“எந்திரன்”!!! முழுத் திரைப்பட இரசிகர்களும் ஒருமித்த எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் திரைப்படம் இது. மிகைப்பட்ட பிரமாண்டங்கள், தமிழில் முதல்தடவையாக அதி நவீன தொழிநுட்பங்கள் புகுத்தப்பட்டு (பல படங்களுக்கும் முதலில் இதைத்தான் சொல்லியிருக்காங்கப்பா) சுப்பர் ஸ்ரார், சங்கர், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் இரண்டாவது தடவையாக, மறைந்த எழுத்தாளர் சுஜாதாவின் திரைக்கதையுடன் தமிழ் சினிமா வயல்களுக்கு பாய்ச்சப்படவுள்ளது இந்த திரைப்படம்.
நிற்க…
கடந்த 07ஆம் திகதியுடன் (ஜூலை 07) படப்பிடிப்புக்கள் முற்றாக முடிவடைந்துள்ளதாக இயக்குனர் சங்கர் உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்கின்றார்.
அதேவேளை ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இதில் சிலிர்க்கவும், பிரமிக்கவும் வைத்துள்ளதாக கூறியிருக்கும் சங்கர், கோடிக்கணக்கான இரசிகர்களின் ஆவலை பூர்த்திசெய்யும் வகையில், மிகப்பிரமாண்டமாக இந்த மாதம் (ஜூலை) இறுதிவாரத்தில் ஒரு நாளில் “எந்திரன்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவினை நடத்த முடிவெடுத்துள்ளதாகவும் அறிவித்துள்ளமை, ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இரசிகர்களுக்கும், சுப்பர் ஸ்ராரின் இரசிகர்களுக்கும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து விரிவாக தனது இணையத்தளத்தில் அறிவித்திருக்கும் சங்கர்…
இறுதியாக ஏ.ஆர்.ரஹ்மான் பாடிய பாடல் ஒன்றுக்கு நடன இயக்குனர் ரெமோ நடனமொன்றை முழுமையாக முடித்துக்கொடுக்க எந்திரன் திரைப்பட படப்பிடிப்பு கடந்த 07ஆம் திகதியுடன் இனிதே நிறைவடைந்துள்ளது.
படமுடிவை இட்டு எல்லோரும் எங்கள் மகிழ்ச்சிகளை ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டோம். சுப்பர் ஸ்ரார் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உட்பட முழு படக்குழுவினரும் கலந்துகொண்ட நிகழ்ச்சியில் முதல் முதலாக நான் முழுப்புசினிக்காயை உடைத்தேன்.
எல்லோருக்கும், கிரிக்கட்டின் கடைசி ஓவரை முகம்கொடுக்கும் உணர்வு, ஒரு கல்லூரியில் மகிழ்ச்சியாக இரண்டு ஆண்டுகளை ஒன்றாக இருந்து கொண்டாடிவிட்டு பிரிந்து செல்லும் உணர்வு இது என்றும் அவர் கூறியிருக்கின்றார்…
எந்திரன் திரைப்படப்பாடல்கள் பற்றிய பிரத்தியேக தகவல்கள்..
மொத்தமாக ஆறு பாடல்களை கொண்டதான பாடல்கள் அனைத்தும், முன்னர் வந்த ரஜினி படங்களின் ரஹ்மான் இசையமைப்பில் இருந்து வித்தியாசமாக உள்ளதாகவும், இதில் பல இசை நுட்பங்களையும் ரஹ்மான புகுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த பாடல்களின் ஹைலைட்டாக ரஹ்மான் பாடிய பாடல் ஒன்றே இருக்கும் என பரவலாக பேசப்படுகின்றது.
அதேவேளை பாடல்களைவிட இந்த படத்தில் தொடர்ந்து ஒலிக்கப்போகும் “தீம் மியூசிக்கே” இரசிகர்களின் மனங்களில் புகுந்து விளையாடப்போகின்றது என்றெல்லாம் கூறப்படுகின்றது.
இந்தவகை பில்டப்புக்களை எல்லாம் கடந்து…பொதுவாகவே ரஹ்மான் பாடல்களை அவரது இசை இரசிகர்கள் கோடான கோடிப்பேர் எப்போதும் ஆர்வமாகவே எதிர்பார்க்கின்றார்கள். அவருக்கு நிகர் அவரே என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
என் மனதில் இருக்கும் ஒரு ஏக்கம்…அந்த காதலன் போல…மறக்கமுடியாத ஒரு இசை!!
இயக்குனர் சங்கரின் உத்தியோக பூர்வ தளத்திற்கு இதுவரை செல்லாதவங்க இங்கே கிளிக்குங்க..
16 comments:
ஜனா….! எந்திரன் இசை குறித்து தங்களின் எதிர்பார்ப்பு நிறைவேறட்டும்.
(அது சரி, எப்போதிருந்து எந்திரனின் மக்கள் தொடர்பாளராக மாறினீர்கள்)
இரவுக்கு ஒளி கொடுக்குறது அந்த சந்திரன்.
இல்லாதவங்களுக்கு அள்ளி கொடுக்குறது இந்த எந்திரன்
பேர கேட்டவுண்ணே ச்சும்மா அதிர்ர்ர்ருதில்ல......!
அதே எதிர்பார்ப்புடன் நானும் :)
எல்லாம் சரி, படத்திலிருக்கும் ரஜினி பொம்மையா? இல்லை உண்மையா?
அண்ணே எனக்கும் உங்களைப் போலவே ஒரு உணர்வு
அதே அதே............
வெய்ட்டிங்...
ஆவலுடன்...
மகிந்தாவுக்கும் உங்களுக்கும் ஒரே ஒரு வித்தியாசம் கறுப்பு வெள்ளை மட்டும் தான். மாற்றம் ஒன்றை தவிர மற்றது எல்லாம் மாறும் என்பதற்கு உங்களுடைய profile இல் உள்ள படம் ஒன்று போதும்.
@மருதமூரான்
நன்றி மருதமூரான். (நேற்றில் இருந்து.)
@Cool Boy கிருத்திகன்.
பின்ன..கூல்போய் கிருத்திகன் என்றால் சும்மாவா...அதிர்ரத்துக்கு முதல் குளிருது!!!
@Subankan
அன்புள்ள ரஜினிகாந்த் என்றும் உண்மையானவர்தான் சுபாங்கன்.
@Anuthinan S
பார்ப்போம் அனுதினன் நம்ம A.R.R ஏமாற்றமாட்டார்
@ றமேஸ்-Ramesh
அதேதான்...வாங்க ரமேஸ்..தங்கள் வரவு நல்ல உறவு ஆகட்டும்.
@Balavasakan
நீண்டநாட்களாக தங்கள் பதிவுகளைக்காணாது..உங்கள் பதிவுகளுக்கு நாமளும் வெயிட்டிங் வாசன் சாப்.
@சயந்தன்
தோற்றங்கள் மாறிப் போகும். தோல் நிறம் மாறிப் போகும். மாற்றங்கள் வந்து மீண்டும் மறுபடியும் மாறிப் போகும். ஆற்றிலே வெள்ளம் வந்தால் அடையாளம் மாறிப் போகும். ஆனால் போற்றி காதல் மட்டும் புயலிலும் மாறாது.
சும்மாவே ரகுமான் பொளந்து கட்டுவார். இதுல எப்படி எல்லாம் மயக்க போறாரோ?
Post a Comment