Monday, May 2, 2011

இவர்கள் இப்போ என்ன செய்கின்றார்கள்?

அஜய் ஜடேஜா

1992 முதல் 2000 ஆண்டு தொடக்கம் வரை இந்திய கிரிக்கட் அணியில் இடம்பிடித்திருந்தவர் அஜய் ஜடேஜா. ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து இவருக்கு போட்டிகளில் விளையாட ஐந்தாண்டு தடை டில்லி உயர் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது.
ராஜ்புட் அரச வம்சத்தில் பிறந்த அஜய் ஜடேஜா, குறிப்பாக 1994 -1999 ஆண்டு வரையான காலத்தில் பிரகாசமாக ஜொலித்தவர் என்பதுடன் பெரும்பாலான பெண்களின் கனவு நாயகனாக திகழ்ந்ததுடன், பெருமளவிலான விளம்பரங்களிலும் சச்சினை முந்திக்கொண்டு நடித்துக்கொண்டிருந்தார்.
15 ரெஸ்ட் மற்றும் 196 சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜடேஜா, 2000 ஆண்டு ஜூன் மாதம் பாகிஸ்தானுடன் இடம்பெற்ற போட்டியின்பின்னர் அவரது, கிரிக்கட் வாழ்வு திடீர் என்று அஸ்தமனத்திற்குள்ளாகி காணாமற்போயிருந்தார்.

அதன் பின்னர் அடிக்கடி வெளிநாடுகளில் தங்கி நின்ற ஜடேஜா, 2003முதல் 2005ஆம் ஆண்டுவரை ஜம்மு காஸ்மீர் அணிக்காக விளையாடி வந்தார், அதன் பின்னர் 2005ஆம் ஆண்டு தொடக்கம் 2006வரை ராஜஸ்தான் அணிக்காக விளையாடினார், அதன் பின்னர் நடைபெற்ற முதலாவது ஐ.பி.எல் போட்டிகளை என்.டி.ரியில் தொகுத்து வழங்கும் வர்ணனையாளராக வந்து முகம் காட்டினார்.
அதற்கும் சிலர் மத்தியில் இருந்து பாரிய எதிர்ப்புக்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் தற்போது அவர், முதலீட்டு வர்த்தகம், மற்றும் ரியல் எஸ்ரேட் என்பவற்றில் பெரியளவில் முதலீடு செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிக்ஹெய்ல் கொர்ப்பச்சேவ்

உலகம் இரு வல்லரசுகளின் கீழ் இருந்த காலத்தின் ஒரு வல்லரசின் தலைமை கதாநாயகனாக இறுதியில் இருந்தவர்.
சோவியத் யூனியன் என்ற பரந்துபட்ட பூமி சிதைவுறும் வரை 1985 முதல் 1991ஆம் ஆண்டுவரை அந்த இணைந்த தேசத்தின் தலைவராக கொலுவீற்றிருந்தவர் கொர்ப்பச்சேவ்.
ஒரு இலட்;சியத்தை நோக்கிய நீண்டகால தூரநோக்கான பயணியாக கொர்ப்பச்சேவை குறிப்பிடுகின்றது உலகம்.
பிறப்பு அடையாளங்கள் (பேர்த் மார்க்) பற்றிய உதாரணமாகவும் அவரே (அவரது தலையில் உள்ள பிறப்படையாளம்) முன்லை பெறுகின்றார்.

சோவியத் ஜூனியனின் சிதைவுக்கு பின்னதான காலங்களில் ஆடிய கால் சும்மா இருக்காது என்பதற்கு தக்கவாறு பல்வேறு அரசியல் கட்சிகளில் அங்கத்தவராக இருந்ததுடன், மீண்டும் ஒரு வலுவான தலைவராக அவர் தன்னை நிலைநிறுத்த பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டிருந்தபோதிலும் அவை வெற்றியளிக்கவில்லை. இருப்பினும் 2003ஆம் ஆண்டு புதிய கட்சி (ரஷ்ய சமுக ஜனநாயக கட்சி) முன்னிறுத்தி தேர்தலில் செல்வாக்கு செலுத்த எடுத்த முயற்சியும் பலிக்காது, 2007 ஆம் ஆண்டு அந்த கட்சி ரஷ்ய நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டது.
அதன் பின்னர் தனது மனைவின் பெயரில் தர்ம ஸ்தாபனம் ஒன்றை அமைத்து கொஞ்சம் சமுகசேவைப்பக்கம் அக்கறை காட்டினார்.
கடந்த (2010) ஒக்டோபர் 27 அன்று தனது 80ஆவது பிறந்தநாளை லண்டனில் விமர்சையாக கொண்டாடியுள்ளார் கொர்ப்பச்சேவ்.
தற்போதும் ரஷ்ய பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு தன்னாலான பங்களிப்பை வழங்கிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தனது மகள் மற்றும் இரண்டு பேத்திகளுடன் மொஸ்கோவில் வசித்துவருகின்றார்.

டி.ஆர்.கார்த்திகேயன்

தமிழ்நாட்டை சேர்ந்தவா.; இந்தியாவாலும் குறிப்பாக தமிழர்களாலும் மறந்துவிட முடியதவரும்கூட. ஏற்கனவே பல்வேறு சாதனைகளை புரிந்தவர் இவர் என்றாலும்கூட ராஜீவ் காந்தி கொலை வழங்கு மூலம் மேலும் பிரபலம் பெற்று ஜொலித்தவர். விசாரணைகள் தொடங்குமுன்னமே இதை செய்தவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் என்று முன்கூட்டிய முடிவுடன் செயற்பட்டு, மேலிட அழுத்தங்கள், சுய விஸ்வாசங்களால் தான் நினைத்தபடியே அந்த கொலை கேஸை தன் இஸ்டப்படியே நகர்த்தியவர்.
என்று நான் சொல்லலையுங்க இவருக்கு அடுத்த நிலை அதிகாரியாக இருந்த ரதோத்தமன் இப்படி கூறியிருக்கின்றார். அதேவேளை விடுதலைப்புலிகள் கருவிகளாகவே பயனப்டுத்தப்பட்டிருந்தனர் எனவும் ஏவியவர்களை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகளுக்கு கார்த்திகேயன் பெரும் தடையாக இருந்ததாகவும் இவருடன் பல அதிகாரிகள் முரண்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

இவர் மொஸ்கோ, நியுஸிலாந்து, புஜி ஆகிய தேசங்களின் இந்திய தூதரக செயலாளராக கடமையர்றியதுடன், தற்போது இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவராகவும் இருந்து வருகின்றார்.

ராஜீவ் மேனன்

இந்தியாவின் தலைசிறந்த சினிமோட்டோகிரபர், சிறப்பான விளம்பர பட இயக்குனர், மின்சார கனவு மற்றும் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற கலர்புல்லான திரைப்படங்களை இயக்கியவர் ராஜீவ் மேனன்.
இப்போதும் பிரபல கம்பனிகளின் விளம்பரங்கள், ஏன் இந்திய அரசாங்கத்தின் வரி விளம்பரம் என பல சிறப்பான விளம்பரங்களை இயக்கிவருகின்றார்.
அத்தோடு மிட்ஸ்கிறீன் பிலிம் இன்ஸிரியூட் என்ற நிறுவனத்தின் ஊடாக பல இளைய திறனாளர்களை உருவாக்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

மருதமூரான்

இலங்கைப்பதிவர்களில் மிகக்காத்திரமான யதார்த்தநிலை மற்றும் நடுநிலையான தரத்தில் நின்று காத்திரமான பதிவுகளை எழுதிவந்தவர்.
அரசியல், சினிமா, இலங்கியம், சமுகம் என்று மிக இயல்பாக அதேவேளை கனதியான பார்வையுடன் தனது பதிவுகளை தந்துவிடுவது இவரது சிறப்பியல்பு.
நீண்ட காலமாக பதிவுலகப்பக்கம் காணமுடியாத இவரை தற்போது மூஞ்சிப்புத்தகத்தில் தர்க்க ரீதியான பல பிலோசொபிக்கல் டாப்பிக் விடயங்களுடன் மட்டுமே காணக்கூடியதாக இருக்கின்றது.
இருப்பினும் மிகத்தரமான அச்சு இதழ் ஒன்றை வெளியிடும் வேலைகளில் மிக பிஸியாக இருப்பதாக அறியமுடிகின்றது.(மருதமூரானுக்கு மட்டும் ஹி..ஹி..ஹி..)

16 comments:

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

பல பிரபலங்களை பற்றி தெரிந்துக்கொண்டேன் .... பகிர்வுக்கு நன்றி..

தமிழ் உதயம் said...

எல்லா பிரபலங்களாலும், எல்லா காலத்திலும் பிரபலமாக இருக்க முடிவதில்லை. மறந்து போன, மறக்க கூடாதவர்களின் தொகுப்பு அருமை.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Rathnavel said...

அஜய் ஜடேஜா - ஒரு அற்புதமான விளையாட்டு வீரர்.
இவர் மாட்டிக்கொண்டார். அவ்வளவு தான்.

மைந்தன் சிவா said...

ஹிஹி எல்லாம் ஆர்வமாய் வாசித்து வந்தேன்...கடைசியாய் பார்த்ததும் ஒரே சிரிப்பு கேக்கக்க பிக்கக்கா எண்டு!!!
மருதமூரான் வாழ்க!!

Mohamed Faaique said...

இந்த பதிவை ஒரு தொடர் பதிவாக எழுத முடியுமே!!!!

Anonymous said...

////தமிழ்நாட்டை சேர்ந்தவா.; இந்தியாவாலும் குறிப்பாக தமிழர்களாலும் மறந்துவிட முடியதவரும்கூட. ஏற்கனவே பல்வேறு சாதனைகளை புரிந்தவர் இவர் என்றாலும்கூட ராஜீவ் காந்தி கொலை வழங்கு மூலம் மேலும் பிரபலம் பெற்று ஜொலித்தவர். /////ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணை என்ற பேரிலே கோடிகளை ஏப்பம் விட்டவர். )))

றமேஸ்-Ramesh said...

வணக்கம் மீள் வருகைக்கு
நல்ல திரட்டலுடன் ஆரம்பம்.
கடைசியில் ஐயோ ஐயோ

FOOD said...

அர்த்தமுள்ள பதிவு. அறியாத பலரை அறிய வைத்ததற்கு நன்றி.

Bavan said...

பதிவின் கிளைமாக்ஸ் அருமை, எதிர்பார்க்காத திருப்பம்..:P

மருதமூரான் அண்ணா ROCKS..:P

:-)

ஜீ... said...

அருமை! ராஜீவ் மேனன் பற்றிய தகவல் எல்லாமே கலக்கலா வந்து கிளைமாக்ஸ்ல.....இந்தப் பிரபலத்த எங்கயோ பார்த்த மாதிரி இருக்கேன்னு யோசிச்சேன் படத்தைப் பார்த்து!
சூப்பரண்ணே!
மருதமூரான் ROCKZZZZ ....!!!

விக்கி உலகம் said...

ரைட்டு!

shanmugavel said...

எங்கிருந்து சேகரித்தீர்கள் ஜனா .நன்று

# கவிதை வீதி # சௌந்தர் said...

வித்தியாசமான பதிவு...
வாழ்த்துக்கள்..

நிரூபன் said...

அஜய் ஜடேஜா//

அட விடுங்க சகோ, கனவிலை நக்மாவூடன் சஞ்சரித்துக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்;-))

சத்தியாம எனக்கு தெரியலை சகோ.

நிரூபன் said...

இறுதியாக கண்ணாடியுடன் இருக்கும் நபரை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு. ஆனாலும் பதிவர் என்று அடை மொழி வேறு கொடுத்திருக்கிறீர்கள்.
இவர் ஒரு பாடகர் தானே?

LinkWithin

Related Posts with Thumbnails