அறியவேண்டும் என்றால் சீன ஆராட்சி மையத்துடனோ அல்லது அமெரிக்க மையங்களுடனோ தொடர்புகொள்ளவேண்டும்…ஆனால் அது கண்டிப்பாக ஆபத்தில்த்தான் முடியும். அதைவிட இப்படியே இருப்பது மேல் என நினைத்துக்கொண்டிருந்தான்.
தொடரும்...

Thursday, June 16, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - 2. குறுநாவல்

தனது மோட்டர் சைக்கிளை ஏமாற்றும் விதத்திலே வெளியாலே தொங்கிய ரியூப்பின் ஊடாக பெற்றோல் 2 துளியை விட்டு ஊதிவிட்டு, கிக்கரை உதைந்தான் பிரசாந்தன்..என்ன அதிசயம் உடனடியாக ஸ்டார்ட் ஆகியது இன்று அது.
மெயின் ரோட்டில் இருந்த காண்டீபன் வீட்டில் மோட்டச்சைக்கிளை நிறுத்தாமலே நின்றான் அவன். மச்சான் உள்ள வாவன் தேத்தண்ணி குடிச்சிட்டு வெளிக்கிடுவோம் என்றான் காண்டீபன்…இல்லை மச்சான் நான் குடித்திட்டேன் நீ குடித்திட்டு கெதியா வா என்றான் பிரசாந்தன். ஒரு நிமிடத்துக்குள்ள காண்டீபன் வர புறப்பட்டார்கள் இருவரும்.

மச்சான் அளவெட்டி, தெல்லிப்பளை, நீர்வேலி எண்டு சனம் எல்லாம் எழும்பி கள்ளியங்காடு, நல்லூரடிப்பக்கம் போகுதளாமடா….ஒரே ஷெல் அடியும்…பொம்பர் அடியுமாமடா…என்று அன்றைய தகவல்களை சொல்ல தொடங்கினான் காண்டீபன்.
ஓமடா காண்டீ….சனங்கள் பாவம்தான் மச்சான் நாங்களும் நினைவு தெரிந்த நாளில இருந்து ஓடிக்கொண்டுதானே இருக்கிறம். இப்ப களியாணம் கட்டி எங்களுக்கும் பிள்ளைகள் பிறந்து…அதுகளும்….பேச்சை நிறுத்திக்கொண்டு மேல்மூச்சுவிட்டான் பிரசாந்தன்.
ஓமடா மச்சான்…எங்கட சந்ததிக்கே இது என்ன சாபக்கேடோ தெரியவில்லை…சரி இருந்து பார்ப்பமன்.

பேசிக்கொண்டே அவர்கள் வந்ததில்…தூரம் தெரியவில்லை. கோவில்வீதியில் காண்டீபன் இறங்கிக்கொள்ள நேரே கச்சேரிக்கு வந்து. வாகனத்தை நிறுத்திவிட்டு தனது பணிமனை அறைக்கு வந்து வாசலில் ஓ.ஏ. நிற்க இந்தாளிடம் பேச்சுக்கொடுத்தா நாளைக்கு காலையிலதான் முடிக்கும் என நினைத்து பின்பக்க ஓடையால் ஏறி வந்து தனது நாற்காலியில் அமர்ந்து கொண்டான் பிரசாந்தன்.


என்ன? எங்கள் மில்க்ரோவுக்கு அடுத்த கலக்ஸியில் இருந்து நான் தயாரித்த Long planet Communication (தூரகோள் தொடர்பாடல்) ற்கு நீல நிறத்தில் சமிக்கை கிடைத்தது கனவா? அல்லது நினைவா? என முழுக்குழப்பத்துடனும், பதட்டத்துடனுமே கண்விழித்தான் மாதவ்.
ஐயோ….எவ்வளவு பெரிய விசயம்…ஏன் மனம் இவ்வளவு இலகுவாக சிந்திக்கிறது? என தனக்குள்ளே வினாவிக்கொண்டே. சுவர்த்திரையில் அவன் வைத்திருந்த அந்த கருவியை கட்டிலில் இருந்தவாறே இயக்கினான் மாதவ்.
யாழ்ப்பாணம்….வடமாகாணம்….தமிழீழம்…இலங்கை…தெற்காசியா..பூமி…
வானவெளி…பால்வீதி..எனக்கடந்து அருகில் இருக்கும் அக்ரோ…தொகுதியை மையப்படுத்தி மீண்டும் தூரகோள் செயற்பாட்டு தொடர்பாடல் முறையை திறந்து நேற்றைய திரட்டு 16.05.2505ஐப் பார்த்தான்…இல்லை…அக்ரோ வீதியின் தொகுதியில் இல்லை…கொழும்புத்துறையில் இருந்துகூட எந்தவொரு சமிக்கையும் அதில் பதிவாகியிருக்கவில்லை.

என்ன இது குழப்பம்? அப்படி என்றால்…அந்த அக்ரோ தொகுதியில் நீல மெழுகுவிளக்கு சுழல்வதுபோல உள்ள ஒரு கோளத்தில் இருந்து…பிசிறி பிசிறி வந்த அந்த வார்த்தை கனவா?
நெஞ்சம் படபடக்க…யோசித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.
ஹே…மாதவ்…என்ன காலையிலேயே பலத்த யோசனையில இருக்கின்றாய்??? என்ன எங்கள் வெட்டிங் முடிந்து 720 மணிநேரம்…ஐ மீன்…வன் மந்த் அகிட்டே என்று யோசிக்கின்றாயா? என்று கேட்டவாறே அவன் அருகில் வந்திருந்தாள் அவன் மனைவி ஷமி.

இல்லை ஷமி…இது ஒரு மகப்பேற்று நிபுனரால் புரிந்துகொள்ளமுடியாத பிரச்சினை. விட்டுவிடு..நான் சொன்னால் நீகூட என்னைப் பைத்தியக்காரன் என்றுதான் சொல்வாய் என்றான் மாதவ்.
ஒரு மகப்பேற்று நிபுனராய்…ஒரு அண்டவெளி ஆராட்சியில் முக்கிய நபருடன் பேசமுடியாதுவிட்டாலும்…As a wife ஆக உன் பிரச்சினை பற்றி என்னால் பேசமுடியும்…சொல்லு மாதவ்…என்றாள் ஷமி.

ஷமி…நம்பு நேற்று நான் தூங்கப்போகும் முன்னர் எனது தூரகோள் தொடர்பாடலில் நம்ம மில்க்ரோவுக்கு அடுத்து இருக்கும் அக்ரோ ரோவில் உள்ள ஒரு நீலக் கோளில் இருந்து ஒரு சமிக்கை ஒன்று கிடைத்தது…இது ஒன்றும் கனவில்லை ஷமி...100 வீதம் எனக்கு நம்பிக்கை இருக்கு…பட்…இப்ப அப்படி ஒரு தொடர்பும் கிடைக்கவில்லை என்று அது தெரிவிக்கிறதைத்தான் என்னால நம்ப முடியாமல் இருக்கு….என்றான் மாதவ்.
ஓகே…மாதவ். ஒரு அண்டவெளி முதல்த்தர நிபுனரிடம் 3ஆம் வகுப்பு தரமாக பேசக்கூடாதுதான் என்றாலும்…நான் ஒன்று சொல்லுறேன்…நீ குறிப்பிட்ட அந்தக்கோள் நீலம்…நம்ம பூமிகூட நீலம்தான் என்பதை நீ மறந்துவிட்டாயா மாதவ்? ஸோ…நான் என்ன சொல்ல வாறேன் என்றால்…இந்த நிறத்தில் ஏதும் தொடர்புகள் இருக்கலாம் இல்லையா?

உண்மைதான்…ஷமி…இதையும் நான் கருத்தில்க்கொண்டு அங்கு 60 வீதத்திற்குமேல் நீர்ப்பகுதி இருக்கவேண்டும் ஸோ அங்கே..ஒட்சிசன் உண்டு என்பதை எல்லாம் சிந்தித்துத்தான் இவ்வளவு நம்பிக்கையாகச் சொல்கின்றேன் என்றான் மாதவ்.


ஏன்…மாதவ் இது தொடர்பாக நீ…சௌரத்துடன் பேசலாமே…அவனும் உன்னுடன் இறுதிவரை ஆராட்சியில் இருந்தவன்தானே..என்றாள் ஷமி.
ஜெஸ்…பட் அவன் இப்போ அமெரிக்க நாசாவுடன் தொடர்புடைய ஒரு ஆராட்சியகத்தில் பணிபுரிகின்றமைதான் என்னைத்தடுகின்றது. எனது இந்தக்கண்டுபிடிப்பை அமெரிக்காவோ, இல்லை சீனாவோ…கைப்பற்றுவதை நான் விரும்பவில்லை என்றான் மாதவ்.
ஓகே…மாதவ்…நான் இன்று ஹைதராபாத் போகின்றேன். ஈவினிங் வந்தவிடுவேன் பேசுவோம் என்றுவிட்டு சென்றாள் ஷமி.
ஷமி….இந்த விடயம் தொடர்பாக…..இழுத்தான் மாதவ்…பிலீவ் மீ..மாதவ்…மூச்சுக்கூட விடயமாட்டேன்..வெளியில் சென்றாள் ஷமி.

என்ன செய்வது…சௌரத்தைத்தவிர நம்பிக்கையானவர்கள் எவருமே கிடையாது..நம்பிக்கையான பிறருக்கோ..இதுபற்றித்தெரியாது…யோசித்துக்குழம்பிய மாதவ். இறுதி முடிவெடுத்தவனாக…சுவர்த்திரையில் சௌரத்தின் அன்றைய நிகழ்ச்சிக்குறிப்பைப்பார்த்தான்…ஜெஸ் தற்போது அவன் இரவு உணவு அருந்தும் நேரம்தான்…தன் கைக்கடிகாரத்தில் உள்ள அதிநுட்ப தொடர்பாடல் கருவிமூலம் சௌரத்தை அழைத்தான். மறு முனையில்…ஜெஸ் மாதவ்…பேசலாமா? நான் திரையில் வரவா? என்றான் சௌரத்.
நானே அதுக்காகத்தான் காத்திருக்கின்றேன் சீக்கிரம் வா என்றான் மாதவ்.
மறுவினாடி மாதவ்வின் சுவர்த்திரையில் சிரித்துக்கொண்டே இருந்தான் சௌரவ்.
அத்தனை விடயத்தையும் சௌரத்திடம் விளக்கினான் மாதவ். நீ..என்னை நம்புகின்றாயா சௌரத்? நம்பகின்றேன்…ஏன் என்றால் நீ சொன்ன வகையில் சாத்தியங்கள் பல உள்ளன.
எது எப்படியோ…உன் தொடர்பாடல் வலையமைப்புப்பற்றி அமெரிக்காவிலும் எந்த விதத்திலோ தெரிந்துவிட்டது. முதலில் அவர்கள் இந்த வலையமைப்பு தமிழ்நாட்டில்த்தான் உள்ளதாக கணித்தார்கள் அனால் இப்போது ஈழத்தில் என்பது தெரிந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த விடயம் உண்மை என்றால் இதை நீ மிக மிக அவதானமாகவே கையாளவேண்டும்.
நம்பிக்கையை தளரவிடாதே… பயப்படாதே நாளை நான் அங்கிருப்பேன்…நேரில் பேசுவோம்…இந்த தொடர்பாடலைக்கூட அவர்கள் அவதானிக்கக்கூடும் என்றுவிட்டு மறைந்தான் சௌரவ்.


குளித்துவிட்டு கரையேறி…உடைகளை பிழிந்து உடுத்திக்கொண்டே அருகில் இருந்த வைரவர் சூலத்தில் இருந்த திருநீற்றைப்பூசிக்கொண்டு கும்பிட்டுவிட்டு பவணனும், வெள்ளையும் தமது வீடுகளை நோக்கி நடக்கத்தொடங்கினர்.
அம்மான்…இன்று திருநெல்வேலியில் இரவு அங்காடி. எங்கள் குலசேகரன் தலைமையில் நடக்கிறதாம், உன்னிடமும் அரைப்புசல் நெல் இருக்குத்தானே..அப்படியே மாலை தங்காளையும் கூட்டிவா..என்னிடமும் கொஞ்சம் ஒடியல் உண்டு. பண்டம் மாற்றிவிட்டு வரலாம். என் அக்காளுக்கு துணிகள் வாங்கவேண்டியும் உள்ளது என்றான் வெள்ளை.
அங்காடி என்று வெள்ளையன் சொன்னதும் மனதுக்குள் பவுணனுக்கும் ஒரு சிறு சந்தோசம். ம்ம்ம்ம் ஆகட்டும் வெள்ளை…நான் வண்டி கட்டுகின்றேன், போகும்போது உன் இல்லம் வந்து அழைக்கின்றேன் என்ற வண்ணம் திரும்பி தன் வீட்டுப்பாதையில் சென்று வீட்டை அடைந்தான்;.
குலைதள்ளி பழுத்திருந்த வாழைமரத்தை சாய்த்து குலையை பிரித்துக்கொண்டிருந்தாள் தையல்முத்து. காலையிலேயே மஞ்சள்பூசிக் குளித்திருந்தாள் என்பது அவள் முகத்திலும் உடம்பிலும் தெரிந்தது.
தொடரும்....

Wednesday, June 15, 2011

ஹொக்ரெயில் -15.06.2011

அவலம் விழுங்கிய பூமி..

"வன்னியில் கலாச்சாரம் சீரழிந்து விட்டது என்று ஓலமிடும் சில பத்திரிகைளும், இளம் விதவைத்தாய்மார் பாலியல் தொழிலில் ஈடுபடுவதாக கட்டுரை எழுதும் புத்திஜீவிகளும் அந்த மக்களுக்கு என்ன மசிர புடுங்கீற்று இப்ப எழுதிக்கிழிக்கினம்....?"

என என் நண்பர் ஒருவர் தன் நியாயமான கோபத்தை முகநூலில் இட்டிருந்தார் கனலாக. அவர் குறிப்பிடும் கட்டுரையினை படித்தபோது எனக்கும் அதே ரௌத்திரமே மனதில் ஏற்பட்டது.
இன்னும் எத்தனை புத்திஜீவிகளுக்கும், கட்டுரை வடிக்கும் மேலோட்ட மேதாவிகளுக்கும் பாடுபொருளாக அந்த குறிப்பிட்ட ஏதிலிகள் ஆக்கப்பட்டமக்கள் இருக்கப்போகின்றார்களோ தெரியாது.
தனது நியாயமான ரௌத்திரக்கனலில்க்கூட அவர் பாலியல்த்தொழில் என்ற மொழிப்பிரயோகத்தையே கையாண்டிருந்தார், ஆனால் அந்த மேதாவியின் வன்னி மக்கள் நிலை சம்பந்தமான கட்டுரையில் விபச்சாரம், விபச்சாரம் என்ற வார்த்தைப்பிரயோகமே அடிக்கடி உபயோகிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்தவேளை உணவுக்கு கையேந்தவைக்கப்பட்ட அந்த மக்களின் ஒருவேளை உணவுப்பசினைப்போக்குவதற்கான மார்க்கத்தையோ, அல்லது உபயோகமான தொழில்த்திட்டத்தையோ, எழுதியிருந்தாலாவது அவர்களில் யாராவது ஒருவருக்கு அது பிரயோசனமாகவாவது இருந்திருக்கும். அதை விடுத்து விபவச்சாரம், விபச்சாரம் என்று கூப்பாடு போடுவதால் ஏதும் பலன் உண்டா என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான்.

நீண்டநாட்களின் பின்னர் நேற்று முதன்நாள் அந்த அவலம் விழுங்கிய பூமிக்கு செல்ல நேர்ந்தது. எனது பிரமையோ அல்லது மனதில் மறைந்திருக்கும் அவலமோ தெரியாது, மனதுக்குள் அந்த ஒட்டு மொத்த மக்களின் இறுதிநேர உயிர்ப்பய அவலக்குரல்களே ஒலித்துக்கொண்டிருப்பதாக உணர்ந்தேன்.
வாழ்வாதாரமே சிதைக்கப்பட்ட அந்த நிலத்தில், தொழில் புரியும் மக்களில் நூற்றுக்கு 60 வீதமானவர்கள் அங்கவீனர்களாகவும், 90 வீதமானவர்கள் உறவுகளின் உயிர்கள், உடமைகளை இழந்தவர்களாகவுமே இருக்கின்றனர்.
இத்தனை நிலைமைகளிலும் இருண்டுவிட்ட வாழ்வில் சின்ன ஒரு நெருப்புக்குச்சி ஒளியாக மீள தம்முயற்சியால் அவர்கள் உழைத்துவாமுற்படுவது எந்தவொரு உவமான உபமேயங்களுக்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.
ஆயிரம் கொடிய அனுபவங்கள் மனதில் இருந்தாலும் உடலுக்குள் இருக்கும் உயிருக்காகவும், தப்பி வாழ்ந்துவரும் தம் குழந்தைகளுக்காகவுமே மீண்டும் அவர்கள் வாழ நினைக்கின்றார்கள்.
அவர்கள் உங்களிடம் வந்து ஒருபோதும் கையேந்தப்போவதில்லை, கொஞ்சம் அவர்களை இனியாவது வாழத்தான் விட்டுவிடுங்களேன்.

இன்றைய காட்சி

யாழ்ப்பாணப் பெண்களும் சின்னமருமகளும்.

தொலைக்காட்சி சீரியல்கள் வீடுகளில் உள்ள ஆண்களுக்கு பெரும் தலையிடியான விடயம் இது என்பது ஒருவகையில் உண்மைதான். ஏன் சீரியல்களை தவறவிடாமல் பார்க்கும் ஆண்களும் இப்பொழுது அதிகரித்து வருவதாக அண்மையில் ஒரு தமிழ் சஞ்சிகை நடத்திய கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் முன்னிரவு 7.30 மணியளவில் சகல தொலைக்காட்சிகளும் நிலைத்து நிற்கும் இடம் ஷீ தமிழ் சனல்தான்.
அதற்கான காரணம் 'சின்ன மருமகள்'.
இந்த விடயத்தில் யாழ்ப்பாண பெண்களிடம் என்னவொரு ஒன்றிப்பு நிலை காணப்படுகின்றது என்று நினைக்கும்போது பெரும் ஆச்சரியமாகவே இருக்கின்றது.
இத்தனைக்கும் ஆயிரம் நேரடித்தமிழ் சீரியல்கள் ஒளிபரப்ப பட்டாலும்கூட மொழிமாற்று சீரியலான 'சின்ன மருமகளில்' வந்திருக்கும் சீரியல்மோகம் அலாதியான ஒரு விடயம்தான்.
அந்த நேரத்தில் இப்போது யாரும் யார் வீடுகளுக்கும் போவதில்லை என்றால்பாருங்களேன்.
இதிலும் என்ன பெரிய ஆச்சரியம் என்றால், பல வீடுகளில் மாமியாரும், பல சின்ன மருமகள்களும் சேர்ந்தே 'சின்னமருமகள்' நாடகம் பார்க்கின்றார்கள்.

இந்தவார வாசிப்பு
ஜென் கதைகள்.

எல்லாத்திரப்பினருக்கும் விரும்பும் கதைகள் ஜென் கதைகள் என்றால் அது மிகைப்பட்ட சொல்லாக இருக்கமுடியாது. வாழ்வியலின் தத்துவங்களை மிக இலகுவானதாகவும், தெளிவாகவும் புரியவைக்கும் தன்மைகள் ஜென் கதைகளில் உண்டு. ஜென் மத குருக்கள், மற்றும் சீடர்களின் வாழ்க்கை, வாழ்க்கையை வாழ்க்கையாகவே வாழ்வதுபோன்றதாக இருக்கும்.
ஜென் வழி எனப்படுவது தெளிவுபடுத்தப்படும் உணர்வு, ஒரு புத்துணர்வு, ஒரு ஊக்கம் மட்டுமே அது எங்கிருந்தும் வருவதில்லை அவை ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் விடையங்கள். அவற்றை ஒருவன் அறிந்து வெளிப்படுத்த உதவுவதே ஜென் என்ற தத்துவமும், நீ வேறு எதுவுமோ அல்ல அதுவே நீ.
நீ... நீயாகவே முழுமையாக இரு, அதுவே ஞானம் என்ற தத்துவமும், எதை செய்தாலும் அதுவாகவே ஒன்றிப்போ என்ற நடைமுறையும் வாழ்வியலின் யதார்த்தங்கள் தானே.
ஜென் என்பது ஒரு நெறி, அல்லது மதப்பிரிவு என்ற எண்ணத்தை இந்தக்கதைகள் தகர்த்துவிடுகின்றன. அதாவது வாழ்க்கையினை வாழ்கையாக வாழ தலைப்படும் ஒருவனுக்கு ஜென் கதைகள் ஒரு வெளிச்சமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.
ஜென் முறைப்படி ஒழுகியதால்தானோ என்னமோ ஜப்பானியர்கள் இன்று உலகே வியர்ந்து பார்க்கும் அழவுக்கு தொழிற்துறையில் உயர்ந்து நிற்கின்றார்கள்.
குழந்தைகளுடன் சேர்ந்து வாசிக்கவேண்டிய வாழ்வியல் புத்தகம் ஜென் கதைகள்.

இந்தவாரப்புகைப்படம்


மியூசிக் கபே
இராக்காலங்களின் நிஷப்தங்களில், இரவோடு ஒன்றிப்போன இனிய கானங்கள் கேட்பதில் ஒருசுகம் உண்டு. அதிலும் எஸ்.பி.பியின் மென்மையான கானங்கள் இராக்காலங்களின் இசை உணர்வுகளை மென்மையாக வருடிவிடுவதுபோல இருக்கும்.
அந்த வகையில் எப்போதும் இராக்காலங்களின் என் தெரிவாக என் ஐபொட்டில் இருக்கும் பாடல் இது.
லக்ஸ்மிகாந்த் ப்யாரிலாலின் இசையில், உயிரே உனக்காக திரைப்படத்தில் வந்த பல்லவி இல்லாத பல்லவி இந்தப்பாடல்.
இப்போது என் குழந்தையினை தூங்கவைக்கும் நான் பாடும் தாலாட்டாகவும் இருப்பதுவும் இந்தப்பாடலே..
ஒருமுறை அமைதியாக கேட்டுப்பாருங்கள்...

ஜோக் பொக்ஸ்
இன்றைக்கு ஜோக் சொல்லவில்லை இதை கேட்டுப்பாருங்கள்

Monday, June 13, 2011

யாழ்ப்பாணமும் காலச்சக்கரமும் - குறுநாவல்

ஐந்நூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை யாழ்ப்பாணத்துடன் சம்பந்தப்பட்ட மூவரை காலம் துரத்தும் கதையிது…

கதையினுள் புகுவதன் முன் ஒரு நிமிடம் - இந்தக்குறுநாவலை நான் 2008ஆம் ஆண்டு ஒரு பத்திரிகைக்காக எழுதியிருந்தேன். அதன் பின்னர் என் பதிவுலக ஆரம்பத்தில் இந்த குறுநாவலை பதிவாகவும் இட்டிருந்தேன். எனினும் அது என் ஆரம்ப கால பதிவுலக நாட்கள் என்பதனால் பல நண்பர்களின் பார்வையில் படவாய்ப்பின்றி போய்விட்டது என்று சில நண்பர்கள் சுட்டிக்காட்டி இதை மீள் பதிவு செய்யும் படி கேட்டுக்கொள்கின்றனர். அந்த நண்பர்களுக்காக இதோ சுவாரகசியம் மிக்க கதையம்சம் கொண்ட அந்தக்கதை....

மாசிப்பனி மூசிப்பெய்துகொண்டிருந்தது, பின்னிரவுக்காலம் என்பதால் விடிவெள்ளி கீழ்வானில் முளைத்துவிட்டாலும்கூட மேல்வானத்திற்கு சற்று மேலாக ஐந்துகலை தேய்ந்த சந்திரன் நின்றுகொண்டுதான் இருந்தான்.
தூரத்து பனங்கூடல்கள் கரும்புகார்கள் போல் தெரிந்துகொண்டிருந்தன, சில்வண்டின் ஓசை, பச்சிலைப்பூச்சிகளின் ஓசைகள் என சேவல் விடியலை உணர்வதற்கு முன்னதான அதிகாலைப்பொழுது தான் அது.
பூவரசந்தடியால் வன்னப்பெற்ற சாரளத்தினூடாக கண்விழித்து இத்தனையும் பார்த்து சப்பாணி கட்டிக்கொண்டு சோம்பல் முறித்தான் பவுணன். பக்கத்தில் குளிருக்கு குறண்டிக்கொண்டே கொசுவத்தால் சுற்றிக்கொண்டு ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள் அவன் மனையாள் தையல்முத்து.

வாழ்க்கை பந்தத்தில் இருவரும்; இணைந்து முழுதாக ஒருமாதம் முடியவில்லை. அப்படியே அமர்ந்திருந்த பவுணன் ஓசைப்படாமல் தையல்முத்து தூங்கும் அழகை இரசித்துக்கொண்டிருந்தான்.
அந்தநேரத்தில் அந்த காலை அமைதியை குலைக்கும் வண்ணம் புரவிகளின் குளம்பொலி ஓசைகள் வட திசையில் இருந்து கேட்டுக்கொண்டே இவன் காதுகளை நெருங்கி வந்தன. ஓசையின் உச்சத்தால் ஒருகணம் திடுக்கிட்ட தையல்முத்து கண்ணைத் திறக்காதவாறே சுதாகரித்தக்கொண்டு, மீண்டும் தூக்கத்தில் ஆழுகின்றாள்.
ம்ம்ம்ம்ம்….. எங்கள் ஊர்வந்து ஒருமாதத்திலேயே வெள்ளிக்கிழமைகளில் அதிகாலையில் மன்னர் சங்கிலியன் கோயில்ப்பூசைக்கச்செல்வார் என்பதை பழக்கப்படுத்திக்கொண்டுவிட்டாளே என வியந்துகொண்டான் பவுணன்.
வீட்டிற்கு வெளியில் வந்து பன்னையை விலக்கிவிட்டு வேப்பம் குச்சி ஒன்றை உடைத்து பல்தேய்தபடியே தன் நெல்வயலை நோக்கி நடந்து சென்றான் பவுணன்.
இராசபாதையில் வழக்கத்தைவிட புரவிகளின் குழம்படையாளங்கள் தொகையாகக்காணப்பட்டன. இதென்ன? என்வாழ்நாளில் நான் எங்கள் மன்னர் இத்தனை படையுடன் கிளம்புவதை காணவில்லையே என மனதுக்குள் விளவியபடியே..சென்றான்….


பவுணன் அம்மான்! திடுக்கிட்டுத்திரும்பினான் பவுணன்…அழைத்தவன் வெள்ளை. விடயம் அறிந்தனையோ…அம்மான் பொருள்படை செய்ய வந்த தூரநாட்டு வெள்ளைத்தோலர், கொடுபடை கொணர்ந்து எம்மை அடிமையாக்கத் திட்டமிட்டுள்ளனராம். அதனால்த்தான் எம் மன்னனும், வீரப்படையினரும் அவர்களை எதிர்கொள்ளப்போகின்றார்கள்…நேற்றிரவு நல்லையில்(நல்லூர்) மாமந்திரி வணிகர்களிடம் தெரிவித்தாக சின்னையன் சொன்னான் என்றான் வெள்ளை.

பார்த்தாயா வெள்ளை…அன்றே உனக்குச் சொன்னேனே…பறங்கியரின் முகம்..நேசம் நாடி வந்ததுபோல் அல்ல.. எம்மைப்பார்த்து அவர்கள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கின்றது என்று…
ஓம்…நீ சொன்னது என் நினைவில் உள்ளது பவுணன்…ஆனால்…அவர்கள் படைவலுவில் உச்சத்தில் உள்ளார்கள் என்பதுதான் “எங்கே நாம் அவர்களுக்கு அடிமைகள் ஆகிவிடுவோமோ என்று பயமாக உள்ளது” என்றான் வெள்ளையன்.
இல்லை வெள்ளை….எம் மன்னனதும், நம் மற வீரர்களதும் வீரத்தில் உனக்கு எள்ளளவும் சந்தேகம் வேண்டாம்…நல்லை முருகனிடமும், நம் மன்னன் சங்கிலியனிடமும் நாம் பாரத்தை போட்டுவிட்டு இருப்போம்…இறுதிவரை பறங்கியரை எதிர்ப்போம்…அடிமை நிலைதான் என்றால் அன்றே இறப்போம்…நாம் வீரவழிவந்த தமிழர் என்பதை மறந்தாயோ..என்றான் பவுணன்.

அன்றைய இக்கட்டுநிலைகள் பற்றி பேசிக்கொண்டே வயல்வரை சென்று வெள்ளையனின் உதவியுடன் துலா மிதித்து வரப்பு கட்டி நெல்லுக்கு நீர்;பாச்சி இருவரும் குளிக்க “யமுனா ஏரிக்கு” வந்தபோது சூரியன் கீழ்வானில் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தான்.



மண்ணெண்ணை 3 லீட்டர் கிடக்கிறது…அந்த சிங்கர் ஓயில் போத்தலுக்க பெற்றோல் இருக்கோ தெரியாது…முந்தநாள்த்தான் 2 அவுண்ஸ் வாங்கினேன்..சீ…நேற்று என்ன நினைவில் இருந்தனோ தெரியாது என்ற நினைப்புடனேயே எழுந்தான் பிரசாந்தன்.
ஓடிப்போய் அவசர அவசரமாக குளித்துவிட்டு..வந்து நாள்க்களன்டரைக் கிளிக்க அது 17 செப்ரம்பர் 1995 என்று காட்டியது.
சச்சேரியில் எழுதுவினைஞனாக பணிபுரியும் அவன் நவாலியில் இருந்து கச்சேரியடிக்குச் செல்ல சில துளி பெற்றொலிலும்…பல துளிகள் மண்ணெண்ணையிலும் ஓடும் அந்த சீ.டி.125 என்ற ஒன்றைத்தான் நம்பியிருந்தான்.
ம்ம்ம்….அடுத்த நினைவு வந்தது…ஓகஸ்ட் 17 1995ல தான் அவனுக்கும் துஸ்யந்திக்கும் திருமணம் நடந்தது. சண்டிலிப்பாய்ல துஸ்யந்திட வீட்டதான் திருமணம் என்று இருந்து பிறகு அங்க அந்த நாளில் முன்னேறிப்பலபேர் பாய கடைசியாக கலாட்டாக்களியாணம் மாதிரி அங்க மாறி இங்க மாறி…பொம்பிள வரேல்ல, பொம்பிளேட தமையன்மார் இன்னும் வரேல்ல என்ற பல கதைகள் கேட்டு ஒருமாதிரி…கடைசியில நல்லூர் மனோன்மணி அம்மன் கோவில்லதான் கல்யாணம் நடந்திச்சு.
அந்தப்பகிடி முடிஞ்சும் சரியாக ஒரு மாதம் அகியிருந்தது.

வெளிக்கிட்டு வெளியால ஓடிவந்து அந்த சூப்பிப்போத்தில் என்று தான் அன்பாக அழைக்கும் சிங்கர் ஒயில்ப்போத்திலை பார்த்தான் ஒரு 15 துளிக்கு கிட்ட அதுக்குள்ள பெற்றோல் கிடந்தது…அப்பாடா…ஒருமாதிரி கச்சேரியடிக்குப்போகலாம்..அங்க போய் ஒரு 3 அவுண்ஸ் பெற்றோல் வாங்கினாப்போச்சு என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது…
இஞ்சாருங்கோப்பா…சொல்ல மறந்திட்டன் எங்கட காண்டீபன் அண்ணை நீங்கள் போகேக்க ஒருக்கா தன்னையும் கூட்டிக்கொண்டு போகச்சொன்னவர் என்று சொல்லிக்கொண்டே அவனிடம் தேத்தண்ணியை நீட்டினாள் துஸ்யந்தி..
பிறகு கெதியா வேளைக்கே போங்கோ…பிறகு வானத்தில இந்த தாலியறுப்பார் வந்திடுவான்கள் என்று அவள் சொல்லும்போதே சில ஷெல்ச் சத்தங்கள் கேட்டவண்ணம் இருந்தன.
சக்கரம் சுழலும்..............

Thursday, June 9, 2011

இலை துளிர்காலத்து உதிர்வுகள்.......07

உலக வரைபடத்தில் இலங்கையை உற்று நோக்கினால், அது அழகான ஒரு தேசம்தான், சகல வளங்களையும், இயற்கை அழகையும் உடைய வாழ்வதற்கு சிறப்பான சீதோஷ்ண, உகந்த காலநிலைகளைக்கொண்ட வலையத்தில் அமைந்த சிறப்பு கொண்ட நாடுதான்.
ஆனால் வெள்ளைத்தோலர்களின் வெளியேற்றத்தின் பின்னர், குறிப்பிட்ட இனம்மட்டும் சிந்தி முடித்த கண்ணீர் முழுவதையும் சேர்த்தால் இந்த இலங்கையே இந்து மா சமுத்திரத்தினுள் மூழ்கிவிடும் அளவுக்கு அந்த கண்ணீரின் கனதியும், உவப்பும் மிக மிக ஆழமானது.

ஓவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சோகங்கள் உள்ளுக்குள் மறைந்திருக்கும் என்பதற்கு அன்று என்வீடும் விதிவிலக்கில்லை என்றானது.
இந்தியா சென்று மேற்கல்வி மற்றும் பயிற்சிகளை பெற்ற ஒரு சிறந்த ஓவியரும், ஆசிரியருமான எனது தாய் மாமனார் 'சிங்கோ மாஸ்ரர்' என்று மட்டு நகர் மாணவர்களாலும், சுற்றத்தாலும் அன்போடு அழைக்கப்பட்ட பகவத்சிங்.
அவர் வரையும் ஓவியங்கள் வண்ணமயமாக இருந்தாலும், அவர் உடுக்கும் உடை என்றுமே வயிட் அன்ட் வயிட்தான். நெடிய உருவம், சிவத்த தேகம், நீளமான தலைமுடி, அடர்த்தியான தாடி, கிட்டத்தட்ட கே.ஜே.ஜேசுதாஸ் போன்றதொரு கொளரவமான உருவம் அவருடையது.
தாய்வீட்டு தொடர்பாக எனக்கிருந்த ஒரே ஒரு தாய்மாமன் அவர் மட்டுமே.
மட்டக்களப்பு வந்தாறுமூலையில் இடம்பெற்ற அசம்பாவிதமொன்றில் அவர் தன்னுயிரை விடவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருந்தது.
நெஞ்சுக்குள் கல்லொன்றை போட்டதுபோன்ற ஒரு உணர்வு, ஆசிரியையான என் மாமியாரையும், மைத்துனர்களையும் நினைத்துப்பார்க்கின்றேன்.

அதே மட்டக்களப்பு நகரில்த்தான் நான் பிறந்திருந்தேன், அன்றைய தினத்திலே அதே மட்டு நகரில்த்தான் எப்போதுமே எனக்கு முகம்தெரியாத அவரின் தங்கையான என் தாயாரை என் பிறந்த தினத்திலேயே இழந்திருந்தேன்.
நான் பிறந்தபோது தன் அருமை தங்கையை இழந்த பரிதவிப்புடன், அவளது மகவை, மருமகன் என்று முதன்முதல் கைகளில் ஏந்திய அன்று, அந்த மனது எப்படி பரிதவித்திருக்கும்?
கரைபுரண்டோடும் கண்ணீரை நிறுத்திக்கொள்ளமுடியவில்லை.. மனது மாமா..மாமா என்று பரிதவித்துக்கொண்டிருந்தது, வாஞ்சையான நான் ஆசையுடன் உக்காரும் அந்த வெள்ளை டவுசர் அணிந்த மடியையும், என் மாமாவின் உடல் சூட்டின் அரவணைப்பையும் ஏங்கி மனது பரிதவித்துக்கொண்டிருந்தது.
வீடு மட்டுமன்றி மனதும் சுடுகாடாகிவிட்டிருந்தது அன்று.

அன்பாக முத்தம் கொடுக்கும்போது குத்திக்கொள்ளும் அந்த தாடியும், தூரத்தில் அவர் உருவம் தெரிந்தாலே குதூகலத்தில் துள்ளிக்கொள்ளும் என் உருவத்தின் நிழல்களும், இலாவகமாக, ஸ்ரைலாக அவர் பிடிக்கும் சிகரட்டும், மனதுக்குள் வந்துகொண்டே இருந்தன...

இதுபோன்று இந்த யுத்தம் எத்தனை இளம்குருத்துக்களின் மாமன்களை கருவறுத்திருக்கும், எத்தனை ஆசைகளை, எத்தனை கற்பனைகளை கருவிலேயே கருக்கலைப்பு செய்திருக்கும். அப்பா.. இந்த யுத்தம் எத்தனை கொடுமையானது என்பதற்கு எனக்கு நேரடிப்பதிலாக கிடைத்த கொடுமையான விளக்கமாக அது இருந்தது.

சில இரவுகளும் சில பகல்களும் கழிந்துபோன நாள் ஒன்றிலே யாழ் நகரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராளிகளின் வாகனங்களை வழமைக்கு மாறாக அதிகமாக அங்கும் இங்கும் ஓடும் அவசரத்தனைத்தை அவதானிக்கமுடிந்தது.
அவற்றுக்கான விடைகள் மக்களுக்கு கிடைக்க அதிக நேரம் ஆகியிருக்கவில்லை.
இந்திய உலங்கு வானூர்த்திகள் திடீர் என வந்திறங்கியதாகவும், போராளிக்குழுத்தலைவர் உட்பட்ட குழுவினரை ஏற்றிக்கொண்டு விரைவாக அந்த வானூர்திகள் இந்தியா நோக்கி கிளம்பிவிட்டதாகவும் பெருசுகள் மத்தியில் கதைகள் அடிபடத்தொடங்கியிருந்தன.

ஏன் பாருங்கோ கொண்டுபோட்டாங்கள் ஏதும் வில்லங்கமே?
சீச்சீ.. நீர் ஏனும்காணும் சும்மா பயப்படுறீர்? எங்கட சோகங்களுக்கு ஒரு விடிவுகாலம் வரப்போகுது என்று மனதை தேற்றுற வழியைப்பாரும் காணும், ஒன்றுக்கும் யோசியாதையும், எங்கட பிள்ளைகள் பத்திரமாக வந்திடுவாங்கள், இந்தியாதானே கூட்டிக்கொண்டுபோகுது, அவங்கள் எண்டைக்கும் எங்கட பக்கம்தான் காணும்..
என்று பென்ஷன் வாங்கிய பொலிஸ்காரரான மார்க்கண்டருக்கு தெளிவுபடுத்திக்கொண்டிருந்தார், ஸ்ரேஷன் மாஸ்டராக இருந்து பென்ஷன் எடுத்த திருநாவுக்கரசர்.
இந்த சம்பாசனையினை வீட்டுமதிலில் இருந்து கொண்டு, ஒரு புழுகத்துடன் கேட்டுக்கொண்டிருந்தது என் மனது.

வழமைபோல மாலை நேரம் இந்தியச்செய்திகளை கேட்க ஆர்வம் வீட்டாருக்கு அதிகமாகவே கூடியிருந்தது. செய்திகள் கொண்டு செல்லப்பட்டவர்கள் டெல்லி அசோகா ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருப்பதாகவும், பல தரப்பட்ட பேச்சுவார்த்தைகள் அவர்களுக்கும், இந்திய உயர்மட்டத்தினருக்கும் நடைபெற்று வருவதாகவும் அந்த செய்திகள் தெரிவித்தன...

இலைகள் உதிரும்....

LinkWithin

Related Posts with Thumbnails