Monday, August 23, 2010

இந்தப்பாடல்களின் முதல்வரிகள் தெரியுமா? – ஒரு திறந்தபோட்டி

நீங்கள் இசையினை மட்டும் இன்றி வரிகளையும் இரசிப்பவர்களா? பழைய, இடைக்கால பாடல்வரிகளில் படங்கள், அல்லது கவிதைகள் வரும்போது அடடே..இது ஒரு பாடல் வரியாச்சே என்று புத்திசாலித்தனமாக கண்டுபிடிப்பவர்களா?
சில பாடல்களின் உள்வரும் கவித்துவங்களை கண்டு இரசிப்பவர்களா? அப்படி என்றால் இந்த சுவாரகசியமான போட்டிக்கு வாருங்கள்.

பொதுவாக இளையராஜாவின் இசையினையும் பாடல்களையும் எல்லோருக்கும் பிடிக்கும். அதிலும் அவரின் மெலடிகளையும் அந்த மெலடிப்பாடல்களில் வரும் வரிகளையும் யாரும் மறந்தவிடுவார்களா என்ன?
எனவே குறிப்பிட்ட இடைக்காலத்தில் வந்த இளையராஜாவின் மெலடிகளின் பாடல் உள் வரிகள் சிலவற்றை தந்துள்ளேன். புத்திசாலிகளாயின் இந்த பாடல்களின் முதல் வரிகளை நம்பர்படி வரிக்கிரமமாக பின்னூட்டத்தில் இடுங்கள் பார்ப்போம்..
10 பாடல்களையும் கண்டுபிடித்தால் நீங்கள் பாடல்களில் முதல்வன், ஏழு பாடல்களுக்கு மேல் கண்டு பிடித்துவிட்டால் நல்ல ரசிகன், ஐந்துக்கு மேலே என்றால் பறவாய் இல்லை.. ஐந்துக்கும் கீழே என்றால் சுத்தமோசம் போங்க..

சரி..இந்த பாடல் இடைவரிகளை வடிவாகப்பாருங்கள்..

01.எவரும் சொல்லாமலே பூக்களும் வாசம்வீசுது
உறவும் இல்லாமலே இருமனம் ஏதோ பேசுது
எவரும் சொல்லாமலே குயிலெல்லாம் தேனாப்பாடுது
எதுவும் இல்லாமலே மனசெல்லாம் இனிப்பாய் இனிகுக்குது
ஓடை நீரோடை இந்த உலகம் அதுபோல
ஓடும் அதுஓடும் இந்தக்காலம் அதுபோல…


02.இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இடங்கொண்டு விம்மி இணை கொண்டு இறுகி
இளகி முத்து வடங்கொண்ட கொங்கை மலை
கொண்டிறைவர் வலிய நெஞ்சை நலம்
கொண்ட நலம் கொண்ட நாயகி நல்லிரவின்
படங் கொண்ட அல்குல் பனிமொழி
வேதப் பரிபுரையே! வேதப் பரிபுரையே!

03.எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்க்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்

04.தாமரைப்பூவுக்கு தாலியும் கட்டி தாங்கிப்புடிச்சேன் நானே
வாலிபக்கூத்துக்கு நேரமும் வந்தது வெக்கம் இனி என்ன மானே
போங்கிவந்த இந்த தங்ககுடம் உங்களுக்குத்தான் மாமா
ஆந்தரங்க சுக சொந்தம்மட்டும் அப்புறம் அப்புறம் ஆமா
ஆடி இது என்ன பேச்சு அனலாச்சு மூச்சு…

05. இரவுகள் எனை வாட்டும்
இடையினில் அனல் மூட்டும்
நீயின்றி நான் இங்கு பாய்போடும் மாது
பிரிவுகள் இனி ஏது? பிறவியில் கிடையாது
நீதானே நான் வந்து பூச்சூடும் மாது
அன்றாடம் பூங்காற்று உன் பேரை என் காதில் ஓதுது


06. வானரதம் ஏறி மண்ணுலகம் தாண்டி
வைபோக ஊர்வலமாய் போய்வரலாம் வா..
சௌர்க்கபுரி சேர்ந்து இந்திரனைப்பார்த்து
வாங்காத வரங்கள் எல்லாம் வாங்கிடலாம் வா..
மைபூசிடும் கண்பார்வை வாடி நின்றதோ..
மந்தாரப்பூ பொன் வண்டை தேடி நின்றதோ?

07. மாஞ்சிட்டு மேடைபோட்டு மைக்செட்டு மாட்டினா
மாமாவை வழைச்சப்போட புதுத்திட்டம் தீட்டினா
ஆளான காலம் தொட்டு உனக்காக ஏங்கினா
அன்றாடம் தூக்கம் கெட்டு அனல்மூச்சு வாங்கினா
பச்சைக்கிளியே தன்னந்தனியே இன்னும் என்னாச்சு?
உச்சந்தலையில் வச்சமலரில் வெப்பம் உண்டாச்சு


08.நீ நடந்த பாதையில் நான் பூவானேன்
நீ மித்தித்துபோனதனால் சருகானேன்
உன் முகமோ ரோசாப்பூ
உள்; மனமோ தாமரைப்பூ
என்னாளும் ஆகாயம் ஒன்று அல்லவா?
என் நெஞ்சில் எப்போதும் நீயே அல்லவா?

09. தென்பாண்டிக் கூடலா தேவாரப் பாடலா
தீராத ஊடலா தேன் சிந்தும் கூடலா

என் அன்புக் காதலா என்னாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா நீ தீண்டும் கையிலா
பார்ப்போமே ஆவலாய் வா வா...

10. ராகத்தில் தோடி தாளத்தில் ஆதி ஒன்று கூடும்
ரஸ்யாவை போலே உண்டாவதில்லை எந்த நாளும்
நூலாடை சூடி கொள்ளும் கோலாரின் தங்க பாலம் நீதான்
மேலாக தட்டி தட்டி மெருகேற்றும் ஆளும் இன்று நான்தான்
பயம் விட்டு ... புது புரட்சிகரமாக

19 comments:

கன்கொன் || Kangon said...

ஹி ஹி...
களவு செய்ய விரும்பவில்லை...

முதல் 5 பாடல்களையும் 'கண்டுபிடித்து' விட்டேன், தொடர்ந்து களவு செய்ய விரும்பவில்லை....

வருகையைப் பதிவு செய்து தப்பியோடுகிறேன்.

Yava Ganesh said...

ராஜா ராஜாதான் நான் சுத்த மோசம்தானுங்க..ஒன்றுக்கும் முதல்வரி பிடி படதில்லை. வித்தியாசமான பதிவு.

தர்ஷன் said...

அடடா நானும் சுத்த மோசம் ஜனா
எனக்குத் தெரிந்தது ரெண்டே ரெண்டு முதலாவது எப்போதும் நான் முனுமுனுக்கும் ராஜாவின் மாஸ்டர்பீஸ் "தென்றல் வந்து தீண்டும் போது"
கடைசி மம்முட்டி, அமலா தோன்றும் "கல்யாண தேனிலா"

தர்ஷன் said...

இல்லை ஒன்பதாவது

எல் கே said...

9th kalyaana thenilla

இளந்தென்றல் said...

//ஹி ஹி...
களவு செய்ய விரும்பவில்லை...

முதல் 5 பாடல்களையும் 'கண்டுபிடித்து' விட்டேன், தொடர்ந்து களவு செய்ய விரும்பவில்லை....

வருகையைப் பதிவு செய்து தப்பியோடுகிறேன்.//
வழி மொழிகிறேன்.

முதல் மூன்று பாடல்கள்

1 தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ..
படம் : அவதாரம்

2 பார்த்தவிழி பார்த்தபடி பூத்து இருக்க காத்திருந்த
காட்சி இங்கு காணக் கிடைக்க
படம் : குணா

3 சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொனிமைகளில் தாளலயம்...
படம் : கல்லுக்குள் ஈரம்

thiru said...

01.தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணமோ
02.பார்த்த விழி பார்த்த படி பூத்து இருக்க
03.சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
04.தாழம்பூச்சேல மானே எம்மேல தாகத்த சொல்லுதடி
05.தோடி ராகம் பாடவா ... மெல்லப் பாடு
06.வெற்றி வெற்றி என்று சொல்லும் கோயில்மணி முத்தம்மா
07.எனக்கென பிறந்தவ
ரெக்கைகட்டி பறந்தவ இவதான்
08.**
09.கல்யாணத் தேன்நிலா காய்ச்சாத பால் நிலா
10.போட்டு வைத்தக் காதல் திட்டம்

Jana said...

கலக்கிட்டீங்க திரு...சரி அந்த 8 ஆவது பாடலை யாராவது???

ரஹீம் கஸ்ஸாலி said...

1)தென்றல் வந்து - அவதாரம்
2)பார்த்த விழி- குணா
3)சிறுபொன்மணி- கல்லுக்குள் ஈரம்
4)தாழம்பூ சேலை- சந்திரமதி
6)வெற்றி வெற்றி- கட்டுமரக்காரன்
7)எனக்கென பிறந்தவ- கிழக்கு கரை
9)கல்யாண- மௌனம் சம்மதம்
இன்னும் ஒரு பாடல் மனதில் நிற்கிறது. வெளியில் வரவில்லை.

Kiruthigan said...

8 ஆவது அந்திப்பூவே நீ வந்ததால் நெஞ்சில் ஏதா ஆனதே.... சரிதானே???

Jana said...

சரிதான் கூல்...பாராட்டுக்கள்.

Jana said...

திரு மற்றும், ரஹீம் கஸாலிக்கு இந்த பதிவின் பாராட்டுக்கள், சேர்ந் இஞ்சினில் தேடக்கூடாது உண்மையாக நடக்கவேண்டும் என்று இருந்த இளந்தென்றல், கன்கொன்னுக்கு சிறப்பு பாராட்டுக்கள், யாவாக்கணேஸ் (அறை எண் 305 கடவுள்?) தர்ஷன், LK
முன்னேறுவதற்கு இடம் உண்டு, கூல் ரொப்.

Bavan said...

ஆங்.. நான் Absent ஆகிட்டனோ..:)

anuthinan said...

நான் இந்த வித்தியாசமான பதிவுக்கு கருது வளங்களை செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்!!! அவ்வ்வளவுதான்!!!

நான் பெயில் ஆகிட்டேன்!!! அவ்வ்வ்வ்வ்

ரஹீம் கஸ்ஸாலி said...

இந்த போட்டி உண்மையிலேயே ரொம்ப சுவாரஷ்யமா இருக்கு. அடிக்கடி இம்மாதிரி போட்டி வையுங்க தலைவரே...

சயந்தன் said...

பாலவாக்கம் கடற்கரைதான் ஞாபகம் வருகிறது.நீங்கள் இடைவரியை பாடுவதும். முதல் வரியை கேட்பதும்.இதில் உள்ள பாடல்கள் அனைத்தும் எனக்கு தொகுத்து தந்தது அப்படியே இங்கே கொண்டுவந்தனான் . உங்கள் பாடல் ரசனை எனக்கு மிகவும் பிடிக்கும்.

ம.தி.சுதா said...

அண்ணா பதிவு அருமை ஆனால் கலந்து கொள்ள முடியாமல் போய்விட்டது.. மன்னிக்கவும்..

முகில் said...

இந்த பதிவு இசைஞானி இளையராஜா பெயரில் இருப்பதால் சில கருத்து.
பாடல் 5. மாநகர காவல் சந்திரபேஸ் இசை 7. கிழக்கு கரை தேவா இசை.

ஈழத்து சிறுவன் said...
This comment has been removed by the author.

LinkWithin

Related Posts with Thumbnails