2001ஆம் ஆண்டு செப்ரெம்பர் 11 அன்று அதிர்ந்ததைவிட, பெரும் அதிர்வுடன் உள்ளது அமெரிக்க பாதுகாப்பு தளமான பென்டகன்.
அமெரிக்காவின் இராணுவ இகசியங்கள், பல நாட்டு தூதரகங்களிலிருந்தும் அனுப்பப்பட்ட உளவு இரகசியங்களையும் அம்பலப்படுத்தியுள்ளது விக்கிலீக்.
அமெரிக்காவின் தூதரகங்கள் என்ன? அவற்றின் மையங்கள், உதவி அமைப்புக்கள், செய்தி சேகரிப்பாளர்கள் என எங்கும் அமெரிக்க உளவாளிகள் இருப்பார்கள் என்பது அனைத்து நாடுகளிலும் உள்ள அனைவருக்கும் தெரிந்தவிடயமே. இருந்தாலும் அவை நிரூபிக்கப்படாத யூகங்களாகவே இருந்து வந்தன. எனினும் தற்போது அந்த யூகங்களை மெய்யாக்கி உள்ளது விக்கிலீக்.
சி.ஐ.ஏ என்பது எவ்வளவு பெரிய வலையமைப்பை தன்னகத்தே கொண்ட ஒரு பெரிய உளவு அமைப்பு என்பது தெரியும். அது அமெரிக்க இரகசியங்களை பாதுகாப்பதற்காக எந்த அளவுக்கும் செல்லும் என்பதும் யாவரும் அறிந்ததே. இருந்தபோதிலும் அவை அனைத்தையும் தாண்டி சி.ஐ.ஏயின் கழுகுக்கண்களில் மண்ணைத்தூவி, அவர்களின் சதிவலைகள் அத்தனையையும் உடைத்து உண்மைகளை கசியவிட்டுள்ளது விக்கிலீக்!
இங்கிலாந்து அரச குடும்பத்தின் நடத்தைகள், ரஷ்யத்தலைவர் புட்டீனுக்கு உள்ள பட்டப்பெயர், புட்டினுக்கும், இத்தாலிய பிரதமர் சில்வினுக்கும் என்ன உறவு என்று நுணுக்கமாக உளவு பார்த்து அனுப்பிய தூதரகங்களுக்கு, இவை கசியாமல் கட்சிதமாக வேலைபார்க்க தெரியவில்லை என்பதே நகைப்பு!
மேலும் திடுக்கிடும் பல நாட்டு உறவுகளின் மூலம் உளவுகளை வளர்க்க எத்தனித்த அமெரிக்கா பற்றி கசியவிட்டுள்ள விக்கிலீக். இப்போ பயமுறுத்தியுள்ளதோ வடகொரியாவை.
அதையும் பார்ப்போம், ஒரு சுவையான காலிவூட் படம் பார்ப்பதுபோலத்தான் இந்த அறிக்கைகளும் உள்ளன.
யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பில் ஐரோப்பிய திரைப்பட விழா.
எதிர்வரும் டிசெம்பர்மாதம் 01 முதல் 05ஆம் நாள் வரை யாழ்ப்பாணத்திலும், அதேவேளை டிசெம்பர் 05 முதல் 14 வரை கொழும்பிலும் ஐரோப்பிய திரைப்பட விழா இடம்பெறவுள்ளது.
ஏற்கனவே கண்டி மற்றும் காலி மாவட்டங்களில் இந்த திரைப்பட விழா இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதே.
ஐரோப்பிய மொழிகளில் சில சிறந்த படங்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
யாழ்ப்பாணத்தில் பிரதான வீதியில் உள்ள “கலாதூது” திரையிடல் அரங்கில் மேற்படி ஐந்து நாட்களும், பிற்பகல் 01 மணிக்கும், 03 மணிக்கும் காட்சிகள் இடம்பெறவுள்ளன.
திரைப்படப்பட்டியலைப்பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.
அதேவேளை டிசெம்பர்மாதம் 05 முதல் 14 வரை உள்ள நாட்களில் கொழும்பில் மூன்று இடங்களில் திரையிடல் இடம்பெறவுள்ளது.
பொரளை கொட்டா வீதியில் அமைந்துள்ள நாமல்மாலினி திரையரங்கிலும், கொள்ளுப்பிட்டியில் அல்பேர்ட் கவுஸ் காடனில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கவுன்ஸில் மையத்திலும், கருவாத்தோட்டம் கிரேகிரிஸ் வீதியில் அமைந்துள்ள கோத்தி இன்ஸிருட்டிலும் காட்சிகள் இடம்பெறவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
>திரைப்படப்பட்டியலைப்பார்க்க இங்கே கிளிக் பண்ணவும்.
அனுமதி முற்றிலும் இலவசம். நேரம் உள்ளவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளுங்களேன்.
ஓ..இது தான் ஜப்பானிய நந்தலாலாவோ?
ஜே.கே
அண்மையில் சுஜாதாவின் கே.ஜே. படித்துமுடித்தேன். ஒரு வித்தியாசமான பைலட்டின் கதை என்பதாலோ என்னமோ, கதை விமானம் டேக்ஓவ் ஆகி, உயர உயர பறந்து, சாதுரியமாக லான்ட் பண்ணுவதுபோல படித்து முடிக்கையில் இருந்தது. கணேஸ் இந்தக்கதையிலும் வரத்தான் போகின்றாரோ என்று எண்ணுகையில் ஒரு போன்கோலை கணேஸ் அட்டன்ட் பண்ணாததில் இருந்து இந்தக்கதைக்குள் வராதுபோனமை சிறப்பு. கதையின் கடைசி வரியில்த்தான் ஜே.கே என்பதில் அர்த்தம் புரிவது சுஜாதாவின் முத்திரை.
இலங்கைப்பதிவர் சந்திப்பு
புதிவர்கள் என்போர் இன்று சமுதாயத்தால் கவனிக்கப்படத்தொடங்கியுள்ள இந்த நேரத்தில் பதிவர்களிடையே ஆக்கபூர்வமான சந்திப்புக்கள் கண்டிப்பாக தேவைப்படும் ஒன்றாகவே உள்ளது. எழுத்துக்களால் சந்தித்துக்கொண்ட நபர்கள், நேரே சந்தித்து நல்ல நண்பர்கள் ஆகிக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை இவ்வாறான சந்திப்புகள் ஏற்படுத்திக்கொடுக்கின்றன என்றால் மிகையாகாது.
அந்த வகையில் இலங்கைப்பதிவர்களின் இரு சந்திப்புக்கள் இடம்பெறும்போது நான் நாட்டில் இல்லாத காரணத்தால் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது. இருந்தபோதிலும் புத்திசாலித்தனமாக அவர்கள் ஒளிபரப்பிய நேரடி ஒளிபரப்பை இணையமூடாக கண்டுகொண்டேன்.
சென்னையில் நான் இருந்தபோது நடைபெற்ற சந்திப்புக்களால் எனக்கு நிறைய இனிய நண்பர்கள் கிடைத்தார்கள். அதேபோல இலங்கை வந்தவுடன் பதிவர் சந்திப்பு இல்லாதுவிடினும் தனிப்பட்ட முறையில் சில பதிவர்களை சந்தித்து நண்பர்களாகிக்கொண்டோம். இதோ இப்போது மூன்றாவது சந்திப்பு பலரை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்துள்து சந்தோசம்.
மலைத்து நின்ற பாடல்
கமல்ஹாசன் என்ற சரித்திர நாயகனை நான் பிறந்த நாள்முதல் கண்டுவந்தாலும் பல மலைப்புக்களின் பின்னர், மூர்ச்சையாகி நின்ற படம் ஹேராம்.
அந்த திரைப்படத்தின் இசையமைப்பு என்னை அடித்துப்போட்டது அப்போதைய உண்மை. அந்த திரைப்படத்தில் வரும் இந்தப்பாடல்.. எப்போதும்…எப்போதும்..
விரக நாடகம்தான்.
சர்தார்ஜி ஜோக்
ஒரு சர்தார்ஜி ரோட்டடுல நடந்து போய்க்குனு இருக்கறப்ப ஒரு காக்கா அவர்
தலையில கக்கா போயிடுச்சி சார்தார்ஜி அந்த காக்காகிட்ட ஏன் சனியன்களா
நீங்க எல்லாம் ஜட்டி போடவே மாட்டிங்களான்னு கேட்டார்.
அதுக்கு அந்த காக்கா சொல்லிச்சு என்டா கொய்யால .....
நீங்க எல்லாம் ஜட்டியில்தான் ஆய் போவிங்களாடா?ன்னு கேட்டுச்சு...
12 comments:
சுதாக்கு என்னாச்சு?
புத்திசாலித்தனமாக அவர்கள் ஒளிபரப்பிய நேரடி ஒளிபரப்பை இணையமூடாக கண்டுகொண்டேன்.//
நீங்க ஒரு villege விஞ்ஞானி பாஸ்!
கொக்ரெயில் அருமை பாஸ்!
பதிவர் சந்திப்பு சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.. அங்கும் கொக்ரெயில் உண்டா தலைவரே!!! ( ச்சும்மா ச்சும்மா... லுலாயிக்கு....)
Nice! :-)
Today's Cocktail Very Useful my dear.
வழக்கம் போல அருமை...
வழமை போல அருமை அன்ன உங்கள் கொக்ரெயில்
//அதையும் பார்ப்போம், ஒரு சுவையான காலிவூட் படம் பார்ப்பதுபோலத்தான் இந்த அறிக்கைகளும் உள்ளன.//
ஹாஹா..:)
பெயரிலேயே லீக் இருப்பதால் லீக் பண்ணிட்டுது போல..:P
//ஜே.கே//
படிக்கவேண்டும், கணேஷ் இல்லையா?..:-o
//இலங்கைப்பதிவர் சந்திப்பு//
சந்திப்போம்..:D
//மலைத்து நின்ற பாடல்//
வாவ்.. அருமையான பாடல் கேட்டிருக்கிறேன்..:)
//சர்தார்ஜி ஜோக்//
ROFL..:D
காக்கா rocks..;)
KANA VARO said...
////சுதாக்கு என்னாச்சு?////
வந்திட்டோமுல்ல...
அண்ணா இம்முறையும் நல்ல தகவல்கள், நகைச்சவையடன் கலக்கிப் போகிறிர்கள்....
அதிலும்.. திரைப்படப்பட்டியல் பிரயோசனமாயிருந்தது...
கலக்கல் பதிவு,
அண்ணர் விக்கி கசிவு, இலங்கை தூதரகத்தில் இருந்து அனுப்பட்ட கோப்புக்களையும், சேகரித்துள்ளதாம். எப்போ வெளிவரும் என்று ஆர்வமாக உள்ளது.
Post a Comment