Sunday, February 27, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.மைந்தன் சிவா"கார் காலம் கவிழும் வேளை..
கண்களிலோ காதல் விதை..
மொட்டவிழ்ந்த தாமரை போல்
புதுக்கவிதை பிறக்குதடி..!

கண்களால் உன்னை பார்க்க
காண கண் கோடி வேண்டும்..
பந்தத்தில் உன்னை சேர்க்க
கோடிகள் ஒரு பொருட்டே இல்லை..!!

கவிதையாக உன்னை வடிக்க
பாவல்கள் தவமிருப்பார்..
நான் வடிக்க முயன்று பார்த்தேன்..
தமிழுக்கு தான் பஞ்சமடி..!!"

மைந்தன் சிவா பதிவுலகத்தில் காலடி எடுத்து வைத்தபொழுதுகளில் அந்த பதிவில் தனது அரங்கேற்றமாக வலையேற்றிய ஒரு கவித்துவ பதிவே இது.
2010 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மைந்தனின் பதிவுலக பிரவேசம் கவிதைகளாலேயே நிறைந்திருந்தன. பெரும்பாலும் அவை காதல் என்ற நான்கு கண்களால் இழைக்கப்பட்ட விசித்திரமான ஆடைகளாகவே இருந்தமையினை கண்டுகொள்ளமுடிகின்றது.
இவற்றில் பெரும்பான்மைக்கவிதைகள் ஒருதலைக்காதலின் ரணங்களை புடம்போட்டு இதயங்களை மென்மையான மயிலிறகால், உணர்வுடன் வருடுவதுபோல அமைந்துள்ளன.
மெல்ல காதல்பேசிய அந்த எழுத்துக்கள், அடுத்த கட்டமாக இசை பற்றியும், பாடல் வரிகள் பற்றியும் சிலாகித்துக்கொள்ள ஆரம்பித்தன. அதை தொடர்ந்து பாடலாசிரியர்கள் பற்றியும், பாடல்கள் பற்றியும் மெல்ல இசைத்துவம் பற்றியும் பேசிய பதிவுகள், கிரிக்கட், அரசியல், சமுகம், சினிமா என்று வியாபிக்க ஆரம்பித்துக்கொண்டது.

போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நான் தொடர்ந்து செல்வேன் என்ற தனது “பஞ்சை” அழுத்தமாக பதிந்துவைத்துள்ள மைந்தன் சிவா, மிக அண்மைக்காலமாக பலரினால் போற்றப்பட்டுக்கொண்டிருக்கின்றார் என்பதை சொல்லிக்கொள்ளத்தான் வேண்டும்.
எனக்கு வருவதை எழுதிக்கொள்கின்றேன், வரவேற்பதும், வழிமறிப்பதும் உங்கள் கையில் என்றுவேறு தன்னைப்பற்றியதான குறிப்பில் தைரியமாக எழுதிவைத்துள்ளார் பதிவர் மைந்தன் சிவா.

சில யதார்த்தங்கள், அப்பட்டமான விடயங்களைக்கூட மிக இயல்பாக, உள்ளோட்டமாக ஒரு செமை கடியை வைத்துக்கொண்டு, நகைச்சுவையாகஎழுதிவிடுவது மைந்தன் சிவாவின் கலை. இயல்பான ஒரு சிரிப்பையும், இப்படியான உருபேற்றமா என்ற எண்ணத்தையும் அவை விதைத்துவிட்டு போய்விடும்.

மைந்தன் சிவாவிடம் முக்கிமான விடயம் ஒன்றை கவனித்தால் புரிந்துகொள்ளமுடியும், பாரிய ஒரு விடயப்பரப்புகளில் தேடல்கள், அறிவுகள் கொண்டிருந்தபோதிலும், பதிவுகளில் தன்னை எதுவும் தெரியாதவன்போல காட்டிக்கொள்வதில் ஒரு தந்திரத்தை புரிந்துகொள்ளலாம்.
அப்படிக்காட்டிக்கொள்வதில் ஒரு அலாதி பிரியம் அவருக்கு!
அதேநேரம் சில தைரியமான இடுகைகளும் இடைக்கிடை மிரளவைத்தும் விடுகின்றன.

நகைச்சுவையாக நக்கலுடன் போகும் பதிவுகளுக்கிடையில், மிக சீரியஸான பதிவுகளும், வந்து பிரமிக்கவைத்துவிட்டு சென்றுவிடும்.
தபு சங்கர், மேத்தா, வைரமுத்து ஆகியோரின் கவிதைகளில் மைந்தனுக்கு உள்ள அதீத நாட்டம் ஆச்சரியப்படுவதற்கில்லை. அதேநேரம், சாண்டில்யன், கல்கியின் புத்தகங்களின் இரசிகனாக அவர் உள்ளமை, சில பேச்சுக்களில் சில விடயங்களை அவர் மேல்க்கோள் காட்டும்போது தெரிந்தது.

மிக அண்மையில், சீரான வேகத்துடன் சென்றுகொண்டிருந்த அவரது பதிவுகள், புதிய தளம் ஒன்றை இலாவகமாக பெற்றுக்கொண்டு, அதிரடியாக விரைந்துகொண்டிருப்பது பிரமிப்பாக உள்ளது.
மனிதர் இத்தனையும் மறைத்து வைத்துக்கொண்டுதானா, இத்தனைநாளும் கவிதைகளுடன் பேசிக்கொண்டிருந்தார் என்று ஆச்சரியப்படும் அளவுக்கு மிக அதிரடியாக பதிவுகள் வந்து விழுந்துகொண்டிருக்கின்றன.
பலதரப்பட்ட பதிவர்களும் வந்துபோகும் விருப்பதிற்குரிய தளமாக தனது வலைப்பூவை பிரமிப்புடன் பேணிவருகின்றார் பதிவர் மைந்தன் சிவா.

மைந்தன் சிவா, தனது நட்புக்களை மற்றய பதிவர்களுடன், எந்த சதுரங்களும் இன்றி சகலருடனும் நட்பாகவே இருந்துவருகின்றார். அதேபோல மற்றய பதிவர்களின் ஆக்கங்களை ஊக்கப்படுத்துவதிலும் முதன்மையானவராகவும், பின்னூட்ட போட்டியாளராகவும் இப்போது மாறியுள்ளமை சிறப்பான ஒரு விடயமே.
எதிர்காலத்தில் பதிவுலகத்தில் பாரிய திட்டங்கள், பதிவுகள் என்பவற்றை பென்டிங்கிலேயே வைத்திருக்கும் மைந்தன் சிவா, வெகுவிரைவில் பதிவுலகில் மேலும் ஆச்சரியங்களை உண்டாக்குவார் என்று தெளிவாக தெரிகின்றது.

அவர் பற்றி எழுதுவதாக அவரிடம் சொல்லி கேள்விகளை கேட்டபோதே
அண்ணா.. கனக்க என்னைப்பற்றி எழுதவேண்டாம், உங்களால் எழுதவும் முடியாது!! கேள்விகளை கேளுங்க சொல்லுறன் என்றார்.
இதோ அவரிடம் கேட்ட அந்த மூன்று கேள்விகளும் அதற்கான அவரது பதில்களும்.

கேள்வி : பதிவுலகம்! பதிவெழுதல் என்பவை எப்படி உங்களுக்கு அறிமுகமானது?

மைந்தன் சிவா : உண்மையை சொல்லப்போனால் பேஸ்புக், ருவிட்டர் போன்றவை, அதை என்ன சொல்வாங்க! ஆ… சமூக தளங்களில் சில நண்பர்கள் போட்ட, மேல்கோள்காட்டிய சில பதிவுகளை “கிளிக்” பண்ணியதாலேயே பதிவுலகம் என்று ஒன்று இருப்பது புரிந்தது. அதை தொடர்ந்து சிலது நன்றாக இருக்க தொடர்ந்து வாசிக்க தொடங்கினேன். நமக்கும்தான் அப்பப்போ கவிதைகள் வருதே அதை சேமித்து வைத்தால் நல்லது என்ற நன்நோக்கத்திலேயே என் வலைப்பதிவுகளை எழுத தொடங்கினேன். பின்னர் என்ன?? ஏதோ …எழுதி இன்று இதோ நீங்கள் அறிமுகப்படுத்தும் அளவுக்கு பலருக்கு தெரிந்திருக்கின்றேன்.

கேள்வி : உண்மையை சொல்லுங்கள் எப்படியான பதிவுகள் உங்களுக்கு பிடிக்கும்?

மைந்தன் சிவா : உண்மையிலேயே தேவையான விடயங்கள் பலவற்றை எழுதும்போது கண்டிப்பாக அவற்றை முக்கியத்துவம் கொடுத்து வாசிப்பேன். சில பதிவுகள், அறிந்துகொள்ளவும், தேவையானதாகவும் இருக்கும் அப்படியான பதிவுகளை கண்டிப்பாக வாசிப்பேன். அதேபோல நகைச்சுவை பதிவுகள் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். இன்னும் கவிதை, சினிமா என்று பலதரப்பட்டவைகளையும் படிப்பது உண்டு.

கேள்வி : பதிவு எழுதுவதால் உண்டான நன்மைகள் ஏதாவது?

மைந்தன் சிவா : முக்கியமாக வாசிப்பை அதிகரித்துள்ளதை கூறிக்கொள்ளவேண்டும், அதேபோல உண்மையான சில நண்பர்கள் கிடைத்துள்ளனர். தெரியாத விடயங்கள் பலவற்றை இலகுவாக புரிந்துகொள்ள கூடியதாக அமைந்துள்ளது. அதீத வாசிப்புக்களால், ஏயது எது தீயது எது என்பதை இலகுவாக புரிந்துகொள்ளவும் முடியுமாக ஆகிவிட்டது.
அவ்வளவு தான் அண்ணா.


27 comments:

ஓட்ட வட நாராயணன் said...

ME THE FIRST.....

ஓட்ட வட நாராயணன் said...

WAIT I READ AND COME

ஓட்ட வட நாராயணன் said...

CONGRATULATIONS SIVA.THANKS JANA

ஓட்ட வட நாராயணன் said...

WHY DIDN'T YOU GIVE HIS PERSONAL DETAILS?

I PREFER TO KNOW.......

shanmugavel said...

நல்லதொரு அறிமுகம் ஜனா,சிவாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்

Anuthinan S said...

நம்ம மைந்தன் அண்ணா!!!! பழகும் நல்ல உள்ளங்களில் இவரும் ஒருவர்!!

அறிமுகத்துக்கு நன்றிகள் ஜனா அண்ணா

தர்ஷன் said...

வழமையாக வாசிக்கும் ஒருவர்
மேலும் அறியத் தந்தமைக்கு நன்றி

Riyas said...

வாழ்த்துக்கள்..

நிரூபன் said...

கவிதையாக உன்னை வடிக்க
பாவல்கள் தவமிருப்பார்..
நான் வடிக்க முயன்று பார்த்தேன்..
தமிழுக்கு தான் பஞ்சமடி..!!"//

வணக்கம் சகோதரா, கொழும்பு பயணம் எல்லாம் எப்படி அமைந்தது,

இக் கவிதை அடிகளில் ‘பாவலர்கள்’ என்று வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

ம்..மைந்தன் சிவா, அண்மையில் தான் இவரது இணையத்தளம் எனக்கு அறிமுகமானது, இலகுவாக அனைவரையும் ஈர்க்கும் கவிதைகளுக்குச் சொந்தக்காரர். கவிதைகளாலே எங்களையும் காதல் செய்யத் தூண்டும் இச் சகோதரனுக்கு வாழ்த்துக்கள்.

மருதமூரான். said...

வாழ்த்துக்கள்.. Bro!

தமிழ் உதயம் said...

மைந்தன் சிவாவிற்கும், உங்களுக்கும் வாழ்த்துகள்.

சி.பி.செந்தில்குமார் said...

மைந்தன் சிவா நல்லவர் தான்...ஹி ஹி அவருக்கு வாழ்த்துக்கள். பேட்டி ரொம்ப சின்னதா இருக்கே..

பார்வையாளன் said...

could have written more,,, nice intro

வடலியூரான் said...

congratz..

Harini Nathan said...

சிறந்த அறிமுகம்

வாழ்த்துக்கள் மைந்தன் சிவா

ஆர்.கே.சதீஷ்குமார் said...

அருமையான அறிமுகம் நன்றி

மைந்தன் சிவா said...

என்னைப்பற்றிய அறிமுகத்துக்கு நன்றிகள் அண்ணே..
சந்தோசம்..
ஆனால் மறு பக்கம் கவலையும் கூட.
இவ்வளவு காலமும் ஹிட் பதிவுகளை எழுதி வந்த உங்களுக்கு இந்தப் பதிவு கொஞ்சம் பிளாப்'ஐ தந்துவிட்டது என்பதால்.
அடுத்த பதிவில் மீண்டும் ஹிட் வந்து சேரும் அது வேறு கதை..
ஆனால் என்னை பற்றி எழுதி இவ்வாறாகப் போய்விட்டது என்பதில் வருத்தம்.

நன்றிகள் அண்ணே..

டிலான் said...

வணக்கம் மைந்தன் சிவா. இன்றுதான் உங்கள் தளத்திற்கு விஜயம் செய்தேன். தங்களை எங்கயோ சந்தித்துள்ளதுபோல தோணுது. வாழ்த்துக்கள்.

jagadeesh said...

"தமிழ் தமிழ் தமிழ்" என்று ஏன் கொதிக்றீங்க. கொஞ்சம் பொறுங்க சாமி.

விக்கி உலகம் said...

பேட்டின்னாவே பயமாகீது பா ஹி ஹி!

FOOD said...

நல்ல பதிவர், நல்லதொரு பதிவரால் அறிமுகம். வாழ்த்துக்கள்

கார்த்தி said...

மிகவும் திறமையான அத்துடன் நல்ல நகைச்சுவை கலந்த பதிவர் இவர்! மைந்தன்சிவா வாழ்த்துக்கள்!

♔ம.தி.சுதா♔ said...

/////போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும், நான் தொடர்ந்து செல்வேன் /////

இவரிடம் எனக்கு பிடிச்சதே இந்த இடம் தான்.... வாழ்த்துக்கள்

நன்றி ஜனா அண்ணா...

"குறட்டை " புலி said...

மனம் போல எழுதும் உம் எழுத்துக்களை ஆவலுடம் எதிர்பார்க்கிறோம்...

! சிவகுமார் ! said...

All the best, Shiva.

இது உங்களுக்கு .. said...

All athe best...

myblogonly4youth.blogspot.com

பாரத்... பாரதி... said...

இவ்வார பதிவராக தெரிவாகிய மைந்தன் சிவாவுக்கு எமது வாழ்த்துக்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails