Friday, October 8, 2010

உடையுதிர்காலம் -இறுதிப்பாகம்

கூல்போயின் மொபைலில் “விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேண்டி” என்று கலைவாணரின் பாடல் “ஃபக் மியூசிக்காக” ஒலிக்க சுபாங்கன் தனது டைம் மெஷினை மீண்டும் ஒருமுறை சரிபார்த்துக்கொண்டிருந்தான்.
டேய்..கூல்…எவ்ரிதிங் ஓகேடா! இந்த டைம் மிஷினாலை உன் பாஸ் எங்கயோ போகப்போறேன்டா என்றான் சுபாங்கன்.
ஆமா பாஸ்..நீங்க இவ்வளவு கஸ்டப்படுறதை பார்த்தா எவ்ரிதிங் டபிள் ஓகே போலத்தான் தெரியுது.
பட் வன்திங்.. நான் கதைகளாக வாசித்த டைம் மெஷின் பற்றிய கதைகள் எல்லாம் விபரீதத்தில் மாட்டிக்கொள்வதாகவே இருந்ததுதான் உதைக்குது.
போடா…அதெல்லாம் கதைகளில்த்தான். இங்க இந்த சுபாங்கன்ட விஸ்பரூபத்தை நீ இன்னும் கொஞ்சநேரத்தில பார்க்கப்போகின்றாய் என்றான் சுபாங்கன் முகம் முழுவதும் பெருமிதத்துடன்.

டைம் மெஷின் பற்றி உனக்கு தெரிந்தவைகளை சொல்லு கூல். இல்லை வேண்டாம் நீ என்னையே குழப்பி விடுவாய்.
சார்ள்ஸ் டன்னின் “எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” படித்திருக்கின்றாயா? அல்லது அதைப்பற்றி கேள்விப்பட்டிருக்கின்றாயா?
இல்லை பாஸ். ஆனால் நீங்க என்ன பாஸ் திடீர் என்று எக்ஸ்பெரிமண்ட்ஸ் வித் டைம் பற்றி எல்லாம் பேசுறீங்க?
டேய் முதல் நாங்க பார்த்தது ஆமானுச சம்பந்தமான விடயம். சோ..கொஞ்சம் திகில் தேவை இப்ப சயின்ஸ்பிக்ஸன்டா, அதுவும் டைம் மெஷின் பற்றியது ஆகவே இப்படி எல்லாம் பேசவேண்டும். அதுதான்.
ஓகே..பாஸ்..அங்காலை சொல்லி நீங்க கஸ்டப்படவேண்டாம்…
என்னால் இடம், வலம், மேல், கீழ், முன், பின், சகல திசைகளிலும் என்னால் முப்பரிமானத்தை உணரமுடிகின்றது.
எப்படி அது சாத்தியம் என்றால் நான் ஒரு நான்கு பரிமாண ஆசாமி.
நான்காவது பரிமாணம் காலம்… இப்படித்தானே சொல்லப்போறீங்க பாஸ்? என்றான் கூல்போய்.
வர வர, நீ ரொம்ப புத்திசாலித்தனமாக பேசுறாய்டா என்றான் சுபாங்கன்.

சரி ரொம்ப சஸ்பென்ஸ் வைத்துக்கொள்ளக்கூடாது பாஸ். எந்திரன் படத்திலை சுப்பர் ஸ்ரார் எந்திரனை செட்பண்ணும்போதே இன்ருடியூஸ் ஆகிறாப்போல நீங்களும் டைம் மெஷினை செட் பண்ணும்போதே அந்த டைம் மெஷினுக்கு ஒரு இன்ருடியூஸ் கொடுப்போம் என்று விட்டு.
புதிய மனிதா பூமிக்குவா…என்ற பாட்டின் மியூசிக்கை ஒலிக்கவிட்டான் கூல்போய்..
இதோ என் டைம் மெஷின், இதனால் நான் அமரன் என்று பாடிக்கொண்டே டைம்மெஷினை றீசெட் பண்ணுகின்றான் சுபாங்கன்.


சரி பாஸ்..நீங்க இப்போ எந்தக்காலத்திற்கு போகப்போவதாக உத்தேசம்?
போகப்போறேன் அல்ல போகப்போறோம்! நீயின்றி நானா? வாடா சங்கிலியன்ட காலத்திற்கு போய் பார்க்கலாம் நம் இறுதி மன்னன் அல்லவா? சோ வீ காவ் ரு கோ இயர் 1505 என்றான் சுபாங்கன்.
ஓகே பாஸ்..எவ்வளவோ பண்ணிட்டோம். இதை பண்ணமாட்டோமோ என்ன?
என்றாலும் டைம் மெஷின் பற்றி கனக்க தகவல்களை திரட்டி பரிசோதனைகூட செய்திருப்பீங்க.. என்றாலும் இதில் உங்களுக்கு ஏதாவது டவுட் இருக்கா பாஸ்?
ஆமாடா…ஒரே ஒரு டவுட். எனக்கு மரணகாலம் இன்று என்று வைத்துக்கொள் நான் டைம்மெஷினில் பல ஆண்டுகள் முன்னுக்கு சென்றுவிட்டால் என்ன ஆகும்?
தப்பித்து விடுவேனா? அல்லது அங்கேயும் அந்த நேரத்தில் எனக்கு மரணம் சம்பவிக்குமா என்பதுதான்டா அந்த டவுட்!
சபாஷ். பாஸ்! காமடி இல்லாமல் அற்புதமான டவுட் ஒன்று உங்களுக்கு வந்திருக்கு… சரி வாங்க நாம் புறப்படுவோம் 1505ற்கு..
அழுத்துங்கள் டைம்மெஷினில் 1505ஐ, அமத்துங்கள் தன் செயற்பாட்டு பட்டனை.

அந்தநேரம் சுபாங்கனின் மொபைலில் “அவனே என்னை ஆட்டுகின்றான்” என்றுவிட்டு கந்தரனுபூதி பாடியது. யாராடா இது என்று விட்டு எடுத்து ஹலோ என்றான் சுபாங்கன்.
அடியேன் தங்கமுகுந்தன் தொடர்புகொள்ளும் சுவிஸ் நேரம் அதிகாலை 05.55 நிமிடம் என்று பதில் வந்தது.
ஓ…தங்கமுகுந்தன் அண்ணாவா சொல்லுங்கோ என்றான் கூல்போய்!
என்னடாப்பா இரண்டுபேரும் சேர்ந்து கலக்கிறியளாம், ஏதோ ஆவி திரத்தினியளாம், இப்ப டைம் மெஷின்ல போகப்போறியளாம்! என்றார்.
ஓமண்ணா..சரியான நேரத்திற்குத்தான் எடுத்திருக்கிறியள். நாங்க இப்ப 1505 அதாவது சங்கிலியன்ட காலத்திற்கு போகப்போறம். என்றான் சுபாங்கன்.
சரியாப்போச்சு. அப்ப அந்தக்காலத்தில செம்பகப்பாடினியார் என்ற ஒரு கவிஞர் இருந்தாராம் அவர்ட எழுத்துக்கள் ஏதாவது இருந்தால் எடுத்துக்கொண்டு வாருங்கோடா தம்பியவை என்றார் தங்கமுகுந்தன்.
சரி அண்ணை. புறப்படநேரமாச்சு. இது ரகசியமாக இருக்கட்டும். உங்களுக்கு தெரிந்தது போகட்டும் இனி வேறு எவருக்கும் சொல்லாதையுங்கோ என்றுவிட்டு, புறப்பட ஆயத்தனமானார்கள் இருவரும்.


சரி அண்ணை. எப்படி இதை செலுத்துவது? சங்கிலியன் காலத்திற்கு தானே? எதுக்கும் பருத்தித்துறை வீதியாலை போறது சோர்ட் கட் என்றான் கூல்போய்.
1505 ஐ திரையில் அழுத்தி, சிவப்பு பட்டனை அமத்தினர் இருவரும்.
ஒரு நிமிடம் இருக்கும் இருவருக்கும் ஒன்றும் தெரியவில்லை. குளிர், வெப்பம், நனைவு, தட்பவெப்பம் என்பன அந்த ஒரு நிமிடத்திற்குள் மாறி மாறி உணரப்பட்டன. ஏதேதோ சத்தங்கள், யார்யாரோ பேசுவது எல்லாம் கேட்டது.
இறுதியில் தள்ளப்பட்ட உணர்வுடன் ஒரு இடத்தில் நின்றது மெஷின்.

நினைத்ததைவிட யாழ்ப்பாணம் அன்று மிக மிக அழகாகவே காணப்பட்டது. தூரத்தே குதிரைகளில் போர் வீரர்கள் வந்துகொண்டிருந்தமை தெரிந்தது.
மண் பானைகளில் சில பெண்கள் தண்ணீர் முகர்ந்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இரண்டுபேரையும் கண்டவுடன் பானைகளை போட்டு உடைத்துவிட்டு வீரிட்டுக்கொண்டு ஓடினார்கள்.
இந்த அமர்க்களத்தில் குதிரையில் வந்த வீரர்கள், அவசரமாக ஓடி வந்து இவர்களை உற்றுப்பார்த்துவிட்டு, ஏ…காண்மின்..பறங்கிகன் இவ்விடமும் உட்புகல்கொண்டான் என்று ஈட்டியால் இவர்களை குத்தவந்தனர்;.
இல்லை! யாம் பறங்கிகள் அல்லர். உம்மினத்தவரே. ஐந்து நூற்றாண்டுகளின் பின் இருந்து வந்தோம் என்று கத்தினான் கூல்போய்..குத்த வந்தவன் நின்றான்.
யாம். மன்னன் சங்கிலியனை காணவேண்டும் தயவுசெய்து அழைத்து செல்லுங்கள் என்றான் சுபாங்கன்.

அருகில் வந்த அந்த கூட்டத்திற்கு பெரியவன் சுபாங்கனுடன் நீர் செப்பும் தமிழ் சற்று திரிபடைந்ததே என்று ஏதோ பேசினான். அதற்குள் டைம்மெஷினை அருகில் தெரிந்த புதர் ஒன்றினுள் மறைத்துவிட்டு அடையாளம் இட்டுவிட்டு வந்தான் கூல்.
சங்கிலி மன்னனிடம் அழைத்து செல்ல உடன்பட்டுவிட்டார்கள் என்றான் சுபாங்கன் கூல்போயிடம்.
போகும்வழியில் அழகிய பொய்கை ஒன்றை கண்டனர் டேய்..இதுதான்டா யமுனா ஏரி என்று இரகசியமாகச்சொன்னான் சுபாங்கன்.
சற்று தூரத்தில் அழகிய அரன்மனை ஒன்று தெரிந்தது. அங்கே இருவரும் அழைத்து செல்லப்பட்டு இருக்கை ஒன்றில் அமரவைக்கப்பட்டனர். பெண் ஒருத்தி வந்து கை அலம்புக உணவு புக என்றாள். இருவரும் கை கழுவிட்டு வந்திருந்தனர். சுடச்சுடச்சோறும், கத்தரி, பாகல், பயிற்றங்காய் கறிகளுடன் உணவு பரிமாறப்பட்டது. பாஸ்.. நான் ஏதோ கனிகள் பழங்கள் தான் தருவார்கள் என்று நினைத்துவிட்டேன் என்றான். சாப்பிட்டு இருவரும் சுவையான ஒரு பானம் அருந்தினர். இப்போதைய ஒரேஞ் கிரஸ்போலவே இருக்கு என்றான் கூல்போய்.

சங்கிலி மன்னனை சந்திக்க அழைப்பு வந்தது. இருவரும் உள்ளே அழைத்துவரப்பட்டனர். உயர்ந்த இடம் ஒன்றில் பெரிய இராஜ சிம்மாசனத்தில் சங்கிலி மன்னன் உட்கார்ந்திருந்தார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துவிட்டு மீண்டும் சங்கிலியனை உற்றுப்பார்த்தனர்.
பாஸ்..சங்கிலியனைப்பார்த்தால் நம்ம வரோ போலவே இருக்கு என்றான் கூல்போய்.
ஆளை மட்டுமாடா பார்த்தாய் சிம்மாசனத்திற்கு மேலே என்ன எழுதியிருக்கு என்று ஒருமுறை பார் என்றான் சுபாங்கன். ஆம் அங்கே “அகசியம்” என்று எழுதப்பட்டிருந்தது.

டைம் மெஷின் பற்றி, நூற்றாண்டுகள் பற்றி, விஞ்ஞானம் பற்றி, யாழ்ப்பாணம் 1505ற்கு பின் என்று பலவற்றையும் சங்கிலியனுக்கு புரியவைத்தனர் இருவரும்.
ஆ…என் மண், ஐந்து நூற்றர்டின் பின்னும்…என்று அழுதான் சங்கிலியன்.
சற்று தொலைவில் பீரங்கிகள் ஒலி கேட்டது.
நண்பர்களே பறங்கியர் எம் அருகில் வந்துவிட்டனர். எம் வீரர்கள் தம்மிடமுள்ள ஆயுதங்கள் கொண்டு இறுதிவரை போராடுவார்கள். என் மரணம் எனக்கு புரிகின்றது.
அதன் முன்னர் நீங்கள் பத்திரமாக திரும்புங்கள் என்றான் சங்கிலி மன்னன்.
நண்பர்களே எனக்கு இருக்கும் ஒரே ஒரு கவலை. என் சுயசரித்திரத்தை நானே எழுதவேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறாமலே நான் சாகப்போகின்றேன் என்றான்.
கவலைவேண்டாம் மன்னா! உங்கள் இந்த கனவு உங்கள் பல பிறப்புகளின் பின்னர் 2010 காலங்களில் நிறைவேறும் என்று விட்டு இடம் தெரியாமல் சிரித்தான் கூல். சுபாங்கன் முறைத்துப்பார்க்க எங்கேயோ பார்த்து சாமாளித்தான்.

பீரங்கிச்சத்தங்கள் மிக அருகில் கேட்கத்தொடங்கின. நண்பர்களே பறங்கியர்கள் நம்மை அண்மித்தனர் என நினைக்கின்றேன். நீங்கள் பத்திரமாக சென்றுவிடுங்கள் என்று ஆணையிட்டுவிட்டு, ஈட்டியும் கேடையமும் எடுத்து போருக்கு புறப்பட்டான் சங்கிலியன்.
இனிமேலும் இங்கிருந்தால் நிலமை மோசமாகும்டா கெதியா டைம்மெஷின் பக்கம் ஓடுவோம் என்றுவிட்டு, கூல்போயை திரும்பி பார்க்காமல் தலை தெறிக்க ஓடினான் சுபாங்கன். ஓடிவந்து டைம் மெஷின் இருந்த இடத்தை அடைந்து பார்த்தபோது, நாங்கை தொங்கப்போட்டுக்கொண்டு இளைப்பு வாங்க மூச்சிழுத்துக்கொண்டிருந்தான் கூல்போய்.
ரைம் மெஷினை எடுத்து கெதியா திருப்படா என்றான் சுபாங்கன்.
முடியவில்லை…..
பாஸ்…சொதப்பிட்டோமே பாஸ்..என்று தலையிலை கையை வைத்தான் கூல்போய்.
ஏனடா என்றான் சுபாங்கன் பதபதைப்புடன்?
“எக்ஸ்பெரிமன்ஸ் வித் டைம்” பற்றி எல்லாம் கதைத்தீங்க பாஸ்..இந்த கதையின் ஆரம்பத்தை மறந்துவிட்டீங்களே…போச்சு எல்லாம் போச்சு என்றான்…
கொலையுதிர்காலம் 01
சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

ஓகோ…இன்னும் முன்னுக்கு முன்னுக்கே நாம் போக முடியுமே தவிர மீண்டும் திரும்ப முடியாதுடா! சீ..உனக்குகூட இந்த சந்தேகம் வரவில்லையேடா…
எப்படிடா தப்புறது?
நோ சான்ஸ்…பாஸ்! ஒரே ஒரு சான்ஸ் மட்டும்தான் உண்டு. ஜனா அண்ணாவை ஏதாவது செய்யக் சொல்வதே.
“ஏதாவது செய்யுங்கள் அண்ணே பிளீஸ், முதல்ல எங்கள் இரண்டுபேரையும் பழைய இடத்திற்கே கொண்டுவந்து விட்டுடுங்க”
பேரிரைச்சலுடன் ஒரு பெரிய மெஷின் வருகின்றது அதில் ஜனா இருந்து இரண்டுபேரையும் சைகையால் அழைக்கின்றார். இதோ கண்முன்னாலே பறங்கியர் வீரர்களையும் மக்களையும் கொன்று குவிப்பது தெரிகின்றது. இருவரும் குறிகள்வேறு வைக்கப்படுகின்றனர்.
பல வேட்டுக்களுக்கு தப்பித்து அந்த டைம் மெஷினை அடைகின்றார்கள். இதோ அது ஜிவ் என்று கிளம்பகின்றது.

மீண்டும் பழைய இடம், பழைய சூழல். அப்பாடா என இரண்டு பேரும் மூச்சுவாங்குகின்றார்கள். சந்தேகம் தாளாமல் கூல் மேசையில் இருந்த வலம்புரி பேப்பரை எடுத்து பார்க்கின்றான். அதில் தேதி 08.10.2010 என்று இருக்கின்றது.
இப்போதுதான் முழுமையாக அப்பாடா என்றான் சுபாங்கன்.
அப்பாடா பெரிய ஒரு ஆபத்தில் இருந்து காப்பாற்றிவிட்டீங்க ஜனா அண்ணா என்று ஜனாவின் தோழில் தட்டுகின்றான் சுபாங்கன்.
“டொங்” என்று ஒரு சத்தம், ஆம் அது மனித தசை இல்லை.
வடிவாக உற்றுப்பார்த்து ஜனா அண்ணே என்கின்றான் சுபாங்கன்..
ஹலோ வேர்ள்ட்…ஐம் நொட் ஜனா.. ஐம் விலேஜ். ஸ்பீட் ஒன் தெராஹெட்ஸ், மெமறி வன் ஸிட்டா பைட்.

ஆஹா…என்றான் கூல்போய்.. அப்போ ஜனா அண்ணா எங்கே என்கின்றான் சுபாங்கன்?
அங்கே இருக்கும் சுவரில் இருவருக்கும் விஸ்வல் செய்துகாட்டுகின்றான் விலேஜ்.
அதில்…..
ஜெஸ் நான் இதை எழுதிக்கொண்டிருக்கின்றேன்.

முற்றும்.

24 comments:

Kiruthigan said...

//ஆ…என் மண், ஐந்து நூற்றர்டின் பின்னும்…//
தமிழாக்கள் இருக்கினமே எண்டு சந்தோசப்படுறத விட்டுட்டு..

//ஜனாவின் தோழில் தட்டுகின்றான் சுபாங்கன்.
“டொங்” என்று ஒரு சத்தம், //
அது வழமை தானே இதில என்ன புதுமை இருக்கு...


//சங்கிலியனைப்பார்த்தால் நம்ம வரோ போலவே இருக்கு என்றான் கூல்போய் //
அவர குதிரைல இருத்தி சங்கிலியன் சிலைபோல கற்பனை பண்ணிபாக்க நல்லா தானிருக்கு...

//சோ வீ காவ் ரு கோ இயர் 1505 என்றான் சுபாங்கன்//
I can talk English, i can walk English, i can laugh English. Because English is very funny language. Bhairon becomes barren and barren becomes Bhairon because their minds are very narrow.



ஆக அந்த ஆவி ரோபோ தானா..?

Anonymous said...

இன்றைய டாப் பிரபல தமிழ் வலைப்பதிவுகளை WWW.SINHACITY.COM இல் காணுங்கள்

KANA VARO said...

முடியல......

KANA VARO said...

//ஹலோ வேர்ள்ட்…ஐம் நொட் ஜனா.. ஐம் விலேஜ். ஸ்பீட் ஒன் தெராஹெட்ஸ், மெமறி வன் ஸிட்டா பைட்.//

அட்ரா சக்கை...

அண்டைக்கு சந்திப்பில \கதையை ஞாபக படுத்தி பாருங்கோ\ எண்டு நீங்க சொன்ன போது சங்கிலியன் காலம் வரை போகும் எண்டு நினைக்கல.

//கவலைவேண்டாம் மன்னா! உங்கள் இந்த கனவு உங்கள் பல பிறப்புகளின் பின்னர் 2010 காலங்களில் நிறைவேறும்//

பூரணமாக அதை நிறைவேட்ட்ற சங்கிலியன் பற்றி அறிந்தவர்கள் உதவினால் நல்லது

ம.தி.சுதா said...

சூடோ சூடு அப்படி ஒரு சூடு இப்படி ஒர விறுவிறுப்பான அருமையான கதையை நான் எதிர் பார்க்கல...
ஃஃஃஃஃஹலோ வேர்ள்ட்…ஐம் நொட் ஜனா.. ஐம் விலேஜ். ஸ்பீட் ஒன் தெராஹெட்ஸ், மெமறி வன் ஸிட்டா பைட்.ஃஃஃஃ
இதை உங்கட குரலில் யொசித்தப் பார்த்தேன் செமக் காமடி போங்கொ...

anuthinan said...

இறுதி கிளைமாக்ஸ்ஸ் ஜனா அண்ணா சான்ஸ்சே இல்லை!! கதை அருமை!! சலிக்காமல் தனது இருக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்!!

யோ வொய்ஸ் (யோகா) said...

good finish boss :)

டிலான் said...

ஒருமாதிரி கதையினை முடித்துவிட்டீங்க. சுபாங்கனின் டைம் மிசினை பார்த்து புரக்கேறும் மட்டும் சரித்தேன். தங்கமுகுந்தன் அண்ணாவையும் கொண்டுவந்த விதம் சிறப்பு. முடிவு டச்சிங்காக இருக்கு. கே;எஸ்.ரவிக்குமார் பாணியில கடைசியில நீங்களும் நல்லாத்தான்!!
சலிக்காமல் யோசித்து இருக்கின்றீர்கள் இந்த கதையில் வந்த அனைத்து பதிவர்களுக்கும் என் வாழ்த்துக்கள். என்னை விட்டுவிட்டதற்கு செமக்கண்டனங்கள் பாருங்கோ.

Pradeep said...

மொத்த கதைத்தொடரும் பிடித்திருக்கு ஜனா. அலட்டல் இல்லாத நகைச்சுவை, அனைத்து பதிவர்களையும் உள்ளடக்கியவிதம், ஒரு கோர்ப்பு விடுபடாத தன்மை என நகைச்சுவையிலும் கதையோட்டம் நன்று. வாழ்த்துக்கள்.

நிஷா said...

Nice Post Friend. keep it up.

Subankan said...

கலக்கல் :)

முடிவை ரசித்தேன்

வந்தியத்தேவன் said...

கலக்கல் முடிவு எந்திரனையும் இணைத்தது உங்கள் திறமைக்குச் சான்று.

Jana said...

@Cool Boy கிருத்திகன்.
Yes Cool. English not only Commercial Language.

Jana said...

@Anonymous
Thank you For Information sir.

Jana said...

@KANA VARO
ஆமா. வரோ பூரணமாக சங்கிலியன் பற்றி அறிந்து கொள்ள அந்த மெஷின் தேவைப்படுது.

Jana said...

@ம.தி.சுதா
சிங்கத்தின் கர்ஜனை உங்களுக்கு காமடியாகவா கேட்குது???? ஹி..ஹி.ஹி..

Jana said...

@Anuthinan S
நன்றி அனுதினன். இறுதியிலாவது சுஜாதாயிசத்தை காட்டவேண்டாமா என்ன?

Jana said...

@ யோ வொய்ஸ் (யோகா)
Thank you for your Comment Yo!

Jana said...

@டிலான்
நன்றி டிலான். மன்னிக்கவும் தாங்கள் உட்பட நான்கு ஐந்துபேரை விட்டுவிட்டேன். வேண்டும் என்று அல்ல. இன்னும் ஒரு சந்தாப்பம் வராதா என்ன?

Jana said...

@Pradeep

நன்றி அண்ணா

Jana said...

@நிஷா
Thank You Boss.

Jana said...

@Subankan
நன்றி சபாங்ஸ்

Jana said...

வருகைக்கும், கருத்திற்கும் நன்றி வந்தி

cherankrish said...

//மண் பானைகளில் சில பெண்கள் தண்ணீர் முகர்ந்துகொண்டு வந்தார்கள். இவர்கள் இரண்டுபேரையும் கண்டவுடன் பானைகளை போட்டு உடைத்துவிட்டு வீரிட்டுக்கொண்டு ஓடினார்கள்.//

உது ரூமச். அவங்கள் ஸ்மாட்டான பெடியள்.பெரிய வாகனத்தில வந்த ஜனா அண்ணயப்பாத்திட்டுவேணுமெண்டா அதுகள் ஓடியிருக்கலாம்

LinkWithin

Related Posts with Thumbnails