Sunday, July 4, 2010

ஞாயிறு ஹொக்ரெயில் (27.06.2010)

மண்ணாங்கட்டி ஆர்ஜென்ரீனா

நேற்று என்னால்த்தூங்கக்கூட முடியவில்லை. எத்தனை நம்பிக்கையாக, எத்தனை ஆவலோடு, எத்தனை அவசரமாக ஓடிப்போய் தொலைக்காட்சிப்பெட்டிக்கு முன்னால் இருந்தேன். என் அபிமானத்திற்குரிய அணி ஆர்ஜென்ரீனா வெல்லவேண்டும் என்பது ஒரு பக்கம் உச்சக்கட்ட நம்பிக்கையில் ஜெர்மன் அணியை நேசிக்கும் ஒரு நண்பனுடன் 5000 ரூபாய்க்கு பெட்கூட கட்டியிருந்தேன். அத்தனை நம்பிக்கை!! அத்தனை அபிமானம்!!! எல்லாமே போய்விட்டதே.
குறைந்தது ஒரு கோலாவது? ஒரு கோல் போட்டாங்கதான், அது ஓவ்கோல்!!
என் பாடு பறவாய் இல்லை பக்கத்தில்!!, வாத்தியாராக இருந்துவிட்டு தற்போது ஓய்வுபெற்றுவிட்டு இருக்கும் மாஸ்டர் ஒருவரும் என்னுடன் இருந்து மச் பார்த்தார். நானாவது ஆர்ஜென்ரீனாவின் தீவிர ரசிகன். அவரோ ஆர்ஜென்ரீனாவின் தீவிர வெறியன்.
கடைசிமட்டும் நம்பிக்கையுடன்தான் இருந்தார் மனுசன். ஜெர்மனி அணி மூன்றாவது கோல்போட்டதும் முன்னால் இருந்த கதிரையையும் உதைந்துதள்ளிவிட்டு மண்ணாங்கட்டி ஆர்ஜென்ரீனா என்று உதடுகள் துடிக்கப்பேசிவிட்டு, என் கையில் அந்த மெச்ஸி பயல்மட்டும் கிடைத்தான்…என்று பல்லையும் நெருமிவிட்டுப்போனார்.
ஆனால் யதார்த்மாக ஒன்றை சொல்லித்தான் ஆகவேண்டும், நேற்றைய ஜெர்மனி அணியின் ஆட்டம் ஆபாரம்..

அரசியல் காமடிகள்

இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின் கருத்துகள், செயற்பாடுகள் எல்லாம் இப்ப கேட்க படு காமடியாக இருக்குது. சிலபேருக்கு இப்ப திடீர் ஞான உதயங்கள் எல்லாம் பிறந்திருக்கு. உதிக்கும் பக்கத்தில் மீண்டும் சிலபேர் முதலில் தோற்றுப்போன பிரதேச வாத மிட்டாயை திரும்ப தயாரிச்சு சனங்களிட்ட காட்டி திரும்ப தங்கட இருப்பை உறுதி செய்ய நினைத்திருக்கின்றார்கள் போல தெரிகின்றது. வடக்கே இருந்து வந்தபடையோடை ஐக்கியமாகி, அவை போகும்போது ராமபஜனை பாடி சேர்ந்துபோன ஆக்கள் எல்லாம் திரும்பி வந்திருக்கிறார்கள். தெற்கில் இருந்து கடிதம் எழுதுவதில் துறைதேர்ந்த சந்தோச சம்காரங்கள் எல்லாம் இப்போ படு காமடியான அறிக்கைகளை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார்கள். தாங்கள் முன்பு நிகழ்த்தியருளிய திருவிளையாடல் காட்சிகளையும், தங்கள் திருவாய்களில் அற்றைப்பொழுதுகளில் வந்த வார்த்தைகளையும் எங்கட சனங்கள் மறந்திருப்பார்கள் என்று முழுதாக நம்பி விட்டார்கள்போல இருக்கு…அப்ப சொல்லுறது ஒரு வாய் கேட்கிறது பல காதுகள் என்ற விடயத்தை அடிக்கடி இவர்கள் மறந்துபோய்விடுகின்றனர்.
எது எப்படியோ..பத்திரிகையில் இந்த கூத்துக்களை எல்லாம் படிக்கும்போது, சிரிப்புடன் ஒரு பாட்டுத்தான் நினைவுக்கு வருகின்றது…
அந்தப்பாட்டு இதுதாங்கண்ணா….
போடு ஆட்டம்போடு..நம்மை தடுக்க எவரும் இல்லை….

நண்பன் திருமயூரனின் என் மனம் கவர்ந்த கவிதை ஒன்று

என்னை நினைவிருக்கிறதா?
நீங்கள்...
சுமைப்படும் போதும்,
சுகப்படும் போதும் -என்னில்
பகிர்ந்து கொட்டிய
எண்ணங்கள் பற்றி
எனக்குத்தான் தெரியும்!

உங்கள் ஆதங்கங்களை -என்
வாயில் திணித்துவிட்டு செல்வீர்கள்,
செரிமானம் ஆகாத வலியில் - நான்
திறக்க வரும்
தபால் காரனுக்காக
தவமிருந்த காலங்கள் - உங்கள்
பிரசவ நாட்களை விட
பெறுமதியானவை!

வெளிநாட்டில்,
உறவுகளை உதிர்த்து விட்டு...
என்னிடம் வந்து,
மடல்களை அல்ல - மனங்களை அல்லவா
நிரப்பி சென்றனர்!
தம்பள பூசசியாய் -என்னை
தடவிச்செல்லும்
காதலர்களை பற்றி
என்ன சொல்ல?
அடிக்கடி இடம் பெயரும்
ஈழ தமிழர் போல் - அவர்கள்
இதயம் பெயர்ந்த கதைகளும்
எனக்கு தெரியும்!

உங்கள் உணர்வுகளை காவ
ஒற்றை காலில்
தவமிருந்த எனக்கு - இப்போ
இணையம் என்ற இயமன்
ஈமெயிலிலும், பேஸ் புக் இலும்
பாசக் கயிறு எறியும்
பாவம் பற்றி - எங்கு
பேச?

விரிந்த வலைக்குள்
விழுந்து விழுந்து
"அளவுங்கள்" -ஒருநாள்
உங்கள் அன் கொன்ஸெஸ்,
சப் கொன்ஸெஸ், எல்லாம்
தவணை முறையில்
சந்தைப்படும் போது
என்னை நினைத்து
அழுவுங்கள்!!

--ஆற்றாமையால் அழக் கண்ட
மண்டைதீவு தபால் பெட்டி --
This was taken a week ago in Mandativu, Jaffna

வசந்தத்தில் ஓர் நாள்.

பொதுவாகவே வாணி ஜெயராமினுடைய குரலுக்கு எப்போதும் என் இதய சபையில் மரியாதை கலந்த வணக்கம் இருக்கும். ஒரு இசையை அனுபவித்திருக்கின்றீர்களா? என கவிஞர்கள் கேட்கும் முரண்பாடான கேள்விகளின் யதார்த்தமான பதில் வாணிஜெயராமின் குரலில் உண்டு. பொதுவாகவே வாணி ஜெயராமின் பாடல்கள் ஹசல் கலந்தவையாக இருக்கும். ஊதாரணமாக மல்லிகை என் மன்னன் மயங்கும் என்ற பாடல், நானா…நாணுவது நானா என்றபாடல்.
அத்தோடு மனதில் இருந்து எடுக்கமுடியாத பல பல பாடல்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
அந்த வரிசையில்த்தான் இந்தப்பாடலும்…

தோன்றும் இளமை தொடர்ந்திடவேண்டும்
தொடர்ந்திடும்மாலை வளர்ந்திடவேண்டும்
நான்கு இதழ்கள் கலந்திடவேண்டும்
நாளை என்பதே மறந்திடவேண்டும்..
என்ன ஒரு அருமையான வரிகள்…..

முடிவுக்குப்பின்.


ஷர்தாஜி ஜோக்
ஒரு அமெரிக்க உல்லாசப்பயணி டெல்லி, மற்றும் ஆக்ராவை சுற்றிக்காட்ட நம்ம ஷர்தாஜியை விழிகாட்டியாக எற்பாடு செய்துகொண்டார். செங்கோட்டைக்கு சென்றபோது அதைப்பார்த்து வியந்த அமெரிக்கர் நம்ம ஷர்தாஜியிடம் இதைக்கட்டுவதற்கு எவ்வளவு வருடங்கள் சென்றன என்று கேட்டார். ம்ம்ம்…இருவது வருடங்கள் என்று ஷர்தாஜி பதில் தந்தார்…
ப்பூ….இந்தியர்கள் அவ்வளவு சொம்பேறிகளா? அமெரிக்கர்கள் இதை வெறும் இரண்டுவருடங்களில் கட்டிமுடித்திருப்பார்கள் என்றார் அமெரிக்கர்.
தாஜ் மஹாலைப்பார்த்து லயித்துப்போன அமெரிக்கர் சரி…இதைக்கட்ட உங்களுக்கு எவ்வளவு காலம் எடுத்தது என்று கேட்டார்…சர்தாஜி வேண்டும் என்றே வருடங்களைக்குறைத்து வெறும் 10 ஆண்டுகள்தான் சென்றன என்றார்… அதற்கும் அந்த அமெரிக்கர்…இதை நாங்கள் ஒருவருடத்தில் கட்டிமுடித்திருப்போம் என்றார்.
சென்ற இடமெங்கும் காலங்களைக்கேட்பதும், ஷர்தாஜி பதிலளித்தவுடன்…அமெரிக்கர்கள் இதை குறுகிய காலத்தில் முடித்திருப்பார்கள் என பெருமை பேசுவதுமே அமெரிக்கரின் வழக்கமாயிருந்தது…
ஷர்தாஜிக்கு கடும் எரிச்சல் எற்பட்டது…போகும் வழியில் “சகாரா” தொலைக்காட்சி கோபுரத்தைக்கண்ட அமெரிக்கர் அது என்ன கோபுரம் என்று கேட்டார்…அதற்கு பதிலளித்த நம்ம ஷர்தாஜி அங்கே போய்த்தான் நாங்கள் அதை விசாரிக்கவேண்டும் இன்றுகாலை நான் இந்தப்பக்கமாக வந்தபோது இந்தக்கோபுரம் இங்கு இருக்கவில்லை என்றார்.

8 comments:

டிலான் said...

5000 ரூபா போச்சுதா! சந்தோசம் நானும் பிரேசில் வெளியபோன ஆத்திரத்தில் உள்ளேன். அடுத்து மயூரனின் கவிதை ஆஹா...யதார்த்தம். அரசியல் செம காமடி

Pradeep said...

அந்த ஓய்வுபெற்ற ஆசிரியர் என்மதிப்புக்குரிய ஆசிரியரும், தங்கள் மாமனாரும்தானே? மயூரனின் கவிதை சிறப்பு. வேண்டும் வேண்டும் பாடல் மனதோடு கலந்த இசை, தேடிப்பிடித்து விருந்தளித்ததற்கு நன்றி. அரசியல் நறுக்கான கடி.

அதெல்லாம் சரி..தங்களின் Blogger படம்!!!!!

Subankan said...

ஆர்ஜென்டீனா என்னையும் ஏமாற்றிவிட்டது.

கவிதை - யதார்த்தம்

கலவைப்பதிவு வழமைபோல கலக்கல். Profile picture அதைவிடக் கலக்கல் :)

Balavasakan said...

அட நீங்களுமா ஆஜன்டீனாவிடம் அவிஞ்சு போனது !!! கலக்கல் பதிவு !!

Jana said...

@டிலான்
நன்றி டிலான் தவறணையினை சீக்கரம் ஆரம்பியுங்கள்.

Jana said...

@Pradeep
நன்றி அண்ணா. ஆசிரியரைப்பற்றி மாணவன் அறியாமல் இருப்பாரா என்ன? பறவாய் இல்லை கண்டுபிடித்துவிட்டீர்களே! படம்!!! இப்ப இந்த உடைக்குத்தான் அதிஸ்டக்காற்று என்ற ஒரு நப்பாசைதான்

Jana said...

@Subankan
நன்றி சுபாங்கன்.

Jana said...

@Balavasakan
அப்படி என்றால் அங்கயும் அதுதானா??? சொல்லவே இல்லை

LinkWithin

Related Posts with Thumbnails