Tuesday, July 6, 2010

சில பதிவர்களின் வலையுலக முதல் எழுத்துக்கள்

வந்தியத்தேவன்

அறிமுகம்
என்னுடைய சில மனப் பதிவுகளை இங்கே பதிவு செய்ய உள்ளேன். வலைப்பூக்களில் நானே ராஜா நானே மந்திரி என்பதால் என் விருப்புக்கேற்ற வகையில் பதிவுசெய்யலாம். என் உளறல்கள் என பெயரிட்டிருப்பதன் காரணம் பலருக்கு எனது பதிவுகள் உளறலாகவே தோன்றும். ஆனாலும் சில உளறல்கள் உங்களைக் கவர்ந்தால் பின்னூட்டம் இடுங்கள்.அத்துடன் உங்கள் ஆலோசனைகள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பதிவுகள் யாருடைய மனதையோ அல்லது எந்த மதத்தையோ இனத்தையோ பாதிக்காது எனபதுக்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன்.

ஊக்கம் அளித்த இனிய நண்பர்கள் லெ.பொன்னுசாமிக்கும் கிருஸ்ணாவுக்கும் நன்றிகள்.
எனக்கு பிடித்த விடயங்கள் இனிமேல் ...

கேபிள் சங்கர்

குறும்படம்ன்னா என்ன?
இந்த கேள்விக்கு பல பேர் பல பதில் சொன்னாங்க. அதுலேயும் சில பேர் குறும்படம்ன்னு சொன்னதுமே "என்ன கான்செப்ட்?"ன்னு கேட்கிறாங்க..
எனக்கென்னமோ குறும்படம்னா ஏதாவது விஷயமோ அல்லது ஏதாவது கருத்து சொல்லணும்ணோ தோணல. குறும்பட்ம்றது ஓரு பிளாக் மாதிரி நம்ம மனசுல தோணிய விஷயங்களை எல்லாம் எழுதறமாதிரி... அது ஒரு விதமான வெளிப்பாடுன்னு என் கருத்து.
சங்கர் நாராயண்

Loshan -லோசன்
வணக்கம்

வணக்கம் அனைவருக்கும்.... வானலைகளில் ஒவ்வொரு நாளும் உங்களை சந்திக்கும் நான் இன்று முதல் உங்களை என் இந்த வலைப்பூவினூடாகவும் சந்திக்க எண்ணம் கொண்டுள்ளேன்..

எப்போதோ எனக்கு இந்த வலைப்பூ எண்ணம் உதித்தாலும் பிறவியிலேயே என்னோடு தொற்றி கொண்ட சோம்பலும் என்னுடைய வானொலி வேலைப்பளுவும் என்னை வலைப்பூ எழுத்தாளனாக வர முடியாமலேயே செய்திருந்தன. இன்று முதல் ஏதோ என்னால் முடிந்ததை எழுதிக் கிழித்து எழுத்துப் பணி செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.
தமிழுலகம் & வலைப் பதிவுலகம் வரவேற்குமா அல்லது வேண்டாமப்பா என்று சொல்லுமா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்

கானா பிரபா

வணக்கம்! வாருங்கோ...!

கானா பிரபாவின் "மடத்து வாசல் பிள்ளையாரடி" தளத்திற்கு வந்ததற்கு முதல்ல என்ர நன்றிகள்.
பதின்ம வயதுகளின் விளிம்பில்
இணுவில் மடத்து வாசல் பிள்ளையாரடியில் பின்னேரம் முதல் சாமம் தெரியாமல், கூட்டாளிமாருடன் அரட்டையும், சண்டையும், பிள்ளையாரடிப்பொங்கலும், காதல் கதைகளுமாகக் கழிந்த நாட்களின் நினைவுகளோட
இயந்திரமான, எங்கேயோ ஓடிக்கொண்டு,நட்புக்கும் விலைபோடும் இந்த வெளிநாட்டில மீண்டும் என்னைப் புதுப்பிக்க, என்ர மனசைப் பாதிச்ச, காயப்படுத்திய, ஒத்தடம் தந்த நினைவுகளை இதில பதியிறன், பாருங்கோ

தங்கமுகுந்தன்

அறிமுகம்: வலையுலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறேன் !

ஏகனாகவும் அனேகனாகவும் எங்கும் எதிலும் எல்லாமாகவும் வியாபித்திருக்கும் பரம்பொருளின் திருவருளுடனும் குருவருளின் துணையுடனும் "கிருத்தியம்" என்ற வலைத்தளத்தை ஆரம்பிக்கின்றேன்

பாலவாசகன்

சபிக்கப்பட்ட தமிழர்கள்

8/10/2009 நேரம் பத்து மணி நாற்பது நிமிடம் நான்கு விநாடிகள் இந்த கணமே வேண்டுமானாலும் உலகம் அழிந்து போகட்டும் .....................

ஆதிரை

வலைப்பதிவுக்குள் நான்
வணக்கம்!

நீண்டநாள் கனவொன்று நனவாகும் வேளையில் உங்களுடன் வலைப்பூவின் வழியே பேசுவதில் ரொம்ப மகிழ்ச்சி..!

என் உணர்வுகள், நான் கடந்து வந்த பாதைகள், அதில் விதைத்துவிடப்பட்ட முட்கள், என் சுற்றம், என் தாய்நாடு இவைகள் பற்றி என் உள்ளக்கிடக்கையில் குடிகொண்டிருக்கும் எண்ணங்களை பகிர்ந்துகொள்ள ரொம்பநாள் ஆசை. ஆனால், என் எண்ணங்கள் எல்லாம் உள்ளன உள்ளவாறு வெளியிட என்னைச்சூழ்ந்துள்ள சில இனந்தெரியாதவைகள் அனுமதிக்காது என்பதும் நான் உணர்வேன். அதை எல்லாம் மீறி நான்கு சுவருக்குள் என் மீதிக்காலத்தை கழிப்பதற்கும் நான் தயாரில்லை. அத்துடன் உயிராசை துறந்தவனுமல்ல... என்றாலும் பேசவேண்டிய சிலதுகள் பேசப்பட்டேயாக வேண்டுமல்லவா? அவை இங்கு பேசப்படும்.

**** அடுத்து சுபாங்கனின் முதலாவது அறிமுகப்பதிவுக்கு சென்றேன். அங்கே ஒரே வெள்ளமாக இருக்கின்றது. நம்ம மருதமூரான் பக்கம் போவோம் என்றால் அவரும் தான் ஒரு செய்தியாளன் என்பதை தனது முதலாவது பதிவிலேயே காட்டியிருக்கின்றார். அவரது முதலாவது பதிவே அப்போதைய current affairs தான்.

கனககோபி

தமிழின் மீள் எழுச்சிக்காக ஒரு தமிழனின் ஆதங்கமே இது.
தமிழுக்கு அமுதென்று பெயர்.(?)

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவதொன்று அறியேன் என்றார் ‘பாரதி பித்தன்’ பாரதிதாசன்.
இதே கருத்தை இன்றைய (பெரும்பாலான) தமிழ் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களிடமும், சினிமா தயாரிப்பாளர்களிடமும் சொல்லி பாருங்கள். அவர்கள் சொல்வார்கள், “.Bharathithasan doesn’t know the English language. That’s why he said like that. (பாரதிதாசனுக்கு ஆங்கில மொழி தெரியாது. அதனால் தான் அப்படி சொன்னார்)” என்று. நீங்கள் ‘மன்டாரின்’ மொழியில் ஏதாவது கேட்டால் கூட அவர்களுக்கு விளங்கினாலென்ன, விளங்காவிட்டாலென்ன அவர்கள் ஆங்கிலத்தில் அல்லது தமிழ் சிறிது கலந்த ஆங்கிலத்தில் தான் விடையளிப்பார்கள் போலும். (கவனிக்கவும்! ஆங்கிலம் கலந்த தமிழ் வேறு, தமிழ் கலந்த ஆங்கிலம் என்பது வேறு.)

(முக்கிய குறிப்பு இவருக்கும் கன்கொன் என்பவருக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. அப்படி கி.கு அண்ணாவுக்கும், கோ அண்ணாவுக்கும் நான் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கின்றேன்.)

பதிவர்களின் அறிமுகப்பதிவுகளை எழுதியாச்சே எதோ ஒன்று குறையுதே!!!
ஓ.....என் அறிமுக பதிவு!!!!!

CHEERS WITH JANA
(இதற்கு லிங்க் கொடுக்கவில்லை. காரணம் நீங்கள் தற்போது இருப்பது அந்த தளத்தில்த்தான்)

வணக்கம் அன்பு நெஞ்சங்களே.


தேசத்தின் எல்லைகளைக் கடந்து உலகலாவிய ரீதியில் தமிழ் நெஞ்சங்கள் பரந்துபட்டு வாழ்ந்துவரும் இந்த நிலையில் தமிழ் நண்பர்கள் பலரும் வலைப்பதிவு உலகில் காற்தடம் பதித்து தமது எண்ணக்கருத்துக்களை பதிந்துவருகின்றனர்.இந்த நிலையில் இந்த தமிழ் இணைய உலகில் நானும் தடம்பதிக்கின்றேன்.


எப்போதாவது இருந்துவிட்டு வரும் நல்ல சிந்தனைகள், நாம் மட்டுமே மனதுக்குள் தர்க்கம் செய்து எமக்குள்ளேயே செத்துப்போகும் எண்ணங்கள், செய்யவேண்டும் என நினைத்தாலும் அடடே மறந்துவிட்டேனே என எண்ணங்கள் வீணாகிப்போதல், என பல விடயங்களை நாங்களே கர்ப்பந்தரித்து, அடுத்த கணமே, கருக்கலைப்பும் செய்துவிடுகின்றோம்.


இந்த நிலையில் இந்த இடுகைகள், நம் எண்ணங்கள் சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிரவும், எமக்கு தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து பெறவும். சுவையான செய்திகளை மற்றவர்களுடன் பகிரவும் வகை செய்யும் என்பதில் சிறு சந்தேகமும் இல்லை.


எமக்குள்ளேயே கருக்கலைப்பு செய்யப்படும் எமது சிந்தனைகளை சுகமாக பிரசவிக்க இந்த இணையப்பதிவுகள் உதவுகின்றன. எமது சிந்தனைகள், எமது கருத்துக்களால் மறுமலர்ச்சி ஏற்படப்போகின்றது, புரட்சி வெடிக்கப்போகின்றது என்று சொல்லவரவில்லை. ஒரு சின்னவிடயம் என்றால்க்கூட, அடடா…. நான் இதை இப்படி யோசிக்கவில்லையே என எம் நண்பர்கள் எமது கருத்தினை தட்டிக்கொடுத்தாலே போதுமே…


யார்கண்டது எந்த ஆலம் வித்தில் எந்த ஆலவிருட்சம் உள்ளது என்பதை! யாராலும் சொல்லிவிடமுடியுமா என்ன?சரி…என்பதிவுகள் இதை சம்பந்தப்படுத்தி, இதை அடிப்படையாகக்கொண்டு வரும் என என்னாலேயே சொல்லமுடியாது. நேரம் கிடைக்கும்போது அந்த நேரத்தில், என்ன எண்ண ஓட்டம் மூளைக்கு கடத்தப்படுகின்றதோ அதை என் தட்டச்சு பிரசவிக்கும்….அது சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்.

பெரியவர் நீவிர் பொறுப்பது உம் கடன்… தொடர்ந்து பயணிப்போம்

24 comments:

LK said...

cheers :)

கன்கொன் || Kangon said...

அவ்வ்வ்....

ஏனிந்த போட்டுக் கொடுப்பு...? :D

ஹி ஹி...

(பழைய பதிவெல்லாம் வாசிக்கப்படாது. :D )

Subankan said...

உண்மையில் அது எனது முதல் பதிவு அல்ல. அது ஆங்கிலத்தில் எழுதிய ஒன்று. பின்னர் நீக்கிவிட்டேன். முதலாவதாக இருக்கும் பதிவு தமிழில் தலைப்பிட்ட முதல் பதிவு (எழுதிய என்று சொல்ல முடியாதே). இப்பதான் தெரியுது, எல்லாரும் முதல் பதிவிலயே அடிச்சு ஆடத் தொடங்கிட்டினம் எண்டு :)

சயந்தன் said...

எல்லோருடைய பதிவுகள் போலவும் ஆரம்பங்களும் அசத்தலாகத்தான் இருக்கு.

Subankan said...

உண்மையில் எனது தளத்தில் இருக்கும் முதலாவது பதிவு தமிழில் தலைப்பிட்ட (எழுதியது அல்ல :P )முதல் பதிவு. அதற்கு முன்னரே ஆங்கிலத்தில் 4-5 பதிவுகள் எழுதி, பின்னர் நீக்கிவிட்டேன். இப்பதான் தெரியுது, எல்லாரும் முதல்பதிவிலயே அடிச்சு ஆடத் தொடங்கியிருக்கிறாங்கள் எண்டு :)

சயந்தன் said...

எல்லோருடைய பதிவுகள் போலவும் ஆரம்பங்களும் அசத்தலாகத்தான் இருக்கு.

தங்க முகுந்தன் said...

நன்றி!

உம்முடைய அறிமுகம் தான் பெரிதோ!
ம்... பெரிய ஆள்தானே!

Balavasakan said...

அட .. ஜனா அண்ணா !! எப்படி உப்புடி எல்லாம் ஐடியா வருகுது .!! பரவால்ல முதல் 2 வரியோட நிறுத்திட்டீங்க

SShathiesh-சதீஷ். said...

நல்ல முயற்சி வாழ்த்துக்கள்

ஆதிரை said...

:-)

சுபாங்கனின் கூகிள் றீடர் வழியாகவே உங்களின் தளம் எனக்கு அறிமுகமானது. அப்போது நான் உணர்ந்தது - எப்படி உங்களின் பதிவுகளை இவ்வளவு நாட்களும் தவற விட்டிருந்தேன் என...

மிகவும் எனக்குப் பிடித்துப் போன பல விடயங்களை நீங்கள் பேசுகின்றீர்கள்.

நான் வருவேன். மீண்டும் தொடர்வேன். :-)

டிலான் said...

"சிலவேளைகளில் சாகீர் ஹ_சைனின் தபேலாவாகவும் கேட்கும், சிலவேளைகளில். முதலாம்வகுப்பு பையனின் மேசைத் தட்டலாகவும் இருக்கும்."

தொடக்கம் முதல் இன்றுவரை உங்கள் உவமான உவமேயங்கள் அந்தமாதிரி இருக்கும்.

"அடுத்து அவனே என்னை ஆட்டுவிக்கின்றான்" என்று சொல்லும் எங்கள் முகுந்தன் அண்ணா (ஆட்டுவிக்கும் ஆளை எனக்கு தெரியும் அவனே அல்ல அவளே..உங்க வந்து மூளைபோய் அண்ணியை ஒருக்கால் சந்திக்கவேண்டும்.) அனைவரது அறிமுகமும் அச்த்தல்தான். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Jana said...

@ LK
always Cheers

Jana said...

@கன்கொன் || Kangon

இது போட்டுக்கொடுப்பு அல்ல ஒரு பயமுறுத்தல்...

Jana said...

@Subankan

முதல்பதிவிலேயே சிக்ஸர் அடித்த பல பதிவர்களும் உண்டு சுபாங்கன்

Jana said...

@சயந்தன்
தங்கள் நதி வழியின் ஆரம்பம்கூட மிக அசத்தலாகத்தான் உள்ளது சயந்தன். "ஒரு ஓடை நதியாகின்றது" எனக்கு மிகப்பிடித்த வசனமும் படமும்கூட

Jana said...

@ தங்க முகுந்தன்
ஆம் ஒத்துக்கொள்கின்றேன். முகுந்தன் அண்ணா...நான் பெரிய ஆள்த்தான் (உருவத்தில்)

Jana said...

@Balavasakan
அட ஜனா அண்ணாவா?????

Jana said...

@ SShathiesh-சதீஷ்
நன்றிகள் சதீஸ். தங்கள் முதலாவது வருகைக்கு வரவேற்றுக்கொள்கின்றேன். தொடர்ந்தும் வாருங்கள்..இணைந்திருப்போம்.

Jana said...

@ஆதிரை
நன்றி ஆதிரை. தங்கள் வரவு நல்வரவாகுக. நிச்சயமாக தொடர்ந்தும் இணைந்திருப்போம்.

Jana said...

@டிலான்
நன்றிகள் டிலர். அப்புறம் ஒரே தங்கமுகுந்தன் அண்ணாவுடன் அன்புக்கொழுவல்தான் போல இருக்கு.

வந்தியத்தேவன் said...

அடடே நல்லாயிருக்கு, நல்ல தேடுதல் நடத்தியிருக்கின்றீர்கள். அறிமுகத்தில் பெரிதாக எதுவும் எழுதவே இல்லை. பெரிதாக வரவேற்பூ கிடைக்கும் என நினைக்கவில்லை ஆனாலும் நான்கு வருடங்கள் ஓடிவிட்டன.

கானா பிரபா said...

ஆகா நதிமூலம் எல்லாம் தேடிப்பிடிக்கிறாங்கப்பா ;) நல்லா இருக்கு

Jana said...

@வந்தியத்தேவன்
நன்றிகள் நண்பரே. ஆம் நான்கு வருடங்கள் பதிவுலகில் உலா வருவது பெரும் சாதனைக்குரிய விடயம்தானே? வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகளுடன் தங்களுக்கு எனது வாழ்த்துக்களும் உரித்தாக.

Jana said...

@ கானா பிரபா
நன்றிகள் கானா பிரபா! இந்த நதிகள் ஆரம்பங்களிலேயே பிரவாகம் எடுக்கின்றனவே. ஆச்சரியங்கள்தான்!!

LinkWithin

Related Posts with Thumbnails