ரஜினியின் ராணா எப்படியான படம்?
எந்திரனின் இயந்திரத்தனமான ஆர்பரிப்பை தொடர்ந்து கே.எஸ்.ஆரின் இயக்கத்தில் ரஜினிகாந்த் அடுத்து நடிக்கவுள்ளதாக எல்லோருக்கும் தெரிந்த செய்தி சொல்கின்றது அல்லவா. அந்த திரைப்படத்தின் பெயர் ராணா என்றும், இதில் ரஜினிகாந்த் மூன்று வேடங்கள் ஏற்று நடிப்பதாகவும், தமிழ், ஹிந்தி, தெலுங்கு, ஆகிய மொழிகளில் நேரடியாகவே இந்த திரைப்படம் தயாரிக்கப்படவுள்ளதாகவும் பல செய்திகள் அடிபட்டன.
அசின், திரிஷா, என்று பலபெயர்கள் இந்த திரைப்படத்தின் நாயகிகள் என்று சொல்லப்பட்டு, இப்போது தீப்பிகா படுகோன், சோனு ஷ_ட் ஆகியோர் நடிக்கவுள்ளதாகவும், அதேவேளை வயதான ரஜினியின் ஜோடியாக ஹிந்தி நடிகை ரேக்கா நடிக்கவுள்ளதாகவும் உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
சௌந்தர்யா ரஜினி தயாரித்த சுல்த்தான் திவாரி என்ற அனிமேஷன் படத்தின் தொடர்ச்சி இது என்றும், பின்னர் இல்லை, இது ஒரு வித்தியாசமான கதை அதற்கும் இதற்கும் தொடர்பில்லை என்றும் ரஜினி ரசிகர்களுக்கு குழப்பமான தகவல்களே இதுவரை கிடைத்துக்கொண்டிருக்கின்றன.
எது எப்படியோ சித்திரை மாதம் இடம்பெறும் புத்தாண்டு தினத்திற்கு பின்னர் படப்பிடிப்புக்கள் ஆரம்பித்துவிடும் என்று இப்போது உறுதியான செய்திகள் தெரிவிக்கின்றன.
பொதுவாகவே ரஜினி நடிக்கும் படங்கள் பற்றிய அறிவிப்பு வந்தவுடன், ஊடகங்கள், ஆளாளுக்கு தங்களுக்கு தோன்றும் பில்டப்புக்களை அவிட்டு விட்டு வருவது இயல்பான விடயம்தான். எனவே கொஞ்ச காலம் பொறுத்திருந்து பார்த்தாலத்;தான் புரியும், இது அனிமேஷனின் தொடர்ச்சியா, அல்லது புதிய கதையா? என்பதெல்லாம்.
ப்பிளக் ஸ்வான்…
யார் இந்த கறுப்பு அன்னம்! என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். நேற்று ஆஸ்கார் விருது பெற்று கௌரவம் பெற்றுக்கொண்ட ஒரு நடிகைதான் இந்த நட்ராலி போர்ட்மன் என்ற இந்தப்பெண்.
பிளக் ஸ்வான் திரைப்படத்தில் சிறப்பான ஆற்றுகைக்காக இவருக்கு இந்த விருது கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடிப்படையில் ஒரு யூதவழிவந்த பெண் இவர். 1981ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 09ஆம் நாள் பிறந்த இவர், புகழ்பெற்ற ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலிய, அமெரிக்க திரைப்படங்களில் நடித்து தனது பக்கம் இரசிகர்களை பெருமளவில் திரும்ப வைத்துக்கொண்ட இவர், 1994ஆம் ஆண்டளவில் நடிப்பு துறைக்கு வந்தார். பிரஞ்சு திரைப்படமான லியோனே இவரது அரங்கேற்றம் என்று கூறிக்கொள்ளலாம்.
இதேபோல இன்று வரை தன் நடிப்பாற்றலால் பல விருதுகளை பெற்று வந்துள்ள இவர், சொந்த வாழ்க்கையிலும் பல சர்ச்சைகளுக்கு உள்ளாகியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இவர் ஒரு லெஸ்பியன் என்ற குற்றச்சாட்டு இருந்து வந்தது. இப்போது அந்த குற்றச்சாட்டு தவிடுபொடியாக்கப்பட்டுள்ளது. காரணம் கடந்த வருடம் நடன இயக்குனராக இருக்கும் பென்ஷமின் மில்லிபேட்டை காதலித்துவரும் இவர், தற்போது ஒரு கற்பவதியாக இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது :)
இந்தவாரக் குறும்படம்
நம்ம நாட்டில் இன்று வானத்தில ஒரு அக்ஸிடன்ட்
ஸ்ரீ லங்கா வான் படை ஆரம்பிக்கப்பட்டு வைரவிழாக்கொண்டாட்டங்கள் இடம்பெறவுள்ளதால் அந்த நிகழ்வில் விமான சாகசம் புரிவதற்கான ஒத்திகையில் இன்று ஈடுபட்டிருந்த இரண்டு கஃபிர் விமானங்கள் (நம்மட ஆக்கள் இதை கிபிர் எண்டும் சொல்லுவினம்) ஒன்றுடன் ஒன்று மோதலுக்குள்ளாகி நொருங்கி விழுந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இது பலருக்கு சோகமான செய்தியாகவும், மேலும் பலருக்கு மகிழ்வான செய்தியாகவும் இருக்கலாம்.
ஆனால் நான் சொல்ல வந்த விடயம் அதுவல்ல! அதாவது விமான சாகச ஒத்திகைகளின்போது ஆபத்துக்கள், விமானத்தைவிட வேகமாக வரும் என்பது இயல்பான ஒன்றே. இதுபோலவே ரஷ்யாவில் இடம்பெற்ற சாகச நிகழ்வொன்றில் சில விமானங்கள் ஒரேயடியாக விழுந்த சம்பவங்கள் நினைவுக்கு வரலாம்.
ஆனால் ஒத்திகைகள், பெரும்பாலும், வெளியான பிரதேசங்கள், அல்லது கடல் பிரதேசங்களிலேயே நடத்தப்படவேண்டும் என்பது அறிவார்ந்த நாடுகளில் கடைப்பிடிக்கபடும் ஒரு நடைமுறை.
இன்று இடம்பெற்ற இந்த அனர்த்தம், குடிமனைகள் உள்ள இடத்திலேயே இடம்பெற்றுள்ளது. பாரிய சேதங்கள் பொதுமக்களுக்கு இல்லை என்றபோதிலும், இது பாரதூரமான ஒரு விடயமே என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலியைவிட வேகமாக இவை பயணிப்பதால், இவற்றை மிகைஒலிகாரி வானூர்த்திகள் என்று தமிழ்படுத்தியுள்ளனர்.
இந்த விமானங்கள், கடந்த யுத்த காலத்தில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டவை என்பதும், ம்ம்ம்…ம்ம்ம்…எல்லாத்திலும் இந்த விமானத்தின் பங்கு உள்ளது என்பதும் அனைவரும் அறிந்தவிடயம்தான் என்பதால், அதை எல்லாம் பின்னூட்டம்போட்டு நம்மளை சங்கடப்படுத்தப்படாது ஆமா!
இந்த வாரவாசிப்பு
என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்.
இம்முறை சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றிருந்த நண்பர்களிடம் நான் சொல்லிவிட்டிருந்த பல புத்தகங்கள் இப்போதுதான் தொகையாக வந்து சேர்ந்திருக்கின்றன. பெரும்பாலானவை, நான் வாங்கவேண்டும் என்ற ஏக்கத்துடன் பல காலங்களாக தவித்த புத்தகங்கள். குறிப்பாக வொல்காவில் இருந்து கங்கைவரை, செந்நிலம், மஞ்சள் வெயில், தாய், போன்ற பெரிய புத்தகங்கள் வந்து சேர்ந்துள்ளன.
அதோடு இன்னும் சில புத்தகங்கள் வந்தன. அவற்றில் முதலாவதாக நான் எடுத்து படித்து முடித்துள்ள கவிதைப்புத்தகம் மனுஷபுத்திரனின் “என் படுக்கை அறையில் யாரோ ஒளிந்திருக்கின்றார்கள்”.
கால்களின் ஆல்பங்கள் என்ற கவிதையை முதல்முதல் படித்து நெஞ்சம் பொருமி, கண்ணீர் கரைகட்டியபோதே மனுஷபுத்திரன்மேல் அப்படியொரு பிரியம் என் நெஞ்சில் சேர்ந்துகொண்டது. 2009ஆம் ஆண்டு புத்தக கண்காட்சியில் அவரை நேரில் சந்தித்து பேசியபோது, அந்த அன்பான பேச்சுக்கள், அக்கறையான விசாரிப்புக்கள், குழந்தைபோன்ற பார்வைகள் இப்போதும் நினைவில் பத்திரமாக உள்ளன.
அலட்டல்கள் இல்லாமல், இதயத்தின் அருகில் வந்து மெதுவாக, கௌரவமாகப்பேசும், அந்த ஒவ்வொரு கவிதையும் நயமாகவே உள்ளன.
மென்மையாக மேன்மையாக கவிதை எழுத நினைப்பவர்கள் ஒருமுறை கண்டிப்பாக படித்துப்பாருங்கள்.
வடக்கு கிழக்கில் மெல்ல மெல்ல பெருகும் சிறுவர் தொழிலாளிகள்.
யுத்தம் அது நடக்கும் காலத்தில்த்தான் கொடுமைகளை நிகழ்த்தும், ஓய்ந்தபின் கொஞ்சம் நின்மதி கிடைக்கும் என்பது அவ்வளவு உண்மையாக இருக்காது.
அந்த யுத்தத்தின் பின்னரான தாக்கங்கள், தூரல்கள் அதன் பின்னதான காலத்தில்த்தான் இன்னும் விஸ்வரூபம் எடுக்க ஆரம்பிக்கும்.
இன்று இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில், யுத்தத்தின் பின்னதான தாக்கங்களை உன்னிப்பாக கவனிக்க கூடியதாக இருக்கின்றது. பிறரிடம் உதவிக்காக ஏங்கும் மனோநிலை, பிச்சை எடுக்கும் மனோநிலை, அவற்றையும் தாண்டி ஏமாற்றுவது, திருடுவதற்கான மனோநிலைகளையும், அந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதே யுத்தம் இன்றும் மறைந்திருந்து தொடர்ந்து வெருட்டிக்கொண்டுள்ளதை காணலாம்.
இந்த வகையில் இன்று யாழ்ப்பாண நகர்ப்பகுதிகளிலேயே பெரும்பாலான சிறுவர் தொழிலாளிகளை, உணவகங்கள், மக்கானிக் சென்டர்கள், அலுவலகங்கள், என்பவற்றில் சாதாரணமாக காணக்கூடியதாக உள்ளது.
எழுமாந்த ரீதியாக இங்க பார்! நீ சிறுவன்!! வேலை செய்யக்கூடாது என்று சொல்லிவிடலாம், அனால் அவர்களுடன் கொஞ்சம் பேசினால், அன்றாடம் அவனுக்கு கிடைக்கும் சிறுதொகையிலேயே அவனது குடும்பத்தின் வாழ்வாதாரமும், தம்பி, தங்கைகளின் கற்றல் நடவடிக்கைகளும் இடம்பெறுவதை அறியமுடிகின்றது.
வினை விதைத்தவர்கள், மேலும்மேலும் வினைக்கு இரத்தப் பசளை போட்டவர்கள் எல்லோரும் யார்யாரோ..அனால் ஒன்றுமே செய்யாத இந்த பிஞ்சுகளல்லவா இன்று அந்த வினைக்கான அறுபடைகளை பெறுகின்றன!
மியூஸிக் கபே
ஒரே வசனம்.. எல்.ஆர்.ஈஸ்வரி…காதோடு மட்டுமல்ல இதயத்தோடும் பாடிவிட்டார்.
ஜோக் பொக்ஸ்
புதிதாக கல்யாணம் கட்டியயோகம் ஒரு கிராமத்தில் உள்ள குடியானவருக்கு நகரத்தில் குவாட்டசுடன் வேலை கிடைத்தது. எனவே புது மனைவியுடன் குவாட்டசில் வந்து குடியேறினார். சாப்பாட்டு விடயத்தில்த்தான் அவருக்கு வந்திச்சு சனி. முதலாவது நாள் மனைவி காலை உப்மா கிண்டி கொடுத்தாள். சுவையாக இருந்திச்சு. மதியம் வந்தார் மீண்டும் உப்மா, இரவு மீண்டும் உப்மா, இப்படியே 3 நாளாக தொடந்திச்சு சாப்பாடு. மனுசனுக்கு உப்மாவே வெறுத்துப்போச்சு.
ஏன்டி உனக்கு வேறு சமைக்கதெரியாதா என்று கேட்க! மனைவியோ எதையும் மறைக்காமல் தெரியாதுங்க என்றாள்.
பிறகென்ன ஒரு 7 நாளாக அவருக்கு 21 வேளையும் உப்மாதான் சாப்பாடு.
முடியாத நிலையில் ஒரு ஹோட்டலுக்குள் நுளைந்தார், அது ஒரு ஹிந்தி ஹோட்டல் மனுவில் எல்லாமே ஹிந்தியிலே இருந்திச்சு, எனவே 15ஆவதாக இருந்தை ரிக் பண்ணிவிட்டு பார்த்திருந்தார், ஆவிபறக்க சர்வர் கொண்டுவைத்த சாப்பாட்டை ஆவலுடன் உற்றுப்பார்த்தார். அந்தோ பரிதாபம், அங்கே இருந்ததும் உப்மாதான். முன்னால் பார்த்தார் ஒருவர் பானிப்பூரி வாங்கி சப்பிட்டுகொண்டிருந்தார், நம்மாளுக்கு எச்சில் ஊறியது, முன்னால் இருந்த நபர் றிப்பீட்டு என்றார், மீண்டும் அவருக்கு பாணிப்பூர் வரவே, அதைப்பார்த்து ஆவலுடன் சர்வரைப்பார்த்து இவரும் ரிப்பீட்டு சொன்னர்.
மீண்டும் சூடாகவே வந்து சேர்ந்தது உப்மா.
24 comments:
Vadai..
KARUN......! GIVE ME HALF OF VADE.......
கலக்கல் தலைவரே
ரஜினி படம், ஆவலுடன் எதிர்பார்த்தபடி காத்திருக்கிறேன்.
பிளக் சுவான்: பலே ஆடுவதில் பக்கா கில்லாடி,
குறும்படம், வறுமையின் பிடியில் அகப்பட்டு, வயிற்றுப் பசிக்காக கல்வியை இழந்த மனதின் ஏக்கமாய் அமைந்துள்ளது.
விமான விபத்து: எல்லாம் அவன் செயல்.
வாசிப்பு: நூல்களின் அறிமுகத்திற்கு நன்றிகள். வெகு விரைவில் வாங்கிப் படிப்பதாக உத்தேசம்.
சிறுவர் தொழிலாளிகள்: இப்பவெல்லாம் ஒவ்வோர் துண்டுப் பிரசுரங்களுடன் பஸ்களிலும், வீடுகளிற்கும் படையெடுக்கத் தொடங்கி விட்டார்கள். இதில் தென்னிலங்கையைச் சேர்ந்த சகோதர மொழிச் சிறுவர்கள் தான் அதிகம்.
காதோடு தான் நான் பாடுவேன், நினைவு மீட்டல், காதலில் மௌனங்களிற்குத் தான் முதலிடம் என்பது போல அமைந்துள்ளது.
ஜோக்ஸ்: சகோதரா, றிப்பீட்டு.
இவ் வாரமும் சகல சூடான பானங்களையும் ஒன்றாகப் போட்டு செம சூடாக்கி விட்டீர்கள்.
ஜோக் நன்றாக இருந்தது. இனி ரஜினியின் ராணா குறித்த செய்திகளுக்கு பஞ்சமிருக்காது
ஸ்ரீ லங்கா வான் படையின் விமானங்கள் விபத்து நிறைய அதிர்வலைகளை ஏற்ப்படுத்தியிருக்கிறது. positive as well as negative.
எல்லா சுவைகளையும் கலந்து, பதிவை இனிமையாக்கி இருக்கிறீர்கள்.
நல்ல பதிவு... வோரட் குத்தியாச்சு
நன்று ஜனா,மற்ற புத்தகங்களையும் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எழுதுங்கள்.குறிப்பாக தாய்,வால்காவிலிருந்து கங்கை வரை
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்..
என்னை மிகவும் கவர்ந்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று அண்ணா.. L.R.ஈஸ்வரியின் குரலில் ஓர் மயக்கம்
காதோடுதான் நான் பாடுவேன்
மனதோடுதான் நான் பேசுவேன்..
என்னை மிகவும் கவர்ந்த பழைய பாடல்களில் இதுவும் ஒன்று அண்ணா.. L.R.ஈஸ்வரியின் குரலில் ஓர் மயக்கம்
யுத்தத்திற்கு பின்.. :(
SORRY JANA.... I WAS JUST BC.
ALL ITEMS IF THIS WEEK'S COCKTAIL ARE KALAKKAL.......!
அந்த குறும்படம், மனதை பிசைந்து விட்டது.
....:-(
ம்ம்ம்............! சிறுவர் தொழிலாளிகள் மனது பொறுக்குதில்லை.
இனிமையான பதிவு ..
பாஸ் கருப்பு அன்னத்தின் கலர் போட்டோ கிடைக்கலையா??ஹிஹி
குறும்படம்-அருமை
கிபிர்-ஹிஹி நாசமா போக..
சிறுவர் தொழிலாளர்-பெற்றோர் கைகளில் தான்
ஏனோ ரானா அறிவிப்பில் மனம் பெரிதாய் லயிக்கவில்லை
தாய் வாசிக்கத் தொடங்கி விட்டீர்களா? அந்திரே பாத்திரம் எனக்கு பிடித்த ஒன்று
கீழே உள்ள ஜோக்கை ஒத்த ஒன்றை லியோனி சொல்ல கேட்ட ஞாபகம்
வழமை போல் அருமை
rajini news super ..
all otehrs also sweet
anna suberb... but karuththida mudijala sorry..
அருமையான தகவல்கள் அண்ணா.. ரிப்பீட்டு...
Ashwin Arangam
சுல்தான் படமே இன்னும் வாரத காணல அதுக்குள்ள இஸ்ரீஅதனிட்ட தொடர்ச்சியா???
ஜனா..நீங்க போன ஹொக்ரெயில் லில் சொன்ன நிழல் வெளி கதைகள் படிச்சேன்...சில யட்சி கதைகள் மட்டும் கொஞ்சம் போர்...அந்த சிறுவன்..அந்த வீடு...ஓவியம்...அறைகள்..அறைகள் கதை சூப்பர் ஜனா....
இவ்வளவு பார்வையையும் ஒரேடியாக அலசி விட்டீர்கள் .. இந்த பிளக் சுவான் பார்த்து விட்டீர்களா ? !!!
Post a Comment