Tuesday, November 23, 2010

ஹொக்ரெயில் 23.11.2010

டொன்லிஷாப் நதிக்கரை துயரம்.

பொதுவாகவே பாரம்பரியமாக மக்கள் கொண்டாடிவரும் விழா ஒன்றுக்கு பெருந்தொகையான மக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு குவிந்துவருவார்கள் என்பது அனைவரும் அறிந்தவிடயமே. எனவே பெருந்தொகையான மக்கள் கூடும் விழாக்கள் கேளிக்கைகளில் அந்த மக்களுக்குரிய பாதுகாப்பினை வழங்குவது அந்த நாட்டின் அரசாங்கத்தினதும், பொலிஸாரினதும் தலையாய கடமையாகவே கருதப்படுகின்றது.
இருந்தபோதிலும் சிறு கவலையீனம் ஒன்றினாலேயே பாரிய ஒரு அசம்பாவிதம் நடந்துவிடவும் இவ்வாறன சந்தர்ப்பங்களில் வாய்ப்புக்களும் அதிகமாகவே காணப்படுகின்றது.

அசம்பாவிதங்கள் திடீன எதிர்பார்க்காமல் வருபவைதான் என்றபோதும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு உறுதியாக கடமை புரிபவர்கள் எத்தகைய அசம்பாவிதங்களையும் எதிர்கொள்ள கடப்பாடுடையவர்களாகவே தெரியப்படுகின்றனர்.
கம்போடிய நாட்டின் டொன்லிஷாப் நதிக்கரையில் இடம்பெற்ற மக்கள் திருவிழா ஒன்றில் ஏற்பட்ட பாரிய சன நெருக்கடியில் 345பேர் கொத்தாக காவுகொள்ளப்பட்டதும், 400ற்கும் அதிகமானோர் படுகாயமடைந்த செய்தியும் திடுக்கிடவைக்கின்றது.

காலம் காலமாக மேற்படி நதிக்கரையில் மழைகாலத்தை வரவேற்க இந்த விழா ஆடம்பரமாக மக்கள் கூட்டத்தினரால் எடுக்கப்பட்டுவருகின்றது. அதாவது மழைகாலத்தை வரவேற்பதால் “தண்ணீர் திருவிழா” என்றே இது அழைக்கப்பட்டுவருகின்றது. இது அந்த நாட்டு மக்களின் பாரம்பரிய ஒரு பெருவிழா.
நதிக்கு அருகில் ஒடுங்கிய பாலம் ஒன்றுள்ளது. அதன் வாயிலுக்கு அருகில் ஏற்பட்ட பாரிய சன நெருக்கடியால் பலத்தின் வழியாக அதிலிருந்து பெருந்தொகையான மக்கள் வெளியே எத்தனித்ததாலேயே இந்த துயரசம்பவம் ஏற்பட்டுள்ளது.

ஆராய்ந்துபார்த்தால் எங்கோ ஒரு இடத்தில் சிறியதாக பாதுகாப்பு தரப்பினரால் கவனியாது, அசண்டையீனமாக விடப்பட்ட தவறே இத்தனை மக்களை காவு கொள்ளப்பட காரணமாகிவிட்டது.

தலாய்லாமாவின் ஓய்வு அறிவுப்பு ஏற்புடையதா?

கண்ணுக்கு முன்னால் தமக்கே உரியதான நிலம் மெல்ல மெல்ல அபகரிக்கப்பட்டு, பெருந்தேசமொன்று தம் நிலத்தை விழுங்கிவிட்டாலும், அயராது அந்த நிலத்தின் விடுதலைக்காக அதிலும் முக்கியமாக அகிம்சா வழியில் நாளைகள் மீதான நம்பிக்கையுடன், எதிர்பார்த்து நம்பியவர்கள்…. அன்று நேரு தொடக்கம் இன்று ஒபாமா வரை கைவிரித்தபோதிலும் நிச்சியம் ஒருநாள் தம் திபத் என்னும் புண்ணிய பூமிக்கு விடுதலை கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையுடன், அமைதியாக, நம்பிக்கையுடன் அகிம்சாமுறையில் பல ஆண்டுகளாக போராடி வருகின்றார் தலாய்லாமா!

மறுபக்கத்தில் திடீர் என்று அவர் அறிவித்திருக்கும் ஓய்வு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. உண்மையில் தாம் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ள அறிவிப்பு விளக்கமில்லாத ஒன்றாகவே இருக்கின்றது. அப்படி என்றால் அடுத்த தலாய்லாமாவை தெரிவு செய்யவேண்டுமா? அவர் திபெத்திலா அல்லது வெளியிலா உள்ளார் போன்ற பல கேள்விகளை திபெத்திய மக்கள் மத்தியில் அது எழுப்பியுள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
தற்போதைய நிலையில் தனக்கு பின்னதான திபெத் விடிவுக்கான அகிம்சாவழி போராட்டத்தை முன்னெடுக்கக்கூடியவர்களை தலாய்லாமா வளர்த்துள்ளபோதிலும், தற்போது உலகியலில் மிக கவனமாக பயனிக்கவேண்டிய கட்டத்தில் அவரின் ஓய்வு ஏற்புடையதாக இருக்காது என்பதே உண்மை.

ஒபாமாவின் இந்தியப்பயணம்








பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா.

பகவான் ஸ்ரீ சத்திய சாய்பாபாவின் 85ஆவது ஜனன தினம் இன்றாகும். அவரை இன்றும் பெரும்பாலான மக்கள் அவதாரமாகவும், ஆன்மீக குருவாகவும், நினைத்து வழிபட்டுவருவதை கண்கூடாகக்காணமுடிகின்றது. இவர் பற்றி பல வாதப்பிரதிவாதங்களும் உண்டு. இதை எழுதும் நான் கூட அவரது தொண்டனோ, பக்தனோ இல்லை. ஆனால் அவர் செய்யும் பொதுசேவைகளுக்கு அவரை வாழ்த்தவேண்டும் என்பதும், அந்த சேவைகளுக்கு தலை சாய்க்கவேண்டும் என்பதும் என் எண்ணம்.

2006ஆம் ஆண்டு நான் முன்னர் தொழில்புரிந்த நிறுவனம் சார்பாக சென்னையில் நடந்த ஒரு கருத்தரங்குக்கு சென்றிருந்தேன். சென்னையில் தங்கியிருந்தபோது திருவான்மீயூரில் சத்திய சாய்பாபாவின் யாகம் ஒன்று இடம்பெற்றுவந்தது.
ஆதிகாலை 4 மணிக்கே என்னுடன் வந்தவர்கள் அங்கே இருந்து அவர் தங்கியிருந்த மடத்திற்கு செல்ல ஆயத்தமானார்கள். நான் வரவில்லை என்று சொல்லிக்கூட, வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றார்கள். வேண்டா வெறுப்பாக சென்றிருந்தேன். அவர் அங்கிருந்து காட்சி கொடுக்கும் இடத்தில் இருந்து மூன்றாவது அளாக அங்கு அமர்ந்திருந்து, காலை 10 மணிக்கு அவரை நேரில் கண்டேன். ஏழிமையான புன்னகையுடன் அனைவரையும் பார்த்தவண்ணம் தனது அசையும் ஆசனத்தில் சென்றுகொண்டிருந்தார். பக்தர்கள் ஆர்பரித்தனர், பஜனை பாடினர், பெரும் ஆச்சரியத்துடன் நான் பார்த்துகொண்டே இருந்தேன்.

அவர் சென்றவுடன் வெளியில் வந்து பார்த்தவுடன் திடுக்கிட்டுப்போனேன். எத்தனையோ அவரின் பக்தர்கள், தாம் உள்ளே அனுமதிக்கப்படவில்லையே, பகவானை பார்க்கமுடியவில்லையே என அழுதுகொண்டிருந்தனர்…
“என்னுடன் சித்தர்கள் ஆரம்பிக்கவும் இல்லை! என்னுடன் சித்தர்கள் இல்லாமல்போவதுவும் இல்லை!!” என்று யாரோ ஒரு சித்தர் சொல்லிவைத்த வசனம் மட்டும் மனதுக்குள் ஒலித்தது அன்று.

உந்தன் தேசத்தின் குரல்..
சொந்தமண்ணை பிரிந்து அதன் நினைவுடனே நாட்களை கடத்திக்கொண்டிருக்கும் எந்த உள்ளமும் இந்த பாடலை கேட்டு வழியோரத்தில் கண்ணீரை சொரியும் என்பது உண்மை. உடல் மட்டும் அங்கே எந்திரமாகவும், அறிவு சேமிக்கும் புத்தகமாகவும் இருக்க உயிரும் உணர்வுகளும் சொந்த தாய்மடியை என்றும் தேடிவரும் உணர்வு கொப்பளிக்கின்றதே இங்கே..

சர்தாஜி ஜோக்
மூன்று சர்தாஜிக்கள் வண்டியில் ட்ரிபிள்ஸ் வந்து கொண்டிருந்தார்கள்.
போலீஸ்காரர் ஒருவர் கையைக் காட்டி வழிமறிக்க வண்டி ஓட்டி வந்த சர்தார்ஜி சொன்னார் "ஏற்கனவே நாங்க மூணு பேர் போய்ட்டு இருக்கோம்இ இப்ப வந்து லிப்ட் கேக்குறியே! அறிவில்லையா உனக்கு?

19 comments:

ம.தி.சுதா said...

எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுப்புட்டு வரட்டுமா...

ம.தி.சுதா said...

இம்முறையும் அருமையாக யாத்துள்ளீர்கள்... படங்களின் தொகுப்பு அருமை... சிலவேளை இதற்கும் உங்க நண்பர் வரலாம் ஏன் லிங்கை போடலியண்ணு... சரி அத விடுங்கப்பா...

ம.தி.சுதா said...

பாடல் பற்றி சோல்லியே ஆகணும்... சொந்த நாடு அழைக்கும போது நாட்டை விட்டு ஓடிப் போய் நின்று கொண்டு இப்ப தமிழீழம் கேட்கும் நபர்களுக்கு இது பொருந்தும் பாடலில்லையே.... இப்போது அவர்களின் குடியுரிமைக்காக ஒரு பனிப் போர் நடத்தி தாம் விடுதியில் சுகமாயிருக்க எம் ஒழுக்கு வீட்டிலுள்ள ஓலையை அல்லவா பிடுங்கிறார்கள்....

டிலான் said...

அண்ணா. நீண்டநாளின் பின்னர் போதையை ஏற்றிவிட்டீங்கள். என்ன கனக்க வெளிநாட்டு விடயங்களுடனேயே நிற்கிறீங்கள் போல!
அப்புறம் நம்மட சுதா. எல்லோரும் அப்படி இல்லை சுதா. நிங்கள் சொல்வது புலம்பெயர்ந்த அனைவரையும் தாக்குகின்றது.

Unknown said...

“என்னுடன் சித்தர்கள் ஆரம்பிக்கவும் இல்லை! என்னுடன் சித்தர்கள் இல்லாமல்போவதுவும் இல்லை!!”

பாரதியார் சொன்னதுபோல! சரிதானா?

ம.தி.சுதா said...

டிலான் said...
தப்புத் தான் டிலான் ஏற்றுக் கொள்கிறேன்.. அதில் சுட்டிக் காட்டப்பட்டவருக்குள் நீங்கள் (சிலர்) அடங்கவில்லை டிலான் அதை பார்ப்பவர்க்கே அது விளங்கும்....

Unknown said...

Very happy to Read your Favorite Cocktail (Back)
Cambodia -Yes. so..sad
Dalai lama - You are absolutely right.
Obama in India - hi hi hi
Sai Baba - Miracle
Song - No more worlds..
Joke - ha ha ha ha

KANA VARO said...

அடடே! பொறுங்கோ வாறன்...

நிஷா said...

Nice.

KANA VARO said...

ஹொக்ரெயில் பார்த்து ரொம்ப நாளாச்சு!

//டொன்லிஷாப் நதிக்கரை துயரம்//

இன்று காலை இணையத்தை புரட்டியவுடன் கண்ட கவலை. (நல்ல காலம் காருக்கு பின்னால போய் சாகல)

//தலாய்லாமா//

அடிக்கடி அடிபடுகிற பெயர் தான்.

//ஒபாமாவின் இந்தியப்பயணம்//

இதைவிட டமேச் பண்ண முடியுமா?

//பகவான் ஸ்ரீ சத்திய சாய் பாபா//

கடவுள் நம்பிக்கை நிறையவே எனக்கு உண்டு, ஆனால் மனித உருவில் இருப்பவர்கள் மீது அல்ல (மன்னித்துக்கொள்ளுங்கள்)

//உந்தன் தேசத்தின் குரல்.//

கேட்கும் போதே அழுகையை உண்டு பாணும் பாடல்

//சர்தாஜி ஜோக்//

அது சரி!


நீங்களும் மிகப்பெரும் பிரபல பதிவர் ஆயிட்டீங்கள். பதில் போடுறீங்க இல்லை.

Bavan said...

//டொன்லிஷாப் நதிக்கரை துயரம்.//

:((

//ஒபாமாவின் இந்தியப்பயணம்//

ஒபாமாநிதி நன்றாகப் பொருந்தியிருக்கிறார்..:P
ஹாஹா.. பகிர்வுக்கு நன்றிங்ணா..:)

//உந்தன் தேசத்தின் குரல்..//

அருமையான பாடல்..:D

//சர்தாஜி ஜோக்//

ஹீஹீ..:D

ரெயிலை லேட்டாப் பிடிச்சாலும் லேட்டஸ்டாப் பிடிச்சுட்டமுல்ல..:P
வர்ட்டா..;)

Jana said...

@ம.தி.சுதா
என்ன சுதா ஹொக்ரெயில் குடிக்க கிளப்பிற்கே கூட்டிட்டு போறேன்..அங்கையும் வந்து சோறு என்கின்றீர்கள்!

Jana said...

@டிலான்
வாங்க டிலான். ரொம்ப பிஸி ஆகிட்டீங்க போல!

Jana said...

@Ragavan
அப்படியா ராகவன்? இருக்கலாம்.

Jana said...

@ம.தி.சுதா
ரைட்டு

Jana said...

@Sivakaran
Thank you Siva

Jana said...

@நிஷா
Thank you Boss

Jana said...

@KANA VARO
நன்றி வரோ..அடடா..என்ன மிகப்பெரும் பிரபல பதிவர்கள் பதில் எழுதமாட்டார்களா?

Jana said...

@Bavan
வாங்க பவன். நீங்கள் எப்போதுமே லேட்டர்ஸ்தானே!!

LinkWithin

Related Posts with Thumbnails