Saturday, January 21, 2012

டாக்டர் வாசகனின் மயக்கம் என்ன? கட்டுமஸ்தானனாக மாறும் டிலான்!




வருடத்தின் ஆரம்பமே கூதிர்க்காலத்துடன் ஆரம்பித்துவிட்டதோ என்னமோ! இலங்கையில் வெப்பவலய பிரதேசங்களிலேயே அப்படி ஒரு குளிர்.
இது இப்படி இருந்தால், இலங்கையின் மத்திய பிரதேசத்தில் இருக்கும் நாவலப்பிட்டியின் குளிரின் அளவை சொல்லித்தெரியத்தேவையில்லை!

நேரம் நள்ளிரவைத்தாண்டிய பின்னும்கூட, அந்த நகரின் வீதிகளின் பரிணாமங்கள், அங்கே ஊர்வன, பறப்பன, நடப்பன, விழுவன என்பவை எவையாக இருந்தாலும் கிளிக்... கிளிக் என்று ஒரு டியிட்டல் சிங்கிள் லென்ஸ் ரிபிளக்ஸ் கமரா ஒன்று உருவச்சிறைப்பiடுத்திக்கொண்டிருந்தது.
அந்த கிளிக்கில் அகப்படும் பொருள் நிலையில் இருந்து கொஞ்சம் சூம் போட்டுப்பார்த்தால் அங்கே கமராவுடன் சிரித்துக்கொண்டு இருப்பவர் டாக்டர் வாசகன்.

குறிப்பிட்ட ஒரு துறையில் மட்டுமன்றி இன்னுமொரு விடையத்தை பொழுதுபோக்காக அன்றி அதிலும் தேர்ச்சியாளனாக வரவேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் வெற்றியாளர்கள் என்றே அழைக்கப்படுகின்றனர். அந்த ஒரு வெற்றியாளனாக மாறிக்கொண்டிருக்கின்றார் டாக்டர் பாலவாசகன் அவர்கள்.

அண்மைக்காலமாக பேஸ்புக், மற்றும் பிளிக்கரில் முகத்தை ஆச்சரியமாக்கத்தக்க பாலவாசகனால் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் வெளிவந்திருந்தன. அவை நண்பர்கள் உட்பட பல்வேறு தரப்பட்டடோரினதும் பாராட்டுக்களையும் பெற்றவகையாகவே இருந்தன...

அவரால் பிடிக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே உங்கள் கண்ணுக்கு விருந்தாக....
இந்த புகைப்படங்களில் ஒரு தவளையின் படம் இருக்கும் கவனமாகப்பாருங்கள். இந்த புகைப்படம் டாக்டர் பயணித்த ஆட்டோவில் தவளை நின்றபோது உடனடியாக டாக்டர் எடுத்த புகைப்படம்.
எனினும் சில செட்டிங்சை செய்து இன்னும் உருவொழுக்கு, மறுபிரதிப்பு என்பவை, மற்றும் கோணங்களை செட்செய்து தரமான படம் ஒன்றைபெற டாக்டர் முயற்சித்துக்கொண்டிருந்தவேளை ஆட்டோக்காரார் விவரம் தெரியாமல் தவளையை அடித்து ஓடவைத்துவிட்டாராம்.






2012 ஞாயிற்றுக்கிழமை 22 தேதி தனது பிறந்தநாளை நாவலப்பட்டியில் கொண்டாடும் அன்புத்தம்பி டாக்டர் பாலவாசகனுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்...

உடலினை உறுதி செய்....

டிலானை இப்போது பேஸ்புக்கிலோ, ஸ்கைப்பிலோகூட பிடிப்பது மிகக்கஸ்டமான காரியமாக இருக்கின்றது. பிஸி பிஸி என்றே அழைப்புக்கள் எடுத்தாலும் நிலமை உள்ளது.
இருந்தாலும்கூட பேஸ்புக்கிலே பல்வேறு உடற்பயிற்சிகளை டிலான் மேற்கொள்ளும் புகைப்படங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது.
புறவாய் இல்லை பயபுள்ளைகள், தங்கள் பிரபொஸனல்களைவிட போட்டோ கிராபியிலும், ஜிம்மிலும் பொழுதை கழிப்பது பாராட்டக்கூடியதாகவே உள்ளது.

நான் டிலானை சந்தித்தபொழுதுகளில் எல்லாம் சொல்லிக்கொள்வது, எப்போதும் ஸ்போட்ஸ் மற்றும் உடல்மீது கவனம் கொண்டிருக்கும் நீ... வெளியே போனால் இதெற்கெல்லாம் டைம் கிடைக்காமல் நம்மளைப்போல ஆகிவிடுவாய் பார் என்று.. இருந்தாலும்கூட அண்ணே! ஒருபோதும் இல்லை எனக்கு எதிலை கொன்ரோல் இருக்கோ இல்லையோ ஜிம் விடயத்தில் வேற கிரகத்திற்கு போனாலும் ஜிம்முக்கு போவேன் என்பான்.
அதைப்போல வேற தேசம்போனாலும் ஜிம்முக்கு போவது சந்தோசமே.
வெகு விரைவில் மங்களகரமாக இலங்கைவருவேன் என்ற டிலானுடைய அறிவித்தலை ஆர்வத்தோடு எதிர்பார்க்கின்றேன்.

பதிவுலகில் பதிவர்கள் என்று பலர் நண்பர்களாக வந்தாலும், இருந்தாலும் எப்போதும் அத்தனையையும் தாண்டி என் சகோதரர்களாக இருப்பவர்கள் இந்த இருவர். எங்களுக்குள்ளான அதி உச்ச தொடர்பு என்ன வென்று அனைவருக்கும் தெரியவேண்டும் என்றால், என் பதிவுலகம் சம்பந்தமான சகல கடவுச்சொற்களும் பாலவாசகனுக்கு தெரியும், ஆதேபோல டிலானுக்கும் தெரியும், அதேபோல அவர்களுடையதும் எனக்கும் தெரியும் 

2012 ஞாயிற்றுக்கிழமை 22 ஆம் தேதி ஜிம்மிலேயே தனது பிறந்தநாளை கொண்டாடும் டிலானுக்கும் எனது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஒரே ஆண்டு, ஒரே தேதி, ஒரே மாதத்தில் பிறந்து, என் இதயத்திற்கு மிக நெருக்காமாக உக்காந்திருக்கும் இரண்டு தம்பியருக்கும் எனது பிறந்ததின வாழ்த்துக்கள்.

4 comments:

ம.தி.சுதா said...

பாலுக்கு எனது முற்கூட்டிய இனிய தமிழ் பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்...

ஹெலிவுட் படங்களுக்கு தெரிவாக உள்ள டிலானுக்கும் வாழ்த்துக்கள்...

balavasakan said...

ஓவராக புளுகி & புகழ்ந்து தள்ளி இருக்கிறீர்கள் ஏறெகனவே இங்க ரொம்ப குளிர் இண்டிரவைக்கு அப்பிடியோ உறைஞ்சிடப்போறன்....
புகைப்படத்துறையில நான் இப்பதான் முதலாம் வகுப்பு பெடியன் மாதிரி இப்பதான் ஒரு டி.எஸ்.எல்.ஆர். கமரா வாங்கினேன் இதெல்லாம் அதை பரீட்சித்து பார்க்கும் போது எடுத்தவை.. இது ஒரு வெறும் பொழுது போக்கு மட்டுமல்ல.. அதற்கும் மேலாக ..வாழ்க்கையை சுவாரஸ்யமாக வைத்திருக்கிறது...இன்னும் நிறைய யல்ல படங்கள் எடுக்கவேண்டும்..
ஒரு வாரம் முன்னதாகவே பிறந்தநாள் பரிசு ஒரு நாள் முன்னதாக வாழ்த்து என்று அசத்தி விட்டீர்கள்...
மிக்க நன்றி அண்ணா..உங்கள் வாழ்த்துக்களுக்கு ..

balavasakan said...

டிலானுக்கு என்னுடைய முற்கூட்டிய இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்... ஆரோக்கியமான தேகம் ஆரோக்கியமான வாழ்க்கை தொடர வாழ்த்துகிறேன்..

கார்த்தி said...

இருவருக்கும் வாழ்த்துக்கள்!

LinkWithin

Related Posts with Thumbnails