Wednesday, September 14, 2011

ஹொக்ரெயில் - 14.09.2011

த லேடி - மெசல் யோ சூ ஹெங்.
பர்மாவின் ஜனநாயகத்திற்கான தவம் என்று வர்ணிக்கப்படும் ஆங் சாங் சூகியின் வாழ்க்கையினை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் த லேடி.
நேற்று முன்தினம் 12ஆம் திகதி இந்த திரைப்படம் ரொண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டதுடன் பலதரப்பட்டவர்களது கவனத்தையும் ஈர்ந்துள்ள. இந்த திரைப்படத்தில் சூகியின் பாத்திரமேற்று நடித்த மெசல் யோ சூ ஹெங் பலராலும் பாராட்டப்பட்டுள்ளார்.
இந்த திரைப்படத்தில் தோற்ற ஒற்றுமையினை மட்டுமின்றி சூகியின் நடை உடை பாவனை அத்தனையையும் இவர் பிரதிபலித்துள்ளதாக புகழ்பெற்ற இயக்கனர்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கின்றார் இவர்.

ஹொலிவூட் இரசிகர்களுக்கும் இவர் தெரியாத ஒருவர் இல்லை என்றே கூறலாம் ஏன் என்றால் 1997 ஆம் ஆண்டு வெளியாகிய ஜேம்ஸ் பொண்ட் திரைப்படமான "ருமாரோ நெவர் டைஸ்" திரைப்படத்தில் இவர் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
1962 இல் பிறந்து தற்போது 49 வயதினை எட்டியுள்ள இவர் பிறந்த இடம் மலேசியாவாகும். பலதரப்பட்டோரின் பாராட்டுக்களை பெற்றுக்கொண்டிருக்கும் இவர் இது குறித்து கூறுகையில்,
சூகியின் பாத்திரத்தில் நடிப்பதே மிகவும் கடினமானதாக இருந்ததாகவும், ஆனால் அதையே வாழ்க்கையாக கொண்டு இலட்சியத்தோடு வாழ்ந்தவர் ஆங் சாங் சூகி என்பது மலைப்பாக இருப்பதாகவும், அவரது பாத்திரத்தில் தான் நடித்தது தனக்கு கிடைத்த ஒரு மிகப்பெரிய விருதாக கருதுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
லூ பெஸ்ஸன் இயக்கதில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை கண்டிப்பாக பார்க்கவேண்டிய படங்களின் பட்டியலில் இணைத்து வைத்திருங்கள்.

இன்றைய குறும்படம்
தமது குழந்தைகளின் இணையப்பாவனைகளை மேற்பார்வைசெய்யும் பெற்றோர்கள் இன்று எத்தனை பேர் உள்ளார்கள் என்பதே தற்போதைய கேள்வி?

இந்தவாரவாசிப்பு – ஜெயமோகன் சிறுகதைகள் முழுத்தொகுப்பு
கடந்தமாத கடுமையான வேலைப்பழுக்களை கடந்த நிலையில் நான் வாசித்துக்கொண்டிருக்கும் புத்தகம் இது. அண்மைக்காலங்களாக ஜெயமோகனின் தொகுப்புக்களை அதிகமாக வாங்கி வாசிப்பவன் என்ற வகையில் எனக்கு தோன்றிய ஒருவிடயம் ஜெயமோகனின் சிறுகதைகளை குறும்படம், அல்லது டெலி ட்ராமா ஆக்குவதென்றால் ஸ்கிர்ப்ட் ரைட்டிங் தேவையில்லை என்பதுதான். ஏன் என்றால் பெரும்பாலான ஜெயமோகனின் சிறுகதைகள் வாசிக்கும்போதே எமது மனக்கண்முன் மிக எழிதாக எங்கள் மைன்ட் விஸ்வலை விழச்செய்துவிடுவது அவரது எழுத்துக்களின் ஆச்சரியமாக உள்ளது.
57 சிறுகதைகளைக்கொண்ட இந்த தொகுப்பு ஜெயமோகனின் பல்வெறுபட்ட பார்வைகளை காட்டி நிற்கின்றது. குறிப்பாக இரண்டு கதைகளை சொல்லியே தீரவேண்டும்....
கண் என்ற ஒரு சிறுகதை இந்த சிறுகதையின் நுணுக்கம் தெரியாமல் எத்தனைபேர் இதை படிக்காமல் விட்டார்களோ தெரியாது, ஒரு கதையினை மிகப்பெரிய தொடர் வர்ணனைகளாலேயே கொண்டுசெல்லும் தைரியம் ஜெயமோகனிடம் இருக்கின்றது. அடுத்தது மாடன் மோட்சம்.... இந்த சிறுகதைத்தொகுப்பிலேயே ஜெயமோகனுக்கு மட்டுமின்றி எனக்கும் ரொம்ப பிடித்த ஒரு கதை. கிராமியத்தெய்வங்கள் கவனிக்கப்படாமை, அதன் பின்னரான கிராமியத்தெய்வங்கள் ஆகமத்தெய்வங்களாக மருவி உள்வாங்கப்படல் என்பவற்றை ரணத்தோடு கொண்டுசெல்லும் பாங்கு பிரமிக்க வைக்கின்றது. சந்தாப்பம் கிடைத்தால் கண்டிப்பாக படித்துப் பாருங்கள்.

மியூஸிக் கபே...

நெஸ்பிறே காலங்கள்....

அண்மையில் ஒரு தேவைக்காக பழைய பொருட்களை சேரித்து வைத்திருக்கும் என் வீட்டின் பின் புறம் உள்ள அறையை அராய்ந்துகொண்டிருக்கையில் என் கைகளில் அகப்பட்டுக்கொண்டது நெஸ்பிறேயின் பன்னிரெண்டு கதைகள் அடங்கிய ஒரு தொகுதி.
(நெஸ்பிறே என்பது எங்கள் நாட்டில் விற்பனை செய்யப்படும் மில்க் பவுடர் பிராண்ட்டுகளில் ஒன்று)
நான் நினைக்கின்றேன் 1988, 89 காலப்பகுதிகளில் நாம் தேடித்தேடி சேகரித்த அப்போதைய பொக்கிசங்கள் அவை.
அன்றைய நாட்களில் ஒரு பால் பவுடர் பக்கட்டில் ஒரு புத்தகம் ஒன்ற ரீதியில் 12 கதைகளும் அதை சேகரித்து வைக்க ஒரு பெரிய என்வலப்பும் வரும்.
நாம் சேகரிக்குமபோது எமக்கு வரும் டபிள்சை பிற நண்பர்களிடம் மாற்றி அவற்றை சேரித்த நினைவுகள் அற்புதமானவை.
ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் அந்த கதைகள்
ஆச்சடிக்கபட்டிருக்கும். கதைகளுக்கு ஏற்ற ஓவியங்கள் மனதில் அப்படியே ஒட்டிக்கொள்ளும்.

டிக்கரிலியா, புசணித்திருடன், லியனகவும் கித்துலும், சௌர்க்லோகம் சென்ற கிராமவாசி, சுரக்காய், நரியும் நீலச்சாயமும், அந்தரேயின் மனைவி, பேயும் விவசாயியும், போன்ற கதைகள் இப்போதும் மனதில் இருப்பவை. ஆவை அழகானதொரு பசுமையான நினைவுகளும் கூட...

இந்தவாரப்புகைப்படம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி கெனடி அவர்கள் வெள்ளை மாளிகையில் தமது பணிகளில் ஈடுபடுவதையும், அவரது மகன் ஜூனியர் கெனடி தந்தையின் மேசையின் கீழ் இருந்து விளையாடுவதையும் காட்டும் ஒரு படம்.

இந்தவார இனிப்பு, இந்தவார புளிப்பு....
தமிழ்நாட்டு சஞ்சிகைகளின் பாணியில் இனி வாரவாரம் எமது நாட்டில் இடம்பெறும் விடயங்களை வைத்து நம்ம ஹொக்ரெயிலிலும் இந்த வார இனிப்பு இந்தவார புளிப்பு என்ற பகுதி வருகின்றது.

இந்தவார இனிப்பு :- தெய்வவழிபாட்டில் மிருக வதை என்பது எந்த காரணத்தைக்கொண்டும் எற்றுக்கொள்ள முடியாத ஒன்று. அந்தவகையில் நாடு முழுவதும் தற்போது மீண்டும் முளை விட்டுள்ள மிருக பலி வழிபாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்படவேண்டிய ஒன்று.அரசியலுக்காகவோ, அல்லது வேறு எதற்ககாவோ ஆனால் மிருக வதையினை தடுத்து நிறுத்திய ஆச்சார்ய மேவர்வின் சில்வாவுககு இந்தவார இனிப்பு.

இந்தவார புளிப்பு – நேற்று ரொபேட் பிளக் வரும்போது யாழ்ப்பாணத்தில் ஒரு அவசரக்கூத்து இடம்பெற்றது. அதோடு அரச செயலகத்தில் அவருக்கு எந்த மரியாதையும் வழங்கப்படவில்லை. தனிப்பட்ட காரணங்களுக்காகவும், சிலருக்கு அமெரிக்க விசாக்கள் மறுக்கப்பட்ட கறள்களிலும், அவருக்கு எதிராக சில சக்திகள் விக்கி லீக் என்றாலே என்ன என்று தெரியாத கூட்டத்தை வைத்து நடத்திய கூத்தும், அமெரிக்கா என்றதை விட்டுவிடுவோம் ஒரு வெளிநாட்டு ராஜதந்திரி வரும்போது அவருக்கான கௌரவத்தை வழங்கத்தவறி அரசியல் காட்டிய யாழ்ப்பாண செயலகத்திற்கும் இந்தவார புளிப்பு.

ஜோக் பொக்ஸ்
வெளியூருக்கு மாற்றலாகி போய் ஆங்கில வகுப்புகளை எடுக்க ஆரம்பித்தார் ஒரு ஆசிரியர். அங்கே பல மாணவர்கள் கோம் வேர்க் செய்யாமல் வரவே அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டார் அவர்...சேர் நேற்று முழுவதும் எங்க ஏரியாவிலை எலக்ரிக்குட்டி இல்லைசேர் எப்படி படிக்கிறது என்றார்கள் மாணவர்கள். ஆசிரியர் எலக்ரிக்குட்டி இல்லைங்கடா அது எலக்ரிசிற்றி என்று விளக்கியும் அவர்கள் தொடர்ந்தும் எலக்ரிக்குட்டி என்றே பதிலளித்தனர் உடனே ஆசிரியர் பக்கத்து வகுப்பெடுக்கும் ஆசிரியரிடம் இதை வினவினார் அவரும் அவங்களை விடுங்க சார்.. அவங்க பப்பிளிக்குட்டிக்காக அப்படி சொல்லுவாங்க என்றார் ஆசிரியருக்கு தலை சுற்றியது இதைப்போய் அதிபரிடம் விரிவாக விவாதித்து மனம் வருந்தினார்.அவரது தோழை தட்டி ஆசுவாசப்படுத்திய அதிபர் சொன்னார்...விடுங்க சார்... அவங்கட கப்பாக்குட்டியே அவ்வளவுதான் :)

15 comments:

shanmugavel said...

சிறப்பாக தொகுக்கப்பட்டுள்ளது.ஜோக் சூப்பர்.

கறுவல் said...

//நான் நினைக்கின்றேன் 1988, 89 காலப்பகுதிகளில் நாம் தேடித்தேடி சேகரித்த அப்போதைய பொக்கிசங்கள் அவை.
அன்றைய நாட்களில் ஒரு பால் பவுடர் பக்கட்டில் ஒரு புத்தகம் ஒன்ற ரீதியில் 12 கதைகளும் அதை சேகரித்து வைக்க ஒரு பெரிய என்வலப்பும் வரும்//

இந்த அனுபவம் எனக்கும் உண்டு அண்ணா, ஆனால் காலம் 90கள் என நினைக்கின்றேன், ஆனால் அவை எதுவும் என்னிடம் இப்போது இல்லை. நீங்கள் பத்திரப்படுத்தி வைத்திருக்கின்றீர்கள்.

கொக்ரெயில் அருமை ..

KANA VARO said...

வணக்கமுங்கோ!

படம் லிங்க் கிடைச்சா அனுப்புங்கோ!

அங்கருக்கையும் கதை புத்தகம் வந்தது. நானும் சேர்த்ததன்.

குறும்படம் செம காமடி, ஏற்கனவே பார்திருகன்.

Riyas said...

நெஸ்பிறே அனுபவம் எனக்கும் உண்டு.. பழைய நினைவுகள் அருமை..

தமிழ் உதயம் said...

வாசிப்பு பழக்கம் உங்களிடம் நிறைய. அருமையாக பகிர்கிறிர்கள்.

கார்த்தி கேயனி said...

ஹொக்ரயில் பகுப்புக்கள் சூப்பர்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி த லேடி பற்றிய தகவல்களுக்கு

நிகழ்வுகள் said...

மனித வதை செய்கிற மேர்வின் சில்வா மிருகவதை தடுக்கிறாராமோ )))

இருந்தாலும் மேர்வின் உருப்படியா செய்த முதலாவது காரியம் இது தான் போல )

யோ வொய்ஸ் (யோகா) said...

சிறிய வயதில் நெஸ்பிறே கதைகளை நானும் சேகரித்தேன்.... இப்போ எங்கே என தெரியவில்லை.

அதிலுள்ள “டிக்கிரி லியா” பாடல் எனக்கு இன்னும் நினைவிலிருக்கிறது.

பாரத்... பாரதி... said...

பல்வேறு சுவைகளுடன், தித்திக்கும் மனசுக்கு விருந்து படைத்திருக்கிறது உங்களது ஹொக்ரெயில்..

பாரத்... பாரதி... said...

நீங்கள் சுட்டியிருக்கும் குறும்படத்தில் வரும் அபத்தங்கள் இனி அதிகம் நிகழும் என்றே தெரிகிறது. பாலகுமாரனின் பகல் விளக்கு கதையிலும் இது போன்ற கதை அம்சத்தை படித்த நியாபகம்..

Samantha said...

shortfilm is very nice..eyeopener for al youths

கார்த்தி said...

அண்ணே மீண்டும் வந்துட்டியள் போல?
அனைத்து தகவல்களும் நல்லாயிருந்தது. Nespray கதைப்புத்தகங்களை நானும் சேர்த்து வைத்திருந்தேன். ஏன் அண்மைக்காலம் வரை அதுவும் வீட்டிலேயே இருந்தது.

நிரூபன் said...

இனிய இரவு வணக்கம் பாஸ்,,,

ஹாக்ரெயிலைப் படிச்சிட்டு வாரேன்..

முதலில் தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்,

இப்பொழுதெல்லாம் முன்பு போல கமெண்ட் போட முடியாது..

காரணம் நாம நிறைய கமெண்ட் போடுவதால் ஏதோ பிளவு வந்திடும் என்று யாரோ புரளியைக் கிளப்பியிருக்காங்க...

நிரூபன் said...

ஹாக்ரெயில் சூப்பர் பாஸ்...

அதிலும் புதிதாகச் சேர்த்திருக்கும் இரண்டு விடயங்கள் இன்னும் அருமை..

ரசித்தேன் பாஸ்..

LinkWithin

Related Posts with Thumbnails