Sunday, June 6, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (06.06.2010)

அம்பானி சகோதர யுத்தம் சமரசத்தில்!

இந்திய ரிலைன்ஸ் குழுமத்தை உருவாக்கிய த்ருபாய் அம்பானியின் மறைவுக்குப்பினர் அவரது இரண்டு புதல்வர்களான மகேஸ் அம்பானி மற்றும் அணில் அம்பானி ஆகியோரிடையே சொத்து பாகப்பிரிவினை தொடர்பிலும் முக்கியமாக முகேஸ் அம்பானி வசம் உள்ள பெற்றறோலிய சுத்திகரிப்பு ரிலைன்ஸ் இன்ரஸ்ரி தொடர்பாகவே இருவரிடமும் பிணக்குகள் வலுப்பெற்று நீதிமன்றம் வரை செல்லும் நிலைமைக்கு கொண்டு சென்றன.

இந்நிறுவனம் கிருஷ்ணாகோதாவரி ஆற்றுப் படுகையில் எண்ணெய் மற்றும் எரிவாயுவைக் கண்டு பிடித்து உள்ளது.
இங்கிருந்து உற்பத்தியாகும் எரிவாயுவை அரசு நிர்ணயித்துள்ள விலையைக் காட்டிலும் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தனது ஆர்என்எஸ் நிறுவனத்துக்கு குறைந்த விலையில் வழங்க வேண்டும் என்று அனில் அம்பானி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இரு சகோதரர்களும் சமரச தீர்வுக்கு வரவேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்த நிலையிலேயே சகோதரர்கள் இருவரும் சந்தித்து மனம் திறந்து பல மணித்தியாலங்கள் கலந்துரையாடியதாகவும், இந்த சந்திப்புகளில் அவர்கள் சமரச முடிவுக்கு வந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த சகோதரர்கள் பிரச்சினையினை தீர்ப்பதற்கு பிரதமர் மன்மோகன் சிங் உட்பட பல மக்கிய பிரமுகர்கள் பெரும் சிரத்தை எடுத்தனர் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

நல்லூரில் நான்கு பதிவர்கள்
கடந்த சனிக்கிழமை (29.05.2010) அன்று (அதற்கு முதலும் ஒரு சந்திப்பு இடம்பெற்றது) பதிவர் சுபாங்கன், பதிவர் பாலவாசன், பதிவர் கூல்போய், மற்றும் அடியேன் ஜனா ஆகியோர் சந்தித்து பல விடயங்கள் பற்றியும் கருத்து பகிர்தல்களையும், தமது பதிவுலக, பிற அனுபவங்கள் பற்றியும் சுமார் 3 மணிநேரம் அருமையான ஒரு சந்திப்பினை நிகழ்த்தும் பாக்கியம் கிடைத்தது.
முக்கியமாக கருத்துப்பகிர்வுகள், இலக்கியம், இசை, பிரபல எழுத்தாளர்கள், குறும்படங்கள், பதிவுலகம், கற்றல் போன்ற பல்வேறு துறைகளிலும் மிகச் சுவாரகசியமான ஒரு கலந்துரையாடலாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.
பாலவாசனின் குறும்பட ஆர்வத்தை நான் குறிப்பெடுத்துவைத்துள்ளேன்.
மொத்தத்தில் ஒரு மகிழ்ச்சிகரமான அதேவேளை பல விடயங்களை பகரிந்துகொள்ளும் ஒரு சந்திப்பாக இது இருந்தது என்பதில் பெரு மகிழ்ச்சியே.

த்ரீ இடியற்சிற்கு 11 விருதுகள்

சர்வதேச இந்தியன் பிலிம் அக்கடமியின் திரைப்பட விழா இலங்கையில் பாரிய சர்ச்சைகளின் மத்தியில் இடம்பெற்றமை யாவரும் அறிந்ததே. விழாவில் கடந்த ஆண்டு வெளியான இந்தி படங்களுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் ஆமிர்கான த்ர்P இடியட்ஸ் படம் 11 விருதுகளை பெற்றது.
சிறந்த படம், சிறந்த நடிகை, குணச்சித்திர நடிகர், சிறந்த இயக்குனர், திரைக்கதை உள்பட பல பிரிவுகளில் இப்படம் விருதுகளை தட்டிச் சென்றது.
கல்வி முறையில் மாற்றம் வேண்டும். வெற்றிக்காக கற்பதை தவிர்த்து, திறமையை வளர்த்துக்கொள்ள கற்றுத்தர வேண்டும் என்ற கருத்தை சொல்லும் படம் இது. இதில் நடித்த கரீனா கபூருக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தது. ராஜ்குமார் ஹிரானி, சிறந்த இயக்குனர் விருதை பெற்றார். “பா” படத்தில் நடித்ததற்காக அமிதாப் பச்சனுக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

FOR THE BIRDS


மொழி கடந்த இசை.
எங்கள் வயதினை ஒத்தவர்களின் மொண்டசறிக்காலங்களில்; வந்து மொழி புரியாவிட்டாலும் எங்கள் காதுகளை தன்பக்கள் இழுத்த ஒருபாடல் “குர்பாணி” திரைப்படத்தில் வரும் “ஆப் ஜய்ஸா கொய்மே” எனத்தொடங்கும் ஜீனத் அமன் பாடல்காட்சியில் தோன்றி அசத்தும் அந்தப்பாடல். அந்த இசையின் லாவகம் அப்படியே சுண்டி இழுக்கும் தன்மை கொண்டது. இன்றும் தெவிட்டாத அந்த பாடல் பல ரீமிக்ஸ்களாக ஒலித்துக்கொண்டே இருக்கின்றது.
அன்றைய நாட்களில் இலங்கை வானொலியிலக்கூட இந்த பாடல் அதிகமாக ஒலித்த ஞாபங்கள் இன்றும் மனதுக்குள் தாலாட்டும்.


சர்தாஜி ஜோக்
நம்ம பன்டாசிங் திருமணத்திற்கு முதல் நடந்த சம்பவம் இது அவரது மனைவியை அப்போது (அவரது காதலி) அவர் காதலித்துக்கொண்டிருந்தகாலம். ஒருநாள் மாலை ஆத்திரத்துடன் போன்போட்டு அவரது காதலியை நம்ம ஷர்தாஜி பேசிய வார்த்தைகள் இவை
“நீ ஒரு ஏமாற்றுக்காரி….மோசக்காரி…என்னை நீ முட்டாளாக்கிவிட்டாய்…
இன்று பதிவுத்திருமணம் செய்துகொள்வோம் என்று நீதானே சொன்னாய்…இன்று அதிகாலையில் இருந்து மாலை வரை தபால்நிலையத்தில் நீவருவாய் என எவ்வளவு நேரம் காத்திருந்தேன்..

14 comments:

Subankan said...

அம்பானி சகோதரர்கள் - நீதிமன்றத் தீர்ப்பின்படி!

உங்களைச் சந்தித்துக்கொண்டதில் மகிழ்ச்சி

//சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.
//

அவ்வவ், இதுக்குப்பெயர்தான் வஞ்சப்புகழ்ச்சியோ?

3 இடியட்ஸ் - தமிழிலும் வருதாமே?

நகைச்சுவை - ஹீ ஹீ

balavasakan said...

அப்பாடா !!அடிக்கடி சந்திச்சு அரட்டை அடிக்க ஒராள் ரெடி உங்கள சொன்னேன்...

சர்தாஜி ஜோக் நிறையவச்சிருக்கீங்க போல...ஹி..ஹி... பாட்டும் படமும் பார்க்கிறன் சிரித்து முடிந்நு விட்டு...

கன்கொன் || Kangon said...

// Subankan said...

அம்பானி சகோதரர்கள் - நீதிமன்றத் தீர்ப்பின்படி! //

ம்...

அடுத்து,
உங்கள் சந்திப்புப் பற்றி அறிந்தேன்.
வாழ்த்துக்கள்.
:)))

நகைச்சுவை - ஹி ஹி... ;)

3 முட்டாள்கள் : ஓ! பார்க்கவில்லை இன்னும். ஹி ஹி...

Pradeep said...

மீண்டும் ஹொக்ரெயில் கலந்து தர தொடங்கியாச்சுப்போல. வாழத்துக்கள். ஒவ்வொரு ஞாயிறும் வந்து ஸியேஸ் சொல்கின்றேன்.

சயந்தன் said...

ஹொக்ரெயில் மீண்டும் வரத்தொடங்கியமை மகிழ்ச்சி. த்ரீ இடியட்ஸ் விருதுகள் எதிர்பார்த்ததுதான். இவை முழுதாக எழுத்தாளர் சேட்டனுக்கே சேரும் என்பது என் கருத்து. அப்புறம் அந்த பறவைகளின் படம் அருமை. தொடர்ந்து ஒவ்வொரு ஞாயிறும் ஹொக்ரெயில் போடுங்கள்.

maruthamooran said...

‘ஐபா’வில் த்ரி இடியட்ஸ் 11 விருதுகளை வென்றதில் ஆச்சரியமில்லை. கடந்த வருடம் வெளியான இந்தியப் படங்களில் த்ரி இடியட்ஸ் முதல் மூன்று படங்களுக்குள் வரக்கூடியதே.

(நல்லூரில் பதிவர் சந்திப்பு அடிக்கடி நடப்பதாக தகவல்- நல்ல விடயங்கள் ஆராயப்பட்டால் நல்லதே)

Jana said...

@ Subankan
நன்றி. சுபாங்கன். வஞ்சப்புகழ்ச்சி அல்ல உண்மையைத்தான் சொன்னே;. தமிழிலும் வரத்தான் போகுதாம். ஆனால் இந்த கதையின் ஆழம் புரியாமல் நடிக்க தயாராகிக்கொண்டிருப்பவர்களை நினைக்கத்தான் அழுவதா? சிரிப்பதா? என்று தோன்றுகின்றது.

Jana said...

@ Balavasakan
நன்றி பாலவாசன். ம்ம்ம் அடிக்கடி சந்திக்கலாம். அடுத்து ஷர்தாஜி மேல் எப்போதும் எனக்கு ஒரு தனி மரியாதை உண்டு. ஆகவே அவரது தரவுகள் நிறைய உண்டு.

Jana said...

@கன்கொன் || Kangon
கண்டிப்பாக 3 இடியட்ஸ் பாருங்கள் கோபி. ஏற்கனவே அது பற்றி நான் ஒரு பதிவும் போட்டிருக்கின்றேன். தமிழிலும் எடுக்கபோகின்றார்களாம். அதற்கு முதல் பார்த்துவிடுங்கள்.

Jana said...

@Pradeep
நன்றி அண்ணா. கண்டிப்பாக ஒவ்வொரு ஞாயிறும் மிக்ஸ் பண்ண முயற்சிக்கின்றேன்.

Jana said...

@சயந்தன்
நன்றி சயந்தன். நீங்கள் சொன்னது முழுமையான உண்மை அதன் பெருமை எல்லாம் எழுத்தாளர் சேட்டனையே சாரும்.

Jana said...

@மருதமூரான்.

நன்றி மருதமூரான். நல்லூரில் தொடர்ந்து அடிக்கடி பதிவர் சந்திப்பு நடக்கும். சின்ன ஒரு ஹப் கிடைத்தாலும் நீங்களும் யாழ்ப்பாணம் வந்து கலந்துகொள்ளுங்கள். (நல்லவர்கள் கூடினால் நல்லவிடயங்கள்தான் பேசுவோம்...hee hee)

Admin said...

உங்கள் வலைப்பதிவுக்கு எனது முதல் வருகை இது. இனிமேல் அடிக்கடி வரலாம்.

Kiruthigan said...

//சுபாங்கனும், கூல்போயும் தமது வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களையும் கொண்டிருந்தமை அதிசயிக்கவைத்தது.//
உங்களுக்கு பதிளேளு வயசில கிடைத்த வயதிற்கும் மீறிய அறிவையும், ஆர்வத்தையும் பல அனுபவங்களும் யாருக்கும் இலகுவாக கிடைக்காத வரங்கள் அண்ணா...
இரண்டாதுது சந்திப்பில் பழமுதிர்சோலையில் சியர்ஸ் வித் ஜனா சொன்னோம்.

//ஒரு உண்மையான செய்தியாளனின் பேனாமுனை சக்தி எத்தகையது, குற்றம் செய்தவர் நாட்டின் உச்ச பதவியில் இருக்கும் தலைவர் என்றாலும், அவர் செய்த குற்றம்கூட மறைக்கப்பட்டுவிடாமல், அதை வெளியுலகத்திற்கு கொண்டுவந்து, குற்றம் செய்தவர் உச்ச அரியணையில் இருந்தாலும் அவரை தூக்கி எறியும் சக்தி பேனாமுனைக்கு உண்டு //
எழுத்து துறையில் நீங்களும் தான் 'கிட்ட தட்ட'சரிவந்த சரித்திர நாயகன்..

'கிராமத்து பறவையும் சில கடல்களும்' அன்பளிப்புக்கு நன்றி..
யாருக்கு என்ன பரிசு தரவேண்டும் என்ற ராஜதந்திரத்தை கரைத்து குடித்து விரல் நுணியில் வைத்திருக்கிறீர்கள்..

LinkWithin

Related Posts with Thumbnails