Saturday, December 31, 2011

அடுத்த விநாடி ஒளித்துவைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம்!


இதோ இன்றுடன் எம் வாழ்வுத்தடங்களில் இன்னும் ஒரு ஆண்டு எம்மிடம் இருந்து விடைபெற்றுப்போகின்றது. மனிதன் ஒரு சமுகப்பிராணி என்பதை முழுமையாக நிரூபித்துக்காட்டுவது வருட இறுதிக்கணங்கள்தானோ என்று அப்பப்போ பெரும் சந்தேகங்கள் எழுந்துமறைவதுண்டு.

ஒவ்வொரு ஆண்டுகளும் எமக்குப்பருவகாலங்கள்போல கொடுத்துவிட்டுப்போகும் அனுபவங்களும் வேறு வேறானவையே. ஓவ்வொரு ஆண்டின் இறுதி நாட்களிலும் ஒவ்வொருவருக்குள்ளும் இனம்புரியாது தொற்றிக்கொள்ளும், ஒரு சிறு சோகமும், அடுத்த புதுவருடத்தை வரவேற்கும் குதூகலமும் எமக்குச்சொல்லிக்கொள்ளும் உளவியல்ப்பாடங்களாகவும் இருக்கலாம்.

நாம் எங்கே போய்க்கொண்டிருக்கின்றோம் என்பதை நின்று நிதானித்து சற்று எம்மை ஆசுவாசப்படுத்திக்கொள்ளவும், சுயவிமர்சனம் செய்துகொள்ளவும், அடுத்த படியை எப்படி வைப்பது என்பதை தீர்மானிக்கவும் இந்த வருட இறுதிநாட்கள் சிறந்தவை என எல்லுனர்கள் வரையறுக்கின்றனர்.
இந்தவருடம் உலகுக்கு உரக்கச்சொன்ன விடயங்கள், மக்கள் கிளர்ச்சிகள், ஆட்சியார்களுக்கு எதிரான போராட்டங்கள், ஒசாமா பின் லேடனின் மரணம், ஜப்பான் சுனாமி, என ஏராளம். அதேபோல ஒவ்வொருவரினதும் சுய வாழ்;கையிலும், சந்தோசங்கள், ஏற்றங்கள், இறக்கங்கள், இணைவுகள், இழப்புக்கள் என பல பல...

நாம் திட்டமிட்டு வாழ்ந்துவந்தாலும், உலக ஓட்டம் எவ்வாறு நகரும் என்று கணித்தாலும், உண்மையில் அடுத்த நொடி எமக்கு வைத்திருக்கும் ஆச்சரியங்கள் புதிர்கள் ஏராளம்... ஏராளம்....

இதோ வழமைபோலவே எமை நோக்கி வாசல்வரை வந்துவிட்டது 2012 என்ற ஆண்டு. (உலக அழிவு நிச்சயம் என்ற பீடிகையுடன் அதுவேறு)
எதிர்வரும் ஆண்டு வாசகர்களான உங்களுக்கு வசந்தங்கள் மட்டுமே கொடுக்கட்டும், எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என இயற்கையினை பணிந்து அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.ஸியேஸ்....
என்றும் அன்புடன்
உங்கள் ஜனா

8 comments:

துஷ்யந்தன் said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் பாஸ்

guna thamizh said...

அழகாகச் சொன்னீர்கள் நண்பா..

தர்ஷன் said...

இதத்தான் ஷோர்ட் அண்ட் ஸ்வீட் பதிவுன்னு சொன்னீங்களா? அண்ணன் ஊன்னா தான்னா பதிவுகளையே கண்ணு முழிச்சி படிக்கிறோம். இத படிக்க மாட்டோமா?
உங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா

♔ம.தி.சுதா♔ said...

தங்களுக்கும்... தங்கள் குடும்பத்திற்கும் எனது ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...

றமேஸ்-Ramesh said...

சியேஸ்... என்ஜொய்..

shanmugavel said...

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஜனா!

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் அண்ணா,

கடந்த ஆண்டு பற்றிய சிறிய மீட்டல்களோடு,
புதுவருடம் தொடர்பான எமது எதிர்பார்ப்புக்கள் எப்படி இருக்கும் என்பதையும் அலசியிருக்கிறீங்க.

தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

காட்டான் said...

வணக்கம் சகோ..!
புது வருட வாழ்த்துக்கள்..!

LinkWithin

Related Posts with Thumbnails