நாம் கதைகேட்டு அதை கற்பனையாக மனத்திரையில் விழுத்தி, அதில் சுவைகண்ட வேளைகளில் எம் உணர்வுகள் எப்படி?
“சினோவைட்” மீள எழுந்திருக்கவேண்டும் என்று கதைகேட்டபோதே எம் மனம் பிரார்த்தித்தலில்லையா? எத்தனை இரவுகள் ஈசாப்கதைகளில் வரும் பாத்திரங்களுடன் நாமும் ரொட்டியும், பேரிச்சம்பழமும் சாப்பிட்டுள்ளோம் இல்லையா? ஆயிரத்தோர் இரவு கதைகளில் தாலிவிற்;க்கு தன் தையபாதான் கிளி என்பது தெரியவேண்டும் என்று தையபாவைவிட தவிர்தவர்கள் நாம் இல்லையா?
ஆக மொத்தத்தில் ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது என்பதை என்றாவது சிந்தித்துள்ளோமா?
இன்று நம் கண்களால் ஆயிரம் புத்தகங்களை வாசித்து இறுதிப்பக்கத்தை மூடினாலும், அவற்றில் சில மட்டும், வாசித்து மூடும்போதே மனதிற்குள் ஏதாவது ஒரு உணர்வின் நெருடலை தந்ததாக அனுபவித்துள்ளோம் அல்லவா?
ஆகவே எம் அடி மனத்தில் உள்ள அந்த உன்னதமான உணர்வுகள், அன்பு, பாசம், ஏக்கங்கள் என்பவற்றை மிக இலாவகமாக தட்டிக்கொடுக்கும் எழுத்துக்கள், காட்சிகள் பார்த்துமுடியும்போது நாம் அதில் ஒன்றி இலகித்துப்போய் நிற்கின்றோம்.
அத்தோடு நின்றுவிடாது அவை எம்மை குறிப்பிட்ட சில நேரத்திற்கு தன்னகத்தே ஆட்கொண்டு விட்ட நிலையில் எம் மனம் சஞ்சரித்து நிற்பதையும் என்றாவது அனுபவித்து பார்த்திருக்கின்றீர்களா?
தேர்ச்சி பெற்ற ஒரு எழுத்தாளனின் எழுத்துக்களோ அல்லது, மிகப்பிரமாண்டமாக திரைப்படம் எடுக்கும் இயக்குனரோ தான் அதை செய்யமுடியும் என்று இல்லை.
இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.
ஆக..உணாவுகளை தட்டியெழுப்பும் உன்னத படைப்புக்கள் கதைகேட்கும் நாட்களில் இருந்து இன்றுவரை எம் மனதை வருடிச்செல்வதை உணர்கின்றோம் இல்லையா?
சில நாவல்கள் படித்து இந்த உணர்வுகளை நீங்கள் அடைந்திருப்பீர்கள், அனால் பின்னர் அதேநாவல் திரையில் வரும்போது, அது நாவல்போல் இல்லாமல் அந்த உணர்வை தராமல் ஏமாற்றிய சந்தர்ப்பங்களையும் சந்தித்திருப்பீர்கள்! அதேபோல வாசிக்கும்போது சுமாராக இருந்த நாவல்கூட, திரைக்காட்சியாகவரும்போது உணர்வுகளை தட்டிவிட்டு செல்லும் சந்தர்ப்பங்களும் உண்டுதானே!!
சில வாசிப்புக்கள், திரைக்காட்சிகள், எம் மனதை வருடிவிடுகின்றன ஆனால் அந்த உணர்வு எத்தகயதாக இருக்கும் என்பது வரையறுத்து சொல்வது கொஞ்சம் கஸ்டமாக இருக்கும்.
கீழே ஒரு திரைக்காட்சி…கண்டிப்பாக முழுவதையும் பாருங்கள்..
அந்த ஏதோ ஒரு உணர்வு கண்டிப்பாக கிடைக்கும்.
அதேவேளை இந்தக்கதை வாசிப்பதாக இருந்தாலும் அதே உணர்வை தந்திருக்கும்.
பார்த்துவிட்டு கண்டிப்பாக நீங்களும் என்னுடன் பேசிவிட்டுபோங்கள்…
12 comments:
சிறப்பான தரம் வாய்ந்த அருமையான பதிவு..மிக்க நன்றி..
உண்மை பாஸ். இப்படி என்னை பாதித்த நிறைய புத்தகங்கள் உண்டு.... "பெண் அல்ல பொம்மை" என்று ஒரு நாவல் என் 14 வயதில் படித்தேன். அதன் பாதிப்பு இன்னும் என்னுள் உண்டு.... கதை கதாபாத்திரங்கள்.. அதன் பெயர்களை கூட இன்னும் நான் மறக்க வில்லை, மறக்க முடியவில்லை. :'
சிறுவயதில் நிறைய கதைகளைக் கேட்டு வளர்ந்தவன் நான். சிறுவர்களுக்கு நிச்சயம் கதை சொல்லி வளர்க்க வேண்டும். நல்ல பெற்றோர், பேரன்கள் இதற்கெல்லாம் வாய்க்க வேண்டும்.
“வீர மைந்தன் வில்லாளன்” நான் பத்துவயதில் வாசித்த நாவல். சூப்பரோ சூப்பர். அதன் தாக்கமே “சரித்திர வீரன் சங்கிலி” என்ற தலைப்பு.
சின்ன வயதில் பாம்பை கொன்ற கீரியை தாய் தன் குழந்தையைத்தான் கொன்று விட்டதோ என அவசரப்பட்டு கொன்ற கதையை என் அம்மம்மா சொல்ல அழுதே விட்டேன். அத்தனை இளகிய மனசு. வளர்ந்த பிறகும் அந்த குழந்தை மனசு அப்படியேத்தான் இருக்கிறது.
அண்மையில் ஷோபாசக்தியின் “கப்டன்” ஒரு உலுக்கு உலுக்கியது. மற்றும்படி ஜெமோவின் அறம் சீரிஸ்ல வந்த சிறுகதைகள் எல்லாம் நிறையப் பேர் சொன்னது போல் கண்ணீர் எல்லாம் உகுக்க வைக்கவில்லை. ஆனால் அவரின் ஊமைச்செந்நாய் தாக்கியிருக்கிறது. முதலில் மொழி அச்சுறுத்தினாலும் சிரித்துகொண்டே மனம் கனக்க 7வது உலகம் வாசித்திருக்கிறேன். எஸ்ராவின் உறுபசி யில் வரும் சம்பத் பாத்திரத்தோடு ஒன்றியிருக்கிறேன். சுஜாதாவின் நகரம்,ஜெயகாந்தனின் பொம்மை, இபாவின் ஐயையோ பேர் மறந்துட்டனே ஒரு ஓவியன் தாயை இழந்த பிள்ளைக்கு அவள் தாயை ஓவியமாக வரைவான். தலைப்பு தெரிந்தால் சொல்லுங்கள் அண்ணா (இந்தக் கதையை குறும்படமாய் எடுக்க திரைக்கதை கூட எழுதி வைத்திருந்தேன்), அசோகமித்ரனின் புலிவேஷம் அந்த கேரக்டரில் எப்போதும் நாகேஷை கற்பனை செய்து கொள்வேன்.சுராவைப் பொறுத்த வரை அழ வச்ச கதை எல்லாம் இல்லை ஆனால் பிரசாதம் பிடிக்கும்.
ஆனால் இந்த எழுத்துக்கள் செய்யாத மாயத்தை திரைக்காட்சிகள் செய்திருக்கின்றன. மூன்றாம் பிறை கிளைமாக்ஸில் நானும் கமலுடன் சேர்ந்து ஓடியிருக்கிறேன்.
///இந்த உணர்வுகளின் உந்துதல்களை எம் மனத்திரைக்கு கொண்டுவரும் சாமான்ய ஒரு எழுத்தாளனும், அல்லது ஒரு குறும்பட இயக்குனனும்கூட பிரமாக்களே.///Repeattu.... its nice and thanks to share
அருமையான விடயம் அந்த காணொளி மூலம் புரிந்தது.
//ஆரம்பத்தில் பிஞ்சு மனத்தில் நாம் கேட்ட கதைகள்தான் நமக்கு உணர்வுகளையும், கற்பனைகளையும் ஊட்டிவிட்டது//
ஆமாம்,கற்பனை வளம் சிறுவயது கதைகளை சார்ந்து இருப்பதாகவே நான் கருதுகிறேன்.
வணக்கம் ஜனா அண்ணா,
எம் ரசனைகளினூடாக நகர்வுகள் எப்படி இருக்கும் என்பதனைப் பதிவினூடாகவும், காணொளியூடாகவும் பகிர்ந்திருக்கிறீங்க.
நன்றி.
ஆறாம் வகுப்பில் பொன்னியின் செல்வன் வாசித்து நீண்ட நாட்கள் அந்த நினைவிலேயே... இப்போதும்கூட யாராவது அது பற்றிப் பேச ஆரம்பித்தால் மீண்டும் பழைய நினைவுகள்!
ஒரு நாவலில் ஐந்தாறு பக்கங்களுக்கு மேல் வரும் வர்ணனையை, ஒரு சினிமாவில் ஐந்து நொடிகளில் காட்டிவிடலாம்!
வாசிக்கும்போதே மனத்திரையில் காட்சிகளாக விரியும் விதமாக எழுதுவது மிகப்பெரிய விஷயம்!
மனசை 'டச்' பண்ணிட்டீங்க பாஸ்!
மாப்ள விவரிக்கும் விஷயம் மனதுக்குள் செலுத்த செய்வது ஒரு கலை...பதிவுக்கு நன்றி..!
நீங்கள் சொல்வது உண்மைதான் பலருக்கு சின்னவயதிவ் சொன்ன வாசித்த கதைகள்தான் எமது கற்பளை சக்தியை கூட்டி செல்ல உதவியிருக்கிறது!
Post a Comment