
ஆசியாவில் உள்ள பெரிய பிரச்சினைகளாக இந்த மூன்று பிரதேசங்களிலும் வாழும் மக்களின் நிலையினை கூறிக்கொள்ளலாம். மூன்று பிரதேசமுமே தங்களுக்கென தனித்துவத்தைப்பேணி, கலாசார ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் தம்மைத்தாமே ஆண்டுவந்த இனங்கள், குழுக்களாகும்.
ஆனால் இன்று இந்த மூன்று பிரதேசங்களும் முறையே இந்தியா, சீனா, இலங்கை ஆகிய ஆக்கிரமிப்பாளர்களால் அடக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டு இருண்ட யுகங்களுக்குள் தள்ளப்பட்டுள்ளன. ஆண்ட இனங்கள், ஆள நினைப்பதை தமது வல்லாதிக்கம், இனவாதம், நில ஆசைகளால் இந்தியா, சீனா, இலங்கை ஆகிய அரசுகள் வன்கரங்கள் கொண்டு ஒடுக்கிக்கொண்டிருக்கின்றன.
இதை அன்றிலிருந்து இன்றுவரை சர்வதேசம் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது பெரும் ஆச்சரியத்தையே ஏற்படுத்துகின்றது.
ஒரு பேச்சுக்கு ஐக்கியநாடுகள் சபை என்பது இருந்துவருகின்றது. இன்றைய நிலையில் சிரிப்பு பொலிஸ் என்பதுபோலவே சிரிப்பு ஐக்கிய நாடுகள் சபை என்றே அதை கொள்ளவேண்டும். இலங்கை போன்ற ஜூஜூப்பி நாடுகளே ஐக்கிய நாடுகள் சபையினை வெருட்டுகின்றன என்றால் ஐக்கிய நாடுகள் சபையை சிரிப்பு பொலிஸ் என்று கூறாமல் வேறு என்ன பெயரில்த்தான் அழைப்பதாம்!
மாவிட்டபுரம் கந்தசுவாமிகோவில் தேர் திருவிழா.

யாழ்ப்பாணத்தில் நல்லூர் கந்தசுவாமி ஆலயம், தொண்டமனாறு செல்வச் சந்நிதி ஆலயம், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் என்பன மிக முக்கியமான வரலாற்று புகழ்மிக்க முருகன் ஆலயங்களாகும்.
தென்னிந்திய இளவரசியான மாருதப்புரவல்லி என்ற இளவரசிக்கு குதிரைபோன்ற முகம் இருந்ததாகவும், அவள் யாழ்ப்பாணம் வந்து, இந்த ஆலயத்தில் நோன்பிருந்து வழிபட்டுவந்ததால் அவள் குதிரைமுகம் நீங்கி அழகு பெற்றவளாக மாறியதாகவும் தல வரலாறு கூறுகின்றது. இதனாலேயே மாவிட்டபுரம் (மா –குதிரை, விட்ட – அகன்ற, புரம் - ஊர்) என்று இந்த ஆலயம் சிறப்பிக்கப்படுகின்றது.
ஈழத்தில் இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலைகளாலும், அரசாங்கம் உயர்பாதுகாப்பு வலயம் என அறிவித்து பொதுமக்கள் இந்த இடங்களை பயன்படுத்த தடை விதித்ததாலும், பல வருடங்களாக இந்த கோவிலுக்கு மக்கள் வழிபாட்டுக்கு செல்லவே இல்லை என்பது ஈழத்தமிழர்களின் அவலங்களின் ஒன்றாகிப்போனது.
வெக்கத்தை விட்டுச்சொல்வதென்றால் இந்தக்கோவிலுக்கு முதல் முதலாக நானே இன்றுதான் சென்றுள்ளேன்.
“குதிரை முகம் போக அருள் செய்த கந்தா! தமிழர்களின் அவலமுகம் போக எப்போது அருள்வாயடா கடம்பா!!”
மனிதனும் மர்மங்களும்.

பொதுவாகவே ஆவிகள் அமானுசங்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் என்றால் அனைவரும் உன்னிப்பாக கவனமெடுத்து, ஆவலுடன் படிப்பார்கள் என்பது இயல்புதான்.
ஆனால் ஆவிகள், அமானுசங்கள், விநோதங்கள், மர்மங்கள், பறக்கும்தட்டுக்கள், இவைபோன்றவற்றை விஞ்ஞானப்பார்வை கொண்டும், மிக நேர்த்தியாகவும் எழுதக்கூடிய ஒருவர் எழுதினால் அதன் சுவை கூடும் என்பதற்கு இந்த புத்தகம் ஒரு எடுத்துக்காட்டு.
நான் பிரமிப்புடன் பார்ப்பவர்களின் மதனும் ஒருவர். “அன்பே சிவம்” வசனங்களில் தனது திறமையினை மேலும் புடம்போட்டவரல்லவா மதன்.
மதனுடைய எழுததுக்களில் எப்போதும் எனக்கு ஒரு மயக்கம் உண்டு.(வந்தார்கள் வென்றார்கள்)
பெரிய விடயத்தைக்கூட மிக சிம்பிளான விளக்கத்துடன், இலகுநடையில் புரியவைப்பதில் மதன் கில்லாடி.
சொன்னால் நம்பமாட்டீர்கள், தனிமை இரவுகளில் உங்களுக்கும் இப்படியெல்லாம் சில வேளைகளில் நடந்திருக்கலாம் என்று மதன் கூறியுள்ளவற்றில் ஒரு சில எனக்கும் நடந்துள்ளன. படிக்காதவர்கள் ஒருமுறை படித்துப்பாருங்கள்.
Black Button - Short Film
8 comments:
நல்ல பதிவு! கலவையான தகவல்கள் நன்றாக உள்ளன!
அந்த கவிதை மிக நன்றாக உள்ளது.
அண்ணா காத்திருந்து வாசிக்கும் பதிவுகளில் உங்கள் வார இறுதி பதிவும் ஒன்றாகி போய் விட்டது!!!
//மனிதனும் மர்மங்களும்.//
இதை வாசிக்க முயற்சி செய்கிறேன்!!! எனக்கும் இதி எல்லாம் ஈடுபாடு அதிகம் என்பதால்,,,,,
//Black Button - Short Film//
பார்த்தேன்.
//தூக்கத்தில் பாதி ஏக்கத்தில் பாதி..//
Repeat
பாலுமகேந்திரா என்றால் என்ன சும்மாவா?
நகைச்சுவை நச்
நல்ல பதிவு அண்ணா
அருமை...
அருமையான பதிவு ஜனா
மதன் சுவாரசியமாக எழுதுவார் என்பது உண்மையே
வந்தார்கள் வென்றார்கள் அணிந்துரையில் வாத்தியார் சுஜாத்தா கூட இப்படி யாரேனும் தனக்கு வரலாறு கற்பித்திருந்தால் என சிலாகித்திருந்தார்.
ரசித்தேன் சுவைத்தேன் இனித்தேன் எதற்கு என திகைத்தேன்
பதிவைச் சொன்னேன்
அருமை
“குதிரை முகம் போக அருள் செய்த கந்தா! தமிழர்களின் அவலமுகம் போக எப்போது அருள்வாயடா கடம்பா!!”
பார்ப்பம் அண்ணா எதுக்கும் ஒரு முடிவு இருக்குத்தானே! உண்மைதான் வெள்ளையன் போனதிலிருந்து இந்த மூன்று பிரதேசங்களும் பத்தி எரியுது. ஆக்கரமிப்பினம் அதை அந்த நிலக்காரன் தட்டிக்கேட்டால் அவன் தீவிரவாதி, பயங்கரவாதி, நக்ஸலைட், என்று பல பேரை சேர்த்து அழிக்கிறதுக்கு முண்டியடித்து நிற்பினம்.
சிரிப்பு ஐக்கியநாடுகள் சபைதான். சந்தேகமே தேவையில்லை.
அருமையான கட்டரை அண்ணா வாழ்த்துக்கள். காஷ்மீர் மன்னர் வெள்ளையர் போன பின் சரியான முடிவெடுத்திருந்தால் அம் மக்களுக்கு இந்நிலை வந்திருக்காது. அதே போல் தான் ஒப்வொரு தலைவர்களும் தம் மானத்திற்காக மக்களை பகடைக் காயாக்கி கொள்வார்கள்.
Post a Comment