நகைச்சுவைகள் பல தரப்பட்டவை. சில நகைச்சுவைகள் எந்தக்காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய அற்புதமான நயம்கொண்டவை. சில கால ஓட்டத்தில் மறைந்து போகக்கூடியவை. இதில் பழைய நகைச்சுவைகள் பிரதானமானவை. அவைகளில் சில தலைமுறைகளுக்கு கடத்தப்படாமல் மறைந்துபோயும் உள்ளன.
அண்மையில் நண்பர்களுடன் இருந்து அரட்டை அடிக்கும்போது இந்த பழைய கால நகைச்சுவைகள் பற்றி நீண்ட நேரம் பேசவேண்டி இருந்தது. அதில் எங்கள் மழலைக்காலங்களில் பெரியவர்கள் எங்களுக்கு சொன்ன நகைச்சுவைகள் பலவற்றை நினைவு படுத்தி சிரித்து மகிழ்ந்தோம்.
அவ்வாறான நகைச்சுவைகள் இன்றைய தலைமுறையினருக்கு கடத்தப்பட்டதோ என்ற ஐயம்வேறு வந்தது. பேசும்போது ஒரு நண்பர் ‘இந்த கதைகளில் சிலவற்றை பதிவாகப்போடலாமே’! என்று எடுத்து கொடுத்தார்.
ஆகவே அந்த காலத்தில் நாங்கள் கேட்ட சில நகைச்சுவைகளை பகிரலாம் என நினைக்கின்றேன். ஏற்கனவே கேழ்விப்பட்டிருந்தால் மீண்டும் ஒரு தடவை சிரியுங்கள்,
கேழ்விப்படவில்லை என்றால் இந்த சொற்களை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள்தான்..ஆம் உங்களிடம்தான் இவை மறுபடி சென்றடையவேண்டும் என்பது விதி!!
ஆரகரா..செம்பச்சோதி
இரண்டு கைராசிக்கார திருடர்கள், ஒரு வைர வியாபாரியிடம் இருந்து பெருமளவிலான மிகப்பெறுமதிவாய்ந்த வைரங்களையும் கற்களையும் திருடிக்கொண்டு, ரெயிலில் ஏறி குறிப்பட்ட ஒரு இடத்திற்கு சென்றுகொண்டிருந்தனர். அவர்கள் இருவரும் ஏறிய காம்பவுண்டுக்குள் ஒரு நாடக்குழு சென்றுகொண்டிருந்தது. இவர்கள் ரெயிலில் ஏறி போகும் விடயம் எப்படியோ பொலிஸாருக்கு தெரிந்து அடுத்த ஸ்ரேசனில் இவர்களை பிடிக்க பொலிஸார் ஆயத்தமாக இருந்தனர். தூரத்தில் ரெயில் வரும்போதே பொலிஸாரை பார்த்துவிட்ட திருடர்கள் அந்த நாடகக்குழுவினரிடமிருந்த முனிவர்கள் வேடமிடும் இரண்டு உடைகளை அணிந்து முனிவர்களாகவே மாறியிருந்தனர். ஒருவன் தனது யடாமுடியினுள் வைரத்தை ஒழித்துவைத்தான், மற்றவன் முனிவர் கையில் வைத்திருக்கும் செம்புக்குள் வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்.
சோதனை போட்டுக்கொண்டு வந்த பொலிஸார் இவர்களிடம் வந்ததும், இவர்கள் உண்மையான சுவாமிகள் என நினைத்து யடாமுடிக்குள் வைரத்தை வைத்திருந்தவனிடம் ஆசீர்வதம் பெற்றனர். முனிவர் என்றால் ஏதாவது சொல்லவேண்டும் அல்லவா? அவனும் “அரகரா செம்பச்சோதி” என்று சொல்லிவிட்டு மற்றதிருடனைப்பார்த்து கண்ணடித்தான். மற்றவன் திடுக்கிட்டான்!! என்னடா இவன் செம்பை சோதிக்க சொல்கின்றான்!! ஏனெனில் மற்றவன் செம்பில் அல்லவா வைரங்களை ஒழித்துவைத்திருந்தான்! போட்டாடா குடுக்கிறாய்!!! என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு பொலிஸார் தன்னிடம் வந்தபோது “அரகரா சடையச்சோதி” என்றான் மற்ற திருடனைப்பார்த்தவாறு.. பிறகு என்ன இருவருமே பொலிஸாரிடம் பிடிபட்டதுதான் மிச்சம்.
எல்லாமே பின்பக்கம்..
ஒரு ஊரில் ஒரு பூசகர் இருந்திருக்கின்றார். அந்த ஊரில் அவர் மட்டும்தான் பூசகர் என்பதனால் அவர் படு பிஸியான ஆள். பல கோவில்களிலும் அவரே பூசகராகவேறு இருந்திருக்கின்றார். குறிப்பிட்ட ஒரு கோவிலில் மட்டும் தர்மகத்தா படு ஸ்ரிக்ட்டான ஆள். நேரம் தவறக்கூடாது. ஒரு கிருத்திகம் செய்ய பூசகர் சென்றிருக்கின்றார், குறிப்பட்ட அந்த கோவிலுக்கு பூசைக்கு செல்லவேண்டிய நேரம் அண்மித்து விட்டது. உடனடியாக வீடுவந்து அவசரமாக குளித்துவிட்டு வேட்டியை உடுத்திக்கொண்டார் பூசகர், வேண்டிக்கரை பின்பக்கமாக அமைந்துவிட்டது. நேரம் போய்க்கொண்டிருந்தபடியால் பறவாய் இல்லை என்று மனதுக்குள் நினைத்துவிட்டு ஜிப்பாவை அணிந்துகொண்டார் அவசரமாக. அதுவும் பின்பக்கமாக போய்விட்டது. பறவாய் இல்லை முதலில் கோவிலுக்கு சென்றுவிடவேண்டும் என்ற அவசரத்தில் ஓடிவந்து, தனது “லம்பிரட்டா” ஸ்கூட்டரை உதைந்துகொண்டு உச்ச வேகத்தில் சென்றுகொண்டிருந்தார் பூசகர். ஒரு வளைவில் ஒரு பெரிய பஸ் வர, பலன்ஸ் தவறி அருகில் இருந்த வயல் வரம்புடன் மோதி அதிர்ச்சியில் மயக்கமடைந்துவிட்டார் அவர்.
இதை கண்டு வயலிலே வேலை செய்துகொண்டிருந்த ஊர்மக்கள் கூடிவிட்டனர். பூசகரை ஓடிவந்து பார்த்த மக்கள்! பெருங்குழப்பத்துடன் பார்த்தனர்.
அதில் ஒருவர் “அடி பட்டதும் ஐயாவின் தலை திரும்பிவிட்டது” என்று சொல்லி, பூசகரின் தலையை மற்றப்பக்கம் திருப்பிவிட்டார்.. அட..பேப்பயலுகளா என்றவாரே பூசகர் வானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தார் ஆவியாக.
மரக்கட்டை
இரண்டு ஊர்களின் மத்தியில் அடர்ந்தகாடு ஒன்று இருந்திருக்கின்றது. அந்தக்காட்டில் பெரும் கொள்ளைக்காரர்கள் இருந்திருக்கின்றார்கள். மேற்படி இரண்டு ஊர்களுக்குக்கிடையில் போக்குவரைத்து என்றால் இந்த காட்டை தாண்டியே ஆகவேண்டிய நிலை இருந்திருக்கின்றது.
இந்த நிலையில் இரண்டு ஊர்களில் உள்ள தம்பத்தியினருக்கு திருமணம் நடந்திருந்தது. புது மாப்பிள்ளை பெண்வீட்டில் இருக்கின்றார். சீதனப்பணத்தை வாங்கிக்கொண்டு உடனடியாக வரும்படி அவரது தாயாரிடமிருந்து மாலை மங்கும் நேரத்தில் செய்தி வருகின்றது. பெண் வீட்டார் எவ்வளவு சொல்லியும் புதுமாப்பிள்ளை அம்மா சொல்லை தட்டமாட்டேன் பணத்தை கொடுங்கள் நான் போயே ஆகவேண்டும் என்றிருக்கின்றார். எனவே பெண் வீட்டுக்காரர்களும் தனியாப்போகவேண்டாம் உங்கள் புது மனைவியின் ஆசைத்தம்பி, உங்கள் மைத்துனனையும் கூட்டிக்கொண்டு செல்லுங்கள் காவலுக்கு என்றிருக்கின்றனர்.
அவனோ “ஆடு பறக்கிறது என்று சொன்னாலும் அண்ணாந்து பார்க்கின்ற படு முட்டாள்”. சரி என்று அவனையும் கூட்டிக்கொண்டு சென்றிருக்கின்றார். கடும் இருள் சூழ்ந்துவிட்டது. அத்திம்பேர்..பாதையே தெரியவில்லை இதற்கு மேல் என்னால் நடக்கமுடியாது பேசாமல் இங்கேயே படுத்துவிட்டு காலையில் போவோம் என்றிருக்கின்றான் அவன். புதுமாப்பிள்ளைக்கும் சோர்வு மிகுதியால் சரி..இங்கேயே படுப்போம்..ஆனால் ஒன்று இங்கு திருடர்கள் அதிகமாம் என்னிடம்வேறு ஒரு இலட்சம் ரூபா இருக்கு..ஒன்று செய்வோம் நீ உன் பைக்குள் 50 ஆயிரத்தை வைத்திரு. இரண்டுபேரும் அருகில் இருக்கும் புதருக்குள் மறைந்து படுத்திருப்போம் என்று அவனிடம் அரைவாசிப்பணத்தையும் கொடுத்து. புதர்மறைவில் படுத்துக்கொண்டார்கள். புதுமாப்பிள்ளை கழைப்பினால் தூங்கிவிட்டார். ஆனால் மைத்துனனுக்கு தூக்கம் வரவில்லை. எறும்புகள்வேறு கடிக்க தொடங்கவே. வீதியில்த்தான் யாரும் போகவில்லையே பேசாமல் அங்கேயே படுப்போம் என்றுவிட்டு, நடு வீதியில்போய் படுத்து நித்திரை ஆகிவிட்டான்.
சிறிது நேரத்தில் திருடர்கள் வந்துகொண்டிருந்தனர். முன்னால் வந்த திருடன் இவன்மேல் தடக்கு பட்டு, இடறி விழ இவனுக்கு தூக்கம் கலைந்துவிட்டது. கோபமும் வந்தது. இடறிவிழுந்த திருடன் தன் தோழர்களிடம் “பார்த்து வாங்கடா..நடுரோட்டிலை ஒரு மரக்கட்டை கிடக்கின்றது” என்றான். உடனே இவனுக்கு வந்தது இன்னும் கோபம்..
“டேய் உங்கள் ஊரில் மரக்கட்டை 50 ஆயிரத்தோடையாடா கிடக்கும்?” என்று கேட்டிருக்கின்றான். பிறகென்ன திருடர்கள் இவனை பிடித்து பணத்தை பறித்து எண்ணிப்பார்த்திருக்கின்றார்கள். அதற்கும் அவன் “சரியாகப்பார் மடையா 50 ஆயிரம் கணக்காக இருக்கும்”. என் அத்திம்பேர் கணக்கில் புலி. எனக்கு 50 ஆயிரம் தந்துவிட்டு, தான் 50 ஆயிரத்தை வைத்துக்கொண்டு அந்த புதருக்கு பின்னால்த்தான் தூங்குகின்றார் என்றானாம்;.
எம்.ஜி.ஆரா சிவாஜியா?
ஒரு இரட்டை பையன்கள் பாடசாலையில் எப்போது பார்த்தாலும் ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறந்த நடிகன் எனவும், மற்றவன் இல்லை சிவாஜிதான் சிறந்த நடிகன் என்று சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்களாம். இவர்களின் சண்டை ஒவ்வொருநாளும் தொடரவே மற்ற மாணவர்களும் பாதிக்கப்படவே, ஆசிரியர் நாளை வரும்போது உங்கள் அப்பாவையும் பாடசாலைக்கு அழைத்துவாருங்கள் உங்களை பற்றி அவரிடம் சொல்லவேண்டும் என்றாராம். மற்றநாள் அவர்களின் தந்தையார் பாடசாலைவரவே, ஆசிரியரும் வாருங்கள் ஐயா..உங்கள் பையன்கள் என்ன ஒரே சினிமா பைத்தியமாக இருக்கின்றார்கள், ஒருவன் எம்.ஜி.ஆர்தான் சிறப்பான நடிகன் என்றும் மற்றவன் சிவாஜிதான் சிறப்பான நடிகன் என்றும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கின்றார்கள் நீங்கள் சொஞ்சம் கண்டிக்கக்கூடாதா என்று கேட்டாராம். அதற்கு அந்த தந்தை..சரியாகச்சொன்னீர்கள் ஐயா..இந்த மடையன்களுக்கு புத்தியில் உறைக்கிறமாதிரி சொல்லுங்கள். என்ன தான் இருந்தாலும் அவர்கள் ரெண்டுபேரும் ஜெமினி மாதிரி வருமா? என்று கேட்டால் புரியமாட்டுதென்கிறது இவனுகளுக்கு என்றாராம்.
இப்படி பல கதைகளை கூறிக்கொண்டே போகலாம் அனால் எழுதுவது சிரமம் அல்லவா? கண்டிப்பாக சிரித்திருப்பீர்கள் என நினைக்கின்றேன்.
16 comments:
me the first?
நகைச்சுவையான கதைகள். நன்று
நல்ல நகைச்சுவைகள்! மிகவும் ரசித்தேன்!
அருமையான நகைச் சுவைகள் அண்ணா.... முதல் கதை நான் கெட்டிருந்தாலும் இப்போ நினைவில் நிற்பவை சற்று வித்தியாசமான கதைகளே... (விளங்குமென நினைக்கிறேன்..)
உட்கார்ந்து யோசிப்பீங்களோ! பதிவுகளில் நகைச்சுவை உணர்வு இருந்தால் வாசகர்களை கவரும். இன்னும் எதிர்பார்க்கிறம்
ஹாஹாஹா..
Commentடசோதி.. Commentடசோதி....:P
பகிர்வுக்கு நன்றிங்ணா..:D
Old is always Gold Jana annai.
உங்கள் மெமரி பவர் என்னை எப்போதும் அதிசயிக்க வைக்கும் அண்ணா.
பூசகர் ஜோக்கை வாசித்து வயிறு கொழுவும்வரை சிரித்துவிட்டேன்.
@KANA VARO
அதிலை என்ன சந்தேகம் வரோ நீங்கதான் முதலாவது!!
@Dr.எம்.கே.முருகானந்தன்
தங்கள் தொடர் வரவு மனதை மகிழ்ச்சி செய்கின்றது. நன்றி டொக்ரர்.
@ எஸ்.கே
மிக்க நன்றி எஸ்.கே.
@ம.தி.சுதா
நன்றி மதி.சுதா கேட்டாலும் திரும்ப கேட்க நன்றாகவே உள்ளது அல்லவா?
@KANA VARO
நன்றி வரோ. நான் எப்போதும் யோசிப்பதற்காக உக்காருவதில்லை. யோசனைகள் அதுபாட்டிற்கு வந்துபோகும்..
@ Bavan
நன்றி பவன்..தொடர்ந்தும் இந்தப்பக்கமும் வாங்க..
@Sivakaran
You are Absolutely Right Siva
@டிலான்
உங்களின் பாதிப்பில்த்தான் இந்தப்பதிவே டிலான் நன்றிகள்.
Post a Comment