பொதுவாக தியரிகள் என்றாலே அவை சிக்கலானவைதான். ஆனால் தியரிகள் பற்றி கற்க கற்க, அவற்றைப்பற்றி அறிந்து, யதார்த்த வாழ்வின் ஒவ்வொரு செயல்களுடனும் ஒப்பிட்டு உற்று நோக்கும்போது நாம் செய்யும் சிறு செயல்கள் கூட ஒரு அதிசயமான விடயமாகவும், உலகின் பாரிய மாற்றங்கள்கூட சிறு துரும்புபோன்றதாகவும் கூட தென்படவாய்ப்புக்கள் உண்டு.
இவ்வாறான குவான்டம் தியரி, ரிலேட்டிவிட்டி தியரி, ஹெயாஸ்தியரி, போன்ற பல தியரிகள் தொடர்பான விடயங்களை நீங்கள் கண்டிப்பாக அறிந்தோ, கேள்விப்பட்டோ இருப்பீர்கள்.
இந்த வகையில் கொன்ஸ்பிரஸி தியரி ஒரு வகையில் சுவாரகசியமான ஒன்றுதான். வெளிப்படையாக கூறப்படும் ஒரு நிகழ்வு, ஒரு அனர்த்தம், வரலாறு, சம்பவம் என்பவற்றின் உள்ளே நடந்திருக்கும், ஆனால் உலகத்தின் பார்வையில் மறைக்கப்பட்டிருக்கும் விடயங்களை (சதிகளை) பெரும்பாலும் ஆதாரங்கள் அற்று, ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு ஊகத்தின் அடிப்படையில் விவாதிப்பதே கொன்ஸ்பிரஸி தியரி என்று சொன்னால் ஒருவிதத்தில் அது சரியானதே.
தற்கால நிகழ்வுகள், அரசியல் அமைப்புக்கள், ஆட்சிமுறைகள், யுத்தங்களின் நோக்கங்கள், நிர்வாக நடைமுறைகள், வினோதங்கள், அமானுச சக்திகள், விஞ்ஞான முடிவுகள், மருத்துவம், ஊடகம் என பல துறைகளின் உள்ளேயும் இந்த கொன்ஸ்பிரஸி தியரி தாராளமாகவே ஊடுருவிவிட்டது என்பதே தற்கால யதார்த்தம். ஒரு வகையில் கடந்த மே மாதம் 17ஆம் திகதிமுதல் உலகத்தமிழர்கள் அனைவர் மத்தியிலும் இந்த கொன்ஸ்பிரஸி தியரி தாராளமாகவே தனது வேலையினை காட்டத்தொடங்கி தற்போதும் அது தொடர்கின்றது என்பது வேறுகதை.
சில உலக நடைமுறைகள், புதிய கண்டுபிடிப்புக்கள், உலக பரப்புரைகள், இயற்கை அனர்த்தங்கள் பற்றி கொன்ஸ்பிரஸி தியரி, இவைகள் வெளிப்படையாக தெரிபவையாக இருந்தாலும், உலக மக்களின் பார்வையினை மாற்றுவதன் நோக்கமாக அதன் உள் விடயங்கள், சில சதிகள் மூலம் பொய்யாக வழங்கப்படுகின்றன. சில செயல்களின் பின்னால் சதிகள், பொய்கள், மறைப்புக்கள் உண்டு, என தொடர்ந்து விவாதித்து வருகின்றன.
இதேவேளை உலகத்தில் பிரபலமடையவும், உலக மக்களின் சீரான பாதையினை குழப்பவும், நாசவேலைகளை புகுத்தவும், மக்களின் மனங்களை சலனமடையச் செய்யவும் சிலர் இந்த கொன்ஸ்பிரன்ஸி தியரியை கையில் எடுத்து சதி செய்கின்றனர் என அதற்கெதிரான குற்றச்சாட்டுக்களும் இல்லாமல் இல்லை.
சரி இன்றைய உலகில் முக்கியமான சில சம்பவங்களுடன் இந்த கொன்ஸ்பிரன்ஸி தியரி சித்தரிக்கும் உண்மைகளை ஆராய்ந்துபார்ப்போம்.
உலகம் வெப்பமயமாதல்; என்பதில் உள்நோக்கம்.
இன்று உலகம் வெப்பமடைகின்றது, சுழல் பாரிய அளவில் மாசடைந்துசெல்கின்றது, இதன் மூலம் காலநிலையில் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கிவிட்டன, பூமி வெப்பமாதலினால், வடதுருவத்தில் பனிக்கட்டி உருகுதல் முதல் பல்வேறு இயற்கை அனர்த்த ஆபத்துக்கள் தோன்றிவிடும், எனவே உலக வெப்பமடைதலை உடனடியாகத் தடுத்து நிறுத்தவேண்டும் என வளர்ச்சியடைந்த நாடுகள் இன்று துள்ளிக்குதிப்பதை அவதானித்திருப்பீர்கள். உண்மைகளை சற்று ஆழமாக சிந்தித்துப்பாருங்கள், பூமி வெப்பமடைதலுக்கும், ஓசோன் ஓட்டை விழுந்ததற்கும், இயற்கைக்கு முரணாக செயற்பாடுகளை செயற்படுத்திப்பார்த்தவர்களும் இந்த அபிவிருத்தி அடைந்த முதலாம் உலக நாடுகளே.
தங்கள் வேலைகள் அனைத்தையும் பக்காவாக செய்து முடித்தபின்னர் இன்று, பூமி வெப்பமாகிவருவதும், காலநிலை மாற்றும் இயற்கை அனர்த்தங்கள் என்பன அவர்களின் கண்களில் படுகின்றன.
பூமி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணமானவர்களே முதலாம் உலக நாடுகளே, அனால், தங்கள் தேவைகள் அனைத்தையும் செய்துவிட்டு, இன்று மூன்றாம் உலக நாடுகளின் முன்னேறத்தை தடுக்கும் ஒரு கபடநோக்க எண்ணமாகவே அவர்கள் இந்த பூமி வெப்பமாதல் என்ற பதத்தினை தூக்கிப்பிடித்து, அவர்களை கிடுக்குப்பிடி பிடித்து பல ஒப்பந்தங்களை செய்து, அவர்களின் தொழில் வளர்ச்சி, அணுத்திறன்களை தடுக்கின்றார்கள் என தற்போது கொன்ஸ்பிரன்ஸி தியரியை கொண்டு பல அறிஞர்கள் மற்றய பக்கத்தினை தெளிவுபடுத்திவருகின்றனர்.
அண்மைக்கால நிகழ்வுகள். ஒப்பந்தங்கள், முதலாம் உலக நாடுகளின் மூன்றாம் உலக நாடுகள் மீதான அழுத்தங்களை மிக அவதானமாக ஒரு தடவை கவனித்துப்பாருங்கள் இந்த விவாதங்களிலும் உண்மை இருப்பதுபோலத்தான் தோன்றும்.
2004 சுனாமி தாக்கம் இயற்கையானது இல்லை.
2004ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட சுனாமித்தாக்கம் இயற்கையாக கடலடித்தடத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் உருவானதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சுனாமித்தாக்கம் காரணமாக இந்தோனேசியா, இலங்கை, போன்ற பல நாடுகளில் பெரும் உயிர்சேதங்களும், பொருட்சேதங்களும் உண்டாகியிருந்தன.
எனினும் இந்த சுனாமித்தாக்குதல் இயற்கையானது இல்லை எனவும், கடலடித்தளத்தில், பரீட்சித்துப்பார்க்கப்பட்ட ஒரு அணுகுண்டுப்பரிசோதனையோ, அல்லது சக்திமிக்க இரு வாயுக்களை சேர்த்து பரிசீலனை செய்யப்பட்டதாலோதான் இந்த சம்பவம் உண்டானதாக கொன்ஸ்பிரஸி தியரியின்படி அடித்து வாதாடிவருகின்றார்கள் பல அறிஞர்கள்.
இதற்காக காத்திரமான பல எடுத்துக்காட்டுக்களையும், சான்றுகளையும் அவர்கள் காட்டியுள்ளனர். அதாவது 1997ஆம் ஆண்டு அமெரிக்க சி.ஐ.ஏ. உயர் அதிகாரி ஒருவர், கடலின் அடிப்பரபில் சக்தி மிக்க குண்டுகளை வெடிக்கவைத்து நாசகார வேலைகளை செய்யும் அழிவுக்கு தற்போது உலகநாடுகளில் பயங்கரவாத அமைப்புக்களும் விஞ்ஞானத்தில் முன்னேறிவிட்டார்கள் என கூறியதை தொட்டுக்காட்டியுள்ளர் கொன்ஸ்பிரஸி தியரிக்காரர்கள். அதாவது இவரது கூற்று நிரூபிப்பது என்னவென்றால் கடலின் அடித்தளங்களில் மிகச்சக்தி மிக்க வெடிப்புக்களை உண்டாக்கக்கூடிய கண்டுபிடிப்பு உள்ளது என்பதும், அதனால் அழிவுகள் நிற்சயம் என்பதும் ஆகும். தங்கள் வசம் அதை ஏற்கனவே கொண்டுள்ளதனால்த்தான் அவரால் இவ்வாறு ஒரு அறிக்கையினை விடுக்கமுடிந்திருந்தது என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை 1944 மற்றும், 1945ஆம் ஆண்டுகளில் அமெரிக்கா தென் பசுபிக் கடலடித்தளத்தில் நடத்திய அணுகுண்டு பரிசோதனையினை அடுத்து நியூசிலாந்தை இராட்சத அலைகள் தாக்கிய சம்பவத்தையும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் இறங்கியது பொய்.
20ஆம் நாள், ஜூலை மாதம், 1969 ஆம் ஆண்டு, புஸ் அல்ரின், மைக்கெல் கொலின் மற்றும் நீல் ஆம்ஸ்ரோங் ஆகியோர் சந்திரனை நோக்கி பயணித்த அப்பல்லோ 11 அண்டவெளி ஊர்தி, சந்திரனை தொட்டதாகவும், அன்றைய தினம் அதில் நீல் ஆம்ஸ்ரோங் முதன்முதலாக கால் அடி எடுத்து சந்திரனில் வைத்ததாகவும், பின்னர் அவர்கள் மூவரும் சந்திரனில் இருந்து பூமியை கண்டு படமெடுத்ததாகவும் பின்னர் அங்கு அமெரிக்க கொடியினை நட்டு தமது பயண வெற்றியை கொண்டாடிவிட்டு. பூமி திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஆனால் 1969ஆம் ஆண்டு சந்திரனை அடையக்கூடிய அத்தனை துல்லியமான வசதிகள் இருந்திருக்கவே இல்லை எனவும், இது ஒரு ஜோடிக்கப்பட்ட கதை எனவும், உலக மக்கள் அனைவருமே முட்டாள்களாக்கப்பட்டுவிட்டனர் எனவும் கொன்ஸ்பிரஸி தியரிகள் அடித்துச்சொல்கின்றன.
சந்திரனின் எடுத்தவை என வெளியிடப்பட்ட புகைப்படங்களை வைத்தே இவை சந்திரன் இல்லை. சந்திரனைப்போல ஜோடிக்கப்பட்ட ஒரு இடத்தில் இவை எடுக்கப்பட்டன. எனவும் சந்திரனின் பள்ளங்களை அடிப்படையாக வைத்தும், அதேவேளை காற்றழுத்தம் குறைந்து காற்று வீசவே முடியாத இடத்தில் அமெரிக்க கொடி மட்டும் எப்படி பறப்பதுபோல தோன்றுகின்றது என்ற மிகப்பெரிய கேள்வியையும் கொன்ஸ்பிரஸி தியரி கேட்கின்றது.
செப்ரெம்பர் 11 தாக்குதல் எதிர்பாராதது அல்ல.
செப்ரெம்பர் 11 ஆம் திகதி 2001ஆம் ஆண்டு அமெரிக்க இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் சம்பமானது, திட்டமிட்டே அமெரிக்காவினாலேயே நடத்தப்பட்டதாகவும், இதன் மூலம் பல நாடுகளின் உள் விடயங்களில் அமெரிக்கா தலையிட எண்ணியதாகவும் கொன்ஸ்பிரஸி காரர்களின் வாதங்களில் இதுவும் ஒன்றாக உள்ளது.
அதாவது இந்த தாக்குதல் அமெரிக்காவால் எப்போதோ தீர்மானிக்கப்பட்டதாகவும், திட்டமிட்ட வகையில் இந்த தாக்குதல் நடைபெறுவதற்கு முன்னதே இதற்கான ஆயத்தங்களை அமெரிக்க மெல்ல மெல்ல ஆரம்பித்துவிட்டதாகவும் மேலும் கூறப்படுகின்றது.
அதாவது, குறிப்பிட்ட தினத்தில், அந்த இடத்தில் அதிக மக்கள் வராது இருப்பதற்கான நடவடிக்கைகளை ஆறு மாதங்களின் முன்னதாகவே இரகசியமான முறையில் செயற்படுத்த தொடங்கப்பட்டதாகவும் அடுத்து, விமானம் மட்டும்மோதி, ஒருபோதும் முழுக்கட்டமும் இப்படி சாம்பலாக விழுந்து நொருங்காது எனவும், விமானமோதுகையுடன் உள்ளேயும் சக்திமிக்க குண்டுகள் முன்னதாகவே வைக்கப்பட்டு வெடிக்கச்செய்யப்பட்டுள்ளன எனவும், இத்தனை மாடித் தட்டுக்களை கொண்டிருந்த கீழ்த்தளம் எவ்வளவு பலமானதாக இருந்திருக்கவேண்டும், விமானத்தாக்குதல் காரணமாக ஒருபோதும் பலமிக்க உறுதியான கீழ்த்தளம் கடதாசி அட்டைபோல மடிந்துவிடமுடியாது எனவும் தொடர்ந்தும் வாதிட்டுவிருகின்றார்கள்.
ஆகவே தியரிகள் சில குழப்பங்களை உண்டாக்கினாலும் சிலவேளைகளில் அவை உண்மைகளாகக்கூட இருக்கும், நான் முன்னதாவே சொன்னதுபோல கொன்ஸ்பிரஸி தியரி சுட்டிக்காட்டும் முறைகளும், சதிகளின் புலனாய்வும் அறிவதற்கு ஆர்வத்தையும், சுவாரகசியத்தையும் கூட்டுகின்றதல்லவா? அவை முழுவதையும் உங்களுடன் பகிர ஆசைப்படுகின்றேன், எல்லவற்றையும் ஒரே பதிவில் தந்தால் என்ன நீளமாக இருக்கின்றதே என பலர் வேறு தளங்களுக்கு சென்றுவிடவும் கூடும் எனவே நீங்கள் நினைத்துப்பார்க்காத, முழுமையாக நம்பும் பல விடயங்களும் பொய் என்று கொன்ஸ்பிரஸி தத்துவங்கள் அடித்துச்சொல்கின்றன.
அது பற்றியும் அடுத்த பதிவில் தொடராகப்பார்ப்போம்.
சதிக்கோட்பாடுகள் தொடரும்..
7 comments:
ஆங்கிலத்தில் Chance இல்ல
தமிழில் மிக எளிமையான அழகான விளக்கம்.
தொடர்ந்து இதை போல் சிக்கலான் தியரியை பற்றி எழுதவும்.
நன்றி
அருமையான ஒருபதிவு நண்பரே. தொடர்ந்தும் எழுதுங்கள். பதிவுலகத்தில் இதுபோல சில பதிவுகளும் இப்போது காலத்தின் தேவை. பாராட்டுக்கள்.
நன்றாககைருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்
அருமையான தியரி தகவல்கள் ஜனா. கான்ஸ்பிரஸி பற்றி நான் முன்னரும் கேள்விப்பட்டிருந்தேன். தமிழில் அதற்கான தகவல்கள் இல்லை. ஆனால் தாங்கள் இதுகுறித்து விரிவாக எழுதியுள்ளமை முழுப்பாராட்டிற்கும் உரிய விடயமாகும்.
இதேவேளை இந்த கான்ஸ்பிரஸி தத்துவத்தை ஒருசிலர் தமது புகழ் மற்றும் பிரபல நோக்கங்களுக்காக பயன்படுத்திவருவதும் வேதனையானதே. பைத்தியக்காரத்தனமான கான்ஸ்பிஸ்ஸி காரர்களும் உண்டு, நல்ல உதாரணம் சுப்பிரமணிசுவாமிவாள்.
இந்த தியரி பற்றி ,இதை எழுதியவர்கள் பற்றி நல்லதா கூடாதா என்ற வதத்தை விடுத்து நீங்கள் கூறிய உதாரணங்களில் கடந்த மே மாதம் 07 நம் இனத்துக்கு நடந்ததை பார்க்கும் போது conspiracy theory யை முழுமையாக எல்லோரும் ஏற்க வேண்டும்.எனக்கு பிடித்த தியரி சந்திரனில் நீல் ஆம்ஸ்ரோங் இறங்கிய பொய் தான்.conspiracy theories பற்றி முழுமையாக அறிந்தால் ஆதி கால மூட நம்பிக்கை எல்லாம் தகர்த்து எறியப்படும். தொடரட்டும் ஜனா அண்ணா!
அருமையான் பதிவு...
நல்ல தியரி...
நன்றாக இருக்கிறது ஜனா,
வித்தியாசமான, கேள்விப்படாத பல புதிய கோணங்கள். இதுவரை யாரும் சொல்லிக் கேட்டதில்லை. தொடர்ந்து உடைக்கவும்.
Post a Comment