சுப்பர் ஸ்ரார் ரஜினிக்கு ரோயல் சலூட்.
இலங்கையில் நடந்த சர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் விருது வழங்கும் விழா முழு தோல்வியில் முடிந்தது என்றுதான் கூறவேண்டும்.
இந்த நிலையில் தமிழக நடிகர்கள் தவிர தென்னிந்திய நடிகர்கள் மற்றும் அமிதாப் உட்பட பல முக்கியமான பிரபலங்கள் இலங்கைக்கு வராமல் தவிர்த்துக்கொண்டமைக்கு ரஜினிகாந்த் வழங்கிய அலோசனைதான் முக்கிய காரணம் என விபரமறிந்த வட்டாரங்கள் கூறிவருகின்றன.
அமிதாப் முன்னதாக விழாவில் கலந்துகொள்ள இருந்தபோதும் அவர் ரஜினியுடன் இதுதொடர்பாக கலந்துரையாடிய பின்னரே தனது முடிவினை மாற்றிக்கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இதை எப்படியோ அறிந்துகொண்ட இலங்கை அரசாங்க வட்டங்கள், ரஜினியுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்த முயன்றதாகவும், ஒரு கட்டத்தில் இலங்கை அரசின் உச்ச நபரே தொடர்புகொண்டதாகவும் இருந்தாலும் ரஜினி அந்த தொடர்பிலேயே பிடி படாமல் தவிர்த்துவிட்டார் எனவும் தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் இத்தனை தீக்குளிப்புக்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்கள் என எத்தனையோ நடத்தியும்கூட அதனை அசட்டை செய்யாமல் ஏழனப்படுத்திவிட்டு, ஈழத்தமிழர்களை கொன்ற சிறி லங்கா அரசாங்கம் மீது ரஜினி உச்சக்கட்ட கோபத்தில் உள்ளதாக இரசிகர் வட்hரங்கள் தெரிவிக்கின்றன.
எது எப்படியோ தனது செல்வாக்கை வைத்து ரஜினி அமிதாப் உட்பட, தென்னிந்திய நடிகர்கள், திரைப்படத்துறையினரையே இலங்கை செல்லாமல் தடுத்தள்ளார் என்றால், இதே ஓராண்டின் முன்னால், தன்னை உலகத்தமிழித்தின் தலைவன் என்று தன்னை சுற்றி உள்ளவர்களை கூறவிட்டு மகிழும் பழுத்தவர் நினைத்திருந்தால் அந்த அவலத்தை நிறுத்தியிருக்கமுடியாதா என்ன? அதில் அவர் நடித்த உச்சக்கட்ட நாடகங்கள்வேறு உலகத்தமிழரையே அவர்மேல் காறித்துப்பவைத்துவிட்டது.
ஒரு தமிழ்ச்சமுதாயத்தையே கண்முன் காவுகொடுத்துவிட்டு, தமிழுக்கு மாநாடு எடுக்கிறாராம்! அதுக்குப்பெயர் செம்மறியின் மாநாடு!! மன்னிக்கவும் செம்மொழி மாநாடாம்!!! வாழ்க தமிழ்!!!
நாகபூஷணின் உற்சவமும், திணறும் குறிகட்டுவானும்
யாழ்ப்பாணத்தின் தீவுகளில் வராற்றுப்புகழும், தெய்வீகப்பிரசித்தமும் கொண்ட நயினாதீவில் உள்ள 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கருதப்படும், நயினாதீவு நாகபூஷணி அம்பாள் ஆலய மஹோட்சவம் நேற்று (12.06.2010) தொடக்கம் 15 நாட்கள் இடம்பெறவுள்ளன. இந்த நிலையில் யாழ்ப்பாணப்பிரதேசத்தில் இருந்தும் வெளியிடங்களில் இருந்தும் வரும் மக்கள் தீவகப்பயணத்தைமேற்கொண்டு குறிகாட்டுவான் என்ற ஏறுதுறையில் இருந்து லோஞ்சுகள் என அழைக்கடும் படகுகளிலேயே நயினாதீவினை அடையமுடியும். இந்த நிலையில் இம்முறை ஏ-9 பாதை திறக்கப்பட்டதனால் நாட்டின் பல பகுதிகளிலும் இருந்து பக்தர்கள் வரும் காரணத்தினாலும், அதே வேளை தென்னிலங்கை சிங்கள சுற்றுலா பெருமக்களின் வருகையாலும், மக்கள் கூட்டம்கூடி குறிகாட்டுவான் திணறுகின்றது.
இத்தனை ஆயிரக்கணக்கான மக்களின் போக்குவரத்திற்கு 5-10 வரையான படகுகளே சேவையில் உள்ளதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களை அனுபவித்தவண்ணம் உள்ளனர்.
நேற்றைய தினம் படகு கிடைக்காமல் பெருந்தொகையான மக்கள் ஏமாற்றத்துடன் தரிசனம் கிடைக்காமல் திரும்பிவந்ததினையும் அவதானிக்கக்கூடியதாக இருந்தது.
சம்பந்தப்பட்டவர்கள் இந்த விடயத்தை உடனடியாக ஆராய்ந்து உரிய நடைமுறைகளை எடுப்பார்களா பார்ப்போம்.
கொச்சிக்கடை மற்றும் பாசையூர் அந்தோனியார் பவனி.
ஜூன் மாதம் 13 ஆம் நாள், கொழும்பு கொச்சிக்கடை அந்தோனியார் தேவாலயம், மற்றும் யாழ்ப்பாணம் பாசையூர் அந்தோனியார் தேவாலயம் ஆகியவற்றின் அந்தேரியார் திருப்பவனி இடம்பெறுவது வழமை. இந்த தினத்தில் கொழும்பு கொச்சிக்கடை பகுதியே பெருவிழாக்கோலம் கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கும். கொழும்பு நகர மக்கள் பெரும்பாலும், மதபேதங்கள் இன்றி இந்த விழாவில் கலந்துகொள்வது வழமையான ஒரு நிகழ்வாகும்.
அதேபோல யாழ்ப்பாணத்தில் மிகப்பழமை வாய்ந்ததும், பிரபல்யமானதுமான பாசையூர் அந்தோனியார் தேவாலயத்தின் அந்தோனியார் பவனியும் இன்று இடம்பெறுகின்றது.
நாட்டில் இடம்பெற்ற அசாதாரண நிலைக்குப் பின்னர் கடந்த 22 வருடங்களின் பின்னர் இந்த தேவாலயத்தில் இருந்து சுண்டிக்குளி வழியாக அந்தோனியார் பவனி வர இருப்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
அடிக்கடி தென்படும் சிறு நில அதிர்வுகள் சொல்லும் செய்தி என்ன?
நேற்று நள்ளிரவு தாண்டியவேளை கொழும்பின் பல பாங்களிலும் நில அதிர்வுகளை உணரக்கூடியதாக இருந்ததாக அறியமுடிகின்றது. அதன் பின்னர் இந்து சமுத்திரத்தின் கடலடித்தளத்தில் 7.7 ரிக்டர் அளவுடைய நிலநடுக்கம் ஒன்று எற்பட்டதனால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நள்ளிரவு தாண்டி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது “நியூஸ் அலேட்” குறுஞ்செய்திச்Nவை கூறியது.
அதன் பி;ன்னர் இலங்கைக்கு சுனாமிவரும் சாத்தியங்கள் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போது கேள்வி என்னவென்றால்! நான் நினைக்கின்றேன் 1999 ஆம் ஆண்டுமுதல் கொழும்பிலும் மலையகத்தின் சில பாகங்களிலும் இதுபோன்ற கிட்டத்தட்ட 6 தரம் சிறிய நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த சிறிய நிலநடுக்கம் ஒவ்வொரு தடவையும் சொல்லிச்செல்லும் செய்தி என்ன? இது குறித்து அரசாங்கமும், ஆய்வாளர்களும் என்ன ஆரோக்கியமான முன்னாயத்தங்களை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஒரு பாரிய நில நடுக்கம் ஒன்றுக்கான முன்னெச்சரிக்கையாகவே இது தெரிவதாக பலரும் சொல்வதை உரேயடியாக ஒதுக்கிவிடமும் முடியாது. கொழும்பில் தொடர்மாடிக்கட்டங்கள் அதிகம் என்றாலும், ஒரு தொடர்மாடிகூட நிலநடுக்கத்திற்கு அமைவான முறையின் பிரகாரம் கட்டப்படவில்லை என பொறியிலாளர் ஒருவர் அண்மையில் ஊடகம் ஒன்றில் எச்சரித்திருந்தமையும் அடிவயிற்றில் புளியை கரைக்கின்றது.
KIWI
ஷர்தாஜி ஜோக்
நம்ம ஷர்தாஜியுடன் உருகி உருகி ஒருபெண் நெடுநாட்களாக பேசிவந்தார். ஒருநாள் தைரியம் வந்தவராக நம்ம ஷர்தாஜி அந்தப்பெண்ணிடம்….
என் உயிர்த்தோழியே…இன்று இரவு நீ எனது வீட்டுக்குவா…வாசல்க்கதவைத்திறந்தே வைத்திருப்பேன்…பயப்படவேண்டாம் அங்கு யாரும் இருக்கமாட்டார்கள் என்றார்…..
இரவு அந்தப்பெண் ஷர்தாஜியின் வீட்டுக்கு வந்தாள்.. ஷர்தாஜி சொன்னது உண்மைதான் வீட்டில் எவருமே இருக்கவில்லை.
9 comments:
என்னத்த மன்னிக்கிரது அதுட்தான்
ஹொக்ரெயில் வழக்கம்போல கலக்கல்!
//ஒரு தமிழ்ச்சமுதாயத்தையே கண்முன் காவுகொடுத்துவிட்டு, தமிழுக்கு மாநாடு எடுக்கிறாராம்! அதுக்குப்பெயர் செம்மறியின் மாநாடு!! மன்னிக்கவும் செம்மொழி மாநாடாம்!!! வாழ்க தமிழ்!!!//
ஒன்றுமே செய்யாமல் இருந்ததுதான் அவர் செய்த பிழை. அதற்காக செம்மொழி மாநாட்டை எதிர்க்கச்சொல்வது அரசியல்
சர்தாஜி ஜோக்ஸ் நிறைய வைத்திருக்கின்றீர்கள் போல? அப்புறம் மாநாட்டை எதிர்ப்பது அரசியல் நோக்கம் இல்லை. உலகத்தமிழாட்சி மன்றம் மாநாட்டிற்கு மறுத்தும் அவசரமாக அதற்கு செம்மொழிமாநாடு என்று பெயர்வைத்து நடத்தப்படும் இந்த மாநாடே முழு அரசியல்தான். இந்த மாநாட்டு தமிழுக்கு பெருமை சேர்க்க அல்ல, மஞ்சள்துண்டு நைனாவுக்கு பெருமை சேர்க்க.
காடு வா..வா..என்ற வயதிலும்...பதவிக்கும், புகழுக்கும், பெயருக்கும் குறுக்கு வழியில் முயல்வதெல்லாம் ஒரு பிழைப்பா! உலக வரலாற்றில் வீரர்கள் களத்தில் மாண்டு நாயகர்கள் ஆகினர். அதேபோல வரலாறும் துரோகிகளை இனங்காட்டாது அவர்களை சிக்கரம் முடித்துக்கொள்ளாது.
U sweet and darling tamil staying here and experincing evrythng free like a Refugree .u ungrtaeful Dog scolding IIFA and supporting the very soon gonna die Rajini !!!! DD u c his face in the first place .Good For nothing !!! IIFA WAS A BLOCKBUSTER IN SRI LANAKN .The Goverment Got 53 Million Worth f Adverts ($) !!!
Go to tamil Nadu and eat pani puri .lmfaoo :D
Sivakumar Kanakaratnam
Attorney at Law
University Of Colombo
ஹொக்ரைலில் அரசியல் கொஞ்சத் தூக்கல்.
ஜோக் சூப்பர். எங்கையா பிடிக்கிறீங்க.
ஓ..கொச்சிக்கடை அந்தோனியார் கோவில் பீஸ்ட் இன்று ஞாபகப்படுத்தியமைக்கு நன்றிகள். பல நினைவுகள் மனதிற்குள் உள்ளன. நில நடுக்கம் ப்றி கேள்விப்பட்டேன். கிவி கண்ணுக்கு விருந்து, நைனாதீவு நினைத்தேன் இப்படிதான் இருக்கும் என்று, முத்தமழை வித்தவர் பற்றி மிகக்காரமாக என்றாலும் உண்மையை சொல்லப்பட்டுள்ளது.
இனி கொழும்பில குடியிருக்கிற ஐடியாக்கள குறைக்க சொல்றீங்க...அப்டித்தானே...
ஒபாமாவாலையே புடுங்க முடியாததை மூன்றுஞ மணிநேர உண்ணாவிரதத்தால் சாதித்து யுத்தத்தை நிறுத்தி ஈழதழிழருக்கு சுபீட்சத்தை பெற்றுத்தந்த உத்தமர் நடமாடும் தொல்காப்பியர், வாழும் வள்ளுவர், இருக்கும் இளங்கோ, முத்தமிழ் அறிஞர், செந்தமிழ் வித்தகர், செம்மொழிச் செம்மல், சொல்லின் செல்வர், பைந்தமிழ்ப் பாவலர், ஈழத்தின் காவலர், தண்டவாளம் வென்றவர், குடமுருட்டி சென்றவர், கலைத்துறையின் தலைமகன், அஞ்சுகத்தாயின் அருந்தவப் புதல்வர், டாக்டர் கலைஞர் ஐயா அவர்கள் மீது நீங்கள் அபாண்டமாக பழி சுமத்துவதை கடும் வன்மையாக கண்டிக்கிறேன்.
Post a Comment