Friday, April 1, 2011

நாளெல்லாம் முட்டாள்கள் தினம்!

கடந்த 24 நாட்களாக பதிவுகளுக்காக கணணிக்கு முன்னால் வந்து உக்கார முடியவில்லை. திரும்ப எழுத தொடங்க நம்மளைப்பற்றிய விசேட நாள் ஒன்று வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்த்தான் இன்றைய நம்மநாளில் மீண்டும் எழுதத்தொடங்குவது என்ற திடசங்கர்ப்பம் பூண கொஞ்சம் நேரமும் தைரியமும், உரிமையும் வந்திடிச்சு!
சரி..25 தினங்களாக அண்ணனுக்கு என்னாச்சு என்று தொலைபேசியூடாகவும், மின் அஞ்சல் ஊடாகவும், பின்னூட்டமூடாகவும், சிலர் பதிவுகளுடாகவும் கேட்டிருந்தாங்க.
வெறும் 24 நாட்கள் தானுங்க.. எப்படியோ இதோ திரும்ப வந்திட்டோம்ல!!
காரணத்தை பதிவின் இறுதியில் தருகின்றேன்.

ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று சிறுவயது முதல், ஏமாற்றியதைவிட, அதிகம் ஏமாந்து அசடுவழிந்தது என்போன்றவர்களுக்கு அதிகமாக நடந்திருக்கும்.
கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய வர்த்தக மற்றும் அரசியல் மயப்பட்ட வாழ்க்கையிலேயே நாம் நாளாந்தம் எப்ரல் ஏமாளிகளாக இருந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
சாதாரணமாக காலைக்கொள்வனவு முதல், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், தேர்தல் வாக்குறுதிகள் என்று தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம்!!

ஒரு வகையில் ஏப்ரல் முதலாம் திகதியான இந்த முட்டாள் தினத்தை; “உலக சமான்ய பொதுமக்கள் தினம்” என்று சொல்லிக்கொள்வது சாலப்பொருத்தமான ஒன்றாக இருக்குமோ என்னமோ!
உண்மையில் இன்றைய நிலையில் உலகில் வாழும் ஒவ்வொரு சாதாரண மனிதனும் கால தேச வர்த்த மானங்களை கடந்த நிலையில், பெரிய முதலைகளாலும், பரந்த கழுகுக் கண்களாலும், ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றார்கள்.
உலக மக்கள் எல்லோரும் அப்பாவியாக போக்கற்று விழ்த்துக்கொண்டு நிற்கையிலே அரசியல்வாதிகளும், வர்த்தக முதலைகளும் அந்த மக்களைப்பார்த்து “ஏப்ரல் ப்பூல்” சொல்லி எக்காளம்போட்டு சிரிப்பதுபோன்ற தோற்றப்பாடு மனதில் உங்களுக்கும் தோன்றுகின்றது அல்லவா?

அடுத்த பார்வையாக ஏப்ரல் முதலாம் திகதியான முட்டாள் தினம் மக்களுக்கான ஒரு வழிப்புணர்வாக கொள்ளப்படவேண்டிய ஒரு நாளாக முக்கியமாக கொள்ளலாம். கிட்டத்தட்ட சத்தியங்கள், நியாங்கள், நேர்மைகள் என்பன 80களின் நடுப்பகுதியில் இருந்தே இந்த உலகில் இருந்து முழுமையாக துடைத்தெறியப்பட்டு விட்டன. இன்றைய உலகம் அரசியல், மற்றும் பெருவர்த்தகம் சார்ந்ததாக முழுமையாக மயப்படுத்தப்பட்டே சுற்றிக்கொண்டிருக்கின்றது.
இரண்டுக்குமே தேவை நிறையவான நிறைய ஏமாளிகளே!
உண்மையில் இன்றைய நிலையில் உலகலாவிய வர்த்தக, அரசியல்களால் இன்று நாம் கிட்டத்தட்ட முக்கால்வாசி ஏமாளிகள் ஆக்கப்பட்டுவிட்டோம் என்பதே உண்மை.
எனவே இந்த நிலையில் எம்மைசசுற்றி அனைத்தும் எம்மை முட்டாள்கள் ஆக்கும் செயற்பாடுகளின் அஜன்டாக்களே என்று எம்மை சுதாகரிததுக்கொள்ள இந்த முட்டாள்கள் தினத்தை நாம் எமக்கான வழிப்பணர்வு நாளாக கொள்வதே சாலப்பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

குறிப்பு – எந்த விதமுன்னறிவுப்பும் இல்லாமல் கடந்த 24 நாட்களாக பதிவு பக்கம் வராது, பதிவிடாது. நண்பர்களுக்கு பின்னூட்டம் இடாது இருந்தமைக்கு அனைத்து பதிவுலக நண்பர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.
தொழில் மாற்றம், அதிகளவிலான தொழில் விடயங்கள், செம்மையாக்கல்கள், பயிற்சிகள் என்பன இருந்தமையினால், இதனால் இரவும் இருந்து அந்த வேலைகளை செய்து முடிக்கவேண்டிய கடமைப்பாடுகள் கூடியதால் பதிவுப்பக்கத்தை நினைக்கவே முடியாது போய்விட்டது என்பதே உண்மை.
எனினும் இன்று முதல் வாரத்தில் 4 பதிவுகளைவுகளையாவது எழுதுவதற்கு முயற்சிப்பதாய் எண்ணியுள்ளேன். அதேவேளை பதிவுலக நண்பர்களின் பதிவுகள் அனைத்தையும் வாசித்து. பின்னூட்டம் இடுவதற்கு சில சமயம் தாமதங்கள் ஏற்பட்டால் பெருந்தகையோர் மன்னிக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றேன்.
அனைவருக்கும் என் நன்றிகள்.

25 comments:

சக்தி கல்வி மையம் said...

என்னாச்சு...

சக்தி கல்வி மையம் said...

வாங்க..வாங்க..

சக்தி கல்வி மையம் said...

உங்களுக்காக பதிவுலகம் வெயிடிங்..

சக்தி கல்வி மையம் said...

மறுபடியும் கலக்குங்க...
வாழ்த்துக்கள்..

Unknown said...

வாங்க வாங்க

Unknown said...

//நண்பர்களுக்கு பின்னூட்டம் இடாது இருந்தமைக்கு அனைத்து பதிவுலக நண்பர்களிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன்.//
மன்னிப்பு கிராண்டட்

MANO நாஞ்சில் மனோ said...

///ஏப்ரல் மாதத்தின் முதல் நாள் முட்டாள்கள் தினம் என்று சிறுவயது முதல், ஏமாற்றியதைவிட, அதிகம் ஏமாந்து அசடுவழிந்தது என்போன்றவர்களுக்கு அதிகமாக நடந்திருக்கும்.//

ஹா ஹா ஹா ஹா நீங்களும் நம்மளை போலதானா....

Chitra said...

கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய வர்த்தக மற்றும் அரசியல் மயப்பட்ட வாழ்க்கையிலேயே நாம் நாளாந்தம் எப்ரல் ஏமாளிகளாக இருந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.


.... :-(

தமிழ்வாசி பிரகாஷ் said...

வாங்க வணக்கம்....


எனது வலைப்பூவில்: நமீதா குளியல் வீடியோ TVயில் ஒளிபரப்பு! (18+)

shanmugavel said...

தங்கள் வரவு நல்வரவாகுக!

தமிழ் உதயம் said...

கடமைப்பாடுகள் கூடியதால் பதிவுப்பக்கத்தை நினைக்கவே முடியாது போய்விட்டது என்பதே உண்மை.;///

கடமையே முக்கியம்

Ramesh said...

மீள் வருகைக்கு நன்றியும் வணக்கமும்.
அறிந்துகொண்டோம்...
... சேர்ந்துகொண்டாடுவோமே...

tamilbirdszz said...

இந்த பதிவு என்னை சிந்திக்க வைச்சு இருக்கு சிறப்பாக இருக்கு.

நிரூபன் said...

கடந்த 24 நாட்களாக பதிவுகளுக்காக கணணிக்கு முன்னால் வந்து உக்கார முடியவில்லை. திரும்ப எழுத தொடங்க நம்மளைப்பற்றிய விசேட நாள் ஒன்று வராதா என்று ஏங்கிக்கொண்டிருந்த வேளையில்த்தான் இன்றைய நம்மநாளில் மீண்டும் எழுதத்தொடங்குவது என்ற திடசங்கர்ப்பம் பூண கொஞ்சம் நேரமும் தைரியமும், உரிமையும் வந்திடிச்சு//

எல்லோருக்கும் ஏப்ரல் 1 தான் ஏப்ரல் பூல், ஆனால் உங்களுக்கு 23ம் திகதி தொடங்கி இன்று வரை ஏப்ரல் பூலோ என்று நினைத்து பயந்து விட்டேன்.

நிரூபன் said...

கொஞ்சம் ஆழமாக சிந்தித்துப்பார்த்தால் இன்றைய வர்த்தக மற்றும் அரசியல் மயப்பட்ட வாழ்க்கையிலேயே நாம் நாளாந்தம் எப்ரல் ஏமாளிகளாக இருந்துகொண்டிருப்பது மறுக்கமுடியாத உண்மை என்பதை புரிந்துகொள்ளமுடியும்.
சாதாரணமாக காலைக்கொள்வனவு முதல், அரசியல்வாதிகளின் பேச்சுக்கள், தேர்தல் வாக்குறுதிகள் என்று தொடர்ந்து ஏமாற்றப்பட்டுக்கொண்டுதானே இருக்கின்றோம்!!//

தமிழர்களைப் பொறுத்தவரை, இ.வா களைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும் ஏப்ரல் பூல் தான். அருமையான சிந்தனை.

நிரூபன் said...

மீள் வருகை சந்தோசம், தொடர்ந்தும் கலக்குங்கோ.

ம.தி.சுதா said...

வாங்கோ வாங்கோ.. எதிர் பார்த்திரக்கோமுல்ல... சூடு பறக்கட்டும்...

ம.தி.சுதா said...

எனக்கென்றால் நிங்க நாள் பார்த்து வந்த மாதிரியல்லவா இருக்கு (சும்மா ஒரு ஸ்பெசலுக்குத் தான்..)

சித்தாரா மகேஷ். said...

அண்ணா நேற்று தங்களை வாழ்த்த முடியவில்லை.sorry for the late wishes.ஹ ஹ ஹ ஹா......

Unknown said...

வெல்கம்...

test said...

ஒரு நல்ல நாள்ல திரும்பி வந்திருக்கீங்க! வாழ்த்துக்கள்! :-)

மாதேவி said...

வாருங்கள் நல்வரவு.

Unknown said...

// “உலக சமான்ய பொதுமக்கள் தினம்”//

ஆகா... அற்புதமா சொன்னீங்க..

Unknown said...

உங்கள் தொழில் சிறப்பதற்கான பணிகளை பாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம், நல்ல புரிதலோடு..

Unknown said...

உங்கள் தொழில் சிறப்பதற்கான பணிகளை பாருங்கள். நாங்கள் காத்திருக்கிறோம், நல்ல புரிதலோடு..

LinkWithin

Related Posts with Thumbnails