Wednesday, March 24, 2010

ஹப்பி பேத்டே


தேச பிதா சேனாநாயக்க தோற்றுவித்த கட்சி
தேசத்து மக்கள் தரம் உயர்த்தியதொரு காலம்
காலமெல்லாம் செங்கோலுடன் இதுதான் என்றெண்ணி
காத்திரமாய் அரசமைப்பு சட்டம்போட்டார்
ஜூலியன் ரிச்சர்ட் ஜெயவர்த்தன…
உண்மையும் அதுதான்.. மறுப்பதற்கில்லை
ஜேஆர் போல சாணக்கியன் வரலாற்றில் இல்லை
அவர்போல் வெற்றி என்பது இனி எப்போதும் இல்லை.
என்ன செய்ய??? கணிப்புகள் சில தவறுமே..
ஆனைக்குத்தான் கட்டாயம் அடி சறுக்குமே??

அரசியலில் அவர் வாரிசே..தொடர்ந்தும்
அலட்சியப்பணமாகின்றார்…
கஜினி முஹம்மது பற்றியும் கேள்விப்பட்டிருக்கின்றோம்..
13 இலோ…16 ஆவதிலயோ அவர் வென்றார் அல்வா???

சுதேச பல்கலைக்கழகத்தில் பயின்ற
உண்மையான கல்விமான், வழக்கறிஞன்
இளவயதிலேயே அமைச்சரவையில் அந்தஸ்து.
இளைஞர் விவகார துறையில் சகரம் தொட்டர்
தேடல்கள் மூலம் பூரண அறிவுகள் பெற்றவர்..
மேலைநாட்டு நடைமுறைகளை நன்றாக அறிந்தவர்..
வல்லவர், நல்லவர், கனவானெனப்பல பெயர்கள் பெற்றவர்!!

முப்பதுகள் தாண்டிய அரசியல் அனுபவம்!!
முப்பரிமானமாக நோக்கும் வல்லமை
இத்தனை இருந்தும், வெற்றிகள் தூரப்போனமை ஏன்???
யோதிடத்தில் நம்பிக்கை இல்லை
இருப்பினும் நன்றாக பார்க்கவேண்டும் இவர் யாதகத்தை..

யானை கொஞ்சம் படுத்தாலே சுண்டெலிகள் ஏறிவிளையாடும்!
யானை மயங்கியே விழுந்துவிட்டால் நிலைமைகள் இப்போ நிதர்சனம்..
இருந்தாலும் பறவாய் இல்லை!! அடுத்து பொதுத்தேர்தல்
ஏழுவருடத்தின் பின் ஜனாதிபதித்தேர்தல் வரும்தானே!!
அதைவிடுவோம்…
ஹப்பி பேத்டே சேர்…

4 comments:

தங்க முகுந்தன் said...

பொட்டு, பொன்னாடை, பூமாலை, முடி அருமையான படம்! நான் யாரோ தமிழர் என்றல்லோ நினைத்தேன்!

எங்கயப்பா நடந்தது? இவருக்கு இப்படி வைத்தவர்கள் யாரப்பா?

பிரதமரான இவருக்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு இனி இருக்குமா என்பது சந்தேகம்தான்! கடந்து 2005 ஜனாதிபதித் தேர்தலில் புலிகள் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவு அளித்திருந்தால் கட்டாயம் வந்திருப்பார். ஆனால் ....

Unknown said...

அது சரி... நீங்கள் இவரை வாழ்த்துறிங்களா? அல்லது கிண்டல் பண்ணுகின்றீர்களா??? அதுதான் சரியாகப்புரியவில்லை!!

Pradeep said...

அடடா. இது பிறப்பாலும், உணர்வாலும் அந்தக்கட்சியில் ஐக்கியப்பட்டவனின் உச்சக்கட்ட கோபமாகவல்லவா தெரிகின்றது? நான் சொல்வது சரியதானே ஜனா?

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

LinkWithin

Related Posts with Thumbnails