ரஜினி ஜோக்கும் ஹிந்தி குரோதமும்.
தற்போது வட இந்தியாவில் ஷர்தாஜி ஜோக்குகளுக்கு சமனானதாக ரஜினி ஜோக்ஸ் என்ற தொனியில் எஸ்.எம்.எஸ்கள், வலைப்பதிவுகள், நகைச்சுவை இணையசெய்திகள் என்பன பிரபலமடைந்துவருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகள், ரஜினி ரசிகர்களை பெரும் சினத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறான ஜோக் ஒன்றை பாலிவூட் சுப்பர் ஸ்ரார் அமிதாப் பச்சன் தன் ரூவிட்டர் வலைதளத்தில் பகிர்ந்ததைத் தொடர்ந்து பலத்த எதிர்ப்புக்கள் கிளம்பவே,
தான் ரஜினியை கேவலப்படுத்தும் விதமாக அதை பகிரவில்லை என்றும், அவர் எப்போதுமே தனது பெருமதிப்புக்குரிய நண்பர் என்றும் தெரிவித்துக்கொண்டதுடன், அதற்காக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இருந்தபோதிலும் இவ்வாறான ஜோக்குகள், ரஜினி ஜோக்குகள் என்ற விடயப்பரப்புக்குள் வந்தமை, ஹிந்தி மேலாதிக்க குரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதையே தெளிவாக காட்டுகின்றது.
எந்திரன் திரைப்படம் இந்திய அளவில் மாபெரும் சிகரத்தை தொட்டுக்கொண்டமையும், ரஜினிகாந்த் என்ற தென்புல நடிகர் அனைவரையும் பின்னுக்குத்தள்ளி தன்னை நிலைநாட்டிக்காட்டியமையும், வடக்கு பக்கம் எப்போதும் உள்ள குரோதத்தை மீண்டும் காட்ட வழிகோலியுள்ளமையின் வெளிப்பாடாகவே இதை கருத்தில் கொள்ளமுடிகின்றது.
80களின் ஆரம்ப காலங்களிலேயே தென்னிந்திய நடிகர்களான கமல்ஹாசன், ரஜினிகாந்த் என்பவர்கள் ஹிந்தியிலும் வெற்றிகளை குவித்தபோது அதை பொறுக்காது திட்டமிட்டு அவர்களை ஒடுக்க நடவடிக்கை எடுத்த குரோத நெஞ்சங்கள் அல்லவா அவர்கள்!
எந்தகால கட்டத்திலும் தெற்கின் பெருவளர்ச்சியையும், விஸ்வரூபங்களையும் வடக்கு ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ போவதில்லை என்பதற்கு இதுவும் ஒரு உதாரணமாகியுள்ளது.
அத்தோடு இப்போது ரஜினி போல உள்ள “பேவரிட் ஹீரோ” ஒருவர் கிரிக்கட் ஆடி அத்தனை பந்துகளையும் எல்லைக்கு வெளியே அனுப்புவதுபோன்ற விளம்பரம் ஒன்றையும் அடிக்கடி காணக்கூடியதாக உள்ளது.
திராவிடத்தின் வளர்ச்சிகண்டு ஆரியம் கொதிப்பது ஒன்றும் புதிய விடயம் இல்லையே!!
வீழ்வது யாராகினும் வாழ்வது நானாகட்டும்!!
நாளை தேர்தல் திருவிழா தமிழ்நாட்டில் இடம்பெறவுள்ளது அனைவரின் ஆர்வத்தையும் அந்தப்பக்கம் திருப்பியுள்ளது.
மக்களுக்கான நலத்திட்டங்கள், பாரிய சவால்மிகுந்த பொருளாதார பாதைக்கு முகம்கொடுத்து முன்னேற்றகரமான திட்டங்களை முன்வைத்து, மக்களை வளப்படுத்தும் நலத்திட்டங்களை யாராவது அறிவிப்பார்களா? என்று பார்த்தால், மாறிமாறி வசைபாடுவதே முக்கியம் பெற்றுள்ளது இன்னும் ஏனைய சமுதாயங்களை எட்டிப்பிடிக்க நாம் எவ்வளவோ தூரம் செல்லவேண்டி உள்ளது என்பதையே காட்டி நிற்கின்றது.
ஏதோ மக்கள் சக்தியே அரசியல்வாதிகளின் புண்ணியத்தில்த்தான் ஓடிக்கொண்டு இருப்பதுபோன்ற கட்சிக்காரர்களின் விளம்பரங்களை கண்டு அடக்கமுடியாத ஆத்திரம்தான் ஏற்படுகின்றது.
தமிழர்களை ஏனைய இனங்கள்தான் அடக்கவும், ஒடுக்கவும், கேவலப்படுத்தவும் முண்டியடித்துக்கொண்டு நிற்கின்றார்கள் என்று பார்த்தால், தமிழ் அரசியல்வாதிகள்தான் அவ்வாறான ஏனையவர்களின் சிந்தனைகளுக்கு வழிகோலிநிற்கின்றனர் என்பதை வெளிப்படையாகவே காட்டுகின்றனர்.
மமுக்கள் கூட்டம் ஒரு ஆட்டுமந்தைபோலவும், தாமே தேவலோக மீட்பர்களாகவும் எண்ணும் எண்ணங்கள் மக்களால் சரியான முறையில் கழையப்படவேண்டும்.
கட்சி, அரசியல், அரசு என்பன மக்கள் சேவர்களே தவிர மக்கள் அவர்களின் சேவகர்கள் அல்லர்.
ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தில் “வீழ்வது நாமகினும் வாழ்வது தமிழாக வேண்டும்” என்று சொன்ன திருவாய்… இன்று (இன்று அல்ல என்றும்) வீழ்வது யாராகினும் வாழ்வது நானும் என் குடும்பமும் ஆகட்டும் என்று வெளிப்படையாகவே செயற்பட்டு வருகின்றது தமிழ்நாட்டின் சாபக்கேடே.
அதைவிடச்சாபக்கேடு இந்தப்பக்கம் முதலை, அற்தப்பக்கம் கொடுநாகம் என்ற தலையெழுத்தே இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு!
இன்றைய காட்சி
கல்யாணம்…கல்யாணம்…
ஆயிரம் கல்யாணம் உலகத்தில் நடக்கலாம் ஆனால் ரோயல் கல்யாணம், பிரமாண்ட கல்யாணம் அல்வா?
இன்னும் 17 நாட்கள் மட்டுமே உள்ளது இங்கிலாந்து இளவரசர் வில்லியம் - ஹேட் திருமண நிகழ்வுக்கு. உலகமே ஆவலோடு எதிர்பார்த்திருக்கும் திருணம் என்றால் சும்மாவா என்ன?
இந்த நிலையில் அண்மையில் திருண நிகழ்வுகள் சம்பந்தமான நிகழ்வொழுங்கு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி
எதிர்வரும் 29 ஏப்ரல் (நிகழும் கர வருடம், சித்திரை 15, வெள்ளிக்கிழமை சுவாதி நட்சத்திரமும், மிதுன லக்கினமும், கூடிய சுபமூகூர்த்த வேளையில்! ஹி..ஹி..ஹி..) இலண்டன் வெட்மின்ஸ்ரர் அபேயில் கோலாகலமாக இடம்பெறவுள்ளது.
0830 BST (0730 GMT; 3:30 a.m. EDT): பிரதம விருந்தினர்கள் வெட்மின்ஸ்ரர் அபேயில் ஒன்று கூடுவர்.
110 a.m. BST (after 0900 GMT; 5 a.m. EDT): ரோயல் குடும்பத்தினர் நிகழ்விடத்திற்கு வந்து சேருவர். இறுதியாக மகாராணி இரண்டாவது எலிசபெத்தும் கோமகனும் வந்து சேர்வார்கள். இறுதியாக மணமக்கள் இளவரசர் ஹரியால் அழைத்துவரப்படுவர்.
1100 BST (1000 GMT; 6:00 a.m. EDT): மணமக்கள் அறிமுகத்துடன் திருமண நிகழ்வுகள் இடம்பெறும்.
1215 BST (1115 GMT; 7:15 a.m. EDT): இளவரசர் வில்லியம் தனது புதுமனைவி சகிதம் அபேயில் இருந்து பக்கிங் காம் அரண்மனைக்கு பவனிசெல்வார்.
1325 BST (1225 GMT; 8:25 a.m. EDT): புதுத்தம்பதியினரும், குடுபத்தினரும் அரண்மனை பல்கனியில் ஒருமித்து காட்சியளிப்பார்கள்
1330 BST (1230 GMT; 8:30 a.m. EDT): உள் அரங்கில் மகாராணி தலையில் விருந்தினருக்கான உபசரிப்புக்கள் நிகழும்.
எனவே அன்றையதினம் அனைவரும் இந்த நிகழ்வகளை பி.பி.ஸி, ஸ்கை போன்ற தொலைக்காட்சிகளில் பார்த்து மணமக்களை ஆசீர்வதித்து விசேடமாக உங்கள் வீடுகளிலேயே சiமைத்து உணவருந்தும்படி அரண்மனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனவாம்
மியூசிக் கபே
சுஜாதா…தமிழ் சினிமாவில் கண்ட நடிகைகளில் குறிப்பிடத்தக்க ஒரு சிறப்பான நடிகை. ஆரம்ப காலங்களில் அவர்கள், அவள் ஒரு தொடர்கதைபோன்ற கே.பியின் படங்களில் நிலைத்து நின்று பெயர் சொல்லும்படியான நடிப்பாற்றலை வெளிப்படுத்திய ஒரு அற்புதமான நடிகை.
இன்றும் நினைவில் நிற்கும் “விதி”, “அந்தமான் காதலி” போன்ற படங்களில் தனககேயான தனிமுத்திரை பதித்து சென்றவர்.
அவருக்கு அஞ்சலியாக இந்தப்பாடல்…
இந்தவார வாசிப்பு
எதிர்மறை மனிதர்களை எதிர்கொள்வது எப்படி?
எனக்கு மிகத்தேவையானதொரு புத்தகம் என்று தேடி வாங்கி வாசித்துக்கொண்டதல்ல, மனதில் நிறுத்திக்கொண்ட புத்தகம் இது.
வாழ்க்கையில் பலதரப்பட்டவர்களுடன் நாம் பழகிவருகின்றோம், அவர்களில் தாராளமாக எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை சந்திக்கவேண்டி வரும். இந்த நிலையில் அவர்களையும், அவர்கள் கருத்துக்களையும் எப்படி வெற்றி கொள்வது என்பதே நமக்கு சிக்கலை தோற்றுவித்துவிடும்.
அந்த வகையில் இந்த நூலின் ஆசிரியர் அபிராமி யதார்த்தமாக மிக இலகுவான நடைமுறையில் பல விளக்கங்களுடன் பல தகவல்களை ஆணித்தரமாக தந்துள்ளார்.
சாதிக்க துடிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்கும் இந்த நூல் உந்துசக்தியாக இருக்கும் என்பதுடன், வாழ்வின் தடங்கல்களாக நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் எதிர்மறை எண்ணக்காரர்களை விரோதித்துக்கொள்ளாமல், அவர்களையும், அவர்களது கருத்துக்களையும் வெற்றி கொள்வது எவ்வாறு என்பதையும் மிக தெளிவாக கூறியுள்ளார் அபிராமி.
கண்டிப்பாக வாசித்துப்பாருங்கள்.
இன்றைய புகைப்படம்
ஜோக் பொக்ஸ்
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.
சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.
24 comments:
அசத்தல் பக்கங்கள்.
இன்றைய காட்சி video was very touching. It brings tears of joy.
Sujatha song - seeing it for the first time. Rajini looks so different.
உண்மை தான். வட இந்தியர்களுக்கு தமிழர்கள் மீது குரோதம் அதிகம் தான்.
வழக்கம் போல சிறப்பு ஜனா,வாழ்த்துக்கள்.
//எந்தகால கட்டத்திலும் தெற்கின் பெருவளர்ச்சியையும், விஸ்வரூபங்களையும் வடக்கு ஏற்றுக்கொள்ளவோ பொறுத்துக்கொள்ளவோ போவதில்லை.// ;-)
சிறப்பாக இருந்தது
a kalakkal cocktail party after a long time
அனைவருக்கும் எனது புது வருட வாழ்த்துக்கள்........
என்னோட புது வருட பதிவையும் பாருங்க....
என் உயிரே
தான் ரஜினியை கேவலப்படுத்தும் விதமாக அதை பகிரவில்லை என்றும், அவர் எப்போதுமே தனது பெருமதிப்புக்குரிய நண்பர் என்றும் தெரிவித்துக்கொண்டதுடன், அதற்காக ரஜினி ரசிகர்களிடம் மன்னிப்பும் கேட்டுக்கொண்டுள்ளார்.//
வணக்கம் சகோ, இது பிழைக்கத் தெரிந்த மனிதனுக்கு உள்ள பண்பு.
ரஜினி ஜோக்கும் ஹிந்தி குரோதமும்//
இது சினிமாவின் உள் கூத்தினை அழகாகச் சொல்லி நிற்கிறது. தெற்கு, வடக்கு விசயத்திலை ஒரு சில பதங்களை மாற்றிப் போட்டால் எங்கள் நாட்டிற்கும் சரியாகப் பொருந்தும் என நினைக்கிறேன்.
வீழ்வது யாராகினும் வாழ்வது நானாகட்டும்!!//
தமிழ் நாட்டின் தற்கால யதார்த்தத்தை, கடந்த காலச் சம்பவங்களோடு ஒப்பிட்டுக் கூறும் கலைஞரைச் சென்று சேர வேண்டிய சொல்லடி..
இன்றைய காட்சி//
நாட்டிற்கான தியாகத் தன்மைக்குப் பின்னே உள்ள பாசப் பிணைப்பினைப் அழுத்தமான காட்சிகளூடாகக் காட்டி நிற்கிறது.
கல்யாணம்…கல்யாணம்…//
அசத்தல் போட்டோ சீன் பார்க்க வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.
சுஜாதா... ... நினைவுகளில் மட்டுமே இனிக் காட்சிகளாக நிற்கும் உருவம்...
எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை சந்திக்கவேண்டி வரும்.//
சகோ என்னையைச் சந்திக்கும் போது, பேசித் தீர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னதன் மர்மம் இது தானோ?
பேச்சுவார்த்தைக்குத் தம்மைத் தயார்படுத்தியவர்களைப் போல.. என்னை எதிர் கொள்ள ஒரு நூலா.......அவ்..........
நான் உங்களைச் சந்திக்க வரும் போது உதவிக்கு யாரையாவது அழைத்துக் கொண்டு வர வேண்டும் போல இருக்கே.
“அரகரா செம்பச்சோதி” //
“அரகரா சடையச்சோதி”//
தவளையும் தன் வாயால் கெடும் என்பதனை இரண்டு திருடர்களும் நிரூபித்து விட்டார்கள்...
ஹொக்ரெயில் நீண்ட நாளின் பின்னர் வந்ததாலும் இப்போதும் அதே பழைய மொந்தையுடன் நாவிற்குச் சுவையினைத் தருகிறது.
நன்றிகள் சகோ. உங்களின் தேடலுக்கும், பதிவுத் தொகுப்பிற்கும்.
பகிர்ந்த விஷயங்கள் அசத்தலா இருக்குய்யா மாப்ள!
பகிர்ந்த விஷயங்கள் அசத்தலா இருக்குய்யா மாப்ள!
// ரஜினி ஜோக்குகள் என்ற விடயப்பரப்புக்குள் வந்தமை, ஹிந்தி மேலாதிக்க குரோத மனப்பான்மையின் வெளிப்பாடு என்பதையே தெளிவாக காட்டுகின்றது.//
தங்களின் கருத்து யோசிக்க வைக்கிறது..
//அதைவிடச்சாபக்கேடு இந்தப்பக்கம் முதலை, அற்தப்பக்கம் கொடுநாகம் என்ற தலையெழுத்தே இப்போது தமிழ்நாட்டு மக்களுக்கு!///
மிக சரியாக சொன்னீர்கள். எரிகிற கொள்ளியில் சிறந்த கொள்ளி என தெரிவு செய்து தலையை சொறிந்து கொள்ள வேண்டியது தாம் மிச்சம்..
நண்பரே ரஜினி பற்றி துணுக்குகளுக்கு நீங்கள் வட இந்தியாவை குறைக கூறி உபயோகம் இல்லை. காரணம் அதைப் பரப்பும் வேலையை செய்பவர்கள் ரஜினியை பிடிக்காத தமிழர்களே
தங்களை பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டு இருக்கிறேன்..http://blogintamil.blogspot.com/2011/04/blog-post_21.html
அண்ணா ஆறிய சோறென்றாலும் சுவை மாறல...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
தேயிலை இன்றியும் அருமையான தேநீர் தயாரிக்கலாம் (வன்னி மக்கள் கண்டுபிடிப்பு)
Post a Comment