Friday, September 24, 2010

உடையுதிர்காலம் - பாகம் -04


மயங்கிவிழுந்த சுபாங்கனை சிரமப்பட்டு தூக்கிக்கொண்டு சென்று கட்டிலில் படுக்கவைத்தான் கூல்போய். அவரசரமாக பக்கத்தில் இருந்த தேனீர் குடுவையில் இருந்த தண்ணீரை அப்படியே தூக்கி சுபாங்கனின் முகத்தில் ஊற்றினான்.
அடேய்..நாதாரிப்பயலே என்று முகத்தை பொத்திக்கொண்டு குளறினான் சுபாங்கன்.
அப்போதுதான் பார்த்தான் கூல்போய்.. தேனீர்க்குடுவை இவ்வளவு நேரமாக கீற்றரிலேயே இருந்தது தெரிந்தது.

ஐயோ ..ஐயோ என்றுகொண்டே அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான் சுபாங்கன்.
பாஸ்…எதுவும் வேண்டும் என்றே நடப்பதில்லை. உங்களை மயக்கத்தில் இருந்து காப்பாற்றவேண்டும் என்ற துடிப்பில் நான் அது சுடுதண்ணீர் என்பதை கவனிக்கவில்லை பாஸ் என்றான் கூல்போய்.
போடா குரங்கு… உன்னை அப்புறம் வச்சுக்கொள்ளுறன்..!
பாஸ் அப்படி எல்லாம் மனதில் வஞ்சத்தை வளர்ததுக்கொள்ளாதீங்க. அப்புறம் நாம காக்கா நரி கதையில வாற கக்காநரி ஆகிடுவோம் என்றான் கூல்போய்.
அது என்னடா காக்கா நரி கதை!!
இல்லை பாஸ்..காக்கா நரி கதை இல்லை இது கக்காநரிக்கதை,
அனுதின ஆனந்தா சுவாமிகள், அனுதின ஆனந்தசுவாமிகள் என்று ஒரு சுவாமிகள் இப்போ இணையத்தில் நீதிக்கதை எல்லாத்தையும் அனுதினமும் எழுதிவாராரே தெரியாதா பாஸ் உங்களுக்கு? அவர் சொன்ன கதைதான் பாஸ் இது!!

ஆ… அப்படியா…அந்த சுவாமிகள் தன்னை பார்க்க யார் சென்றாலும் சைடாக நின்று கட்டிப்பிடித்து “நண்பேண்டா..நண்பேண்டா” என்று தான் சொல்வாராம்.
சரிடா விடுலே பாவம் பயபுள்ளை தப்பிப்போகட்டும் என்றான் சுபாங்கன்.
நீ இப்ப ரொம்ப வாசிக்கத் தொடங்கிட்டே அதுதான் ஒரு மார்க்கமா இருக்காடா!
ஆமா பாஸ். துக்கம் வந்தா யாழெடுத்து நீ வாசி என்று யாரோ சொன்னாங்க என்று இப்ப துக்கம் வந்தா நான் இணையத்தை வாசிக்க ஆரம்பித்துடுவேன் பாஸ்.
கஸ்டத்தை மறக்க இணையம் வாசிக்கப்போனால் ரமேஸ் என்று ஒரு எழுத்தாளர் படு சோக ஸ்ரேட்டஸ் எல்லாம்போட்டு என்ன அழவே பண்ணிடுறாரு பாஸ்!!
நானும் எவ்வளவு நேரத்துக்குத்தான் அழாதமாதிரி நடிக்கிறது! என்றுவிட்டு ஓ…வென்று அழுதான் கூல்போய்.
உணர்வூட்டமான வாசிப்பில் நம்மள மிஞ்சிட்டான் போல இருக்கே என்று சுபாங்கன் மனதுக்குள் நினைச்சுக்கிட்டான்.

அதை எல்லாம் விடுங்க பாஸ்! இந்த ஆவிபேய் பற்றி நீங்க என்ன முடிவு எடுத்திருக்கிறீங்க?
அதுதான்டா எனக்கும் பெரிய தலைவலியாக இருக்கு! பேசாமா நாம திரும்பிடலாமா? என்ட டைம் மெஸின்வேற பரீட்சித்து பார்க்காமல் இருக்கு.
அதைவிட இதுமுக்கியம் என்று வந்தோம்னா நாங்க எவ்வளவு மடப்பயலுக என்று நினைத்துப்பார்ரா!
ஆமா பாஸ்!! நாம மடப்பயலுகதான். இந்த இடத்தில் உள்ள ஆவிகதை பற்றிய முழு விடயத்தையும் நான் அறிஞ்சாச்சுபாஸ்!
திடுக்கிட்டான் சுபாங்கன்! என்னடா சொல்லுறா!!

ஆமா பாஸ்! நீங்க மயக்கத்தில் அதே இடத்தில் கிடந்தீங்க சரி, மர நிழல்தானே சாவகாசமாக படுத்திருக்கட்டும். நினைவு திரும்பும்போது விழிக்கட்டும் என்று, பக்கத்தில் குண்டுபோளை விளையாடிய பயலுகளுடன் சேர்ந்து நானும் போளை விளையாடப்போட்டன் பாஸ்.
அந்த பயலுக மூலமாகத்தான்; பல விசியங்கள் புரிஞ்சுது. சொப்பன சுந்தரி சொப்பனசுந்தரி என்ற ஒரு பெண். சுஜாதாவின் நாவல்களை வாசித்து அதிலேயே ஊறிப்போய், தன்பெயரை சில்பியா என்று வேறு வைத்துக்கொண்டு முழு சுஜாதாவின் நாவல்கள் கட்டுரைகளை படித்துக்கொண்டே இருப்பாராம்.
இறுதியாக கொலையுதிர்காலம் படிச்சிட்டு இருக்கும்போது சுஜாதாவின் மறைவு அவரை பாதிச்சிடிச்சு, தலைமைச்செயலகத்தில் கொஞ்சம் பிசகு ஏற்பட்டு, கடைசியாக படித்த நாவல்போலவே வாழ ஆரம்பிச்சுட்டாவாம். அதாங்க அந்த ஆலமரத்து ஆவிபோல!
அதைப்பார்த்துதான் இந்த சனங்கள் பயப்பட்டு போட்டுதுகள். இதுக்குள்ள துளசிகாவின் கதைவேறு இடைச்செருக்கலாக இருக்கிறதால சனங்கள் இது துளசிகாவின் ஆவிதான் என்று முடிவு கட்டிட்டுதுக.

ஆனால் சின்னப்பயலுகளுக்கு விசியம் தெரியும். பின்னாலையே போய் சில்பியாவை கவனித்திருக்காங்க. இது பேயில்லை என்றும் தெரிந்துவிட்டது. இதை பெரியவங்க கிட்ட சொன்னபோது, அடேய் அங்காலைப்பக்கமே போகக்கூடாது. இப்படித்தான் அந்த பேய், பல ரூபத்தில வந்து உங்களை அடிச்சுப்போடும் என்று, ஏன்டா போகக்கூடாது என்று சொல்லியும் அங்க போனீங்க என்று அடி வேற போட்டிருக்காங்க.

பாஸ்! அதன் பிறகு, நீங்க விழுந்த இடத்திற்கு வந்தேன் மரத்தில் இருந்து அந்த சில்பியா இறங்கி போவது தெரிந்தது. பின்னாலேயே போனேன். பக்கத்தில் உள்ள ஒரு இடிஞ்ச வீட்டிற்குள் சில்பியா போனாள். போய்ப்பார்த்தேன், அந்த இடம்பூரா ஒரு தொகை சுஜாதாவின் புத்தகங்கள். சில்பியா அங்காலபோக அத்தனையையும் பொறுக்கிக்கொண்டு வருவமோ என்று யோசித்தேன் ஆனால் செய்யவில்லை.
பாவம் ஒரு எழுத்தின் தாக்கம் இப்படியான மனுசியை உருவாக்கிவிட்டது. அதற்கு மருந்தும் அதே புத்தகங்கள்தானே பாஸ்! என்றான் கூல்போய்.

டேய்..நெஞ்சை நக்கிட்டாய்டா… இந்தா பிடி உனக்கு இன்றில் இருந்து 1000 ரூபா அதிக சம்பளம் என்று 1000 ரூபா தாளை நீட்டினான் சுபாங்கன்.
சரிடா..நமக்கு இந்த வேலையினை கொடுத்தவரை கொன்டக் பண்ணி விபரத்தை சொலிடலாம்.
இல்லை பாஸ். ஆளை பிடிக்கமுடியலை. எவ்வளவோ ட்ரை பண்ணினேன்.
இதென்னடா பிரமாதம், மூஞ்சிப்புத்தகத்தை ஆன் பண்ணி தகவல் அனுப்பு ஆள் 24 அவர்ஸ் அதிலதான் நிற்கும்.
எங்கட அடுத்த வேலை அதுதான் பாஸ்! மூஞ்சிப்புத்தகத்தில இப்ப அவர்ட எக்கவுண்டே குளோஸ் ஆகிட்டுது. இந்த சதியின் பின்னால் யார் என்று கண்டுபிடிக்கணும்.

சரிவாடா நாம போகலாம்..என் டைம் மெசினை செக் பண்ணணும்… விஞ்ஞானத்தையே திரும்பி பார்க்க பண்ணணும் என இருவரும் புறப்பட்டார்கள்.

-அடுத்து இறுதிப்பாகம் கல கல..சுபாங்கனின் டைம் மெஸினால் கூல்போய்க்கு வந்த வினை. எதிர்பாருங்கள்.

11 comments:

anuthinan said...

அண்ணே கதை ரொம்பவே கலக்கல்!!

//அனுதின ஆனந்தா சுவாமிகள், அனுதின ஆனந்தசுவாமிகள் என்று ஒரு சுவாமிகள் இப்போ இணையத்தில் நீதிக்கதை எல்லாத்தையும் அனுதினமும் எழுதிவாராரே தெரியாதா பாஸ் உங்களுக்கு? அவர் சொன்ன கதைதான் பாஸ் இது!!//

இதை விட யாருமே டவுசர் கிழிக்க முடியாது அண்ணே!! ஆனாலும் நல்ல சாமியா காட்டின உங்க தங்க மனசு எனக்கு பிடிச்சு இருக்கு!!

//ஆ… அப்படியா…அந்த சுவாமிகள் தன்னை பார்க்க யார் சென்றாலும் சைடாக நின்று கட்டிப்பிடித்து “நண்பேண்டா..நண்பேண்டா” என்று தான் சொல்வாராம்.//

ஆண்களை மட்டும் என்று சொல்லுங்கள் ஜயா!!!

//கஸ்டத்தை மறக்க இணையம் வாசிக்கப்போனால் ரமேஸ் என்று ஒரு எழுத்தாளர் படு சோக ஸ்ரேட்டஸ் எல்லாம்போட்டு என்ன அழவே பண்ணிடுறாரு பாஸ்!!//

உண்மை உண்மை!!!!

//பாவம் ஒரு எழுத்தின் தாக்கம் இப்படியான மனுசியை உருவாக்கிவிட்டது. அதற்கு மருந்தும் அதே புத்தகங்கள்தானே பாஸ்! என்றான் கூல்போய்.
//
சூப்பர்

அண்ணே இறுதி பாகத்துக்கு காத்திருப்பு!! அப்போ வரட்டா!!

நன்பேண்டா!!!

Subankan said...

அருமை :)

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்வ்...
உதவியாளர்கள் எல்லாரும் புத்திசாலிகளாகவே இருக்கிறாங்கள்... ;-)

சுடுதண்ணி ஊற்றிய கதையை மிகவும் இரசித்தேன். :D :D :D

அனுதினன் பற்றி நக்கலும் அருமை... :-)

KANA VARO said...

tamilla udana type panna mudiyala..
comment piraku

Unknown said...

ஹஹா அருமையான கற்பனை..!!
//போடா குரங்கு… உன்னை அப்புறம் வச்சுக்கொள்ளுறன்..!//
அப்பிடி எண்டா???

Bavan said...

ஹாஹாஹா.. ஐயோ சுடுதண்ணியைப் படித்து சிரிக்கத் தொடங்கியவன் இன்னும் சிரித்துக்கொண்டிருக்கிறேன்..ஹாஹா..

இம்முறை அனுதினன், றமேஷ் அண்ணாவின் டவுசர்கள் டர்ர்ர்ர்ர்ர்... #கலக்கல்..:D

//அடுத்து இறுதிப்பாகம் கல கல..சுபாங்கனின் டைம் மெஸினால் கூல்போய்க்கு வந்த வினை. எதிர்பாருங்கள்.//

அதுக்காகத்தான் வெயிட்டிங்..:D

யோ வொய்ஸ் (யோகா) said...

kalakkal boss...

expecting next episode...

Ramesh said...

:)))
தொடருங்கள். காத்திருக்கிறோம். நம்ம ரவுசரும் கி....து. அவ்வ்வ்வ

Kiruthigan said...

சுடுதண்ணி அருமை...
என் டவுசர் தொடர்ர்ர்ர்ந்து கிழிந்து கொண்டே செல்கின்றது...
குத்துங்க எஜமான் குத்துங்க...

Pradeep said...

கதை தொடங்கிய இடத்தில் இருந்து சுபாங்கன் டைம் மெஸின், டைம் மெஸின் என்று கொண்டே இருக்கிறாரே! அந்த டைம் மெஸின் பற்றி படிக்க ஆர்வம் மேலிடுகின்றது.

ம.தி.சுதா said...

அண்ணா தண்ணீர் மட்டுமல்ல கதை கூட ரொம்ப சுடுகிறது... காத்திருக்கிறேன்..

LinkWithin

Related Posts with Thumbnails