
கடந்த பதிவர் சந்திப்பு முடிந்து கொஞ்சம் நின்று அளவலாவியபோது நண்பர் லோஷன் ஒரு கருத்தை முன்வைத்திருந்தார். அதாவது குறிப்பாக ஒவ்வொரு பதிவர்களுக்கும் ஒரு “ரேட் மார்க்” இருக்கும், சில பதிவர்கள், சில மையக்கருத்தில் பதிவுகளை எழுதுவது அரிது. அந்த வகையில் பதிவர்களின் “ரேட் மார்க்கை” கொஞ்சம் மாற்றிப்போட்டு பதிவு எழுதலாமே நன்றாக இருக்குமே என்பதே அந்த கருத்து. கொஞ்சம் யோசித்து பார்த்தால் அது சிறந்ததொரு ஐடியாவாகவும் தெரிகின்றது.
எனவே லோஷன் பிரேரித்த அந்த கருத்தை நான் வழிமொழிகின்றேன். அதன் பிரகாரம் ஆழமாக யோசித்ததில் இன்ன பதிவர்கள் இதை, இதை எழுதினால் நன்றாக இருக்கும் என்ற எண்ணக்கரு மனதில் பட்டது.
இதோ எனது அன்பான அழைப்புக்கள்….
சிதறல்கள் ரமேஸ் - ஒரு கிரிக்கட் பதிவு
யோ வொயிஸ் யோகா – திகில் திடுக்கிடவைக்கும் ஒரு ஆவிக்கதை.
சுபாங்கன் - ஏதாவது சமகால உலக நடப்பு சம்பந்தமான ஒரு பார்வை.
கன்-கொன் - ஏதாவது வேற்றுமொழிக்கதை ஒன்றின் தமிழாக்கம்.
மருதமூரான் - இலங்கையில் பங்குகளின் முதலீடும், அதன் இலாப நட்டமும்
அனுதினன் - விஞ்ஞானம் சம்பந்தமான (தொழிநுட்படம் அல்ல) ஒரு பதிவு.
பவன் - இலங்கைப்பதிவர் சுற்றுலா (ஒரு கற்பனை, கலாய்ப்பு பதிவு)
வரோ - இலங்கையில் நாடகக்கலை (சிங்களம், தமிழ்)
மதி.சுதா - ஈழத்தில் ஆறுமுகநாவலரின் பின்னரான சைவ வளர்ச்சி!
கிப்போ – பெண்ணியம் போற்றும் ஆண்கள் ஐவர்.
அசோக்பரன் - ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை.
சின்மயன் - தொழிநுட்பம் சம்பந்தமான ஒரு நவீன பதிவு
நிரூஜா – மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
வந்தீஸ் - காதல் ரசம் சொட்டும் ஒரு காதல் சிறுகதை.
ஜீ - சுஜாதாவின், கணேஸ்- வசந்த் ஒரு பார்வை.
வந்தியத்தேவன் - “அன்புள்ள ரஜினி” என்ற தலைப்பில் சினிமா தவிர்ந்த ரஜினி
சதீஸ் - “புலம்பெயர்வும் தமிழ் இலக்கியமும்” என்ற தலைப்பில் ஒரு பதிவு
நா. மது – ஹொலிவூட் திரைப்படங்கள் அண்மைக்காலப்பார்வை.
கூல் போய் - சுய முன்னேற்றத்திற்கான வழிகள் என்ற தலைப்பில்
அஸ்வின் - மனம்போல் வாழ்வு என்ற தலைப்பில் ஒரு பதிவு
வடலியூரான் - நத்தாரும் ஏதென்சும் என்ற தலைப்பில்
கார்த்தி – கனாக்காணும் காலங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
ஜனகனின் எண்ண ஜனனங்கள் - திருக்குறளும் முகாமைத்துவமும்
லோஷன் - முன்மொழிந்தவரல்லவா?... லோஷன் ஒரு கவிஞரும்கூட என்பது எனக்கு ஓரளவு தெரியும் ஆனால் நீண்டநாட்களாக அது…மிஸ்ஸிங்…
சோ… பதிவுகளைப்போலவே நீளமான ஒரு கவிதை.
இந்த லிஸ்டில் வராத பதிவர்கள் அப்பாடா…கண்டுக்கலை என்று நினைக்கவேண்டாம். மேலே உள்ளவர்கள் இதை நடைமுறைப்படுத்த தொடங்கியவுடன் அடுத்த லிஸ்ட் தயாராகவே உள்ளது.
38 comments:
விரைவில் எழுதுறன்.
2-3 தினங்களில் எழுத முயல்கிறேன்.
//சுஜாதாவின், கணேஸ்- வசந்த் ஒரு பார்வை//
விரைவில் எழுத முயல்கிறேன்!
'பார்வை' என்ற சொல்லே ஒரு சீரியஸ் தனத்தை உணர்த்துவது போல்...! அதுதான் கொஞ்சம் பயமா இருக்கு! 'பார்வை'க்கு பதிலா 'மொக்கை' என்றிருந்தால் கொண்க்சம் சந்தோஷமா இருக்கும்! :-)
3 நாள் 4 நாள் என்று எல்லாம் சொல்ல மாட்டேன் வெகு விரைவில் எழுதுகிறேன் நல்ல யோசனை கட்டுரை சீரியசாக இருக்க வேண்டும் எல்லோ.... அதனால் ஆராய்ந்து எழுதுகின்றேன்.
அழைப்பிற்கு நன்றி
அவ்வவ், ஐ ஆம் க்றையிங்
அழைப்பிற்கு நன்றி! மாற்றமொன்றை நானும் விரும்புகிறேன், அதுவும் ரஹ்மானின் இசையைப்பற்றித் தந்திருப்பதால் கூடுதல் பற்றுதலுடன் எழுதமுடியும், கொஞ்சம் கால அவகாசம் தேவை, இசை என்பதால் உணர்ந்து உயிர்த்து எழுத வேண்டியது அவசியம்!
லோஷன் அண்ணாவுக்கு மஹிந்தர விமர்சிக்கச் சொல்லியிருக்கலாம் ;-)
அண்ணா உங்களின் திட்டமிடல் மிகவும் கிறங்கடிக்கிறது... இதற்கான சிரமம் கடுமையானது தான்.. இம்புட்டுப் பேருடைய லிங்கும் எடுத்து புகுத்துவதென்பது மிகவும் கடுமையானதே....
மற்றையது எனக்குத் தேரிந்தெடுத்துள்ள விசயம் எனக்கு பொருத்தமானது என நீங்கள் கருதுவது சரி தான் அண்ணா அனால் நான் பிறப்பால் மட்டும் தான் இந்துவே தவிர எழுத வெளிக்கிடும் போது பல நேர் மறை விடயம் கலக்கப்படும். இது யார் யாரை தாக்குமென்பது உங்களது சென்றவார பதிவே சான்று.. நான் இன்னும் வளரவில்லை ஒரு சில நாள் அவகாசம் பெற்றுத் தான் கை வைப்பேன்... அது வரை எஸ்கேப்.... ஹ..ஹ...ஹ..
நல்ல முயற்சி. எல்லோரும் எழுதவும்..
நல்ல முயற்சி வெற்றி பெற என் வாழ்த்துகள். ....
அட!
உண்மையில்
மாத்தித்தான்
யோசித்திருக்கிறீர்கள்!
மாட்டிக்கொண்டோருக்கு
வாழ்த்துகள்!
//என்.கே.அஷோக்பரன் said... on
December 22, 2010 7:56 PM
லோஷன் அண்ணாவுக்கு மஹிந்தர விமர்சிக்கச் சொல்லியிருக்கலாம் ;-)//
கவிதை வடிவில் விமர்சனம் வருமா எனப் பார்க்கலாம்
EXAMஐ எழுது எண்டு சொன் மாதிரி கிடக்கு. ஐயோ கடவுளே என்ன செய்யிறது விரைவில் எழுதுறன். எதாவது பிட்டுப்பேப்பர் தரமாட்டிங்களோ?
அழைப்புக்கு நன்றி.
ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அவ்வளவு படங்கள் பார்ப்பதில்லை. ஆனாலும் பார்த்த படங்களை வைத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். தலையங்கம் மாறலாம். :)
ஹொலிவுட் படங்களின் பார்வையை எழுதுற அளவுக்கு நான் அவ்வளவு படங்கள் பார்ப்பதில்லை. ஆனாலும் பார்த்த படங்களை வைத்து எழுதலாம் என்று நினைக்கிறேன். தலையங்கம் மாறலாம். :)
கிரியேட்டிவ் ஐடியா ...சூப்பர்
கண்டிப்பாக அண்ணா....தங்கள் இருவரின் கருத்தை ஏற்று கொண்டு எதிர்பார்த்த பதிவுடன் சந்திக்கின்றேன்........
இவற்றுடன் நான் அதிகம் எதிர்பார்க்கும் பதிவுகள்....
கன்கொன்,பவன்,மதி.சுதா,அசோக்பரன்,வந்தீஸ்,வந்தியத்தேவன்,கூல் போய் ஆகியோரின் அட்டகாச பதிவுகளுடன் லோஷன் அண்ணாவின் கலக்கல் கவிதையையும்.........
//மனித மனத்தின் விநோதங்கள் என்ற தலைப்பில் ஒரு பதிவு
இதை பாத்ததில இருந்து ஒரே அழுகை அழுகையா வருது.
வதீசுக்கு குடுத்த தலைப்பு சூப்பர்
கண்டிப்பாக மிகவிரைவில் எழுதிறன்
கண்டிப்பாக முடிந்தளவு விரைவில் எழுத முயற்சிக்கிறேன்:)
அண்ணர் தனிப்பட்ட கோபம் இருந்தா கண்ணத்தில பளார் என்று அறையுங்கோ, அதை விட்டிட்டு எனக்கு ஏன் இப்பிடி ஒரு தலைப்பு. றொம்ம்ம்பப... நாள் எடுத்துப்பன் பறவாயில்லையா?
தொழிநுட்பம் என்ற பெயரிலே அடிக்கடி கழுத்தறுக்கிறேன் என்று நண்பர்கள் குறைப்பட்டுக்கொண்டதால் இனி “தொழிநுட்ப ஆணி”யே புடுங்க வேண்டாம் என யோசித்திருந்தேன்..
மாறாக மாற்றி யோசி யிலும் தொழிநுட்பம் சம்பந்தமான பதிவுக்கே அழைத்துவிட்டீர்கள்.. நிச்சயமாக எழுதுகிறேன்..
அருமையான ஐடியா
மாத்தி யோசித்திருக்கிறீர்கள் விரைவில் நிறைய நல்ல பதிவுகளை வாசிக்கலாம் எனச் சொல்லுங்கள்
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!
குட் போஸ்ட்
பகிர்வுக்கு நன்றி.
விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...
ஓ..ஓ,.ஓ,.ஓ..
கூல் போய் - சுய முன்னேற்றத்திற்கான வழிகள்
விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி...
அய்'ல் ரைற் சூன்...
புதுசு புதுசா யோவிக்கிறீங்களே...
நன்றி ஜனாண்ணா...
அட அட நீங்க ரொம்ப நல்வருண்ணே, ஒரு ரோல்ஸ் எக்ட்ரா தந்தேன் எங்கிறதுக்காக மொக்கைப் பதிவே பரிசாக் குடுப்பீங்க எண்டு நினைச்சே பாக்கல..:P
கரும்பு தின்னக் கூலியா நிச்சயம் எழுதுகிறேன்..:D
கூடுதலாக சுபா அண்ணா, அனுதினன்,லோஷன் அண்ணா,ம.தி.சுதா ஆகியோரின் பதிவுகளை எதிர்பார்க்கிறேன்..:D
அடிக்கடி இப்படித் தலைப்புக் குடுத்து எழுதலாம், அட்லீஸ்ட் மாதத்துக்கு ஒண்டாவது..ஹீஹீ
நல்லதொரு முயற்சி ஜனா அண்ணா.
தரமான பதிவுகள் வருமென்று நினைக்கிறேன்
லோஷன் அண்ணா இதுக்காகவே flight பிடிச்சு வந்து ஒருக்கால் உங்களை அன்பாய் பார்த்திட்டு போகணும் போல இருக்கு. அழைப்புக்கு நன்றி ஜனா அண்ணா. முடிந்தால் விரைவில் எழுதுகின்றேன். ஆனால் எனக்கு ஏன் இந்த தலைப்போ?
ஆகா.. கலந்துரையாடும்போது சொன்ன ஒரு சின்ன மேட்டரை இவ்வளவு ஸ்பீடா ஐடியா போட்டுக் கொண்டுவருவீங்க என்று நினைக்கேல்லையே..
ஆனால் என்னோடு என் இப்படி ஒரு காண்டு?
கவிதை? அதெல்லாம் எழுதிக் கனகாலம் ஆச்சே..
சரி புது வருஷத்தில் எழுதவா?
யோவ் அசோக்.. பிறகு கவனிக்கிறேன் அய்யா உம்மை..
அச்சு - ஏன்? ஏன்? ஏன்?
//விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//
விழுந்து விழுந்து சிரித்தேன்..
////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//
விழுந்து விழுந்து சிரித்தேன்..//
நன்றி லேஷன் அண்ணா...
நம்மளையும் கவனிச்சிட்டு தானிருக்கறீங்க...
////விஜயப்புடிச்சு காசக்குடுத்து நடிக்க சொல்லுகிற உலகம்
கூல்போயப்புடிச்சு தலைப்ப குடுத்து எழுதச்சொல்லுகிற ஜனாண்ணா..
அது எப்படி நடிக்குமய்யா...
இது எப்படி எழுதுமய்யா...//
எல நா காண்ட் ஆய்டுவேன்....நான் விஜய் ரசிகன்.....
Post a Comment