Thursday, July 7, 2011

ஹொக்ரெயில் - 07.07.2011

எங்க தலை டோனிக்கு பெரிய கேக் வெட்டுங்க...

ஒன்று தசம் இருபத்து ஒரு பில்லியன் மக்களின் மக்களின் ஒரு மித்த கனவு நிறைவேறிவிடும்... இதோ நிறைவேறப்போகின்றது என்ற நிலையில், வெல்வதற்கு இன்னும்.. ஒரு சில ஓட்டங்களே உள்ளன இதோ.. களத்தில் இருந்த இந்திய அணித்தலைவன் மகேந்திர சிங் தோனி இலட்சியம் நிறைவேறும் தருணம் பார்த்து மிடுக்குடன் துடுப்பை பிடித்துக்கொண்டு இருக்கின்றார்.
மிக உறுதியாகவும், அதீத நம்பிக்கையுடனும், காத்திருந்து அந்த அருமையான வின்னிங் சாட், மிக உயரமாக ஆறு என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருப்பதை, உறுதியான பார்வையுடன் முகத்தில், ஆனந்தம், பெருமிதம், சந்தோசம், தேசத்திற்கு பெருமை தேடினேன் என்ற பண்பு என அத்தனை உணர்வோடும் மேலாக போகின்ற பந்து சென்று விழும்வரை கூர்ந்து பார்க்கின்றது அந்த விழி.
28 வருடங்களின் பின்னர் இந்தியாவுக்கு கிடைத்த அடுத்த பெருமை இது.
1983 இல் கபில் தேவின் கரங்களில் வந்துசேர்ந்த கிண்ணம், இப்போது மீண்டும் வந்து சேர்ந்தது டோனியிடம்.
இந்தப்பெருமைகளின் சொந்தக்காரன் டோனிக்கு இன்று பிறந்த தினம்.
ஹப்பி பேர்த்டே டோனி...

இன்றைய காட்சி..

அறிவொளி ஒன்று அணைந்து போனது..

1932 மே மாதம் 10ஆம் நாள், பண்டிதரும், சைவப்புலவரும் யோகர்சுவாமிமீது பெரும் பற்றும், பக்தியும் கொண்டவருமான கார்த்திகேசு, கரவெட்டியில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர், அப்படியே யோகர் சுவாமியை சந்தித்துப்போகலாம் என்று யோகர் சுவாமிகளின் இருப்பிடம் நோக்கி உள் வருகின்றார்.
உள்ளே இருந்து யோகர் சுவாமிகளின் குரல்,
காத்திகேசு..! பெண்டாட்டி முழுமாத கர்ப்பிணியாக இருக்கும்போது உனக்கென்ன வீண் சோலிகள் வேண்டி இருக்குது.
அங்கேயே நில்.. உள்ளே வராதே.. உடன வீட்டுக்குப்போ.. உனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கின்றான், அறிவிலும், தமிழிலும் முதன்மையானவன் அவன்,
போய் 'சிவத்தம்பி' என்று பெயர்வை.. அவன் தானாக வளர்வான், அவனுடன் அறிவும் வளரும். என்று சொல்கின்றார்.
யோகிகளின், சித்தர்களின் வாக்ககள் பொய்யானது உண்டா! நிகழ்கால அறிவுச்சரித்திரமாக எம்மத்தியில் வாழ்ந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள்.

இதே ஹொக்ரெயில் பல தடவைகள் பேராசிரியர் பற்றி பல விடயங்களை எழுதியிருக்கின்றேன். நான் நேரடியாகப்பார்த்து பிரமித்துப்போனவர்களில் பேராசிரியர் அவர்களும் ஒருவர்.
நுடிகர் திலகம் சிவாஜி கணேசன் தொடர்பான முழுமையான டாக்குமென்ரி ஒன்றை எடுக்கவேண்டும் என்ற ஒரு ஆசையுடன், திட்டத்துடன், (இளையதம்பி தயானந்தா) தயா அண்ணாவுடன் சில வருடங்களின் முன்னால் அவரது இல்லம் சென்றிருக்கின்றேன்.
சிவாஜி கணேசன் பற்றிய பல்வேறு பார்வைகளை ஒரே நாளில் அவரிடம் பேசி, ஷூட் பண்ணுவதாக திட்டமிட்டிருந்தோம்.
அப்பா... மடை திறந்த அருவிபோல, நினைத்தே பார்க்கமுடியாத கோணங்களில் பல விடையங்களை, அனால் சுவாரஸ்யத்துடன் அவர் பேசிக்கொண்டே சென்றபோது.
நான் அப்படியே ஸ்தம்பித்துப்போனதே உண்மை. இமைகள் ஆடினவா? அல்லது அவ்வளவு நேரமும் நான் ஸ்வாசித்தேனா என்பதுகூட எனக்கு தெரியாது.
உண்மையை சொல்லப்போனால் வல்லாளர்களைப்பற்றி பேசவோ எழுதவோ முடியாது. அவர்களின் பெயர்களை எழுதவே எமது சிற்ரறிவு போதாது.
ஒரே வசனம் 'ஹி இஸ் எ ஜீனியஸ்'

இன்றைய புகைப்படம்

மியூஸிக் கபே.

'தவிக்கமுடியாத காரணத்தால் இன்றய ஹொக்ரெயிலில் போதை கம்மிதான். மன்னிக்கவும்.'

12 comments:

கந்தசாமி. said...

ஓ இன்று தோனிக்கு பிறந்தநாளா , எனக்கு தெரியாம போச்சே ...)

கந்தசாமி. said...

மூத்த தமிழ் அறிஞர், இழந்தது பெரிய இழப்பு தான்..

கந்தசாமி. said...

புகைப்படம் சூப்பர் ( செய்யும் தொழிலே தெய்வம் என்று எண்ணுபவர் போல ஹிஹிஹி )

கந்தசாமி. said...

பாட்டு கேட்டுக்கிட்டே இருக்கலாம் ....

விக்கியுலகம் said...

இன்னிக்கி பாதி போட்டதே தூக்கலா இருக்குய்யா...சூப்பர்!

Nesan said...

நல்லபதிவு பேராசிரியரின் மறைவு ஈடு செய்யமுடியாத ஒன்று .
நல்ல பாடல்களை ஒலியேற்றும் போது உங்களுக்குப் பிடித்த வரிகளையும் சொல்லலாமே ஜனா அண்ணா இப்பாடல் பஞ்சுவின் கைவண்ணம் என்று சொல்லலாம் தானே தோரனம் ஆடிட நேரமும் வந்ததம்மா  என்றவரிகள் மீது எனக்கு மயக்கம் உண்டு.

தமிழ் உதயம் said...

பாடல் நன்றாக உள்ளது.

யோ வொய்ஸ் (யோகா) said...

:)

Alivetamil said...

தமிழ் எழுத்தாளர், பேராசிரியர் கா.சிவத்தப்பியினுடைய மரணச்செய்தி உள்ள இடத்தில், விளையாட்டுப் பிள்ளைகளின் படங்களுமா? நல்லதல்ல தோழா

FOOD said...

மரணச் செய்தி ஒன்றின் கீழே, மரணிக்க போகும் மனிதர்களின் போராட்டம்!

கார்த்தி said...

Mr.Cool க்கு வாழ்த்துக்கள்! பேராசியரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்!

...αηαη∂.... said...

தோனிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails