Saturday, August 21, 2010

அன்புள்ள சந்தியா - 03


இந்தக்கதையை படிப்பதற்கு முன்னர் - இதன் முதல் கதையை ஒருபதிவரும், அடுத்த கதையினை வெறு ஒரு பதிவரும் பதிவிட்டிருக்கின்றார்கள். இப்போ மூன்றாவது ஆளாக கதையினை தொடக்கியவரின் அனுமதியுடன் நான்.

பெரும்பாலும் மற்ற இரண்டு கதைகளையும் படித்திருப்பீர்கள் என நம்புகின்றேன். படித்தவர்கள் அதே தொடர்ச்சியாக இதை படியுங்கள்.
முதல் கதையினை படிக்காதவர்கள்
கதையின் முதற்பாகத்திற்கு இங்கே
இரண்டாம் பாகத்திற்கு இங்கே
களிக் பண்ணி படித்துவிட்டு தொடருங்கள்.


அன்புள்ள சந்தியா - 03


“ஐயோ அம்மா. அண்ணா மயங்கி விழுந்துவிட்டார்” என்ற என் தங்கையின் குரல் ஏதோ பாதாளத்தில் இருந்து கேட்பதுபோல எனது செவிகளில் விழுந்து சென்றது.
நான் இந்த அளவுக்கு பலகீனமானவனா? என்று என்னைநானே கேட்கவும் என்னால் அப்போது முடிந்தது. விழிப்புலனும் மங்கிக்கொண்டு சென்ற வேளையில்
வானொலியில் ஒலித்த “அன்புள்ள சந்தியா உன்னை நான் காதலிக்கிறேன்” என்ற பாடல்…
ஜெஸ்.. அப்ஸலூட்லி “மியூஸிக் தெரப்பியாக” என்னை உடனடியாக அசுவாசப்படுத்திக்கொண்டு விர் என்று எழுந்து போன் ரிசீவரை மீண்டும் கையில் எடுக்கவைத்தது.

ஹலோ..எனித்திங் பிரோபிளம்? எதிர்முனையில் சந்தியா, பதட்டத்துடன்; கேட்டாள்.
“இல்லை…இல்..லை சந்தியா ஐயாம் ஓகே.. ஜஸ்ட் லெக் சிலீப் ஆகிவிட்டது என்றான். மூக்குக்குக்கீழே தொட்டுப்பார்த்தான் “மண் ஒட்டுப்படவில்லை” மீசை இருந்தால்த்தானே!!

ச..ரி.. சரி சந்தியா எத்தனையாம் திகதி கல்யாணம்? என்றான். “கல்யாணம்” என்ற வார்த்தையை சொல்லும்போதே நெஞ்சுக்குள் யாரோ சம்மட்டியால் ஓங்கி அடித்ததுபோன்ற ஒரு உணர்வு வந்தது அவனுக்கு.

மறுமுனையில் ரெலிபோனிலேயே ரெலிபோன் மணியைப்போல் சிரித்தாள் சந்தியா.
“என்ன?? கல்யாணம் என்றதுமே நம்பிட்டீங்களா? உண்மையிலேயே கல்யாணம்தான் பட் எனக்கு இல்லை என் அண்ணாவுக்கு வருகின்ற 29ஆம் திகதி அதற்காகத்தான் உங்களிடம் சொல்ல, அப்படியே உங்கள் அட்ரஸையும் கேட்க போன் பண்ணினேன்..என்று விட்டு மீண்டும் சிரித்தாள் சந்தியா…

என்ன!!! எதிர்முனையில் இருப்பவளுக்குத்தெரியாமல், அழுதுகொண்டே சிரிப்பதற்கு மார்லின் பிரேண்டோ, சிவாஜி கணேசனுக்கு மட்டும் அல்ல இயற்கையாகவே எனக்கும் வருகின்றதே என வியந்துகொண்டேன்.
ஒரு நிமிடத்திற்குள் மிக பயங்கரமான சோகம், அடுத்த சில நொடிகளில் பயங்கரமான சந்தோசம்…இப்படி ஏற்பட்டால் நான் என்னவெல்லாம் செய்திருப்பேன் என்று எழுத்துக்களால் சொல்லமாட்டேன்.
அது ஹீனோ பாக்கியம், சொல்லமாட்டேன் சுயநலம்!!

அவள் மீண்டும் கேக்கவே படபடவென்று எங்கள் வீட்டு அட்ரஸை சொன்னேன். கண்டிப்பாக வருவோம் என்றேன். “உங்கள் வருங்கால அண்ணி உங்களைவிட அழகா? என்றேன்!!” ஆம்..ஆனால் பொறாமை இல்லை என்றாள்.
சரி..கல்யாண வேலைகள் தலைக்குமேல் இருக்கு வெளியில் போகவேண்டும். அம்மாவிடமும், தங்கையிடமும் ஈவினிங் கோல் எடுத்து பேசுவதாக சொல்லச்சொல்லிவிட்டு ரிசீவரை வைத்தாள்.

ஒரு சாம்ராட்சியத்தையே அழிக்கவந்த புயல், தென்றலான சம்பவத்தை நினைத்து வியந்தபடியே ரேடியோவை பார்த்தான் அதில்…

“தாயைக்கண்டால் தன்னாலே ஓடும்
பிள்ளைபோல என்காதல் ஆகும்
அன்பே அதை உன் கண்கள் அறியாதா?
என்றோ யாரோ உன் கையைத்தொடுவான்
இன்பம் துன்பம் எல்லாமே அறிவான்
அன்பே அது நானாகக்கூடாதா?”

என்று அன்புள்ள சந்தியா பாடல் இன்னும் ஒலித்துக்கொண்டிருந்தது. ஆச்சரியமாகப்பார்த்த அம்மாவுக்கும் தங்கைக்கும் விடயத்தை சொல்லிவிட்டு வெளியால் சென்றுவிட்டேன்.

ஐந்துநாள் கடந்துபோய்விட்டது. நான் வீட்டில் இல்லாத வேளையில் மூன்றுமுறை சந்தியா அம்மாவுடனும், தங்கையுடனும் கதைத்திருக்கின்றாள். அன்றைக்கு இருந்த ரென்ஸனிலை என் மொபைல் நம்பரை இன்னும் கொடுக்காதது வாஸ்தவம்தான் என்று என்னை நானே சமாதானம் செய்துகொண்டேன்.
காதலித்துப்பார்த்தால் தபாற்காரன் தெய்வமாவான் என்றார்களே! அவள் வெடிங் காட் போட அட்ரஸ் வாங்கியிருந்தாலும், அது தபாற்காரன்மூலம்தானே வரும் என்பதை நான் ஏதோ மறந்துதான் போயிருந்தேன்.

தபாற்காரன் வந்து ஒரு தபாலை தங்கையிடம் கொடுக்கும்போதுதான் அது உறைத்தது. ஜெஸ்.. அது சந்தியா அனுப்பிய வெடிங் காட்தான். தங்கையிடமிருந்து அதை பறித்துகொண்டு என் அறைக்கு சென்றேன்.
“உன் பெரியப்பாவின் மகள் பிரியா அக்காவுக்கும் 29ஆம் திகதி தானே கல்யாணம் முற்றாய் இருக்கு என்று அம்மா சொன்னது காதில் பெரிதாய் வாங்கவில்லை. அக்காவின் கல்யாணத்தைவிட வருங்கால மச்சானின் கல்யாணம்தான் அவனுக்கு முக்கியம்.

அந்த வெடிங் காட்டை பிரிக்க ஆயத்தமாகும்போது, வாசலில் ஒரு நிசான் சணி,? வந்து நின்றது பெரியப்பாவும், பெரியம்மாவும், தம்பியும் வந்துகொண்டிருந்தார்கள்.
பெரியம்மா என்னைத்தான் கூப்பிட்டுக்கொண்டு வந்தா! வெடிங் காட்டை அப்படியே போட்டுவிட்டு ஹோலுக்கு ஓடிவந்தேன்.
பெரியப்பா, ம்ம்ம்…என்ன என்ர தம்பியின்ட வீட்டுக்கும் காட் தரவேணுமே. இந்தக்காலம் இப்படி மாறிப்போச்சு. எண்டுவிட்டு அம்மாவிடம் வெற்றிலை தட்டில் வைத்து காட்டை கொடுத்தார். சரி..எங்களுக்கும் சேர்த்து சாப்பாடை செய்யுங்கள், இங்க இருக்கிற மற்றவர்களுக்கும் காட் கொடுக்க போட்டுவாறம். என்று புறப்பட்டனர் பெரியப்பாவும் பெரிம்மாவும். தம்பி வரவில்லை என்றுவிட்டு எனக்கு பக்கத்தில் வந்து இருந்துகொண்டான்.

அம்மா அந்த வெடிங் காட்டை காட்டுங்கோ என்றுவாங்கி பார்த்தேன்…எமது சிரேஸ்ர புத்திரன் சத்தியனுக்கும், சிரேஸ்ட புத்திரி பிரியாவுக்கும் …என்று திருமாங்கல்ய ..பெரியோர்கள் நிச்சயித்திருப்பதால், இருவீட்டார் அழைப்பு என்று மேலோட்டமாக படித்துவிட்டு, நினைவு வர ஓடிப்போய் சந்தியா அனுப்பிய கல்யாண காட்டை பிரித்தான் …அதுவும் அதே..
உண்மையிலேயே உச்ச சந்தோசத்தில் அவனுக்கு மயக்கம் வந்தது...அப்படியே சரிந்தான்…சித்தி ஓடிவாங்கோ அண்ணா விழுந்துவிட்டார் என்று தம்பி கத்துவது கேட்டு மறைந்தது.

தொடர்ந்து தொடரலாம்…

28 comments:

வந்தியத்தேவன் said...

இந்த சந்தியாவில் இன்னும் எத்தனை திருப்பமோ ஹாஹா. ஆனாலு பெரியப்பாவின் மகளை தெரியாமல் இர்ப்பது என்பது தமிழ் சினிமாவில் தான் சாத்தியம்.

உங்கள் நடை கலக்கல்.

LOSHAN said...

அருமை ஜனா.. அழகாக இருக்கு..
காதலைப் பிரிக்க விடமாட்டீங்க போலிருக்கு.. :)
சந்தியா இன்னும் யார் யாரிடம் எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளப் போறாவோ?

LOSHAN said...

அருமை ஜனா.. அழகாக இருக்கு..
காதலைப் பிரிக்க விடமாட்டீங்க போலிருக்கு.. :)
சந்தியா இன்னும் யார் யாரிடம் எப்படியெல்லாம் மாட்டிக் கொள்ளப் போறாவோ?

யோ வொய்ஸ் (யோகா) said...

கதா நாயகனின் பெயர் சுபாவா?

அருமையான எழுத்து நடை

Cool Boy கிருத்திகன். said...

கதை சூப்பரா போய்க்கிட்டிருக்கு...
அடுத்து தெரடர போவது எங்கே..?

Subankan said...

ஆகா, இப்படு ஒரு திருப்பமா? நடக்கட்டும் நடக்கட்டும்

//காதலைப் பிரிக்க விடமாட்டீங்க போலிருக்கு.. :)
//

அது தெய்வீகக் காதலாம். அவ்வளவு இலகுவில் பிரிக்க முடியுமா?

டிலான் said...

ஓகோ... அப்ப இனி மாற்றுச்சம்பந்தம் தானோ? காதலை சேர்த்துவைப்பதில் இத்தனை சுகமமோ? அடுத்து சந்தியா யாரிடம் போகிறாள்?

Bavan said...

வாவ்.. நல்ல திருப்பம்..:D

யாராவது பிரிக்க ட்ரை பண்ணுங்கப்பா..:P

கன்கொன் || Kangon said...

மயங்கிவிழுந்த பின் வந்த திருப்பத்தை இரசித்தேன்....

அருமையான நடை...

சந்தியா இனி யார் வசமோ...
யாராயிருந்தாலும் தொடர்ந்து இப்படி அழகாக எழுதுங்கள்...

கலக்கல்... :)

Pradeep said...

மயக்கத்திலேயே தொடங்கி மயக்கத்திலேயே முடிவது சிறப்பு.

//மூக்குக்குக்கீழே தொட்டுப்பார்த்தான் “மண் ஒட்டுப்படவில்லை” மீசை இருந்தால்த்தானே!!//

//ரெலிபோனிலேயே ரெலிபோன் மணியைப்போல் சிரித்தாள் சந்தியா.//

// எழுத்துக்களால் சொல்லமாட்டேன்.
அது ஹீனோ பாக்கியம், சொல்லமாட்டேன் சுயநலம்!!//

//“உங்கள் வருங்கால அண்ணி உங்களைவிட அழகா? என்றேன்!!” ஆம்..ஆனால் பொறாமை இல்லை என்றாள்.//

மிக இரசித்த இடங்கள்.

ம.தி.சுதா said...

அடடா கதை இப்பிடி போகுதா. நல்ல கதை நடை வாழ்த்துக்கள்.... நீங்களும் லோசண்ணாவின் ஹீரோ பெயரைப் போட்டிலுக்கலாம்..... எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை.... ஜனா அண்ணா

KANA VARO said...

சிறுகதைகள் வாசித்து காலங்கள் கடக்கின்றது.
சுபாங்கன், லோஷன் அண்ணா, உங்களுடையது... மூன்றுமே வித்தியாசமான அனுபவங்கள்.

இந்த காதல் பயணம் இப்படியே பலரூடாக தொடர ஆசை.

KANA VARO said...

அது என்னண்ணை வீரபாண்டிய கட்ட பொம்மன் போல ஒரு Profile படம்

Jana said...

@வந்தியத்தேவன்

நன்றி வந்தி.
கதையை ஒரு ட்ரக்குக்குக் கொண்டுவர கொஞ்சம் சினிமாத்தனமும் தேவைப்படுதே அதுதான். பார்ப்பம் அடுத்து சந்தியா யாரிடம் என்று!!

Jana said...

@ LOSHAN
வெல்கம் லோஷன். ஸியேஸ்..
காதலை பிரிப்பது பெரிய பாவம் ஆச்சே...
ம்ம்ம்..சந்தியா எங்கு சென்றாலும் காதல் பந்தயத்தில் ஜெயிக்கட்டும்..

Jana said...

@ யோ வொய்ஸ் (யோகா)
நன்றி யோ..
கதாநாயகனின் பெயர் "சு" லதான் தொடங்குது...பா என்றும் வைத்துக்கொள்ளலாம், தா என்றும் வைத்துக்கொள்ளலாம்...போல....

Jana said...

@ Cool Boy கிருத்திகன்

Thank you cool. i am also waiting for that 4th post.

Jana said...

@Subankan

மனித உணர்வு அறிந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல.... அதையும்தாண்டி...
அப்படித்தானே சுப அங்கன்

Jana said...

@டிலான்

அடுத்து சந்தியா யாரிடம் போகின்றாள்??? என்று கேட்டுப்போட்டியளே டிலான். ஏன் ஒரு சேஞ்சுக்கு உங்ககூடவே கூப்பிட்டு பாருங்கோவன்...

Jana said...

@ Bavan

Bavan You too?

Jana said...

@கன்கொன் || Kangon

நன்றி என் மத்தியின் இளவல் கன்கொன்.
ஏன் நீங்களும் ஒருக்கால் அவனையும் அவளையும் கசிந்துருக எழுதலாமே?
நன்றி கோபி.

Jana said...

@Pradeep
நன்றி அண்ணா.

Jana said...

@ம.தி.சுதா

நன்றி சுதா. ஏதேட்சையாக எடுக்கும் பெயர்கள்கூட சிலவற்றில் நியமாகப்பொருந்திவிடுகின்றது இல்லையா சுதா?
லோஷன் மூன்றாவது நபராக கதை சொன்னார், எனவே பெயர் தேவைப்பட்டது. நான் பாத்திரமாகவே கதை சொன்னதால் பெயர் தேவைப்படவில்லை.
ஆனால் மேலும் கதையை கொண்டு செல்ல பெயர் தேவையே.

Jana said...

@KANA VARO

நன்றி வரோ.. ஆம் தொடர்ந்து கதை சென்று சுபத்தில் முடியவேண்டும் என்பதே என் விருப்பம்.
அடுத்து வீரபாண்டிய கட்டப்பொம்மனா? சந்தோசம்...
ஒன்றும் இல்லை. வயதுக்கு வந்த காலத்தில் இருந்தே மீசை வைத்து பழக்கமில்லை. அதுதான் ஒரு சேஞ்சுக்கு மீசை வைத்துப்பார்ப்போம் என்று...

தர்ஷன் said...

அருமையாக தொடர்ந்திருக்கிறீர்கள். தொடர்ந்தும் மற்றவர்களும் கலக்குவார்கள் என நம்புகிறேன்.

Jana said...

நன்றி தர்ஷன் ஏன் நீங்களும் ஒரு சின்ன ட்ரை ஒன்று கொடுத்து பாருங்களேன்.

Anuthinan S said...

ரொம்பவே பிந்தி விட்டது கருத்து வழங்கல்!!

அண்ணே நீங்களும் எப்படியோ அவங்கள சேர்த்தே விட்டிங்க!!! கதை ரொம்பவே சுவாரசியமாக இருக்கிறது!!!

இன்னும் ரெண்டு நாட்களில் யாரும் தொடராவிட்டால போருத்தமானவர்களின் அனுமதியுடன் தொடர உத்தேசித்து உள்ளேன்!!!

Bavan said...

அன்புள்ள சந்தியா - 04
http://nbavan7.blogspot.com/2010/08/04.html

LinkWithin

Related Posts with Thumbnails