பெண் எனப்படுபவள்!
பெண்மை போற்றும் நபர்களும், பெண்ணியம் கண்ட தேசங்களும் எப்போதும் உயர்வான நிலையில் இருப்பதை காணக்கூடியதாக இருக்கும்.
ஒருவகையில் இன்றைய நாகரீக உலகில் ஆண், பெண் என்ற சொற்பத பேதமே தவறானது, தடை செய்யப்படவேண்டியதாக இருக்க வேண்டும் என்பது முற்போக்குச்சிந்தனையாளர்களின் வாதமும்கூட.
இந்த நிலையில் இந்த உலகத்தில் ஒரு ஜீவன் கருத்தரிக்கும்போதில் இருந்தே அந்த ஜீவனின் இறுதி மூச்சுவரை பெண் எனப்பட்டவள், பல வடிவங்களில் அந்த ஜீவனுடன் ஒன்றித்து இருக்கின்றாள்.
தாயாய், குருவாய், பாட்டியாய், சகோதரியாய், பெரியன்னையாய், சிற்றன்னையாய், அத்தையாய், மாமியாய், மைத்துனியாய், நண்பியாய், காதலியாய், மனைவியாய், மகளாய், மருமகளாய், பேர்த்தியாய் என்று ஒரு ஜீவின் அத்தனை செல்வாக்குச்செலுத்தும் உறவுகளிலும் பாசத்துடன் கூடிய முதன்மையானவளாய் அவளின் பங்கு நிறைந்திருக்கும்.
பெண் என்ற பதத்தையே போகப்பொருளாயும், காம நினைவாகவும் சிந்திக்கும் வக்கிரமான சிந்தனைகளை இன்றைய உலகின் சினிமாக்களும், இன்னபிறவும் விசங்களாக தூவி விட்டிருக்கின்றன.
பாராளுவதில் இருந்து, மண்டலப்பயணங்கள்வரை இன்று பெண்கள் தங்களை நிரூபித்துக்காட்டியுள்ளது இத்தகைய சிந்தினைகளுக்கு வைக்கப்படும் தீயாக இருக்கட்டும்.
“ஆண், பெண் என்ற பேதங்கள் பொது இடங்களில் கழிப்பறைகளில் மட்டும் இருக்கட்டும்”
சகோதரிகள் அனைவருக்கும் ஹொக்ரெயிலின் மகளிர் தின வாழ்த்துக்கள்.
பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள்.
இன்று பதிவர் மதி.சுதாவின் பிறந்தநாள். (எத்தனையாவது என்று அடித்தும் கேட்பாங்க சொல்லிடாதீங்கண்ணே! என்று சொல்லியுள்ளதால் அதை சொல்லலை)
குழந்தை மனம் உள்ள அவர் என்றும் குழந்தையாகவே குணத்தில் இருந்து, வாழ்வில் ஜெயித்துக்காட்டவேண்டும். நிச்சயம் ஜெயிப்பார்.
இன்றைய அவரது பிறந்த நாளினை முன்னிட்டு, அனைத்து பதிவர்கள் சார்பாகவும்,
“பதிவுப் புயல்” என்ற சிறப்பு பட்டத்தை சுடச்சுட அவருக்கு வழங்குவதில் ஹொக்ரெயில் பெருமைப் பட்டுக்கொள்கின்றது.
இந்தவாரக் குறும்படம்
கண்டிப்பாக பாருங்க..அம்மாவை மிஸ் பண்ணிடாதீங்க..
வடக்கின் பெரும்சமர்!
“பட்டில் ஒவ் த நோர்த்” என்று இலங்கையில் சிறப்பிக்கப்படும், வடக்கின் பெரும்போரான மாபெரும் துடுப்பாட்டப்போட்டி எதிர்வரும் 10,11,12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
அதாவது.. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், யாழ்ப்பாணம் பரி.யோவான் கல்லூரிக்கும் இடையிலான பாரம்பரியமிக்க “பிக் மச்” என்று சிறப்பிக்கப்படும் துடுப்பாட்டப்போட்டியே இது.
105ஆவது தடவையாக இம்முறை இடம்பெறும் இந்தப்போட்டிகளை சிறப்பாக நடாத்துவதற்கு சகல தரப்பினரும் தயார் செய்யப்பட்டுள்ளனர்.
இருந்தபோதிலும், முன்னைய காலங்களைப்போல இந்தப்போட்டிக்கான மாணவர்களின் எழுச்சிகளை தற்போது காணமுடிவதில்லை. முன்னைய காலங்களில் இந்தப்போட்டிகள் ஆரம்பிபதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்கள் தங்கள் கல்லூரி கொடிகளை பல வாகனங்களில் ஏந்திய வண்ணம், எழுச்சியுடன் வீதி வலம் வருவதை அவதானிக்கலாம். இத்தகைய நிலை தற்போது அடியோடு மறைந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை 11ஆம் தேதி மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான அழைக்கப்பட்ட “சென்றல் நைட்ஸ்” இரவு விருந்து இம்முறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தவார வாசிப்பு
தாளப்பறக்காத பரத்தையர் கொடி
பிரபஞ்சன் என்ற படைப்பாளியின் எழுத்துக்கள் அறிமுகமாவதற்கு முன்னமே, அந்தப்படைப்பாளியே எனக்கு அறிமுகமாயிருந்தார். சென்னையில் இருந்த காலத்தில் “தமிழ் ஸ்ரூடியோ டாட் காம்” அமைப்பினரின் குறும்பட வட்டம் நடத்திய குறும்பட, இலக்கிய கூட்டம் ஒன்றில் அவர் அறிமுகம் கிடைத்தது.
அதன் பின்னராகவே அவரது எழுத்துக்களை தேடிவாசிக்கத்தொடங்கினேன்.
இப்போது வந்திறங்கிய புத்தகங்களில் இரண்டாவதாக நான் கைவைத்திருக்கும் புத்தகம் பிரபஞ்சனின் தாளப்பறக்காத பரத்தையர் கொடி.
எனக்கு பிரபஞ்சனிடம் இருக்கும் பெரும் ஆச்சரியம் என்ன என்றால், ஒரு விடையத்தின் மேல் எல்லைகடந்த அறிவும், விடையப்பரப்பும் எழுத்துக்களில் காணப்படுவதும், அவற்றை மிக இயல்பான நடையில் கொண்டு செல்வதுமே.
சில கட்டுரைகளில் நாம் அறிந்த, படித்த சில விடையங்களைக்கூட நாம் சிந்திக்காத ஓர் கோணத்தை நோக்கி எம்மை பிரமிக்க வைத்துவிடுகின்றார் பிரபஞ்சன்.
அன்றாடம் நாம் கற்ற அறிந்த, அனுபவ ரீதியான கட்புல, செவிப்புல நுகர்வுகளைக்கூட எழுத்துக்களில் எப்படி இலாவகமாக கொண்டுவருவது என்பதை கண்டிப்பாக பிரபஞ்சனிடம் இருந்து கற்றுக்கொள்ளலாம்.
மியூஸிக் கபே
புத்தம் புது மலர்கள் நாங்கள் அதை கிள்ள நினைக்கக்கூடாது!
மகளிர் தின சிறப்பு பாடல்.
ஜோக் பொக்ஸ்
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.
18 comments:
நண்பரே... நல்ல பதிவு... இண்ட்லியில் வாக்களித்து விட்டேன்!
நல்ல பதிவு... மகளிர் தின சிந்தனை அருமை..
வந்தாச்சு..
WAIT
எனக்கு பிடித்த கௌசல்யா பாட்டு. பகிர்வுக்கு மகிழ்ச்சி.
வழக்கம்போலவே சிறப்பு ஜனா,முதல் வரி பொன்னெழுத்துக்கள்.
“பதிவுப் புயல்” சுதா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!
//ஆரம்பிபதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் தங்கள் தங்கள் கல்லூரி கொடிகளை பல வாகனங்களில் ஏந்திய வண்ணம், எழுச்சியுடன் வீதி வலம் வருவதை அவதானிக்கலாம். இத்தகைய நிலை தற்போது அடியோடு மறைந்துபோயுள்ளமை குறிப்பிடத்தக்கது.//
ஆமா பாஸ்...இப்ப எல்லாம் போச்சு ...
//அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக//
ஹிஹி ஹிஹி அட பேப் பயலுகளா..
பிரபஞ்சனின் புத்தகம் மிகச் சிறப்பானது..
கலக்கல் உங்க உழைப்புக்கு ஒரு சல்யூட் நண்பா
வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள ...
“ஆண், பெண் என்ற பேதங்கள் பொது இடங்களில் கழிப்பறைகளில் மட்டும் இருக்கட்டும்”//
தத்துவம், அருமை, ஆனாலும் எத்தனை பேர் இதனைத் தம் உள்ளங்களில் பதித்து பெண்களுக்கு சம உரிமை கொடுப்பார்கள் என்பதற்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
மதிசுதாவின் பிறந்த நாள்: நெல்லியடியில் 21 மெழுகு திரிகள் இருக்கா என அவர் எல்லாக் கடைகளுக்கும் ஏறி இறங்கியதாக கேள்வி. வாழ்த்துக்கள் சுதா, சோதனைகளையும் வேதனைகளையும் கடந்து சாதனைகளைப் படைத்து, தொடர்ந்தும் முன்னேற்றப் பாதையில் செல்ல வேண்டும் என வாழ்த்துகிறேன்.
நீங்கள் வழங்கும் பதிவுப் புயல் பட்டத்தை நான் வழி மொழிகிறேன்.
வாழ்க எங்கள் பதிவுப் புயல்.. வாழ்க.
குறும்படம்: ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன் மகனைச் சான்றோன் எனக் கேட்ட தாய்,
இந்தப் படத்தைப் பார்க்கும் போதே என்னையறியாமல் கண்களில் கண்ணீர் வருகிறது, உடல் சிலிர்க்கிறது. காரணம் நான் கூட அதிக வேலையாக இருக்கும் போது என் அம்மா குறுக்கிட்டால் இப்படி Behave பண்ணி இருக்கிறேன். அருமையான படப் பகிர்வு. விமர்சனம். கண்ணீரால் எங்கள் கடந்த காலங்களைத் திரும்பிப் பார்க்க வைத்த தாய்மையினைப் போற்றும் காவியம்.
//அதேவேளை 11ஆம் தேதி மிக நீண்ட கால இடைவெளிக்குப்பின்னர் யாழ்ப்பாண மத்திய கல்லூரி பழைய மாணவர்களுக்கான அழைக்கப்பட்ட “சென்றல் நைட்ஸ்” இரவு விருந்து இம்முறை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.//
நாங்கள் படித்த காலத்தில் இவற்றையெல்லாம் அனுபவிக்க முடியவில்லை, ஆனாலும் இன்றைய சந்ததி இவற்றினால் சந்தோசமடைகிறது எனும் போது மகிழ்ச்சியே.
வாசிப்பு: இன்னும் வாசிக்கவில்லை. உங்களைச் சந்திக்கும் போது இந்தப் புத்தகத்தை சுட்டுக் கொண்டு போவதாக ஒரு பிளான்.
மியூசிக்: அழகான பாடல், ஆழமான கருத்துக்களைச் சொல்லி நிற்கிறது.
ஜோக் பொக்ஸ்: இது தான் சாடிக்கு ஏத்த மூடிகள் எனும் வகையில் நகைச்சுவையாய் சிதறியுள்ளது.
சுருங்கக் கூறின், இந்த வாரம் நடை முறை நிகழ்வுகளோடு, கொஞ்சம் அதிக கவனம் எடுத்து எழுதியது போன்ற தோற்றப் பொலிவுடன் சூடாக உள்ளது. நன்றிகள் ஜனா.
அண்ணா முதலில் பிந்திய வரவுக்கு மன்னிக்கவும்.... அருமையான குறும்படம் ஒன்றை தந்திருக்கிறிர்கள்.... கிரிக்கேட் போட்டிக்கு வந்திங்களா ? குறிப்பிட்ட நேரம் தான் பார்க்க முடிந்தது...
வாழ்த்துத் தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றிங்க....
பதிவுப் புயல்” பல்லாண்டு வாழ்க.
வணக்கம் சகோதரம், கடந்த சில வாரங்களாக உங்களைக் காணவில்லை. கிறிக்கற்றுடன் ஐக்கியமாகி விட்டீர்களோ?
நண்பரே என்னாச்சு? கடந்த சில-- பல நாட்களாக வருவதில்லை..
Post a Comment