Saturday, December 29, 2012

6 அடி, 6 அங்குலத்தில் ஒரு முழுமையான ஆளுமை...
1996 ஆம் ஆண்டு இலங்கைக்கு கிடைத்த உலகக்கிண்ணத்தின் காட்சி நினைவுகளுடன், எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளச்சொந்தமான அழுத்தம் திருத்தமான ஒரு ஆங்கில உச்சரிப்பு, அதேவேளை உளமார இலங்கையின் வெற்றிகளை நேசிக்கும் உற்சாக ஒலியாக அனைத்து கிரிக்கட் இரசிகர்களின் மனங்களையும் கவர்ந்துகொண்டது அந்த ஆளுமையான குரல்.
அந்த குரலுக்குச்சொந்தக்காரன் ரொனி ஹிரேக்.
இலங்கையில் பெரும்பாலானவர்களுக்கு அவரை ஒரு கிரிக்கட் வர்ணனையாளராகத்தான் அறிமுகம். 1996 உலகக்கிண்ணத்தினை இலங்கை வெற்றிகொண்டதைத்தொடர்ந்து இலங்கை குவித்த வெற்றிகளிலும், சனத்தின் விஸ்வரூபங்களிலும் இந்தக்குரல் இலங்கை மக்களின் குரலாகவே பெரும் குதூகலத்துடன் ஓங்கி ஒலித்தது.

அந்தநாட்களில் இலங்கை அணி வெற்றியின் விளிம்புகளில் இருக்கும்போது, வானொலி, தொலைக்காட்சிகளில் மேற்படி போட்டியை சத்தமாக போட்டுவிட்டு, சரவெடிகளுடன் தெருக்களில் காத்திருக்கும் இரசிகர்களுக்கு, வெற்றி என்ற சுப செய்தியை தரும் தேவதூதுவராகவே ரொனி ஹிரேக் தெரிவார்.
ஹெங்கிராருலேஷன் ஸ்ரீ லங்கா......... என்ற அவரின் குரலை கேட்டவுடனேயே சரவெடிகள் காதைப்பிளக்கும் நினைவுகள் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்துவிடாது.

தனது வர்ணனைகளில் சில சுவாரகசிய சொற்களை புகுத்தி இரசிகர்களை லகிக்க வைத்த வல்லமை அவரிடம் உண்டு. 
தவறுவதற்கு சந்தர்ப்பமே இல்லாத பிடிகொடுப்பை 'லொலிபப் ஹச்' என்பது முக்கியமாக அன்றைய இலங்கை அணியின் விக்கட் காப்பாளர் களுவிதாரணாவை நகைச்சுவையாகப் போட்டுத்தாக்குவது குறிப்பாக 'லிட்டில் களு' என கொமன்ட் அடிப்பதை களுவிதாரணாவே ரசிப்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறே இலங்கையர்களால் பெரிதும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட அந்த மனிதர் உண்மையில் இலங்கைமீது பெரு மதிப்பு வைத்திருந்தார். இலங்கை கிரிக்கட், சுனாமி, இலங்கை உல்லாசப்பயணிகள் வருகை என்பவற்றிற்காக தனது முழுமையான பங்களிப்புக்களையும் வளங்கியிருந்தார் என்பதையும் மறந்துவிடக்கூடாது.


ரொனி ஹிரேக் (சில குறிப்புகள்)  
1946 ஒக்ரோபர் மாதம் 06ஆம் நாள் தென்ஆபிரிக்காவின் ஹேப்மாகாணத்தில் க்யூன்ஸ்ரவுணில் பிறந்தவர். தனது கல்வியை தென்னாபிரிக்காவிலேயே தொடர்ந்த அவர், அதன் பின்னர் இங்கிலாந்து சென்று இங்கிலாந்து அணியில் தனக்கான இடத்தினை படித்துக்கொண்டார்.
1972 முதல்; 1977 வரையான ஐந்தாண்டு காலங்கள் அவரது சர்வதேச கிரிக்கட் காலகட்டங்களாக இருந்தது. ஒரு சகலதுறை ஆட்டக்காராக அவர் தனது பங்களிப்பினை இங்கிலாந்து அணிக்கு விளங்கியிருந்தார்.
வலது பக்க துடுப்பாட்டக்கரான இவர், 58 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3 599 ஓட்டங்களை பெற்றதுடன், ஆகக்கூடியதாக 148 ஓட்டங்களை பெற்றதுடன், 141 விக்கட்களை தமது டெஸ்ட் வாழ்வில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

1975 ஆம் ஆண்டு உலக கிண்ணப்போட்டிகளில் இவர் பங்களித்திருந்தார். அதன் பின்னதான 1976-1977 கால இங்கிலாந்து அணியின் இந்திய வருகை, டெஸ்ட்போட்டிகள் முக்கியமானவை என கூறப்படுகின்றது.
குறிப்பாக கல்கத்தாவில் நடந்த இந்திய – இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் ஹிரேக்கின் ஆட்டத்தை அப்போதைய கல்கத்தா இரசிகர்கள் என்றும் மறக்கமாட்டார்கள் என வர்ணிக்கப்படுகின்றது. அந்தப்போட்டியில் ஹிரேக் 103 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதுடன் அப்போது இங்கிலாந்து அணியின் தலைவராக இருந்த அவர் தனது தலைமைத்துவத்தையும் நிரூபித்திருந்தார்.

சிறுவயதில் இருந்து வலிப்பு நோய் ஹிரேக்கிற்கு இருந்து வந்துள்ளமையும், அதனால் அவர் சில அசௌகரியங்களை சந்திக்கவேண்டி இருந்ததாகவும் அறியமுடிகின்றது.
தனது ஓய்வின் பின்னர் வர்ணனையின் பக்கம் கவனம் செலுத்திய அவர் உலகின் தலைசிறந்த வர்ணனையாளனாக தன்னை நிரூபித்துக்கொண்டார் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

2011 ஆம் ஆண்டு இலங்கை சுற்றுலாவின் விசேட தூதுவராக இவர் நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவுஸ்ரேலியா சிட்னியில் மருத்துவம் பெற்றுவந்த அவர், இன்றைய தினத்தில் தனது இன்னுயிரை நீத்துள்ளமை கிரிக்கட் இரசிகர்களுக்கு அதிலும் குறிப்பாக இலங்கை அணி இரசிகர்களுக்கு மிகவும் வருத்தமான செய்திதான். 
அந்த ஆறடி ஆறங்குல ஆளுமைக்கு எமது இரங்கல்கள்.

6 comments:

ramesh sivagnanam said...

///ஹெங்கிராருலேஷன் ஸ்ரீ லங்கா......... என்ற அவரின் குரலை கேட்டவுடனேயே சரவெடிகள் காதைப்பிளக்கும் நினைவுகள் /// உண்மை.. ஆங்கில வர்ணனை என்பதை இவரிடமிருந்துதான் கேட்டுக்கொண்டோம். கிரகிக்கக் கற்றுக்கொண்டொம். இதய அஞ்சலி

Riyas said...

ஆமாம் இலங்கை ரசிகர்கள் நிச்சயம் வருத்தப்படக்கூடிய செய்திதான்..அந்தகம்பீர குரல் இல்லாமல் இனி கிரிக்கட்டும் சுவாரசியமிழக்கும்.

Jana said...

@ramesh sivagnanam
நன்றி ரமேஸ். உண்மைதான் வர்ணனைக்கான அழகு ஆங்கிலம் அற்புதமானது அவரது குரல்.

Jana said...

@Riyas
நன்றிகள் றியாஸ். நாம் விரும்பிய பலரது விடைபெறல், இழப்புக்கள் என்பன சுவாரஸய்களை குறைக்கத்தான் செய்யும்.

Ashwin-WIN said...

ரோனி க்றேக்கின் குரலுடன் இலங்கை மாட்ச் பார்க்கும்போதுதான் ஒரு முழு திருப்தி ஏற்படும். மிகப்பெரிய இழப்பு.

Jana said...

Ashwin-WIN @நன்றிகள் அஸ்வின் தம்பி

LinkWithin

Related Posts with Thumbnails