Tuesday, September 7, 2010

இந்த எழுத்துக்களுக்கு சொந்தக்காரர்கள் யார்? - ஒரு திறந்த போட்டி.


கடந்த ஒரு பதிவிலே பாடல்களின் இடை வரிகளை குறிப்பிட்டு அந்தப்பாடல்களின் ஆரம்ப வரிகளை கண்டு பிடியுங்கள் என்ற திறந்த ஒரு போட்டி பதிவை பதிவிட்டு அசந்துபோனேன். ஏனென்றால் அதற்கு கிடைத்த வரவேற்பும் பங்கு பற்றிய நண்பர்களின் தொகையும் என்னை பிரமிக்க வைத்துவிட்டது.
தொடர்ந்தும் பல பதிவுலக நண்பர்கள் அவ்வாறான போட்டி பதிவுகளை எழுதுங்கள் மிகவும் சுவாரகசியமாக உள்ளது என்று கேட்டுக்கொண்டனர்.
அந்த வகையிலேயே பதிவுகளுடன் சம்பந்தமுடைய வகையில் பெரும்பாலும் எமது பதிவர்கள் எல்லோருமே பிரபரல எழுத்தாளர்களின் நாவல்கள், எழுத்துக்கள்மேல் வாசிப்பு புலிகளாக உள்ள காரணத்தால் இந்தப்போட்டியை பதிவாக இடலாம் என்று முடிவெடுத்தேன்.

இங்கே பல பிரபலமான எழுத்தாளர்களின் நாவல்கள், கட்டுரைகளில் இருந்து ஏதாவது ஒரு பக்கத்தில் உள்ள எழுத்துக்களை தருகின்றேன்.  பல தடவைகள் நீங்கள் படித்த இரசித்த எழுத்தாளர்களின் எழுத்துநடைகள்தான் அவை.
எங்கே நீங்கள்தான் வாசிப்பு புலிகள் ஆச்சே.. ஒவ்வொரு எழுத்துநடையும் யார் யாருடையவை என்று வாசிக்கும்போதே ஊகித்துக்கொள்ளலாமே!
கிழே தரப்படும் இலக்கமிடப்பட்ட ஒவ்வொரு எழுத்துநடைகளும் யார் யாhருடையவை என உங்கள் மேலான பின்னூட்டங்களில் அதே இலக்க வரிசையில் தெரிவியுங்கள். அனைத்தையும் கண்டு பிடித்தவர் உண்மையில் வாசிப்பு புலிதான் என்று இந்த பதிவுலகமே ஒத்துக்கொள்ளும்.

சென்றமுறை பின்னூட்டங்களை மட்டறுக்காமல் வெளிப்படையாக விட்டதன் காரணமாக உடனடியாகவே பல சூரர்கள் கெட்டிக்காரத்தனத்தை வெளிப்படுத்திவிட்டார்கள் இதனால் பின்னர் வந்தவர்களால் கலந்துகொள்ளமுடியாமல் போய்விட்டது.
இந்த முறை அப்படி இல்லை. பின்னூட்டங்கள் மட்டுப்படுத்தப்படும். போட்டி அசல் போட்டிதான். எங்கே குவியட்டும் உங்கள் பின்னூட்டங்கள் சரியான விடைகள் என..
போட்டிக்கு நான் தயார் நீங்கள் தயாரா?

01. நீ என் மதை பறித்துக்கொண்டு “காக்கா தூக்கிட்டுப்போச்சு!” என்றெல்லாம் சொல்லவேண்டியதில்லை. நானும் “இல்லே..இல்லே..என்று உன்னை சுற்றிவரமாட்டேன். பதிலாக நீ பறித்த அடுத்த நொடியே “பறிச்சுட்டா.. பறிச்சுட்டா..” என்று கத்தியவாறே உலகமெல்லாம் ஓடுவேன்.

நீ என் மனதை அருகே வந்து தொட்டு பறிக்கவேண்டும் என்பதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் இருந்து ஒரு புன்கை வீசினாலோ ஒரு பார்வைத்தூண்டில் வீசினால்க்கூடப்போதும். காக்கா உட்கார்ந்துகொண்டதும் விழும் பனம் பழமாய் என் மனது உன் மடியில் விழுந்துவிடும்.

02. இதுநாள்வரை தான் கட்டுப்பாடாக வாழ்ந்ததற்கு காரணம் தாத்தாவிடம் தனக்கு இருந்த அச்சம்தான். என்பதை விரைவில் நீரூபித்தார்…………..;.
முதல்வேலையாக டில்லி அருகே யமுனை நதிக்கரையில் கேளிக்கைகளுக்காகவே ஒரு மாளிகை கட்டப்பட்டது. அங்கு …………; அருகில் மதுக்கோப்பைகள் அடுக்கிவைக்கபட்டிருந்தன. படுக்கையினை சுற்றிலும் மதி மயக்கும் மங்கையர்கள். கெய்கூபாத் ஆட்சியில் ஒவ்வொரு மறைவிடத்திலிருந்தும் கேள்விக்குரிய பெண்கள்தான் வெளிப்பட்டனர்.
ஓவ்வெலாரு தெருவிலும் கும்மாளம் தலைவிரித்தாடியது.
நீதிபதிகள் கூட மயக்கத்தில் தெருவில் தள்ளாடிக்கொண்டிருந்தார்கள்.

03. இரைச்சலும் இரைச்சலை அடிப்படையாகக்கொண்ட மனித உரையாடல்களும் தரும் உளவியல் நெருக்கடிகள் இன்று உலகலாவிய முறையில் மனித சமுகத்தை அச்சுறுத்தும் வியாதிகளாக பரவியிருக்கின்றது.
நமது அற்புதமான சங்கீதக்கருவிகளான ஷெனாயும், சரோதும் துக்கதினங்களை அனுஸ்டிக்கப் பயன்பட்டுக்கொண்டிருப்பதைப்போல் , துரதிஸ்டவசமாக  நாம் மௌனத்தை துக்கத்தின் அதடையாளமாக மட்டும் வெளிப்படுத்திக்கொண்டிருக்கின்றோம்.

மௌனம் ஒரு கொண்டாட்டம்.
மௌனம் ஒரு இசை
மௌனம் ஒரு மொழி.

04. மனதிற்கு கிழே மனமற்ற இடத்தில் கிடப்பது அங்கே கிடந்தவாறு எழுந்திருந்து வெளியே பார்ப்பது, பேசுவது என்பது ஏற்பட்டுவிட்டது. இப்படி வாக்கியங்கள் ஆக்குவதைத்தவிர வேறு எப்படியும் சொல்வதற்கு இல்லை.
சொல்ல சிறிது வெக்கமாகவும் இருக்கின்றது.

இது நாணமல்ல சொல்லவே முடியாது என்பதால் ஏற்பட்ட நிலை. எதற்கு இதைச்சொல்லவேண்டும் என்கின்ற வினா எழுந்ததால் உண்டான மனப்பின்னடைவு.

05. அந்த அநாதை மாடு மட்டும் இன்னும் நடுத் தெருவிலேயே நின்றிருக்கிறது; அது காளை
மாடு; கிழ மாடு; கொம்புகளில் ஒன்று நெற்றியின் மீது விழுந்து தொங்குகிறது. மழை
நீர் முதுகின் மீது விழுந்து விழுந்து முத்து முத்தாய்த் தெறித்து, அதன்
பழுப்பு நிற வயிற்றின் இரு மருங்கிலும் கரிய கோடுகளாய் வழிகிறது. அடிக்கடி அதன்
உடலில் ஏதேனும் ஒரு பகுதி - அநேகமாக வலது தொடைக்கு மேல் பகுதி குளிரில்
வெடவெடத்துச் சிலிர்த்துத் துடிக்கிறது.
எவ்வளவு நாழி இந்தக் கிழட்டு மாட்டையே ரசித்துக் கொண்டிருப்பது? ஒரு
பெருமூச்சுடன் அந்தக் கும்பலில் எல்லாவிதங்களிலும் விதி விலக்காய் நின்றிருந்த
அந்தச் சிறுமி தலை நிமிர்ந்து பார்க்கிறாள்.
...வீதியின் மறு கோடியில் பஸ் வருகின்ற சப்தம் நற நறவென்று கேட்கிறது.

06. உன்னை தொடாது முத்தம் கொடுக்கலாமில்லையா? அதுக்கு ஒரு முறை இருக்கு! என்று குனிந்து உதடுகளால் அவள் உதடுகளை ஒத்தி “இதற்குப் பெயர் உமார்கய்யாம் முத்தம்”
அவள் விலகிக்கொள்ள கையைப்படித்தான். முதலில் திமிறினாள், கொஞ்சம் கொஞ்சமாக அந்த திமிறலின் உத்வேகம் குறைந்தது.
வேண்டாம்…வேண்டாம்.. என்ற வார்த்தை எதிர்ப்புகளுக்கு வந்து அதுவும் மழுங்கப்பட்டு, அப்படியே நாற்காலியில் இருவரும் விழுந்தனர்.

நியான் வெளிச்சம் போட்டு போட்டு அணைக்க, அவன் கைகள் அவள் முதுகை வளைக்க, தன்னுடன் ஒட்ட வைத்துக் கொள்ள, நெஞ்செல்லாம் அவனை நிரப்பினால்ப்போல மூச்சு திணறியபோது….

07.  உயிரை ஜப்தி செய்வதற்காக, அமீனா எப்போதும் வாசலில் நிற்கிறான் என்பதை, நமது சித்தர்களும், ஞானிகளும் சுட்டிக் காட்டினார்கள்.
அந்த அமீனாவுக்கு யமன் என்றும், கூற்றுவன் என்றும் பெயர் கொடுத்தார்கள்.
உடலின் நிலையாமையை மனிதன் உணர்ந்து கொண்டிருந்தால், கூடுமானவரை அவன் மனத்தில், நாணயம், நேர்மை, இரக்கம், கருணை எல்லாம் வளர்ந்து விடுகின்றன.
சாவதற்குள் வாழ்ந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது.
துன்பங்களை அலட்சியப்படுத்தும் சக்தி வருகிறது.
அல்லது சாவதற்குள் நன்றாக உழைத்துக் குடும்பத்திற்கு வரு வழி செய்துவிட வேண்டும் என்ற எண்ணம் வருகிறது.
யாக்கை நிலையாமையை மறந்தவர்கள், எப்படி யாவது சம்பாதிக்க வேண்டும் என்று அலைந்து, சம்பாதித்த பணத்தைத்தாங்கள் அனுபவிக்காமலே மாண்டு போகிறார்கள்.

08. நான் சாதாரணமான ஆள்தான். என்றாலும் இன்றைய மந்திரிகள் போன்றவர்களைவிட எவ்வளவோ மேலானவன். உலகம் சுற்றியவன். பூரணமான ஒரு பகுத்தறிவு வாதி. சொத்து சம்பாதிக்கவேண்டிய அவசியம் இல்லாதவன். சொந்தத்திற்காக பணம் சேர்க்கவேண்டிய தேவைகள் இல்லதாதவன்.

சரி இந்த எட்டு உரைநடைகளையும் எழுதியவர்கள் யார் யார் என்று இலக்கப்படி எழுதுங்கள் பார்ப்போம்.
குறிப்பு – தேடுதளங்களில் வசனங்களை கொடுத்து தேடாதீர்கள். அவற்றில் பயன் இல்லை.

9 comments:

Pradeep said...

02. மதன்.
04. பாலகுமாரன்
08. கலீல் ஜிப்ரான்

Ragavan said...

1. தபு சங்கர்
5.ஜெயகாந்தன்
6.சுஜாதா

ம.தி.சுதா said...

ஜனா அண்ணா நான் கையை தூக்கிக் கொண்டு வாக்கை மட்டும் போட்டிட்டு ஓடிப்போறன்.... உண்மையை சொல்லுறன் எப்போதோ பார்த்த மாதிரி இருக்கே தவிர மற்ற ஒண்ணுமே ஞாபகம் வரல... கருத்துப் போடாமல் போனால் கோழைத்தனம் அது தான் இப்புபுபுடடீடீடீ

டிலான் said...

அண்ணை. பின்னூட்டல்களை ப்ளக் பண்ணி வைத்திருப்பதால் பார்த்து அடிக்கவும் முடியவில்லை. மற்றவர்கள் எல்லாரையும்விட எனக்குத்தான் வாசிப்பு குறைவு என்று நினைக்கின்றேன். சரியோ பழையோ தெரியாது
3. சாரு நிவேதிதா
4. பாலகுமாரன்
5. ஜெயகாந்தன்
7.கண்ணதாசன்

Sivakaran said...

சீனாச்சக்கரத்தை பே பார்த்தபோல இருக்கு அண்ணை. இந்த ரேஞ்சுக்கெல்லாம் கேட்கப்படாது. நாம வாசிப்பில் எலி அண்ணை. அதை ஒத்துக்கிட்டு கொமன்ட் பண்ணுறன்.

சமுத்திரன். said...

01.தபுசங்கர்
02. கார்ட்ரூன் மதன்
03. ............
04. பாலகுமாரன்
05.ஜெயகாந்தன்
06.சுஜாதா
07.கவிஞர் கண்ணதாசன்
08.தந்தை பெரியார்.

Rajkumar said...

3. சாரு
6.சுஜாதா
8. ஈ.வே.ரா.

ஜாவா கணேஷ் said...

அண்ணா. உங்கள் ரேஞ்சுக்கெல்லாம் நம்மள நினைத்து இப்படி போட்டிகள் வைக்கப்படாது. தேடுதளம் மூலம் இரண்டைத்தான் கண்டு பிடிக்க முடிந்தது. ஜெயகாந்தன், கண்ணதாசன்

Jana said...

கலக்கிட்டிங்க சமுத்திரன். தங்கள் பரந்துபட்ட அறிவும், வாசிப்பு தன்மைகளும் நான் ஏற்கனவே அறிந்த ஒன்றுதான். சாருவை மட்டும் பிடிக்காமல் விட்டது புரியவில்லை!
ஒத்துகிறேன் சமுத்திரன் நீங்கள் புலிதான்.

LinkWithin

Related Posts with Thumbnails