Wednesday, September 28, 2011

வலைப்பதிவு எழுதுவதால் ஏதாவது நன்மை இருக்கா?


இணயத்தின் வாயிலான வலைப்பதிவுகள் என்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டு செல்வதுடன், அதை கவனித்து ஈர்க்கப்படுவோரின் தொகையும் அதிகரித்துக்துக்கொண்டே செல்கின்றது.
இன்றைய எழுத்துலகத்தில் வலைப்பூக்கள் ஒதுக்கப்படமுடியாத ஒரு இடத்தினை பெற்றுவிட்டன என்பதுகூட மிகையாகாது. பல வலைப்பதிவர்களும் பல விடயங்கள் குறித்து ஆராய்ந்து பல பதிவுகளை இடுகின்றார்கள், மிக காத்திரமான பதிவுகள் முதல் ஜனரஞ்சகப்பதிவுளையும், இலக்கியம், விளையாட்டு, சினிமா, உலக நடப்புக்கள், முகாமைத்துவம், மருத்துவம், என பல்வேறு பட்ட துறைகளிலும் பதிவுகளை இட்டுவருகின்றமை வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.

வலைப்பதிவுகள் அதிகரித்தமையினாலும், வலைப்பதிவர்களின் அதிகரிப்பினாலும், வாசிப்பு என்பது தானாகவே கூடியுள்ளதுடன், வேறு வேறு துறைகளில் உள்ளவர்களும் மற்ற துறைபற்றி இலகுவாக அறிந்துகொள்ள ஏதுவாகிவிடுகின்றது.
அதேவேளை ஆங்கிலத்தில் உள்ள சில ஆக்கங்கள், செய்திகள், தகவல்கள், பிரபலமான கதைகள் என்பவற்றை பல பதிவர்கள் தமிழாக்கம் செய்து பதிவிட்டும் வருவதனால் அதன்மூலம் பயனடைபவர்களின் தொகையும் அதிகரித்துக்கொண்டிருப்பது சிறப்பான ஒரு அம்சமாகும்.

இணையபாவனை இளைஞர்களை தவறான பாதைகளுக்கு கொண்டு சென்றுவிடுமோ என்ற அச்சம் பெற்றோருக்கும், சமுதாய ஆய்வாளர்களுக்கும் இருந்துவரும் நிலையில் இளைஞர்கள் இவ்வாறான வலைப்பதிவுகளின் பக்கம் தம் கவனத்தை திருப்பி வருகின்றமை மிக ஆக்கபூர்வமான விடயம் என்பதுடன், பெரும்பாலான பெற்றோருக்கு பெரும் நின்மதியையும் கொடுத்துள்ளது.

வலைப்பதிவுகளை இடும் பதிவர்கள் மத்தியிலே ஆரோக்கியமான ஒரு நட்புவலை அமைக்கப்படுகின்றது. இதன்மூலம் ஆக்கபூர்வமான விடயங்களைப்பேசும் ஒரு நட்பு வட்டம் இன்றைய இளைஞர்களுக்கு தனியாகக்கிடைத்துவிடுகின்றது என்பது கண்கூடு.
இவாறான நட்பு வட்டங்களால் முதல் நன்மையாக வாசிப்பு பழக்கம் மேன்மைப்படுத்தப்பட்டு, அறியாத பல விடயங்கள் பற்றியும் அறியவேண்டிய தேடல் உணர்வு எழுப்பட்டுகின்றது. தமது வலைத்தளங்களில் காத்திரமான, பயனுள்ள பல பதிவுகளை எழுதி தன் எழுத்துக்கள்மேல் பிறருக்கு ஒரு கௌரவத்தையும், தன்னை நிரூபிக்கும் ஒரு களமாக வலைப்பூவையும் உருவாக்க இந்த இளைஞர்கள் எத்தனிக்கின்றனர். இதன்காரணமாக தேடல்கள் கூடுகின்றது.
இந்த தேடல்கள்மூலம் அவனது எழுத்தும், அறிவும் மேலும் மேலும் மேன்மைப்படுத்தப்படுகின்றது.

இன்றைய நிலையில் தமிழ் வலைப்பதிவுகளை எடுத்துப்பார்ப்பீர்களேயானால் இவற்றில் பெரும்பான்மையாக தமிழ்நாட்டு வலைப்பதிவர்கள் பலர் பல்வேறுபட்ட வலைப்பதிவுகளை வலையேற்றிவருகின்றனர், அடுத்ததாக புலம்பெயர் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் இருந்து இலக்கியம், கலை, தேசியம், விஞ்ஞானம், மெய்யியல் என பல்வேறுபட்ட துறைகளிலும் பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
அதுபோல சிங்கப்பூர், மலேசியா, அமீரகம் போன்ற இடங்களில் இருந்தும் ஏராளமான தமிழ்மொழிப்பதிவாளர்கள் தமது வலைப்பதிவுகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இன்று தமிழிலேயே எந்தவிடயம் குறித்த சந்தேகத்தையும், தேடுதளங்களில் பொறிப்பித்து அதற்கான விடைகளை ஏராளமான வலைப்பதிவுகளில் இருந்து பெற்றுக்கொண்டுவிட முடிவதாக உள்ளமை இணையத்தமிழுக்கு வலைப்பதிவுகளால் கிடைத்த நன்மையே.

இன்று தமிழகத்தில் சினிமாவில் குறிப்பிடத்தக்க அளவு தாக்கம் செலுத்தும் காரணியாக வலைப்பூக்கள் உள்ளன என எழுத்தளர் ஞாநி உட்பட பலர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. படம் வெளியிடப்பட்டு முதலாவது காட்சி முடிந்த சில விநாடிகளிலேயே வலைப்பூக்களில் அந்த திரைப்படம் தொடர்பான விமர்சனங்கள் வெளிவந்துவிடுகின்றன. இதன்மூலம் சிறந்தபடம் எது, தவிர்க்கவேண்டிய படங்கள் எது என்பதை பெரும்பாலானவர்கள் கணித்துக்கொள்ள இது ஏதுவாக அமைந்துவிடுகின்றது.

இலங்கையிலும் இன்று வலைப்பதிவுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டுவருகின்றது. பல இளைஞர்கள் பெரும் ஆர்வத்துடன், பலதேடல்கள் மூலம் தாம்பெற்ற தகவல்களை பதிவேற்றிவருகின்றனர். பதிவுகளின் தரங்களும் கூடிக்கொண்டு செல்கின்றமையையும் அவதானிக்கமுடிகின்றது.


1995களில் வெளிநாடுகளில் செல்லிடப்பேசிகள் சர்வசாதாரணமாக பாவனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இலங்கையில் அவை எட்டுமா என்ற ஏக்கம் இருந்தது எனினும் ஐந்துவருடங்களினுள் இலங்கையிலும் செல்லிடப்பேசி என்பது சர்வசாதாரணமாக்கப்பட்டுவிட்டது. அதேபோல கணனிப்பாவனையும் இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை சாதாரணமாக ஆகிக்கொண்டுவருகின்றது.
இந்த வகையில் தமிழ்ப்பதிவுகள் இனிவரும்நாட்களில் இலங்கையிலும் கணனி பாவனையில் முக்கிய இடத்தை பிடிக்க உள்ளது என்பது யதார்த்மான உண்மை.

எனவே வலைப்பூக்கள் என்பது தமிழ் எழுத்தியிலின் ஒரு புரட்சி என்று கூறிக்கொள்ளமுடியும். சில எழுத்தாளர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற பல விடயங்களையும் இன்று சாதாரணமாக ஒரு வலைப்பதிவரே அதைவிட சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதிச்செல்வதை கண்ணூடாகப்பார்க்கின்றோம்.
எனவே கணனிப்பாவனையின் ஒரு ஆக்கபூர்வமான விடயமாக வலைப்பதிவுகளை கொள்ளமுடியும். இலங்கையிலும் தமிழ் வலைப்பூக்களின் வளர்ச்சி வேகமாக பரவி வருவது வரவேற்கத்தக்க ஒருவிடயமே.

(இலங்கையில் பிரபலமான தமிழ் தினசரிப்பதிரிகையான தினக்குரல், மற்றும் இலங்கை வலைப்பதிவர்களின் திரட்டியாக இருந்த யாழ்தேவி என்பன இலங்கை பதிவர்கள் பலரின் இணையப்பதிவகள் பலவற்றை வாரந்தோறும் பத்திரிகையில் எடுத்து சென்றதுடன், பதிவுகள் பதிவர்கள் என்பவர்களை இணையத்தில் இல்லாத சாதாரண மக்களுக்கும் அறிமுகம் செய்துவைக்கும் நடைமுறைகளையும் செயற்படுத்தியிருந்தன. இந்த நடைமுறையின் ஓராண்டு பூர்தியை முன்னிட்டு தினக்குரல் பத்திரிகையில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியாகியிருந்ததே இந்த கட்டுரை.)

41 comments:

KANA VARO said...

ஒரு மண்ணும் இல்ல.

Prabu Krishna said...

வலைப்பூவுக்கு வந்த பின் நான் தெரிந்து கொண்டவை நிறைய. ஆனால் இன்னும் நிறைய பேர் வெட்டி அரட்டையில் மட்டுமே உள்ளனர் என்பது ஏன் எண்ணம்.

KANA VARO said...

அண்ணே! ராத்திரி 11 மணிக்கு வேலையால வந்து சாப்பிட்டு பதிவெழுதி பப்ளிஸ் பண்ணிட்டு படுக்க 2 மணி ஆயிடுது. மறுநாள் காலை 6க்கு எழும்பணும். வேலையும் ஓபீஸில இருந்து ஸ்டைலா செய்யுற வேலையும் இல்ல. எனக்கு இந்த வலைப்பதிவு எழுதுறதாலை ஏதாவது நன்மை இருக்கா? நானாகவே என்னை மாற்றிக் கொள்ள வேண்டும்.

தர்ஷன் said...

ஒரு மண்ணும் இல்லன்னு எல்லாம் சொல்ல முடியாது, இருப்பதில் ஓரளவேனும் ஆரோக்கியமான பொழுதுபோக்கு இது
எம்மை கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடியும்.
எப்படியாவது நேரம் ஒதுக்கி திருப்பி எழுதனும்

KANA VARO said...

//வேறு வேறு துறைகளில் உள்ளவர்களும் மற்ற துறைபற்றி இலகுவாக அறிந்துகொள்ள ஏதுவாகிவிடுகின்றது.
அதேவேளை ஆங்கிலத்தில் உள்ள சில ஆக்கங்கள், செய்திகள், தகவல்கள், பிரபலமான கதைகள் என்பவற்றை பல பதிவர்கள் தமிழாக்கம் செய்து பதிவிட்டும் வருவதனால் அதன்மூலம் பயனடைபவர்களின் தொகையும் அதிகரித்துக்கொண்டிருப்பது சிறப்பான ஒரு அம்சமாகும்.//

முற்றிலும் உண்மை. நானே பல விடயங்களில் பயனடைந்திருக்கின்றேன்.

Jana said...

@Prabu Krishna
உங்கள் கருத்தக்கள் உண்மை என்பதையும் முழுநிறைவான பதிவு ஒன்றை தர எண்ணும் வலைப்பதிவாளன் ஒரவனின் மனநிலையையும் புரிந்துகொள்ள முடியும். இங்கே நான் குறிப்பட்டள்ளது அவ்வாறனவர்களைத்தான். பெரும்பாலும் வெட்டிப்பேச்சக்கள், அலட்டல்கள் தெரிந்தாலும் உபயோகமாக பதிவெழுதும் சிலரும் உள்ளனர்தானே. இங்கே குறிப்பட்டள்ளது அவர்களையே

KANA VARO said...

தர்ஷன் said...
ஒரு மண்ணும் இல்லன்னு எல்லாம் சொல்ல முடியாது, //

அண்ணே முதலாவது கருத்து என்னோட தனிப்பட்ட கருத்து அண்ணே! அதை லூஸ்ல விடுங்க.

KANA VARO said...

வலைப்பதிவுகளை இடும் பதிவர்கள் மத்தியிலே ஆரோக்கியமான ஒரு நட்புவலை அமைக்கப்படுகின்றது. இதன்மூலம் ஆக்கபூர்வமான விடயங்களைப்பேசும் ஒரு நட்பு வட்டம் இன்றைய இளைஞர்களுக்கு தனியாகக்கிடைத்துவிடுகின்றது//

நட்பு வலை, வட்டம், சதுரம், முக்கோணம் ஹீ ஹீ இன்னும் பல.

KANA VARO said...

அமீரகம்//

அண்ணே எந்த ஊருண்ணே இது? இயக்குனர் அமீருக்கும் இதுக்கும் ஏதாவது தொடர்பிருக்கா. சத்தியமா தெரியாததால தான் கேட்குறன்.

Jana said...

:))
KANA VARO
அமீரகம் என்ற அழகு சொல்லால் மத்திய கிழக்கில் தொழில்புரியும் எமது சகோதரர்கள் மத்திய கிழக் நாடுகளை அழைக்கின்றனர் வரோ

KANA VARO said...

திரட்டியாக இருந்த யாழ்தேவி //

ஓ! இப்ப இல்லையா? நான் “அந்த பிரச்சினைக்கு” பிறகு அந்த அட்ரஸே அடிச்சு பார்த்தில்லை.

Jana said...

@தர்ஷன்
கண்டிப்பாக சீக்கிரம் எழுத வந்திடுங்க தர்ஷன். உங்கள்போல கருத்தாழமாக எழுதுபவர்கள் நீண்டநாட்களுக்கு எழுதாமல் இருப்பது தேடி வாசிப்பவர்கள் பலருக்கு ஏமாற்றமாக இருக்கும்.

KANA VARO said...

நான் ப்ரீயா இருக்கும் போது பதிவு போட்டதுக்கு நன்றி. ஒரு பதிவையாவது ஒழுங்கா வாசிச்சனே!

Jana said...

@ KANA VARO
என்ன வரோ வலு உட்சாகமாக இருக்கீங்க... சந்தோசம் போல :)) ஸியேஸ்...

நிகழ்வுகள் said...

வலைப்பதிவு பக்கம் வந்ததால் பெற்றவை-கற்றவை ஏராளம் ....

கார்த்தி கேயனி said...

நல்ல விசயம் தானே

Mohamed Faaique said...

//அமீரகம் என்ற அழகு சொல்லால் மத்திய கிழக்கில் தொழில்புரியும் எமது சகோதரர்கள் மத்திய கிழக் நாடுகளை அழைக்கின்றனர் வரோ///

அமீரகம் என்று குறிப்பிடப்படுவது UAE (டுபாய், சார்ஜா, அபூதாபி.....) நாடுகளையே.. சரியாகப் பார்த்தால் ஐக்கிய அரபு இராச்சியம்`னுதான் வரும். யாரு அமீரகம்`னு ஒரு பேரு வச்சாங்கன்னே தெரியல...

s.sampath kumar said...

பிளாக் தொடங்கினால் என்ன செய்யவேண்டும் எப்படி செய்ய வேண்டும் அதை வைத்து எப்படி பணம் ஈட்ட முடியும் என்பதை பற்றிய தகவல் தொகுப்பு
see http://tamil-google.blogspot.com

விக்கியுலகம் said...

மாப்ள பகிர்வு அருமை!

விக்கியுலகம் said...
This comment has been removed by the author.
விக்கியுலகம் said...
This comment has been removed by the author.
விக்கி உலகம் said...

தனிமையை போக்கவே வந்தேன் பதிவுலகுக்கு...இன்று எவ்வளவு சொந்தங்கள் எனக்கு!

சீனுவாசன்.கு said...

நம்ம சைட்டுக்கு வாங்க!
தளத்துல இணைச்சுகிடுங்க!
உங்க கருத்த சொல்லுங்க!
நல்லா பழகுவோம்!...

றமேஸ்-Ramesh said...

நல்லதொரு இடுகை. அத்தனை நேர் சிந்தனைகள் எனக்குள் வந்ததாக உணர்வு. பதிவு என்பது உள்ளக்கிடக்கைகளையும் தேடல்களையும் பகிரும் தளம். பெற்றது நிறைய.. பெறவேண்டிக் கிடக்கு இன்னும்.. ஏனோ என்ற எண்ணம் எழுதவிரும்பாமல் போவது இயல்பாக உள்ளது.

Anonymous said...

நல்ல கேள்வி...
எண்ணற்ற விடைகளும் கொடுத்து விட்டீர்கள்...
கூடிய விரைவில் பதிவுலகம் Mature ஆகி ஒரு பண்பட்ட சமூகமாய் மாறும்...

shanmugavel said...

//எனவே வலைப்பூக்கள் என்பது தமிழ் எழுத்தியிலின் ஒரு புரட்சி என்று கூறிக்கொள்ளமுடியும்.//

yes sir

உங்கள் நண்பன் said...

எவ்வளவு கருத்துகளை நாம் அறிகிறோம் . நல்ல பதிவு

தனிமரம் said...

 நல்ல தகவல்கள் பெருவதுடன் நட்பு வட்டத்தில் அன்பு குத்தல்கள் ஜாலிகள் கேலிகள் என சந்தோசத்திற்கு குறைவில்லை இயந்திர வாழ்வில் ஒரு அசுவாசம் இங்கு கிடைக்கின்றது!

தனிமரம் said...

 நல்ல தகவல்கள் பெருவதுடன் நட்பு வட்டத்தில் அன்பு குத்தல்கள் ஜாலிகள் கேலிகள் என சந்தோசத்திற்கு குறைவில்லை இயந்திர வாழ்வில் ஒரு அசுவாசம் இங்கு கிடைக்கின்றது!

தனிமரம் said...

 நல்ல தகவல்கள் பெருவதுடன் நட்பு வட்டத்தில் அன்பு குத்தல்கள் ஜாலிகள் கேலிகள் என சந்தோசத்திற்கு குறைவில்லை இயந்திர வாழ்வில் ஒரு அசுவாசம் இங்கு கிடைக்கின்றது!

தனிமரம் said...

 நல்ல தகவல்கள் பெருவதுடன் நட்பு வட்டத்தில் அன்பு குத்தல்கள் ஜாலிகள் கேலிகள் என சந்தோசத்திற்கு குறைவில்லை இயந்திர வாழ்வில் ஒரு அசுவாசம் இங்கு கிடைக்கின்றது!

துளசி கோபால் said...

நல்ல பதிவு.

நீங்க சொன்ன அத்தனையும் உண்மை.

இங்கே நான் கற்றது ஏராளம்.

ஜீ... said...

இணையத்தள சமூக வலைத்தள பயன்பாட்டில் இது ஒரு ஆரோக்கியமான விஷயம்

சில பேருக்கு இது ஒரு மன நோயாகவும் இருக்கலாம். எப்படியும் பதிவிட்டே தீரவேணும் என்று எதையாவது எழுதுவதை இதில் சேர்க்கலாம். அந்த எழுத்தை வாசிக்கும்போதே இதை உணர முடியும்.

வாழ்வின் சுவாரஸ்யமான பகுதிகளை, துன்பமான பகுதிகளையும் கூட பின்னொரு காலத்தில் மீட்ட உதவும் டிஜிட்டல் டைரியாக உபயோகிப்பவர்களுக்கு ஓர் அரிய வரப்பிரசாதம்!

சிலர் இதை ஒரு பயிற்சியாக கூட உபயோகப்படுத்தலாம். கதை, கவிதை எழுத வருகிறதா, சொல்ல நினைப்பதை சுவாரஸ்யமாக சொல்ல முடிகிறதா, ஒரு நல்ல சினிமா பார்த்தபின் அது பற்றிய புரிதல் சரியாக உள்ளதா?, அதைச் சரியான மற்றவர்களுக்கு சொல்ல முடியுமா என்ற பரிசோதனை முயற்சியாக கூட உபயோகப்படுத்தலாம்!

ஒவ்வொருவரும் எப்படி உபயோகப்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே, அவர்கள் பார்வையும் இருக்கும்!

என்னைப் பொறுத்தவரை முற்றிலும் நன்மையே!

அதுவும் தவிர இது கூடாது, பயனில்லை என்று கூறிக்கொண்டு எழுத வேண்டிய அவசியம் என்ன? :-)

சி.பி.செந்தில்குமார் said...

>>எனவே வலைப்பூக்கள் என்பது தமிழ் எழுத்தியிலின் ஒரு புரட்சி என்று கூறிக்கொள்ளமுடியும். சில எழுத்தாளர்கள் மட்டுமே எழுத முடியும் என்ற பல விடயங்களையும் இன்று சாதாரணமாக ஒரு வலைப்பதிவரே அதைவிட சிறப்பாக அனைவருக்கும் புரியும் வண்ணம் எழுதிச்செல்வதை கண்ணூடாகப்பார்க்கின்றோம்.

உண்மை!!!!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

just fun and time pass

விச்சு said...

உங்கள் கட்டுரை அருமை...

துஷ்யந்தன் said...

நீங்கள் சொல்லுவது எல்லாம் சரியே... மூளைக்கு தெரியுது மனசுக்கு தெரியுது இல்லையே... ஹீ ஹீ

வலைப்பூவும் ஒரு போதைதான் போல பாஸ் .. இது ஏன் அனுபவத்தில் கண்டது

Tally in Tamil said...

வணக்கம் ,

Learn Tally.ERP9 in Tamil -வலைப்பூவை அமைத்துள்ளேன்.

Tally.ERP9 மென்பொருள் பற்றிய வலைப்பூ - http://tamiltally.blogspot.com/

உங்கள் கருத்தையும் ஆதரவையும் விரும்பும்
Tally Master

suryajeeva said...

அரசும் கவனமாக கவனித்து வருகிறது... ஒரு ஆட்சி பீடத்தையே இது ஆட்டி படைக்கும் சக்தி கொண்டது என்பதை அரசின் பயம் காட்டுகிறது... ஆட்சேபகரமான கருத்துக்கள் அடங்கிய பதிவுகளை நீக்கி விடும்படி புதிய சட்டம் ஒன்றை இயற்றி வைத்திருக்கிறார்கள்
new it act

மாய உலகம் said...

மனதுக்கு ஒரு ஆறுதல்

Cpede News said...

எமக்குள் தன்னைம்பிக்கையும், திமிரும் வர காரணம் வலைப் பதிவுகளே... இன்றெம்மை உற்சாகமாக வைத்திருப்பது எம் வலைப்பதிவுகளே...


சிறந்த வலைப் பதிவுகளை வரவேற்கிறோம்...

LinkWithin

Related Posts with Thumbnails