அமீர்கான், மாதவன், ஷர்மன் ஜோஸி ஆகிய மூவரும் பிரதான பாத்திரங்களாக த்ரீ இடியட்ஸாக நடித்துள்ளனர்.
இவர்களுடன், கரினா கபூர், போமன் ஈரானி அகியோர் இடம்பெற்றுள்ளனர். இதை தவிர இந்த திரைப்படத்தின் விசேடமான ஒரு பாத்திரத்தில் கஜோலும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விது வினோத் சோப்ரா தயாரிப்பில், ராஜ்குமார் ஹிரானியின் இயக்கத்தில் தயாராகி வெளிவருவதற்கு காத்துக்கொண்டிருக்கின்றது இந்த த்ரீ இடியட்ஸ் திரைப்படம்.
சந்தனு மௌய்ட்ரா இந்த திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஷர்மன் ஜோஸி இந்த திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றையும் பாடியுள்ளார் என்பது சிறப்பான அம்சமாகும்.
இந்திய பிரபல ஆங்கில எழுத்தாளர் சேட்டன் பகத்தினுடைய “பைவ்பொயின்ட் ஸம்வன்” (Five Point Someone) என்ற நாவலினை வைத்தே இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
“இந்த திரைப்படம் எடுப்பதற்கு தன்னிடம் அதன் இயக்குனர் முறைப்படி அனுமதி பெற்றிருந்ததாகவும், தான் இந்த திரைக்கதையில் எந்த பங்கினையும் கொள்ளவில்லை என்றும், இருந்தபோதிலும் சில மாற்றங்களை செய்யவும், இயக்குனர் தன்னிடம் அனுமதி பெற்றதாகவும், இருப்பினும் இறுதியில் அந்த திரைப்படத்திற்குரிய இறுதி திரைக்கதை அமைப்பு முழுவதையும் தனக்கு காண்பித்தாகவும், அந்த திரைக்கதையும் தனக்கு மிகவும் பிடித்துள்ளதாகவும் சேட்டன் பகத் கூறியுள்ளார்.
இதேவேளை இவருடைய பிற நாவல்களான “வன் நைட் அட் த கோல் சென்டர்”
(One Night @ the Call Center) “ஹலோ” என்ற திரைப்படமாகவும், “த்ரீ மிஸ்ரேக் ஒவ் மை லைவ்”( The Three Mistakes of My Life) 3M என்ற திரைப்படமாகவும் எக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
த்ரீ இடியட்ஸ் திரைப்படத்தின் கதை மூன்று டபிள் ஐ.ரி. (IIT) மாணவர்கள் பற்றிய ஒரு கதை. இந்த கதையில் குறும்புத்தனம், இவர்களின் இலட்சியங்கள், தங்களுக்குள்ளான சவால்கள், அவர்களின் போராட்டங்கள் என்ற சகலதும் அடங்கியிருக்கும் என அதன் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
அடுத்து ஒரு முக்கிமான விடயம் அமீர்கான், மாதவன் அகிய நாற்பதுகள் கடந்த இரண்டு நடிகர்களையும், 30கள் கடந்த ஷர்மன் ஜோஸியையும் மீண்டும் 21 வயதுக்கு கொண்டுவந்த மாயம்தான். இந்த திரைப்படத்தில் மூவரும் இளமைத்தோற்றத்திலேயே காட்சியளிப்பது அனைவரையும் திரையில் அதிசயிக்கவைக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
(வேட்டைக்காரன் ரொம்ப சேட்டைக்காரனாகும் பச்சத்தில் த்ரீ இடியட்ஸ்ம், ஹொலிவூட் த்ரீ டி திரைப்படமான “அவதாரும்” மனதை ஆற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்)
7 comments:
வணக்கம். மற்றவர்கள் படம் வந்த பின்னர்தான் விமர்சனம் எழுதுவார்கள். நீங்கள் பல படங்கள் திரைக்கு வரமுன்னர் முன்னோட்டம் இடுவதை கவனித்துவருகின்றேன். பாராட்டுக்கள்.
//வேட்டைக்காரன் ரொம்ப சேட்டைக்காரனாகும் பச்சத்தில் த்ரீ இடியட்ஸ்ம், ஹொலிவூட் த்ரீ டி திரைப்படமான “அவதாரும்” மனதை ஆற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்//
எல்லோருக்கும் விஜய் உடன் அப்படி என்ன கோபம்?
அவரிடம் நடிப்பை எதிர்பார்க்கமுடியாது. அது அவரிடம் துளியும் இல்லை. எனவே அவர் அவர்போலவே தொடர்ந்தும் நடித்துவருகின்றார். அதில் ஏன் இந்த கொலை வெறி???
நல்லதொரு தகவல். மாதவனை தமிழ் திரைப்படங்களில் காண முடியவில்லையே என நினைத்திருந்தேன். தற்போது அவர் ஹிந்தியில் பிசியாக உள்ளமை தெரிந்தது. அமீர்கானின் நடிப்க்கு நானும் ஒரு பரம ரசிகன். நன்றி.
நல்லதொரு தகவல். மாதவனை தமிழ் திரைப்படங்களில் காண முடியவில்லையே என நினைத்திருந்தேன். தற்போது அவர் ஹிந்தியில் பிசியாக உள்ளமை தெரிந்தது. அமீர்கானின் நடிப்க்கு நானும் ஒரு பரம ரசிகன். நன்றி.
நல்லதொரு தகவல்.பதிவுக்கும் விபரங்களுக்கும் நன்றி.
நல்ல பகிர்வு...
//(வேட்டைக்காரன் ரொம்ப சேட்டைக்காரனாகும் பச்சத்தில் த்ரீ இடியட்ஸ்ம், ஹொலிவூட் த்ரீ டி திரைப்படமான “அவதாரும்” மனதை ஆற்றிக்கொள்ள ஏதுவாக இருக்கும்
கடைசில சொன்னீங்கப்பாருங்க... அட்டகாசம்... //
சில நல்லப்படங்களும் வேட்டைக்காரன் கூட வரலைன்னா தமிழ்நாட்டை யாராலயும் காப்பாத்த முடியாது :-)
தமிழகத்தில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்
ஒருசில ப்ளாப்புகள் கொடுத்த நேரத்திலும் மற்ற நடிகர்களைப் போல் மார்க்கெட் சாயவில்லை
அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியானதுமே பரபரப்பானது பத்திரிகை உலகம்
நன்றாக நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்படுபவர்
மூன்றாம் தலைமுறை நடிகர்களில் முதலில் டாகடர் பட்டம் பெற்றவர்
வேட்டைக்காரன் ரொம்ப சேட்டைக்காரனாகும் பச்சத்தில் அவருடைய ரசிகர்கள் நூறு நாள் படத்தை ஓட்டுவார்கள் நீங்கள் விஜய் பற்றி மொக்கை போட தேவை இல்லை.
Post a Comment