Wednesday, June 30, 2010

நான் சந்தித்த பதிவர்கள் -புகைப்படத்தொகுப்பு

பதிவுலகத்தில் நான் காலடி எடுத்துவைத்தபோதே பல அரிய நண்பர்களின் நட்பு எனக்கு கிடைத்ததும், தற்போதும் அந்த நட்பு வட்டம் நாளாக நாளாக பெருத்துக்கொண்டு செல்வதும், ஒரு ஆக்கபூர்மான சிந்தனையுடைய நண்பர்களின் உண்மையான நட்பு கிடைத்திருப்பதும் எனக்கு கிடைத்த ஒரு பேறாகவும், வலைப்பதிவு எனக்கு தந்த ஒரு போனஸாகவும் நான் கருதுகின்றேன்.
சென்னையில் எனது உயர்கல்வி நிமித்தம் தங்கியிருந்தபோதே அந்த நட்பு வட்டம் அச்சாரம் இடப்பட்டது. பதிவுலக நண்பர்களின் அன்பு வெள்ளத்தில் பல தடவைகள் திக்குமுக்காடியும் இருக்கின்றேன்.

அதில் ஒரு கட்டமாகவே பதிவுலகில் ஏதாவது வித்தியாசமாக செய்யவேண்டும் என்ற நோக்கத்தில், நான்கு பதிவர்கள் சேர்ந்து ஒரு கருவில் நான்கு கதைகளை வேறு வேறு கோணங்களில் எழுதி பல தரப்பட்டவர்களின் பாராட்டுக்களையும், கவனிப்புக்களையும் பெற்றிருந்தோம்.
இந்த நட்பு வட்டங்களின் மூலமே பல இலக்கிய கூட்டங்களுக்கு செல்லவும், எழுத்துப்பிரம்மாக்களை நேரடியாகச்சந்திக்கவும் வாய்ப்புக்களும் கிடைத்ததை மறந்துவிடமுடியாது.
அதேவேளை நான் சென்னையில் தயாரித்து எடுத்த மூன்று குறும்படங்களுக்கும் பதிவுலக நண்பர்களின் பேராதரவையும் இன்றும் நான் மறந்துவிடவில்லை.
நான் தாயகம் திரும்பி இப்போது இலங்கையில் இருந்து எனது வலைப்பதிவுகளை தொடர்ந்தாலும் என் சென்னை பதிவுலக நண்பர்களின் பசுமையான நினைவுகளை இப்போம் அதே சீதோஸ்ணத்தில் என் இதய குளிர்சாதனத்தில் வைத்திருக்கின்றேன்.

அடுத்து இலங்கைப்பதிவர்கள். இலங்கைப்பதிவர்களில் அனைவரையும் சந்திக்கவேண்டும் என்ற ஆவல் எனக்கு இப்போதும் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக பலரை சந்தித்துவருகின்றேன். குறிப்பாக யாழ்தேவி நண்பர்கள் வட்டத்தினூடாக என் மண்ணின் பதிவுலக நண்பர்களை சந்தித்து வருகின்றேன்.
நான் சென்னையில் இருந்தவேளையில் இலங்கை பதிவர் சந்திப்புக்கள் இரண்டும் நடந்துமுடிந்தமையினால் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பு நழுவிட்டது துரதிஸ்டமே. வெகுவிரைவில் நான் அனைவரையும் சந்திப்பேன் என்பது என் நம்பிக்கை.

சரி வாருங்கள் நான் சந்தித்த பதிவர்களை உங்களுக்கு அறிமுகம் செய்கின்றேன்..(இதில் சில பதிவர்களை சந்தித்தும் புகைப்படங்கள் கிடைக்கவில்லை)

சென்னை பதிவர்கள்

நான், சீலன், அடலேறு, நிலாரசிகன்


தண்டோரா மணிஜி, காவேரிகணேஸ்


ரவிஷங்கர், முரளிகண்ணன், லக்கிலுக், மற்றும் நர்சிம்


கேபிள் சங்கர், எவனோ ஒருவன் அதிபிரதாபன், நான், சங்கர் மற்றும் திருக்குமரன் (இலங்கை)


அகநாழிகை பொன் வாசுதேவன், கேபிள், வனைமனை சுகுமார், முரளிகண்ணன், பட்டர்பிளை சூரியா.


ஊர்சுற்றி மற்றும் ஆதிஷா


சமுத்திரனுடன் நான்


சயந்தன் (நதிவழி), தவறணை புகழ் டிலான் மற்றும் நான்

இலங்கை பதிவர்கள்

சேரன்கிரிஸ், பாலவாசன், நான், மருதமூரான்


கூல்போய், பாலவாசன், இலங்கன், மருதமூரான், சேரன்கிரிஸ், புள்ளட்


பாலவாசன்,கூல்போய்,மருதமூரான்-2,சேரன் கிரிஸ், இலங்கன், கான்கொன், நான்


இலங்கன், கான்கொன், நான்


பாலவாசன், சுபாங்கன்

10 comments:

சயந்தன் said...

எங்களாலும் உங்களை மறக்கமுடியுமா அண்ணா? அப்புறம் எங்களைப்பாருங்கள், இலங்கை, சென்னை என்று இப்ப நாங்கள் கனடா பதிவர் ஆகிட்டோம்ல...

கன்கொன் || Kangon said...

அய்...

நானும் உள்ளேன்....

பகிர்விற்கு நன்றி.
பல பதிவர்களைப் பார்க்க முடிந்தது.

பதிவுலகம் மூலம் கிடைத்த பல நண்பர்களுடன் புகைப்படங்களை எடுத்துச் சேர்க்கத்தான் வேண்டும்.

மீண்டும் பகிர்விற்கு நன்றி. :)

Subankan said...

பதிவெழுதி உருப்படியாய் என்ன சாதித்தது என்று கேட்டால் சொல்லக்கூடிய ஒரே விடயம் நண்பர்கள்தான். ஒவ்வொரு சந்திப்புக்களும் ஏதோ ஒரு வகையில் மறக்க முடியாதவை. அதுவும் உங்களுடனான முதல் சந்திப்பு - கூல் (boy) :)

Kiruthigan said...

சுபாங்கன் அண்ணா நீங்கள் முதல் சந்திப்பு 'எக்ஸ்பீரியன்ஸ்'களை மறப்பதில்லை போலிருக்கிறது...

(CHEERS WITH JANA) பங்குகளுடன் ஜனா
அனேகம் பிரபல பதிவர்களுடன் பங்குகள் சொல்லியவர் ஜனா அண்ணாவாக தானிருப்பார்..

Subankan said...

//சுபாங்கன் அண்ணா நீங்கள் முதல் சந்திப்பு 'எக்ஸ்பீரியன்ஸ்'களை மறப்பதில்லை போலிருக்கிறது...
//

ஆகா பயங்கர ஃபோர்மிலதான் இருக்கிறாங்க பயபுள்ளைங்க

maruthamooran said...

நண்பர்களை அதிகளவில் பெற்றுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுபவன் நான். அந்த வகையில் ஜனாவின் நட்பு கிடைத்தமை எனக்கு நல்ல அனுபவப்பகிர்வுகள் பலவற்றை வழங்கியுள்ளது. எதிர்காலத்திலும் வழங்கும்.

Kiruthigan said...

//முதல் சந்திப்பு - கூல் (boy) :)//
அங்க மட்டும் என்ன வாழுதாம்..!!
பயங்கர ஃபோர்மிலதான் இருக்கிறீங்க..
சரி இனியும் 1stஎக்ஸ்பீரியன்ஸ் பத்திய பேச்சை நிறுத்தலைனா ஜனா அண்ணா ஆரம்பிச்சுடுவார்..

தமிழ் மதுரம் said...

பதிவுலக நட்புக்கள் என்றாலே சொல்ல வேண்டுமா. ஒரே கொண்டாட்டமாகத் தான் இருக்கும். நல்லாத் தான் சாப்பிட்டிருக்கிறீங்கள் போல..பகிர்வுக்கு நன்றி தோழா!

டிலான் said...

அது சரி..சுபாங்கன் மற்றும் கூல்போய் அது என்ன பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ் கதை???? உண்மையில் நான் ஒன்றை சொல்லியே ஆகவேண்டும் முக ஸ்துதிக்காக அல்ல. உண்மையில் ஜனா அண்ணா எண்ணங்களிலும் செயலிலும் படு சீரியஸான ஒருவர், கல்வி தரத்தை உயர்த்திக்கொண்டு சென்றாலும் அவரது பணிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். அதேநேரம் நண்பர்களுடன் அவர் எப்போதுமே படு ஜாலியான ரைப். ஒவ்வொரு வசனத்திலும் ஒரு நகைச்சுவை இருக்கும்.
Jana Anna I Realy Miss You

அதிபிரதாபன் said...

நம்ம படம் சூப்பர்

அங்கயும் பல நண்பர்கள் சேந்துட்டாங்க போல இருக்கே

LinkWithin

Related Posts with Thumbnails