
தேசத்தின் எல்லைகளைக் கடந்து உலகலாவிய ரீதியில் தமிழ் நெஞ்சங்கள் பரந்துபட்டு வாழ்ந்துவரும் இந்த நிலையில் தமிழ் நண்பர்கள் பலரும் வலைப்பதிவு உலகில் காற்தடம் பதித்து தமது எண்ணக்கருத்துக்களை பதிந்துவருகின்றனர்.இந்த நிலையில் இந்த தமிழ் இணைய உலகில் நானும் தடம்பதிக்கின்றேன்.
எப்போதாவது இருந்துவிட்டு வரும் நல்ல சிந்தனைகள், நாம் மட்டுமே மனதுக்குள் தர்க்கம் செய்து எமக்குள்ளேயே செத்துப்போகும் எண்ணங்கள், செய்யவேண்டும் என நினைத்தாலும் அடடே மறந்துவிட்டேனே என எண்ணங்கள் வீணாகிப்போதல், என பல விடயங்களை நாங்களே கர்ப்பந்தரித்து, அடுத்த கணமே, கருக்கலைப்பும் செய்துவிடுகின்றோம்.
இந்த நிலையில் இந்த இடுகைகள், நம் எண்ணங்கள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிரவும், எமக்கு தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து பெறவும். சுவையான செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் வகை செய்யும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.
எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்யப்படும் எமது சிந்தனைகளை சுகமாக பிரசவிக்க இந்த இணையப்பதிவுகள் உதவுகின்றன. எமது சிந்தனைகள், எமது கருத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது, புரட்சி வெடிக்கப்போகின்றது என்று சொல்லவரவில்லை. ஒரு சின்னவிடயம் என்றால்க்கூட, அடடா…. நான் இதை இப்படி யோசிக்கவில்லையே என எம் நண்பர்கள் எமது கருத்தினை தட்டிக்கொடுத்தாலே போதுமே…
யார்கண்டது எந்த ஆலம் வித்தில் எந்த ஆலவிருட்சம் உள்ளது என்பதை! யாராலும் சொல்லிவிடமுடியுமா என்ன?சரி…என்பதிவுகள் இதை சம்பந்தப்படுத்தி, இதை அடிப்படையாகக்கொண்டு வரும் என என்னாலேயே சொல்லமுடியாது. நேரம் கிடைக்கும்போது அந்த நேரத்தில், என்ன எண்ண ஓட்டம் மூளைக்கு கடத்தப்படுகின்றதோ அதை என் தட்டச்சு பிரசவிக்கும்….அது சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்.
பெரியவர் நீவிர் பொறுப்பது உம் கடன்… தொடர்ந்து பயணிப்போம்
என்றும் தோழமையுடன்
உங்கள் நண்பன் ஜனா.
6 comments:
ஜனா உங்களது ஆக்கங்களை உற்று வாசிக்கின்றேன். பற்றிக்கொள்ள ஏதாவது நம்பிக்கை பாறைகள் தெரிகின்றதா என்ற தேடலில் உங்களின் பிரசவம் காட்டுநிலத்தில் கட்டாந்தரையில் மயான அமைதியில் மரண பயத்தில் இருக்கும் ஒரு சமுதாயத்தின் மடியில் கால்களை தரையில் உதைத்து எல்லாருக்கும் ஒரு செய்தி சொன்னபடி தாய்மண்ணில் முரசு உதைத்தபடி வன்பிறப்பு செய்யும் வருங்கால கால்கள், தோள், தூண் அல்லது அநாமதேயம் ஒன்றை காண்கிறேன்.
நன்றி கோபிநாத். உங்கள் ஆதரவுக்கும், பாராட்டுதலுக்கும் நன்றி.
தாங்கள் ஆரோக்கியமான ஒரு விமர்சகர் என்பதை நான் அறிவேன், தங்கள் விமர்சனமே என் எழுத்தினை வளப்படுத்தும் என நான் எண்ணுகின்றேன். ஏனெனில் கருத்து பகிர்வுடன்தானே நம் நட்பு தொடங்கியது! சரிதானே…
வாழ்த்துக்கள் நடக்கட்டும், நடக்கட்டும்...
Best wishes Mr.Jana. I expecting some think Difference on your Blog.
T.Pradeep.
Still U havnt stop ur bluffing man... haw sad!!!
தங்கள் புதிய சிந்தனைகள் இங்கு பிரசவமாகட்டும், வாழ்த்துக்கள்.
Post a Comment