Sunday, June 27, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (27.06.2010)

நாயகத்துதிக்கோர் வாலி!

நவீன காலத்தில் குறிப்பாக சினிமாவுக்குள் தமிழ் தலையை புதைத்துக்கொண்ட காலத்தில், நாயகத்துதியினை தமிழுக்கு ஏற்படுத்தி விட்டவர்கள், எம்.ஜி.ஆர், வாலி, எம்.எஸ்.வி. கூட்டணியினர்தான். இதிலும் குறிப்பாக பாடலாசிரியர் என்ற ரீதியில் தமிழ் சினிமாவின் நாயகத்துதியின் ஆரம்ப கர்த்தாவே சாத்யாத் இந்த கவிஞர் வாலியே என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
எம்.ஜி.ஆரின் மறைவுக்குப்பின்னர் 90 களின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டு சஞ்சிகை ஒன்றுக்கு அவர் வளங்கியிருந்த ஒரு செவ்வியில் இது குறித்து கேட்டபோது, தகுதியான மக்கள் மனங்களில் என்றும் நிலைத்திருக்கும் உன்னதாமான தலைவன் ஒருவனையே எனது எழுதுகோல் போற்றி பாடியது, அந்த சரித்திர நாயகனை அன்றி இன்னும் ஒருவனை என் எழுதுகோலோ, என்நாவோ பாடுவதற்கு இல்லை, என்று கூறியிருந்தார் இந்த வாலி.
ஆனால் தற்போது பல மேடைகளிலும் கலைஞரை குலுங்க குலுங்க சிரிக்க வைப்பதற்காக பிறர் முகம் சுழிக்கும் அளவுக்கு, கலைஞர் புகளாரம் சூட்டுவதில் அவருக்கு நிகர் எவரும் இன்றி தமிழுலகம் உவகை கொள்கின்றது.
நேற்று செம்மொழி மாநாட்டில் கவிஞர் வாலி தலைமையில் இடம்பெற்ற “தமிழுக்கு அமுதென்று பேர்” என்ற தலைப்பினாலான கவியரங்கத்தில் வாலியின் கலைஞர் துதி உச்சத்திற்கே சென்றது. வீணாக அதில் தமிழை இழுத்து தலைப்பில் மட்டும் கொடுத்திருக்காமல் “ கலைஞருக்கும் அமுதென்று பேர்” என்று வைத்திருந்தால் மிகச்சிறப்பானதாகவும், மிக மிக பொருத்தமானதாகவும் அது அமைந்திருக்கும்.
மீண்டும் மீண்டும் தற்போது கலைஞரை புகழால் இளைஞராக்கும் செயலில் வாலி ஆகிய இவர் வாலிபன் ஆகின்றாரே!!
இதற்கும் நாங்களும் சொல்லலாம் ஆஹா…(வடிவேல் சொல்லும் ஆஹா) இதற்கு மேல் ஆகா..(சப்பா…ஏன் இந்த கொலை வெறி!!)

தமிழ்ப்போதை மட்டும் போதுமா என்ன?

அடடா உலக தமிழ் செம்மொழி மாநாட்டில் என்ன விசேடங்கள் என்று ஆராய்ந்துகொண்டு போகையில் கண்ணில் பட்டது இந்த செய்தி.
மாநாடு தொடங்கிய நாளில் இருந்து மூன்று தினங்களில் கோவையில் 10 கோடிக்கு மேல் மது விற்பனையாகியிருக்கின்றதாம்.
கோவையில் உள்ள 136 மதுபான சாலைகளில் (டாஸ்மார்க் கடைகளில்) மாநாடு தொடங்கிய முதல் நாளில் 3.89 கோடி ரூபாய்க்கும், இரண்டாம் நாளில் 3.35 கோடி ரூபாய்க்கும், மூன்றாம் நாள் 3.20 கோடி ரூபாய்வுக்கும் மது அமோக விற்பனை ஆகியுள்ளது கொஞ்சம் கலக்கலான செய்திதான்.
இறுதிநாள் இன்று என்றபடியால் 4 கோடிக்கு விற்பனை எகிறும்போல இருக்கு.
அட போங்கையா…வாள்க தமிள்ள்ள்..ஸியேஸ்…

Children's Play


ஆர்ஜென்ரீனா – பிரேஸில்

உலக காற்பந்து ரசிகர்களின் விருப்பத்திற்குரிய ஜாம்பவான்கள் ஆர்ஜென்ரீனா மற்றும் பிரேஸில்தான் என்று ஒரு வகையில் சொல்லமுடியும். காரணம் நிறுவனம் ஒன்று உலகலாவிய ரீதியில் நடத்திய கருத்துக்கணிப்பில் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளுக்கே அதிகமான இரசிகர்கள் உள்ளமை நிரூபிக்கப்பட்டுள்ளது. எது எப்படியோ முன்பு தொடக்கம் என் இரசிப்பும், நேசிப்பும் ஆர்ஜென்ரீனா அணிமீதுதான் இருந்து வருகின்றது. காரணம் மரேடோனாவாகவும் இருக்கலாம்.
இந்த இரண்டு அணிகளுமே இறுதிப்போட்டிக்கு வந்தால்???? சொல்லவும் வேண்டுமா? ஆனால் காற்பந்தாட்ட உன்னத ஜாம்பவான்களில் முதன்மையானவரான பேலே கூட பிரேஸில் மற்றும் ஆர்ஜென்ரீன அணிகளே இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும் என தாம் உறுதியாக நம்புவதாக சொல்லியிருக்கின்றார்.
எனது எதிர்பார்ப்பும் அதுவேதான்..அனால் போர்த்துக்கல், ஜேர்மன் அணிகள் என்ன சும்மாவா? பார்ப்போம் நடக்கப்போவது என்ன என்று!!!

காற்சட்டைப் பருவத்தில் மனதோடு கலந்த கானம்…

அப்போது சரியாக 1987 ஆம் ஆண்டு, பலாலி இராணுவ முகாமில் இருந்து இரவு வேளைகளில் புன்னகை மன்னன் படத்தை 36 தடவைகள் ஒளிபரப்புவார்கள், அப்போதெல்லாம் எங்களுக்கு அந்தப்படமே பாடமாக இருந்தது.
ஆனால் சின்னக்குயில் சித்திராவின் ஒரு பாடல் ரீங்கரம் ஒன்று, சொல்லாமலே வந்து இதயத்தில் உக்காந்துகொண்டுவிட்டது.
காற்சட்டைப்பருவகால இரசிப்புக்கள் வித்தியாசமென்றாலும்கூட இந்தப்பாடல், பாடல்வரிகள், பாடிய சித்திரா ஆகியோர் மீது அன்றே எனக்கு ஓர் பேர் அபிமானம் வந்துவிட்டது உண்மை.
சிலபூக்கள் தானே மலர்கின்றது…பல பூக்கள் எனோ உதிர்கின்றது…
பதிலென்ன கூறு? பூவும் நானும் வேறு..என்ற அந்த வரிகள் அற்புதமானவை.
சித்திராவுக்கென்றே முற்றுமுழுதான அந்தப்பெண்மை கலந்த குரல், எப்போதுவேண்டுமென்றாலும் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

ஷர்தாஜி ஜோக்
மூன்று சர்தார்ஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.

போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம், இப்ப வந்து லிப்ட் கேக்குறியே, அறிவில்லையா உனக்கு?

5 comments:

சயந்தன் said...

ஹொக்ரெயிலுக்காக காத்திருந்தேன். அசத்தலான கலவையாகத்தான் வந்திருக்கின்றது. வாலி என்ன செய்வது பழுமரத்தை பற்றிய பல்லிதானே பாழ் போகாமல் வாழமுடியும்! அப்புறம் டாஸ்மார்க் அவர்கள்தானே உண்மையான தமிழ் குடி மக்கள், சின்னப்பெடியன் பந்தைப்போட்டு பொருட்களை சுட்டுக்கொண்டு போய்விட்டான் (குறும்படத்தில்)
அப்புறம் நான் பிரேஸில் ஆதரவாளன், அப்படி இறுதிப்போட்டி வந்தால் பார்த்துடுவோம். சித்திரா தாங்கள் சொன்னது 100 வீதம் உண்மை. சர்தாஜி ஜோக்ஸ் ஒரு சுரங்கமே இருக்குதுபோல???

Pradeep said...

அவருக்கும் அமுதென்று பெயர்...சர்தாஜி ஜோக்ஸைவிட நகைச்சுவையாக இருந்தது. அடுத்து புன்னகை மன்னன் படம் 36 தரம் அல்ல அதற்கும் மேலாக ஒளிபரப்பிhர்கள். தங்களுக்கு நிறைய ஞாபக சக்தி உள்ளதை உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றிலும் கவனித்து வருகின்றேன். Keep it up

டிலான் said...

கொக்ரைல் நல்லாத்தான் இருக்கு. உங்கள் கொக்ரைலும் ஆஹா...இதற்குமேல் சொல்ல ஆகா...

Karthika said...

very nice Post Jana.

ஸ்ரீ.கிருஷ்ணா said...

really nice ...

LinkWithin

Related Posts with Thumbnails