எதிர்வரும் ஏப்ரல் 08ஆம் திகதி இலங்கை பாராளுமன்றத்தேர்தல் இடம்பெறவுள்ளது பச்சைக்குழந்தைக்குக்கூட தெரிந்த விடயம்தான். இருந்தபோதிலும் இந்த முறை இடம்பெறவுள்ளதேர்தல் எங்கள் அரசியல்வாதிகள் ஒவ்வொரு தடவையும் சொல்லுகின்றதுபோல முக்கியமான ஒரு தேர்தல்தானாம். இருந்தபோதிலும் இந்தமுறையாவது நடைமுறைகளை உன்னிப்பாக கவனித்து மக்கள் யதார்த்த ரீதியில் வாக்களிப்பார்களோ என்பது இன்னும் சந்தேகம்தான்.
சரி விடயத்திற்கு வருவோம். யாழ்ப்பாணத்திலும் தேர்தல் படு சூடு பிடித்து வருகின்றது. ஓவ்வொரு கட்சி காரர்களும், ஏராளமான சுயேட்சைக்காரர்களும் சனங்கள் புதிதாக கட்டி பெயின்ட் அடித்திருக்கும் மதில்களை மேலும் அலங்கரித்துக்கொண்டிருக்கின்றார்கள், (தங்கள் திருமுகங்களை அதில் ஒட்டி.) குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டும் தாய்மார்கள்… அந்த தேர்தல் விளம்பரங்களைக்காட்டி … இந்தா…வடிவா, ஒழுங்கா சாப்பிடு ! இல்லாட்டி அந்த பூதம் வந்து பிடித்துக்கொண்டு போகும் என்று அந்த விளம்பரங்களைக்காட்டியே பிள்ளைகளை பயம்காட்டி சாப்பிட வைக்கின்றார்கள்.
சரி விடயத்திற்கு வருவோம்…இந்த முறை யாழ்ப்பாணத்தில் தேர்தலில் வேட்பாளர்களாக நிற்கும் நபர்களின் எண்ணிக்கை ….அடேயப்பா.. இந்திய லோட்சபா அங்கத்துவர்களின் எண்ணிக்கைக்கு சமனாக இருக்கின்றது.
ஒரு ஜனநாயக நாட்டில் அந்த நாட்டின் குடிமகனாக பிறந்து உரிய வயதையுடைய சித்தசுவாதீனம் உள்ள எவரும் போட்டியிடலாம்தான் அதில் பிழை என்று சொல்வதுக்கும் ஒன்றும் இல்லைத்தான். ஆனால் அதற்காக இப்படியா??? தண்ணீர் ஊற்றியா வளர்த்தோம் சர்வேசா….!!!
பிரபலமான முன்னணி ஆசிரியர்கள், பிரபலத்தை இன்னும் தேடிக்கொள்ள விரும்பும் வர்த்தகர்கள், பென்சன் வாங்கிய சில பேராசிரியர்கள், இளைப்பாறிய சில அரசாங்க உத்தியோகத்தர்கள், அங்கங்கை வால்பிடித்தவர்கள், முன்னாள் சிலபேருடைய குடும்ப அங்கத்தவர்கள், தமிழில பொங்கி ஆடிப்பாடி படையல் வைத்து, ஐந்து நூற்றாண்டுகள் சென்றன …. என்று பாட்டுபாடிவிட்டு, இப்போது , அதிகாரவர்க்கத்தின் நேரடிவழிகாட்டலில் களம் இறங்கியிருக்கும் சிலர், பாராளுமன்றத்தில் 22 சீட் எடுத்து விட்டு , மிக முக்கியமான நேரங்களில் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டு மூன்று மூன்று மாத இடைவெளிகளுக்குள் நாட்டுக்கு வந்துபோன வீணாப்போனவர்கள்… சும்மா இருந்த மாணவர்களை உசுப்பேத்தி உடுக்கடித்து உருவேற்றிவிட்டு, அந்த இளைஞர்களின் வாழ்க்கையினையே பறித்துவிட்டு, வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு வந்துநின்று, இன்றும் பல்கலைக்கழகத்தை இழுக்கப்பார்க்கும் ஈனப்பிறவிகள்……இன்னும் சில கோமாளிகள் என்று பலபேர் வெளிக்கிட்டிருக்கின்றநார்கள் ஜனநாயகத்தின் பெறாமக்கள்.
இதற்குள் வேலைவாய்ப்பு தருவோம், தொழில்த்துறையினை முன்னேற்றுவோம், கல்வியை மேம்படுத்துவோம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சொல்வது படு காமடியாக இருக்கின்றது.
என்னதான் பிரச்சினைகள் இருந்தபோதிலும், இலங்கை பாராளுமன்றம் என்றால் அதற்கென்றொரு கௌரவம் பேணப்பட்டுவந்தது. இலங்கை அரசியலிலும் அந்த கொளரவம் கொஞ்சம் இருந்துதான் வந்தது. ஆனால் இன்று!!! மெல்ல மெல்ல , இந்திய அரசியலைப்போலவே இங்கும் நிலை சென்றுகொண்டிருப்பது மிகவும் தேனைதருகின்ற சம்பவமாகும். அதுகும் யாழ்ப்பாணத்தில் பலர் குட்டி ராஜாக்களாவதற்கு பேராசை கொண்டிருப்பது, அழுவதா சிரிப்பதா என்ற நிலைக்கு மட்டுமே கொண்டு செல்கின்றது.
எது எப்படியோ….வாக்கு சீட்டு மக்களின் கைகளில்த்தானே!!! இருக்கின்றது !!மக்களே சிந்தித்து தங்கள் தலைவிதிகளை நிர்ணகித்துக்கொள்வார்கள். தேர்தல் முடிவுகள் அவற்றை வெளிக்காட்டும். ஆனால் நெஞ்சில் நிற்கும் ஒரே கேள்வி? எல்லோருமே “ சஞ்சை ராமசாமி ஆகிவிட்டார்களா”??? எல்லாமே மறந்துபோச்சா???? சுயநலங்கள் மட்டும்தான் உங்கள் நோக்கமா??????
6 comments:
***சும்மா இருந்த மாணவர்களை உசுப்பேத்தி உடுக்கடித்து உருவேற்றிவிட்டு, அந்த இளைஞர்களின் வாழ்க்கையினையே பறித்துவிட்டு, வெளிநாடுகளில் உல்லாசமாக வாழ்ந்துவிட்டு வந்துநின்று, இன்றும் பல்கலைக்கழகத்தை இழுக்கப்பார்க்கும் ஈனப்பிறவிகள்……Good Shot.
சரியா சொன்னீங்க ஜனா சார் .. எப்படி இருக்கீங்க , இப்போ எங்க சார் இருக்கீங்க
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!! யதார்த்தத்தினை படம்போட்டு காட்டியுள்ளீர்கள் நண்பா.
அருமை...தொண்றுதொட்டு பிரித்தாளும் ராஜதந்திரத்திற்குள் சிக்கி சின்னாபின்னமாகியும் இன்னமும் மீளாத இந்தச்சமூகத்தின் நவீன நிலையே இந்த தேர்தல்
எமது எதிரியையும் அவனது நோக்கத்ததையும் இனங்கண்டு கொள்வது சுலபம். ஆனால் துரோகிகள் முகமூடி அணிந்து நடமாமுகிறார்கள். எதிரியின் கைப்பொம்மையாகச் செயற்படுகிறார்கள். தமது சுயுநலத்திற்காக சொந்த இனத்தையே காட்டிக் கொடுக்கத் தயங்காத இந்த ஆபத்தான பிற்போக்கு சக்திகள் மீது எமது மக்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும்.
“ சஞ்சை ராமசாமி ஆகிவிட்டார்களா”??? எல்லாமே மறந்துபோச்சா???? சுயநலங்கள் மட்டும்தான் உங்கள் நோக்கமா?????? என்று எழுதி இருந்தீர்கள் குறைந்த பட்சம் வன்னி மண்ணில் உயிர் நீத்த உறவுகளைக்கூடவா எம்மவர்கள் மறந்திடுவார்கள்...
Post a Comment