Sunday, March 6, 2011

இந்தவாரப் பதிவர் - திரு.அனுதினன்

பதிவர் அனுதினன் இலங்கைப்பதிவர்களில் கொஞ்சம் வித்தியாசமானவர் என்றுதான் சொல்லிக்கொள்ளத்தோன்றும். அதாவது யதார்த்தபூர்வமான ஒரு ஆழமான பார்வையும், முக்கிமான விடையங்களை நாசுக்காக உறைக்கும் விதம் சொல்லும் தரமும் இவரது எழுத்துக்களில் வெளிப்படையாக தெரிந்து கொள்ளலாம்;.
தன்னைச்சுற்றியுள்ள சமுகத்தை மிக நிதானமாக அதேவேளை மிக ஆழமாக உற்றுநோக்கும், ஒரு கல்வி சார் இளைஞனின் எண்ணங்களை பார்க்க நினைப்பவர்கள் கண்டிப்பாக அனுதினனின் தளத்திற்கு ஒருமுறை சென்றுவரவேண்டும்.

இலங்கையின் உதிக்கும் திசையில் உள்ள திருகோணமலையினை சொந்த இடமாகக்கொண்ட சுதந்திரநாதன் அனுதினன், கொழும்பு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மாணவன். நாளைகள் என்ற பாதையினை வளமானதாக்க இன்றே அந்தப்பாதைக்கு நிதானமான அத்திவாரங்களை முறையாக போட்டுக்கொண்டு முன்னேறிச்செல்ல திட்டமிடும் பண்புகளை அவரிடம் காணக்கூடியதாக உள்ளது.
அதேவேளை பழகுவதற்கு மிக இயல்பானவர்.

வலையுலகில் வந்து சிக்கல்களை எதிர்கொண்டவர்களின் பட்டியலில் அனுதினனுக்கும் இடம் உண்டு. ஆம்… அவரது வலைப்பதிவுகூட கையப்படுத்தப்பட்டு அழிக்கப்பட்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது.
இருந்தாலும் தொடர்ந்தும் மீண்டும் தனக்கான வலைமனையினை உருவாக்கி இன்றும் தொடர்ந்தும் எழுதிவருகின்றார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கலகலப்பு, விளையாட்டுக்கள், கவிதை, சிறுகதை, சில மாறுதல் சிறுகதைகள், சினிமா விமர்சனங்கள், இசை, இசை விமர்சனங்கள், அவதானிப்புக்கள், தகவல்கள், என்று பயணித்துக்கொண்டிருந்த அனுதினனின் எழுத்துக்கள் அவரது பல்கலைக்கழக ஆரம்பத்தை தொடர்ந்து சமுகத்தை நோக்கிய ஆழமான பார்வையினை உள்ளடக்கத்தொடங்கிய புதிய பாதை ஒன்றை எடுத்துக்கொண்டதை நன்றாக அவதானிக்க முடிகின்றது.

இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என்றபோதிலும், சில சமுக பதிவுகளில் அவரது கருத்துக்கள் ஆணித்தரமானவையாக இருப்பதும், வரவேற்ககக்கூடியதாக இருப்பதும் பாராட்டப்படவேண்டிய ஒன்றாகவே உள்ளது.
அதேவேளை கடந்த வருட இறுதிப்பகுதியில் வெற்றிகரமாக இடம்பெற்ற இலங்கை பதிவர்களுக்கிடையிலான கிரிக்கட் போட்டி, மற்றும் பதிவர் சந்திப்பு என்பவற்றின் ஏற்பாட்டு குழுவின் பிரதானமானவராக இருந்து மிகத்துடிப்புடன் அனுதினன் செயற்பட்டு அனைத்து தரப்பினரையும் கவர்ந்து கொண்டது அவரின் ஆளுமையின் ஒரு எடுத்துக்காட்டே.

அனுதினன் இலங்கை பதிவர்கள் மட்டத்தில் அனைவருடனும் நல்லுறவை பேணிவருபவர் என்பதும், அனைத்து தரப்பினரும் அனுதினன்மேல் ஒரு சிறப்பான மதிப்பு வைத்திருப்பதும் இன்றைவரை ஆச்சரியமாகவே உள்ளது.

தற்போது உலகக்கிண்ணப்போட்டிகள் பற்றிய பதிவுகள் இப்போது அனுதினனை மீண்டும் ஒருமுறை அதிசயமாக பார்க்க வைக்கின்றது.
ஒருவகையில், ஒரு சிறப்பான ஆரூடம் கூறுபவராகவும், ஆட்டநிர்ணயவாளராகவும்!
அவர் உள்ளதும், பெரும்பாலும் அவரது ஆரூடங்கள் பலித்துக்கொண்டிருப்பதையும் கண்டு பலர் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

அனுதினனின் எழுத்துக்களில் சில ரணங்களும் உண்டு. கொஞ்சம் அவர் எழுதிய பதிவுகளில் ஒன்றான இதை படித்துப்பாருங்கள்.

நான் ஒரு விற்பனைப்பொருள்


நான் ஒரு இலங்கைத்தமிழன்.




இந்த உலகத்தின் மிகக்கிராக்கி உடைய விற்பனைப்பொருள் நான்தான்.
என்றுமே நான் ஒரு விற்பனை பொருளாக இருப்பதை நினைத்து கவலை கொண்டதே இல்லை.




ஆனால், நான் எங்கே நாடப் பண்டமாக போவேனோ! என்று என் விற்பனையாளர்கள்தான் கவலை கொள்ளுவது உண்டு!
என் விற்பனையாளர்களும், கொள்வனவாளர்களும் உலகெங்கும் இருக்கிறார்கள்.




என்றுமே, இதற்க்காக நான் கவலைப்பட்டதே இல்லை ஒன்றை தவிர,
அது, என்னை சாந்த சிலரே வெளிநாட்டு இலங்கைத் தமிழர் என்று என்னை விற்பனை செய்வதைத்தான்.


ஆனால், இன்று அதையும் சகித்து கொள்ள பழகி கொண்டேன். ஆனால், எனது எல்லா விற்பனையாளர்களுக்கும் ஒரே ஒரு வேண்டுகோள்:-






“என்னிடம் இப்போது எதுவுமே இல்லை. நீங்கள் எனக்காக என்ற போர்வையில் கேட்பது இனியும் கிடைக்கும் என்ற எண்ணமும் இல்லை! அதனால், இப்படி கேட்டு கேட்டே இருக்கின்ற ஒன்றையும் இழக்க வைத்து விடாதீர்கள்.”



ஆனால்,





என்றாவது ஒருநாள் இந்த நிலை மாறும், அப்போது என்னையும் ஒரு விற்பனையாளனாக மாற்றிவிடாதீர்கள்!!

சரி..இந்த வாரப்பதிவராக கொலுவீற்றிருக்கும் பதிவர் அனுதினனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் புதியவை அல்ல.. பதிவர்கள், மருதமூரான், வரோ ஆகியோரிடம் கேட்கப்பட்ட அதே மூன்று கேள்விகள்தான்.
அந்த மூன்று கேள்விகளையும், அதற்கான அவரது பதிலையும் பார்ப்போம்.

கேள்வி :உங்களின் பதிவுலகப் பயணம் எப்படி ஆரம்பித்தது?

அனுதினன் :வாசகனாக இருந்து பிறகு பதிவுலகை எழுதுபவனாக மாறினேன். உயர்தர கல்வி பயிலும் காலங்களில் இணையத் தேடலில் ஈடுபடும்போது வலைப்பதிவுகள் எனது தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு ஊடகமாக இருந்தது. பிறகு, எம்மவர்கள் பலரும் எழுதும் வலைபதிவுகளை பார்த்து எழுதும் எண்ணம இருந்தாலும், உயர்தர கல்வியை முடித்து நீண்ட நாட்களின் பின்பு சக வலையுலக நண்பர் எரியாத சுவடிகள் பவனின் உதவியிடோன் வலையுலக வாழ்வு ஆரம்பித்தது. ஆரம்பத்தில், எழுதுவதில் இருந்த ஆர்வம் அதிலும் குறிப்பாக எனக்கு இருந்த அதிகளவிலான ஓய்வு நேரங்கள் என்பவை காரணமாக பதிவுகளை எழுதி இருந்தாலும், இடையில் என்ன காரணம் என்றே தெரியாமல் என் வலைத்தளம் திருடபட்டு அளிக்கபட்ட பின்பு, எழுதுவதில் இருந்த ஆர்வம முன்பு போல வருவது இல்லை. பிறகு ஓய்வு நேரங்களும் குறைந்த காரனத்தினால் பதிவுகளும், குறைந்து விட்டன. ஆனாலும், பதிவுகளை வாசிக்கும் ஒரு வாசகனாக எண்ணமும் இருக்கிறேன்.

கேள்வி: இலங்கை பதிவர்களுக்கும் உங்களுக்குமிடையிலான உறவு எப்படியிருக்கிறது. ஏதாவது முக்கியமாக குறிப்பிட விருப்புகிறீர்களா?

அனுதினன் : ஓ.... நிறைய நண்பர்களை உருவாக்கி தந்த இடம் இது. தோழமையையும் தாண்டி அண்ணா என்ற உரிமையில் அழைக்க கூடிய வகையில் பதிவுலகத்தில் இருக்கும் பதிவர்களுடன் என் உறவு நெருக்கமானது. ஆனாலும், பல புதிய பதிவர்களுடன் எனக்கு அவ்வளவு பெரிய நெருக்கம் அல்லது அறிமுகம் இல்லை என்பதை வெளிப்படையாகவே சொல்லி கொள்ளுகிறேன். அதற்கு காரணம், அவர்கள் பதிவுகளை வாசிப்பதுடன் நிறுத்தி கொள்ளுவதும் ஒரு காரணம், அடுத்து கடந்த காலத்தில்
சக பல பதிவர்களுக்கு ஏற்பட்ட அனுபவகளை கொண்டு, நான் எனக்கான ஒரு சில எல்லைகளிலேயே இருக்க விரும்பியமையும் ஒரு காரணமாகும்.ஆனால், அறிமுகமான நண்பர்களுடன் பழக தவறுவதுமில்லை.

புதிய அனுபவகளை தந்த இந்த பதிவுலகத்தில் இருப்பவர்களுக்குள் இருக்கும் சண்டைகள் படிப்படியாக குறைந்து நான் அறிமுகாமான சமயத்தில் பதிவுலகம் எப்படி இருந்ததோ, அப்படியான பரஸ்பர நிலைக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.

கேள்வி: பதிவுலகம் தவிர்ந்து ஓய்வுநேரங்களில் எவற்றில் ஆர்வம் காட்டுகின்றீர்கள்?

அனுதினன் : பதிவுலகமே இருக்கின்ற ஓய்வு நேரத்தில்தான் செலவு செய்கிறேன். அதையும் தாண்டி, அடுத்தது என்றால், விளையாட்டு + சினிமா தான். எனது ஓய்வு நேரங்கள் ஏனையோரை போல எனக்கு பயனுள்ளதா? என்று எனக்கே தெரிவது இல்லை. கிடைக்கும் போது எல்லாம் கிரிக்கெட், சினிமா என்று இருக்க விரும்பும் சராசரி மனிதன் நான். இந்த கிரிக்கெட், சினிமா இது எதிலுமே வரையறை வைத்து கொண்டது இல்லை. கனடா போன்ற சிறிய அணிகள விளையாடினாலும் ரசிப்பேன். புதுமுக நாயகர் படங்களுக்கும் செல்வேன். இதை எல்லாம் விட, நேரம் என்று இருந்தால் அதில் நம் பதிவுலக நண்பர்களுடன் கடலை!


என்னையும் வலைத்தளம் எழுதுபவன் என்று ஏற்று, உங்கள் பதிவர் பகுதியில் என்னை பிரசுரிப்பதுக்கு நன்றிகள் அண்ணா!. யாரும் எனது வலைதளத்தை வந்து பார்த்து, உங்களுக்கு ஏதும் ஆபத்து நேரும் என்றால், அது என்னுடைய பொறுப்பல்ல!!!

21 comments:

ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி said...

THANKS JANA FOR SHARING THE INTRODUCTIONS OF ANUTHINAN....

CONGRATULATIONS TO HIM.

pichaikaaran said...

நல்ல அறிமுகம் . இலங்கை தமிழனாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது

நிரூபன் said...

வணக்கம் சகோதரம், அனுதினன் பற்றிய அலசல் அருமை. அவரது கவிதை காரசாரமாக, ஒரு சில விடயங்களைப் பூடகமாகச் சொல்லி நிற்கிறது, இன்று தான் அவரைப் பற்றி அறிந்தேன். அவரது வலைப்பூ முகவரியினைத் வழங்க முடியுமா?
வாழ்த்துக்கள் சகோதரன் அனுதினனுக்கு.

Riyas said...

வாழ்த்துக்கள்..

தர்ஷன் said...

அனுதினன் நான் தொடர்ந்து படிக்கும் பதிவர்களில் ஒருவர்தான்
என்ன இவரது எதிர்வுகூறலால்தான் இலங்கை பாக்கிடம் தோற்றதோ என்ற சந்தேகம் கூட உண்டு. நல்ல அறிமுகம்

anuthinan said...

என்னை அறிமுகம் செய்து வாய்த்த ஜனா அண்ணாவுக்கு நன்றிகள்!!!

வாழ்த்துக்கள் தெரிவித்தவர்களுக்கு நன்றிகள்!!!

//நல்ல அறிமுகம் . இலங்கை தமிழனாக பிறக்கவில்லையே என்ற ஏக்கம் ஏற்பட்டது//

நல்லது நண்பரே!!! :)))

ம.தி.சுதா said...

////தற்போது உலகக்கிண்ணப்போட்டிகள் பற்றிய பதிவுகள் இப்போது அனுதினனை மீண்டும் ஒருமுறை அதிசயமாக பார்க்க வைக்கின்றது./////

ஆமாம் அருமையாக அலசுகிறார்.. கோபி, லோசண்ணா மூவரது பதிவையும் பார்த்தாலே சரி உலகக் கிண்ணம் விரல் நுனியில் நிற்கிறது....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பதிவுலகத்திலிருந்து பாமரர்களுக்கு உதவ வாருங்கள்.

ம.தி.சுதா said...

வாழ்த்துக்கள் அனு படிப்பையும் கவனித்துக் கொண்டு கலக்குங்க....

shanmugavel said...

அறிமுகம் சிறப்பாக இருக்கிறது ஜனா.வாழ்த்துக்கள்.

சக்தி கல்வி மையம் said...

அறிமுகம் அருமை.. வாழ்த்துக்களும்... வாக்குகளும்...

கார்த்தி said...

அனுதினனுக்கு வாழ்த்துக்கள்! திறமையான பதிவர்!!

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்களும், நன்றிகளும்

ஆகுலன் said...

ஜெனா அண்ணா அவர்களே...
உங்களது இந்தவார பதிவர் மிகவும் அருமையானது ஏனெனில் எனக்கு பல சிறந்த பதிவர்களின் பதிவுகளை பார்க்கும்
வாய்ப்பை தந்ததால்..

I starts following பதிவர் அனுதினன்...

நன்றி

தமிழ் உதயம் said...

இப்போது தான் இவர் தளம் வாசிக்கிறேன். வாழ்த்துகள்.

Unknown said...

வாழ்த்துக்கள் அனுதினனுக்கு நம்ம விளையாட்டு அரங்கம்

Harini Resh said...

வாழ்த்துக்கள் அனுதினன் :)

சிறந்த அறிமுகம் ஜனாஅண்ணா.
அண்மையில் தான் ஒரு நண்பரின் மூலம் இவரை அறிந்தேன்.

உணவு உலகம் said...

மிகநல்ல அறிமுகம்.
நன்றி ஜனா

john danushan said...

good

TamilTechToday said...

www.classiindia.com Top India Classified website . Post One Time & get Life time Traffic.

New Classified Website Launch in India - Tamil nadu

No Need Registration . One time post your Articles Get Life time
Traffic. i.e No expired your ads life long it will in our website.
Don't Miss the opportunity.
Visit Here -------> www.classiindia.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

நல்ல அறிமுகம் . அனுதினனுக்கு எனது வாழ்த்துக்கள்

Unknown said...

//இந்த உலகத்தின் மிகக்கிராக்கி உடைய விற்பனைப்பொருள் நான்தான்.
என்றுமே நான் ஒரு விற்பனை பொருளாக இருப்பதை நினைத்து கவலை கொண்டதே இல்லை.//


அனுதினன் அவர்களுக்கு எம் வந்தனங்களும், வாழ்த்துக்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails