Wednesday, September 15, 2010

உடையுதிர்காலம்!!!கதையின் முற்குறிப்பு – பதிவர்களில் பெரும்பாலானோர் எழுத்தாளர் சுஜாதாவின் பரம ரசிகர்களாக இருக்கின்றார்கள். இந்த நிலையில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் எழுதிய அமானுசத்திற்கும், விஞ்ஞானத்திற்கும் இடையில் நடக்கும் சம்பவங்கள் கொண்ட “கொலையுதிர் காலத்தை” நகைச்சுவைக்காக மட்டுமே உள்ட்டா பண்ணி வரப்போவதுதானுங்க இந்த உடை உதிர்காலம்.
இதில் கணேசாக – பதிவர் சுபாங்கனும், வஸந்த் ஆக – பதிவர் கூல்போய் கிருத்திகனும் வாறாங்க. (சகிக்காதுதான் என்றாலும் அந்த இரண்டுபேரையும் இந்த நகைச்சுவை கதை முடியும் மட்டும் கணேஸ் வசந்தாக ஏத்துக்குங்க)
முக்கிய குறிப்பு - இது சுபாங்கன், கூல்போய் கிருத்திகனை தவிர மற்ற யார் மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல.
சரி…இனி கதைக்கு போங்க…


சக்ஸஸ்..சக்ஸஸ்…என்று இரண்டு வயர்துண்டுகளை V வடிவமாக வைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் கணக்காக கதைக்குள் எண்டர் ஆகின்றான் சுபாங்கன்.
அப்படி அவன் கத்தியதற்கு காரணம் “கால இயந்திரம்” ஆம் அவனால் பின்பக்கமாக கடந்த நூற்றாண்டுகளுக்கு செல்லக்கூடிய ஒரு டைம் மெஷின் கண்டு பிடிக்கப்பட்டுவிட்டது. அதுதான் அந்த கத்தல்.

அடடா..இந்த வெற்றியை யாருக்காவது சொல்லனுமே என்று கையும் ஓடாமல் காலும் ஓடாமல் அவஸ்தைப்பட்டுக்கொண்டிருந்தபோது…
மொபைல் சிலிர்த்த்துகொண்டிருந்தது. ஆர்வத்துடன் எடுத்துப்பார்த்தான் சுபாங்கன்.
மருதமூரான் என்று டிஸ்பிளேயில் விழுந்தது.
ஹலோ வணக்கம் பொஸ்…யாழ்ப்பாணத்திலையா நிற்கிறீங்கள்? மருதமூரானிடமிருந்து
ஓமோம்…ஒரு முக்கியமான விசியம் ஒன்…

அதைவிட முக்கியமான விடயம்.. உங்கட கொக்குவில் பக்கம் உள்ள, சொதி வளவு என்ற இடத்தில் ஆவி ஒன்றின் அட்டகாசமாக இருக்குதாம். அந்தப்பக்கமே சனங்கள் போக பயப்படுகுதுகளாம். இதைபற்றி விரிவாக ஆராய ஒருத்தரும் இல்லை அதுதான் உங்களிடம் சொல்லுறன்..ஒருக்கா உண்மையோ என்று அராய்ந்துபாருங்கோவன்…

ஓ…அதுசரி…நான் ஒரு டைம் மெஷி…

நான் ஆவிகளை நம்பிறதில்லை. இதில ஏதோ வேற விடயங்கள் இருக்கு கண்டிப்பாக போய் ஒருக்கா ஆராயுங்கோ..

ஓம் அண்ணை…நான் ஒரு ரைம் மெஷி..
கவனமாக காண்டில் பண்ணவேணும் சுபாங்கன். பலபேர் இந்த ஆவியை பார்த்திருக்கினமாம். பஸ்ஸில போய்கொண்டிருக்கின்றேன் சுபாங்கன் நான் பிறகு கோல் பண்ணுறன். போனை கட் பண்ணிவிட்டார் மருதம்ஸ்.

கொய்யாலே…நான் சொல்லவந்த விசியத்தை கேட்டுதா இந்த மனுசன்??? மனதிற்குள் நினைத்துக்கொண்டான் சுபாங்கன்.

ஆவியா? படு இன்ரஸ்ரிங்கான விசியம்தான். ஆனால் அதற்கு முதல் என்ட ரைம் மிஸின் பத்தி யாருக்காவது….!! மொபலைப்போட்டு நோண்டுகின்றான் சுபாங்கன்.
மதி.சுதா….!! ஜெஸ் ஆர்வமான பெடியன் இவனிடம் டைம் மிஷின் பற்றி பேசிக்கொள்ளலாம்.

மறுமுனையில் வணக்கம் சுபாங்கன் அண்ணா..எப்படி இருக்கிறியள்? யாழ்ப்பாணத்தில நிற்கிறீங்களாம்.

ஓமோம்..சுதா டைம்மிஸின் ஒன்…

ஓமண்ணா.. நான் அது பற்றி ஒருகதையை போனமாசம் எழுதியிருந்தன். இப்பதான் படிச்சனீங்களோ?
பற்றி தீர்ந்து சுபாங்கனின் போன் “ஓப்” ஆகிவிட்டது.

சற்றுநேரத்திற்கெல்லாம் சி.பி.ஷட் ஒன்றின் உறுமல் சத்தம் கேட்க வந்துகொண்டிருந்தான் கூல்போய்.
பாஸ்… டைம் மெஷின் என்ன ஆச்சு! சக்ஸஸா?
ஆமாடா…யாருக்காவது சொல்லுவோம் என்றால் செவிகொடுக்கிறாங்களா பார்!
பாஸ்..ஒருத்தருக்கும் சொல்லிப்போடாதையுங்கோ அந்த மெஷினை வைத்து செய்யவேண்டிய காரியங்கள் பல இருக்கு! அதை பிறகு பார்ப்போம்..
மருதம் கோல் பண்ணி ஒரு விடயம் சொன்னார். உங்களுக்கும் கோல் பண்ணினதாக சொன்னார் என்றான் கூல்போய்.

ஆமாடா நீ ஆவிபேயை நம்புறியா என்ன?
ஜெஸ் பாஸ்..சில சம்பவங்களை விஞ்ஞானத்தால் நிரூபிக்க முடியலையே!
இது எங்களுக்கு ஒரு பெரிய சலேஞ்ச் பாஸ். நாங்கள் இந்த மர்மத்தை கண்டுபிடித்தே ஆகவேண்டும்.
நீயே சொல்லிட்டாய் பிறகு என்ன கிழம்பு. உன்ர ஆர்வத்திற்கு இன்றையில இருந்து உனக்கு 80 ரூபா சம்பளம் யாஸ்தி.

இருவரும் குறிப்பிட்ட அந்த இடத்திற்கு புறப்பட்டு சென்றார்கள். ஒரு பெரிய வளவுதான். அயலிலே பெரிதாக ஒரு வீடும் இல்லை. ஆனால் வளவின் பின்பக்கம் கோவில் மதில்மாதிரி சிவப்பு, வெள்ளை வர்ணம் பூசப்பட்டிருந்தது. முன்னால் ஒரு பழையகால மாடி வீடு ஒன்று இருந்தது. வளவு முழுக்க ஒரே பற்றைகளாகவும் நிறைய மரங்களும் நின்றன. பட்டப்பகலிலை பார்க்கும்போதே ஒரு பயங்கரம் தெரிந்தது உண்மைதான்.
டேய்.. பக்கத்தில் ஏதாவது ஒரு வீட்டில் விசாரித்து பார்ப்போம் வா என்றான் சுபாங்கன்!
இருவரும் சற்று தள்ளி இருந்த ஒரு வீட்டின் முன்னால் சி.பி.ஷட்டை நிறுத்தி கோர்ன் அடித்தனர்.

உள்ளே..இருந்து ஒரு பதினெட்டு வயது மதிக்கத்தக்க பருவ மங்கை ஓடிவந்தாள்.
பாஸ்…எழிமையிசை இயக்கம் நிறுவப்படுது பாஸ் என்றான் கூல்போய்.
டேய்..ஆரம்பிச்சுட்டியா? சும்மா இருடா!! அப்படி எல்லாம் சொல்லக்கூடாது என்றான் சுபாங்கன்.
அதுசரி..அதை நீங்க சொல்லுறீங்க!!! என்று விட்டு அன்புள்ள சந்தியா..என்று வாய்க்குள் பாடலை முணுமுணுத்தான் கூல்போய்.

வாசல் வரை ஓடிவந்த அந்த பெண்ணில் இவர்களைக்கண்டவுடன் ஒரு ஏமாற்றமும், அதைவிட ஒரு அச்சமும் தெரிந்தது.
பாஸ்..இவள் வேற யாரையோ எதிர்பார்த்துகொண்டிருக்கின்றாள் போல என முணுமுணுத்தான் கூல்போய்.
என்ன என்பதற்கான பாவத்தை தன் முகத்தில்க்காட்டி இவர்கள் இருவரையும் பார்த்தாள் அவள்!
தூரத்தில் தெரியும் அந்த வளவைக்காட்டி இது யாருடையது என்று உங்களுக்கு தெரியுமா என்றான் சுபாங்கன்.
தெரியாது அண்ணா!! அந்த அண்ணா என்ற சொல்வந்ததும் பீறிட்டுக்கொண்டுவந்த வறட்டு எச்சிலை கஸ்டப்பட்டு விழுங்கினான் சுபாங்கன். சந்தர்ப்பங்களை மறந்து ஹெக்கெக்கே என்று சிரித்துக்கொண்டிருந்தான் கூல்போய்.

நாங்கள் இந்த இடத்திற்கு வந்து 2 மாசம்தான் ஆகுது அண்ணா. அது யார்ட என்று தெரியாது அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் இப்போ வீட்டில் யாரும் இல்லை என்றாள் அவள்.
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா! என்றான் கூல்போய்! வீட்டில் யாரும் இல்லை என்பது அவனின் காதில் விழுந்த மறுவினாடியே.
கூலைமுறைத்துபார்த்த சுபாங்கன். போதும் எடுடா சி.பி.ஷட்டை என்றுவிட்டு. நன்றி சிஸ்ரர் என்று கஸ்டப்பட்டு சொல்லிவிட்டு மீண்டும் தங்கள் இருப்பிடம் வந்தனர்.

டேய்..இன்றைக்கு இரவு எப்படியும் அந்த வளவுக்குள் நுளையவேண்டுமடா! இன்பர்மேஷன் ஒன்றும் கிடைக்கலையே. அது இருக்கட்டும். ஆவி என்பது பற்றி நீ என்ன நினைக்கின்றாய்? என்றான் சுபாங்கன்.
என்னைப்பொறுத்தவரை அது இருக்கு பாஸ் என்றான் கூல்போய்.
திடீரெனறு;..நினைவு வந்ததும்..டேய்..இது பற்றி கேட்க சரியான ஆள் நம்மட பாலவாசகன் தாண்டா. எடுடா போனை ஆளை கனநாள் தொடர்புகொள்ளமுடியலை என்றான் சுபாங்கன்.
பாலவாசனுக்கு போன் போகவில்லை. கோல் பெயிலியர் என்று வந்துகொண்டிரந்தது.
பாஸ்..ஒரு செய்தி. பாலவாசகன் இப்ப ரொம்ப பிஸி. ஆளை பிடிக்கவே முடியாது.
ஆள் நாசாவுக்கு போய்ட்டார் என்றும் ஒரு கதை அடிபடுது என்றான் கூல்போய்.

இருப்பு கொள்ளுதில்லைடா..வா திரும்ப அந்த வளவுப்பக்கம்போய் ஏதாவது தகவல்கள் கிடைக்குதா என்று பார்ப்போம் என இருவரும் புறப்பட்டார்கள்.
இப்பொழுது அந்த வளவிற்குள் ஒரு நடுத்தர வயதானவர் நின்று கொண்டிருந்தார்..
அவரை இருவரும் அணுகினார்கள்.
யார் தம்பிமார் நீங்கள்?
ஓன்றும் இல்லை அண்ணை. இந்த வளவிற்குள் ஏதோ ஆவி சுற்றுதாம் என்று கேள்விப்பட்டோம் அது உண்மையா என்று அறியத்தான் என்றான் கூல்போய்.
இவர்களை ஏற இறங்க பார்த்த அவர்.
ஓம் தம்பி நான் பல தடவை கண்டிருக்கின்றேன். ஆரம்பத்தில ஒருவரும் நம்பேல்லை. இப்ப கனக்கபேர் பார்த்திருக்கினம். என்றார் அவர்.

எங்களுக்கு இதில் நம்பிக்கை இல்லை அண்ணா. இது உங்கள் வளவா? என்றனர் இருவரும்.
ஓம் தம்பி இது என் வளவுதான். வேண்டுமென்றால் இன்றைக்கு இரவு நின்றுபாருங்கள் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும் என்றார் அவர்.
ஒரு விசியம்தம்பி. உங்கட ஆர்வக்கோளாறை பார்த்தால் எனக்கும் தைரியம் வருது. இன்றைக்கு நீங்கள் இங்க நின்றால் உதவிக்கு நானும் நிப்பேன். பார்ப்போம் என்றார் அவர். சரி தம்பியவை நான் இன்றைக்கு இங்க தான் நிற்பேன் ராவுக்கு வாருங்கோவன் என்றார் அவர்.

இரவு 8 மணிபோல் இரண்டுபேரும் அந்த வளவை அடைந்தார்கள். ஒரு காக்கா குருவிகூட இல்லையேடா என்றான் சுபாங்கன்.
பாஸ்..காக்கா குருவி எல்லாம் தங்கட கூட்டில் நித்திரைக்கு போயிருக்கும் என்றான் கூல்போய்.
என்ன தம்பியவை வந்திட்டியளோ? என்று கேட்டுக்கொண்டே அந்த மனிதரும் வந்தார். பழைய கிணத்தடி ஒன்றில் இருந்து மூவரும் பல கதைகள் பேசினர்.
தம்பி இந்த ஆவி பற்றி ஒரு கதை இருக்கு என்று அந்த தெரியவர் கூறத்தொடங்கினார்…

பெரியவரின் கதையும், ஆவியின் அட்டகாசமும், ஆவிதுரத்தும் பதிவர்களின் கேனைத்தனமும் அடுத்த பதிவில்.. இனித்தான் உங்கள் வயிறும் நோகவுள்ளது…

16 comments:

வந்தியத்தேவன் said...

படமும் கதையும் கலக்கல். சுபாங்கனை கணேசாக எண்ண மனம் மறுக்கின்றது, பேசாமல் அவரை வசந்தாகவும் நீங்கள் இருந்திருக்கலாம்.

Bavan said...

ஹாஹா.. டைம்மிசின் என்றால் கைக்கடிகாரம் ஏதாவது தொலைந்து அதைக் கண்டுபிடிச்சாரோ..:P

//பெரியவரின் கதையும், ஆவியின் அட்டகாசமும், ஆவிதுரத்தும் பதிவர்களின் கேனைத்தனமும் அடுத்த பதிவில்.. இனித்தான் உங்கள் வயிறும் நோகவுள்ளது…//

ஓ.. எக்பெக்டிங்..;)

பாலா அண்ணாவின் டவுசர் இன்னும் கிழிக்கவேண்டும்..:P #வாசகர்_கோரிக்கை..:P

Bavan said...

சொல்ல மறந்திட்டேன்.. காமடிக்கதை என்றதுக்குஅந்தப்படமே போதும்..ஹிஹி படம் கலக்கல்ஸ்..:D

Balavasakan said...

ஆமா என் ரகசிய பயணம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது .... வந்து கவனிக்கிறன் வேப்பமரத்தடியில..!!

கலக்கலோ கலக்கல் !!நேத்தும் விசாரிச்சன் சுபாங்கனிட்ட எங்க கதை எண்டு..

ம.தி.சுதா said...

ஆஹா... கலக்கல் படம் ஒன்றுடன் கலக்கல் அரம்பம் ஒன்று தொடங்கியிருக்கு.. முதல் பகுதியே இப்படி சூடு என்றால் அடுத்தது எப்படியிருக்குமோ..... அண்மையில் ஜாக்ஸன் உயிரோடிருப்பது பற்றி ஒரு வீடியோ பார்த்தேன்.. அதே போல் சுஜாதாவும் நல்லூரடியில் உலாவுகிறாரோ...

ம.தி.சுதா said...

சகோதரர்களே இந்தக் கொடுமையை யாரிடம் சொல்லியளழுவது இன்ட்லியில் ஓட்டுக் குத்துவோம் என்றால் You have already voted for this article இப்படி வருகிறது... யாராவது விளக்கம் தாருங்களேன்...

மருதமூரான். said...

ஜனா….!

ஆரம்பமே அசத்தலாகத்தான் இருக்கு. அதுசரி, ஏன் ஐயா என்னை வச்சே ஆரம்பிச்சிருக்கிறீங்கள். ஆனால், சுபாங்கனின் என் மீதான (கதையில்) எரிச்சலை ரசித்தேன். கூல்போய் குறித்து எனக்கு கிடைக்கும் உளவுத்தகவல்கள் உண்மையென்பதை கதையின் சில நிகழ்வுகளே சொல்லிடுகின்றன.

நல்லாயிருக்கு ஜனா….! தொடருங்கள்.

டிலான் said...

கதை சுப்பர் அண்ணே. ஒவ்வொரு கட்டத்திற்கும் சிரித்தேன். அடுத்த பகுதி கண்டிப்பாக இன்னும் சிரிக்கவைக்கும் என்பது உறுதியாகிவிட்டது. தொடருங்கள்..ஆவல் கூடிவிட்டது.

Subankan said...

ஆகா, ஆகா, ஆகாககாகா :)

//சுபாங்கனின் என் மீதான (கதையில்) எரிச்சலை ரசித்தேன்//

அண்ணே, எல்லா உரிமையும் ஆசிரியருக்கே!, கருத்துக்களும் அவருடையவையே ;)

Cool Boy கிருத்திகன். said...

ஆகா, ஆகா, ஆகாககாகா :)

அடுத்து பல்பு வாங்கப்போகும் புதிவர் யாரு..?


//கூல்போய் குறித்து எனக்கு கிடைக்கும் உளவுத்தகவல்கள் உண்மையென்பதை கதையின் சில நிகழ்வுகளே சொல்லிடுகின்றன.
அண்ணே, எல்லா உரிமையும் ஆசிரியருக்கே!, கருத்துக்களும் அவருடையவையே ;)
ஒற்றர்களின் களவு உங்களுக்கு உளவு எனக்கோ எழவு..!! : (

//சுஜாதாவும் நல்லூரடியில் உலாவுகிறாரோ...//
அவருக்கு போட்டியா நல்லூரடில 'பங்குகளுடன் ஜனா' எண்டொருத்தர் உலாவுறார்..

//ஆமா என் ரகசிய பயணம் உங்களுக்கு எப்படி தெரிஞ்சுது .... வந்து கவனிக்கிறன் வேப்பமரத்தடியில..!! //
செவ்வாயக்கிரகத்துல லான்ட் வாங்கீட்டியளாமெண்டு கதை அடிபடுது...
இனி வைத்தியரய்யா ரொம்ம்ம்ப பிஸி...

KANA VARO said...

ஆகா ஆரம்பிச்சிடியல்.. கலக்குங்கோ...
அண்டைக்கு கம்பஸ் அடியால கூல்போய் யாற்றையோ மோட்டசைக்கிள்ள பின்னுக்கு இருந்து போனவர். ரோட்டு கரையில நிண்ட என்னையும் கவனிக்கல, மனுசர் ரொம்ப பிசி போல.!

Pradeep said...

இப்படியான நகைச்சுவை கதைகள் பதிவர்கள் மத்தியில் சிரிப்புடன் நல்ல சினேகிதத்தையும் வளர்க்கும் என்பதில் சந்தேகம் இல்லை. உங்கள் அனைவரினதும் முயற்சிக்கு பாராட்டுக்கள்.

யோ வொய்ஸ் (யோகா) said...

கலக்கலான ஆரம்பம்.. தொடருங்கள்..

ஆமாம் இப்போ டைம் மெஷின் சுபாங்கனிடமா இருக்கிறது? ஒரு சின்ன வேலையாக 2072ம் ஆண்டுக்கு போக வேண்டும். சுபாங்கன் தருவாரா?

Anuthinan S said...

ஆகா ஆக மொத்தத்தில் வாசகர்களை ஒரு வழி பண்ணத்தான் போறீங்க போல!!!

அடுத்த பகுதிக்கு காத்திருப்பு!!!

//பாலா அண்ணாவின் டவுசர் இன்னும் கிழிக்கவேண்டும்..:P #வாசகர்_கோரிக்கை..://

REPEAT REQUEST

கன்கொன் || Kangon said...

ஹா ஹா ஹா....

கலக்கல்....

ஆரம்பவே அசத்தலாக ஆரம்பித்திருக்கிறது.

Tri Haryadi said...

very nice articles :)
Century 21 Broker Properti Jual Beli Sewa Rumah Indonesia
My personal blog

LinkWithin

Related Posts with Thumbnails