'எதையும் பிளான் பண்ணி செய்யணும்' என்று போக்கிரி திரைப்படத்தில் வடிவேலு சொல்வது நகைச்சுவைக்காட்சி என்றாலும் அது எவ்வளவு சீரியஸான விடயம் என்பதையும் அந்த சிரிப்பின் ஊடே நாம் நினைத்துக்கொண்டோம் அல்லவா?
அன்றாடம் நாம் ஓய்வின்றி தூக்கமின்றி உழைக்க விளைவது வெளிப்படையாகச்சொன்னால் பணத்திற்காகத்தானே!
அப்படி என்றால் நாம் உழைக்கும் பணத்தை பற்றி எமக்கு என்ன பிளான் உள்ளது. அந்த பணம் எமக்கு எவ்வாறான விதத்தில் இலாபங்களை, உயர்வை சம்பாதித்து தரப்போகின்றது என்ற திட்டத்துடன் உழைப்பவர்களா நீங்கள்?
இன்றைய பெரும்பாலான இளைஞர்கள் தமது ஊதியம் தொடர்பில் எந்தவொரு பிளானும் இல்லாமலேயே செயற்பட்டுக்கொண்டிருப்பது தெரிகின்றது.
நான்கூட இதுபற்றி சில நண்பர்களிடம் கேட்டபோது 'என்ன பிளான் வேண்டிக்கிடக்கு எடுக்கும் சம்பளத்தில் 30 நாளையே ஓட்டுவது கஸ்டமாக உள்ளது என்று சலித்து கொள்கின்றனர்.
அனால் மறுபுறத்தே தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் நாளை என்ற ஒன்றை அடிப்படையாக வைத்தே தமது சேமிப்பு, முதலீடு, காப்புறுதி, மற்றும் பங்கு பரிவர்த்தனைகள் என்பவற்றில் பணத்தை போடுகின்றனர்.
அத்தோடு நிலத்திலும் தங்கத்திலும் தமது பணத்தைப்போட்டு இலாபத்தை ஈட்ட நினைப்பவர்களும் இப்போது அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த பெரிய விடயங்கள், பெருமெடுப்பிலான பண முதலீடுகள், தொன் கணக்கிலான தங்கமுதலீடுகள், இலட்சக்கணக்கான பங்குகளை வாங்கி விற்றல், கோடிக்கணக்கான காப்புறுதியை பெறல் போன்றவற்றை பின்னர் விரிவாகப்பார்ப்போம்.
இப்போது நாம் பார்க்கப்போகும் விடயம் ஜஸ்ட் எங்கள் மாதாந்த வருமானத்தைக்கொண்டு எங்கள் பணத்திட்டத்தை இடுவதைப்பற்றித்தான்.
இன்றே நமது என்று சொல்லிக்கொள்ளும் தைரியம்.
நாம் அனைவரும் வேலை செய்கின்றோம் உழைக்கின்றோம், அதற்கான வருமானத்தை பெற்றுக்கொண்டிருக்கின்றோம். ஆனால் எம்மில் பலபேர் அன்றாடம் காட்சியாக இருக்கின்றோம். அதற்கு மிகப்பெரும் முக்கிய காரணம் நமது மனம்தான். எம் எண்ணங்கள் எமக்கு மணி மனேஜ்மன்ட் பற்றி இடைக்கிடை பாடங்களை எடுத்தாலும்கூட மனம் அதை கேட்டுக்கொண்டிருப்பது இல்லை.
எடுக்கும் சம்பளத்தை ஒரு பைசா மிச்சமில்லாமல் அந்த மாதத்தை கொண்டு செல்பவர்களே தோற்றுப்போனவர்கள் என்றிருக்க இன்னொரு வர்க்கத்தினர் 15ஆம் திகதியுடனே கைகடிக்க தொடங்குபவர்களாகவும் இருக்கின்றனர்.
இது ஆரோக்கிமானது அல்ல என்று அவர்களுக்கும் தெரியும் ஆனால் இப்போதுதான் நான் அப்படி ஆனால் நாளை நமதே என்று சொல்லிக்கொள்பவர்கள் பலர் நம்முள் உண்டு.
நாளை நமதே என்பது எம்.ஜி.ஆருக்கு மட்டுமே பொருத்தமானதாக இருக்கும் ஏன் என்றால் நாளை நமதே என்று எம்.ஜி.ஆர். பாடும்போது இன்றே 99 வீதம் அவர் கையில் இருந்தது மீத ஒரு வீதத்திற்காகவே அவர் நாளை நமதே என்றார். நாம் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியுமா?
பலருக்கு வங்கிக்கடன், கிரடிட்காட், எல்லாம் இருக்கும், ஆனால் மந்திலி இன்கம் பிளான் அறவே கிடையாது. வங்கி, வீட்டு, வாகன கடன்களை கட்டுவதிலும், கிரடிட்காட் கடன்களை கட்டுவதிலும் அவர்கள் படும் அல்லல்களை நாம் எம் கண்ணுர்டே கண்டிருக்கின்றோம்.
முக்கிமாக கடன் என்பது எமது எல்லை என்ன? எமது மீளளிப்பு நிலமை என்ன? மீளளிப்புக்கு போதுமான காலப்பகுதியா? என்பற்றை கணித்தே பெற்றுக்கொள்ளவேண்டும். இவற்றை கருத்திற்கொள்ளாதுவிடின் கண்டிப்பாக திண்டாட்டங்கள் தொடரும்.
சரி... இந்தக்கட்டுரை வாசிப்பவர் யாரோ ஒருவருக்காவது பிரயோசனமாகி அவர் இந்த நிதி திட்டத்தை பின்பற்றினால் அதுவே என் திருப்தி.
நீங்கள் மாத வருமானம் 3000 ரூபா எடுப்பவராகவும் இருக்கலாம் 300,000 அல்லது அதற்கு மேல் எடுப்பவராகவும் இருக்கலாம்.
இதோ நீங்கள் செல்வந்தர் ஆவதற்கான மார்க்கங்கள் அல்ல, எப்போதும் பணக்கஸ்டம், சந்தோசம், தைரியம், நிதி ஸ்தரத்தன்மை தரப்போகும் மந்திரத்தை கற்றுக்கொள்ளப்போவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.
முடிந்தவரை படு ஸ்ரிக்காக இந்த திட்டங்களை உங்களுக்கு உகந்ததாக படுபவற்றை, அல்லது அத்தனை திட்டங்களையும் அடுத்த ஜனவரியில் புது வருடத்தில் இருந்து அமுலுக்கு கொண்டுவாருங்கள்.
எப்போதும் உங்கள் கை நிறைவானதாகவே இருக்கும்.
திட்டம் 01. கட்டாய சேமிப்பு.
உங்கள் வருமானம் உங்களுக்கானதே அதில் எந்த மாற்றுக்கருத்தும் கிடையாது. ஆனால் மாத வருமானம் அந்த மாதத்திற்கு மட்டுமானது அல்ல.
மாத வருமானம் என்ற பெயரையே பலர் தவறாக புரிந்து வைத்திருப்பதே சேமிப்புக்கள், இல்லாதுபோவதற்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன.
முனதில் திடமான ஒரு முடிவை எடுத்துக்கொண்டு புதிதாக ஒரு சேமிப்புக்கணக்கினை சிறந்த வங்கியில் திறந்துகொள்ளுங்கள், கண்டிப்பாக தயவு செய்து, ஏ.ரி.எம். கார்ட் அந்த கணக்கிற்கு வேண்டவே வேண்டாம்.
மாதம் உங்கள் வருமானத்தில் 30 வீதம் இந்த கணக்கில் கண்டிப்பாக விழுந்தே ஆகவேண்டும். அது எந்த கஸ்டம் வந்தாலும் பறவாய் இல்லை என்ற திடமான முடிவை எடுங்கள், இரண்டு ஒரு மாதங்கள் கஸ்டப்பட்டாலும் மூன்றாவத மாதத்தில் இருந்து பழக்கமாகிவிடும்.
உங்கள் அலுவலகத்தில் குறிப்பிட்ட இந்த 30 வீதத்தை மேற்படி வங்கி கணக்கிற்கு செலுத்தும் வசதி தொழில் தருணரிடம் இருந்தால் மேலும் சிறப்பானதாக இருக்கும்.
அத்தோடு. உங்களுக்கு கிடைக்கும் போனஸ்கள், மேலதிக வருமானத்தில் ஒரு பகுதி, ஊக்குவிப்பு கொடுப்பனவுகளை கழியாட்டங்களை கொண்டாடி பாழ்படுத்தாமல் இந்த கணக்கிற்கு தள்ளிவிடுங்கள்.
உங்கள் கண்முன்னாலே உங்கள் கணக்கில் பணம் ஏறிக்கொண்டிருப்பதை குறைந்தது மூன்று மாதத்தில் இருந்து நீங்கள் அவதானிக்க முடியும்.
முpக மக்கிமானது இந்த செமிப்பு ஒவ்வொரு இலட்சத்தை அடையும்போதும் உடனடியாக எடுத்து குறைந்தது மூன்று மூன்று கால நிரந்தர வைப்பு திட்டத்தில் இட்டுக்கொண்டிருங்கள். எந்தக்காரத்திற்காகவும் இப்போது எடுப்போம் பிறகு போடுவோம் என்ற சாத்தானின் தூண்டுதலுக்கு இங்கே ஆட்பட்டு விடாதீர்கள்.
அடுத்த கட்டமாக இன்னும் பணம் சேரத்தொடங்கியவுடன் சுமாராக ஒன்றரை வருடத்தில் இரண்டு இலட்சம் என்று வைத்துக்கொள்ளுங்கள், நிரந்தரவைப்புடன், வங்கி சேமிப்பு சான்றிதழ் ஒன்றையும் பெற்றுக்கொள்ளுங்கள், அவசர நேரங்களில் இந்த சான்றிதழ் உங்களுக்கு வங்கி கடன் (உங்கள் பணத்தை மிள எடுக்காமலே) எடுக்க ஏதுவானதாக இருக்கும்.
எனக்கு தெரிந்த ஒரு நண்பர் இருக்கின்றார். அவரும் எம்.பி.ஏ பட்டம் பெற்றவர்தான். சேமிப்பு கணக்கு புத்தகங்கள் அத்தனை வங்கியிலும் வைத்திருக்கின்றார். முதலில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது எல்லா வங்கி புத்தகங்களையும், ஏ.டி.எம் களையும் வைத்திருக்கவேண்டும் என்ற ஆசையினால்தான் அப்படி அடுக்கி வைத்திருக்கின்றார் போல என்று நான் நினைத்திருந்தேன்.
ஆனால் அவரது திட்டமோ வேறு விதமாக இருந்தது. அவரது சம்பளம் வர ஒரு புத்தகம், அன்றாட செலவுகளுக்கு ஒரு புத்தகம், குடும்ப மருத்துவத்திற்கு ஒரு புத்தகம், கல்விச்செலவுக்கு ஒரு புத்தகம், மனைவிக்கு, உணவுக்கு, கழியாட்டங்களுக்கு, உடைகள் கொள்வனவுக்கு, இப்படி என ஒவ்வொரு தேவைக்கும் செமிப்பு தவிர்ந்த பணத்தை இவ்வளவுதான் என்ற திட்டத்துடன் பிரித்து பிரித்து சம்பள நாளே போட்டுவிட்டு, தனது பேர்சில் சிறு தொகை பணத்தையே வைத்துக்கொண்டு அனைத்தையும் குறிப்பிட்ட கணக்குகளின் வங்கி காட்களையே பயன்படுத்தி வருகின்றார். இதன்மூலம் தன் பணச்செலவுத்திட்டம் பெருமளவு குறைந்ததாகவும் தான் சேமிக்க கூடியதாக இருப்பதாகவும் கூறினார்.
ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமாகுமோ தெரியாது.
திட்டங்கள் தொடரும்...
9 comments:
திட்டம் அருமையாகத்தான் இருக்கிறது,சேமிப்பை பற்றி யாரும் சீரியசாக ஜோசிக்காத சந்தர்ப்பத்தில் இப்பதிவு அவசியமாகிறது.என்ன தான் வருமானம் எடுத்தாலும் சேமிப்பு தான் எதிர்கால நல்ல வாழ்க்கைக்கு அத்திபாரம்.முப்பது வீதம் என்பது சிறிது கடின மன உறுதியோடு முயன்றால் உண்மையில் ஒன்று இரண்டு வருடத்தில் ஒரு பெரிய தொகை ஒரு பக்கத்தால் வளர்வது உறுதி தான்!தொடரட்டும் பதிவு!!!
நல்லா இருக்கே.. இருந்தாலும் நாங்க கஸ்டபட்டுத்தான் ஆரம்பிக்கணும்.
திட்டங்கள் தொடர்கவே
மிக பயன் உள்ள பதிவு பாஸ்... இப்போது சேமிப்பு அவசியம்... நானும் உங்கள் பதிவில் இருந்து நிறைய கற்றுக்கொள்கிறேன்.... தொடருங்கள் தொடர்கிறேன்..... :)
பதிவு அருமை அண்ணே! நானும் பகிர்ந்திருக்கன். அண்ணே உங்களாளையும் எல்லாம் முடியும்.. கலகலப்பா ஒரு சிரிப்பு பதிவு போடுங்க...
ஓரளவுக்கு இந்த பிளானை நான் நடை முறைபடுத்தி வந்திருக்கிறேன். இதுவரை முடிந்தது, இனிமேல் பார்ப்போம், தொடர முடிந்தால் மகிழ்ச்சியே.....
கலக்கல் பாஸ்!
ம்ம்ம்...பிளான் பண்ணனும்!
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
என் பெயர் ஃபெடரிகோ கில்லர்மோ Varas
நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் என ஒரு தொழிலதிபர், நான் பெற முடிந்தது என் கடன் இருந்து இந்த அமைப்பு மூலம் சர்வதேச வளர்ச்சி வங்கி
மீட்சி வங்கி கடன் திட்டத்தை வழங்குகிறது கடன் வர்த்தகர்கள் மற்றும் பெண்கள் தயாராக யார் ஒரு கடன் விண்ணப்பிக்க.
$ 100,000 ஆயிரம் டாலர்கள் $ 500,000 ஆயிரம் டாலர்கள், தனிநபர் கடன்கள்,
$400 மில்லியன் $ 800 மில்லியன் கடன் கடன் வணிக கடன்கள்
வாகன காப்பீடு கடன் மற்றும் மிகவும்
தொடர்பு: zechkovivan@mail.ru
அல்லது greskychanosky@post.cz
வந்து ஒரு வரும் அனைத்து
Post a Comment