Friday, November 19, 2010

யாழ்ப்பாணத்தில் இரவு வேளையில் கிழக்குவானில்த்தோன்றும் ஒரு அதிசயம்!


பொதுவாகவே எமக்கு மேல் தெரியும் வான் வெளியில் ஏதாவது தற்செயல் நிகழ்வு என்றால் எமது கண் அந்த அசாதாரண தோற்றத்தில் நிலைத்துவிடுவது இயல்பானதே. அதனாலேயே வானில் நகர்ந்து செல்லும் நட்சத்திரமாக தோற்றமளிக்கும் சற்றர்லைட்கள் (Satellite ), வால்வெள்ளிகள், விண் எரிகற்கள், என்பவற்றை நாம் ஆர்வத்துடன் கவனித்துவருகின்றோம். எமது வான் பரப்புக்கு மேலே ஏதாவது அதிசயம் என்றால் நாம் அதீத அக்கறை எடுத்துக்கொள்கின்றோம்.

இந்த வகையிலேயே யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாளாக இதை எழுதும் நான் உட்பட இரண்டு பதிவுலக நண்பர்கள், மற்றும் பல நண்பர்கள் ஒரு அதிசயத்தை எங்கள் கண்களினால் கண்டு இருக்கின்றோம்.
பொதுவாகவே வானில் ஏதாவது அசாதாரண பொருள் பிரகாசமாக அசைவுகளுடன் தெரிந்தால் யூ.எவ்.ஓ (UFO ) என்ற எண்ணம் எங்கள் மனத்தில் எம்மை அறியாமலே குடிகொண்டுவிடுகின்றது. இதில் ஏராளமான பறக்கும் தட்டுக்கள் சம்பந்தமான விஞ்ஞான புனைகதைகளைவேறு தேடித்தேடி படித்திருகிக்கிறோம் அல்லவா?

சரி விடையத்திற்கு வருவோம் இது விஞ்ஞானப்புனைகதை அல்ல உண்மையான விடயம் என்பதை உறுதியாகச்சொல்லிக்கொள்கின்றேன்.
கடந்த புதன்கிழமை இரவு சுமார் 10.15 மணியளவில் எதேட்சையாக கிழக்கு வானில் சுமார் 35 டிகிரி கோணத்தில், ஏதோ பிரகாசமாக வழமைக்கு மாறாக ஒரு ஒளியை கண்டேன். நட்சத்திரக்கூட்டங்களைவிட அளவில் பெரியதாகவும், பச்சை நிறமும், சிவப்பு நிறமும் மாறி மாறி பிரகாசமானதாக தெரிந்த வண்ணம் இருந்தன. சற்று நேரம் அதை கவனித்துக்கொண்டிருந்தேன். முதலில் அது வானில் செல்லும் ஜெட் ஆக இருக்கலாம் என நினைத்தேன் ஆனால் அது அiசாயமல் ஒரு இடத்திலேயே பல நிமிடங்கள் நின்றபோதே எனக்கு ஆர்வம் மேலோங்கியது.
அது ஜெட் இல்லை என்பது நிரூபணம் ஆனது. நட்சத்திரமாக இருக்குமோ என்றுகூட எண்ணத்தோன்றியது. ஆனால் அதையும் முறியடிக்கும் வகையில் அது சிறிது சிறிதாக சின்னனாக ஒரு புள்ளியாக தோன்றி விட்டு, மீண்டும் மெல்ல மெல்ல பிரகாசமாகி வந்துகொண்டிருந்தது. அது மட்டும் அன்றி இரண்டு நிறங்கள் மாறி மாறி வந்தமையே பெரும் ஆச்சரியமாக இருந்தது.

அத்துடன் ஒரே இடத்தில் தானே நிற்கின்றது என்ற எண்ணத்தையும் சற்று நேரத்தில் அது தவிடுபொடியாக்கியது. ஆம், மெல்ல மெல்ல அசைந்து மேல்நோக்கி வந்தது. பின்னர் நல்ல பிரகாசமாக இரண்டு ஒளிகளையும் கொண்டு சுமார் 20 நிமிடங்களின் பின்னர் ஒரு புள்ளியாகி மறைந்து சென்றது.
உடனயடியாகவே முகநூலில் (Facebook) இந்த செய்தியை ஏற்றி கருத்து கேட்டேன்.
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து தங்கியுள்ள நணபர் ஒருவர் எனக்கு அழைப்பு எடுத்து தானும் இதைக்கண்டு அதிசயித்ததாக சொன்னார்.
முகநூல் பதிவுக்கு பல பின்னூட்டங்கள் வந்துகொண்டிருந்தன. பதிவுலக நண்பர் மருத்துவர் பாலவாசகன்கூட “அண்ணா கனவு ஏதாவதா? என்று கேட்டிருந்தார்.
மீண்டும் தென்பட்டால் அழைப்பு எடுத்து கூறுவதாக சொன்னேன் அவருக்கும்.

ஆனால் மறுநாள் வியாழக்கிழமை மீண்டும் அதே இடத்தில் அதே நேரத்தில் அந்த அதிசயம் திடுக்கிடவைத்தது. இம்முறை என்னை மறை கழன்றது என்பார்கள் என்று எண்ணி, பல அயலவர்களையும் அழைத்து அதை காண்பித்தேன். பலர் மூக்கில் விரலை வைத்திருந்தார்கள். நண்பர் பாலவாசகனிடமும் தொடர்பு கொண்டு இருவரும் அதை கவனித்தவண்ணமே பேசிக்கொண்டிருந்தோம். பாலவாசகன் பிரமித்துப்போய் உள்ளதை அவரது குரலில் காட்டிக்கொண்டிருந்தார். நேற்று முதன்நாளை விட இன்னும் பிரகாசமாக அது தென்பட்டது.
நேற்று சுமார் 50 நிமிடங்கள் அது வானத்தில் சஞ்சரித்துக்கொண்டிருந்தது.
எங்களிடமிருக்கும் கமராக்களினால் அவ்வளவு தெளிவாக அதை படம் எடுக்கமுடியவில்லை.
இன்று வெள்ளிக்கிழமையும் வந்தால் அதை பிடிப்பதற்கு இரண்டு நண்பர்கள் அதி தொழிநுட்ப கமராக்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

நேற்று பல நண்பர்கள் உட்பட பல கண்கள் அதை கண்டுள்ளன. அந்த இனந்தெரியாத வான் பொருள் என்னவாக இருக்கும் என்பதுதான் எமது தற்போதைய ஏக்கம்! ஒரு சில சற்றர்லைட்கள் (செயற்கைக்கோள்கள்) ஒரு இடத்தில் குறிப்பிட்ட நேரம் சஞ்சரிக்கும் என்று கூட சொன்னார்கள், ஆனால் செயற்கைக்கோள் மாறி மாறி ஒளி மாற்றுவதற்கும், குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் தோன்றி மறைவதும் சாத்தியம் இல்லை என ஒரு விரிவுரையாளர் கூறினார்.
என் நித்திரை உட்பட பல நண்பர்களின் நித்திரையினை குளப்பியுள்ள இந்த இனந்தெரியாத வான் பொருளின் இன்றைய வருகைக்காக இன்னும் பலர் காத்திருக்கின்றனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ளவர்கள் இதை பார்ப்பதற்கு (இன்றும் வந்தால்) ஒரு சின்ன டிப்ஸ்..
கிழக்கு வானின் ஒரியன் உடுத்தொகுதி தெரியும் (மூன்று நட்சத்திரங்கள் ஒன்றாக இருக்கும்) அதற்கு இடது புறமாக கீழே சுமார் 35 பாகை ஏற்றக்கோணத்தில் கடந்த இரண்டு நாளாக இது தோன்றியது. அதன் பிரகாசமே அதை காட்டிக்கொடுத்துவிடும் கண்டுபிடிப்பது மிக இலகு.

தெரிவிப்பது நான்! தீர்மானிப்பது நீங்கள்!! (அட இந்த வசனம் இதற்குத்தான் நன்றாக பொருந்தியுள்ளது பாருங்கள்)

Note.-மேலே தரப்பட்ட புகைப்படம் சித்தரிப்புக்காகவே
தென்பட்ட வான்பொருள் அதுவல்ல

21 comments:

KANA VARO said...

பிள்ளையார் பால்குடிச்ச சேதி தெரியும் தானே! எல்லாம் அவன் செயல்.

Balavasakan said...

ஜனா அண்ணா நீங்க முலில் சொல்லும் பொழுது நான் நம்பவிலை ஆனால் நேற்று நேரில் பார்த்த பிறகு நிஜமாகவே அச்சரியமாக உள்ளது மின்னோ மின்னுகிறது சம்திங் றோங்..!

மகாதேவன்-V.K said...

தகவலுக்கு நன்றிகள்

Balavasakan said...

நானும் எனது நண்பர்களுக்கு தொல்லை பேசியில் ஆழைத்து பார்க்க சொன்னேன் எல்லோரும் பா,ஃத்துவிட்டு மச்சான் வித்தியாசமாத்தான் இருக்குடா என்னான்னு தெரியல ன்னு சொல்லுறாங்கள் ஆனா வெளிய சொல்ல வெக்கபடுறாங்கள் சேம் புரப்ளம்!!

//மறை கழன்றது என்பார்கள்/ என்றுதான்

Sivakaran said...

aahaa...Very Interesting..

ம.தி.சுதா said...

அண்ணா இது நிச்சயம் ஒரு கவனிக்க வேண்டிய விசயம் தான் நாளை நேரில் சந்திக்கிறேன்... நான் நிற்கும் ஊரில் தெரிகிறதா என்று பார்க்கிறேன்....

vanjimagal said...

Leonids night of November 17 Sets around 4 a.m.

This is meteor shower happening this time of the year.

Bavan said...

முதலில் புதன், அடுத்தது வியாழன் அப்ப இண்டைக்கு கட்டாயம் வரும் மறக்காம போட்டோ எடுங்கண்ணே..:)
காத்திருக்கிறோம்..:))

Subankan said...

அண்ணே பாத்து, தூக்கிட்டுப் போயிடப்போவுது.

SERAN said...

சில செயற்கைக்கோள்களை அசையாமல் குறித்த ஒரு இடத்தில் நிறுத்தி வைக்க முடியும்தான். சில வளர்ச்சியடைந்த நாடுகள் தங்களின் இராணுவ தேவைகளுக்கு பயன்படும் செயற்கைகக்கோள்களை தம் தேவைக்கேற்ப கோளப்பாதைகளை மாற்றி அமைத்தும் ஒரே இடத்தில் தரிக்க வைத்தும் இராணுவ தேவைகளை நிறைவேற்றி கொள்கின்றன. மற்றும் ஒலி, ஒளி தகவல் என்பனவற்றை பரிமாறும் செ.கோள்களும் ஒரே இடத்தில்நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனதான் எனினும் அவை குறிப்பிட்ட ஒரு நேரத்தில் ஒரு இடத்தில் சிறிதளவு நேரம் மட்டும் நிறுத்தி வைக்கப்படுவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவானதே. அது மட்டுமில்லாமல் இங்கே காணப்பட்ட அடையாளம் தெரியாத வான்பொருளில் மிகச்சிறிய அசைவுகள் அவதானிக்கப்பட்டும் உள்ளது அதுவே UFO பற்றிய சந்தேகத்தை வலுவாக்கினாலும் இரண்டு நாட்களாக ஒரு அடையாளம் தெரியாத வான்பொருளின் நடமாட்டம் இலங்கையின் வானிலை ஆராய்ச்சி மையத்தினதோ, வான் பாதுகாப்பு தரப்பினதோ அல்லது பக்கத்து வீட்டு ஜாம்பவானின் கண்களிலோ தட்டுபட வில்லையா?

Jana said...

@KANA VARO
அதுசரி..ரைட்டு வரோ..

Jana said...

@Balavasakan
அதுதானே பாலவாசகன் அறிவாளிகள் சொல்வதை இந்த உலகம் உடனடியாக ஏற்றுக்கொண்டதாக சரித்திரமே இல்லையே! ஆங்..

Jana said...

@மகாதேவன்-V.K
நன்றி அண்ணே..தகவல் மட்டும் அல்ல உண்மை ரிப்போட் அண்ணே இது

Jana said...

@ Balavasakan
உண்மைதான் நானும் ஒன்றுக்கு 10 தடவை யோசித்து பார்த்துவிட்டுத்தான் இந்த பதிவையே போட்டேன்.

Jana said...

@Sivakaran
Yes this is Very Interesting..Siva

Jana said...

@ம.தி.சுதா
தெரிந்தது தானே?

Jana said...

@vanjimagal
4 a.m? This is New Information.
Thanks for your information Vanji.

Jana said...

@Bavan
வந்தது. போட்டோக்களும் பிடித்தார்கள் பவன். விரைவில் நேரில் கண்ட அடுத்த பதிவர் ஆதாரங்களுடன் இது பற்றி பதிவிடுவார்.

Jana said...

@Subankan
அப்படி என்றாவது தூக்கிட்டு போகாதா என்ன?

Jana said...

@SERAN
அப்படியே ஆமோதிக்கின்றேன் சேரன்.

ம.தி.சுதா said...

அண்ணா இப்ப தெரிந்த விட்டது ஒரு புதுவிடயத்துடன் நாளை பதிவிடுகிறேன்...

LinkWithin

Related Posts with Thumbnails