முன்னர் ஓருகாலத்தில் 70களின் ஆரம்பங்களில் வன்னிப்பெருநிலப்பரப்பில் பல காணிகள் அரசாங்கத்தால் அரசாங்க உத்தியோர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டபோது, யாழ்ப்பாணத்தில் இருந்த பல அரசாங்க உத்தியோகத்தர்களுக்கும் வன்னியில் காணிகள் கிட்ட ஏதுவாக இருந்தது.
இந்த சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டு அன்றைய நாட்களில் “வெளிக்கிடடி விசுவர்மடத்திற்கு” என்ற ஒரு நாடகம் சக்கை போடு போட்டது. இலங்கை வரலாற்றில் அதிக தடவைகள் மேடையேற்றப்பட்ட நாடகங்களில் ஒன்றாக அது பெரு வெற்றிபெற்ற வரலாறுகளும் உண்டு.
அதேபோல இன்றைய நிலையில் இலங்கையில் “குடியேற்றத்தில்” அனைவரின் கண்ணும் நாவற்குழி என்ற இடத்தின்மேல் திரும்பியுள்ளது. யாழ்ப்பாண நகரத்தில் இருந்து நாட்டின் பிற பிரதேசங்களுக்கு வெளியேறிச்செல்லும் பாதையில் யாழ்ப்பாண நகரில் இருந்து 6 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஒரு ஊரே நாவற்குழி.
முன்னைய நாட்களில் யாழ்ப்பாணத்தை சூழவுள்ள பிரதான இராணுவ முகாங்களில் நாவற்குழி இராணுவ முகாமும் பிரதானமாக இருந்தது. அதேபோல, கடல் உணவு பதனிடும் தொழிற்சாலை ஒன்று, மற்றும் அரசாங்க உணவுக்களஞ்சியம், அரசாங்க வீடமைப்பு தொகுதி என்பன இந்தப்பிரதேசத்தில் காணப்படுகின்றது. பெரும்பாலான வயல்நிலங்கள் இந்த ஊருக்கு அழகு சேர்க்கின்றன.
முப்பது வருட யுத்தகால பேரிருட்டில் காலத்தை கழித்த தமிழ் மக்கள், இன்னும் தமது சொந்த பூமிக்கு திரும்பாத நிலையில் தமது சொந்த நிலம் பற்றிய ஏக்கம், தொலைந்துபோன நாட்கள், இழந்துபோன உறவுகள், உயிர்கள், சொத்துக்கள் என பெரும் ஏக்கத்துடன் இன்றும் பிறர்மனைகளில் வாழ்ந்துவரும் நிலையில், திடீர் என பேரிடியாக பேரினவாத அரசியல் தன் விளையாட்டை காட்ட ஆரம்பித்துவிட்டது.
பெரும் இரத்த வடுக்கள் இன்னும் காயமுன்னரே வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் நடவடிக்கை தொடங்கப்பட்டது.
திடீர் என தாம் 1983ற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் வசித்ததாகவும், தற்போது அங்கே குடியேற வந்துள்ளதாகவும் கூறி சில சிங்ளக்குடும்பங்கள், யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் என முன்பு ஒருகாலத்தில் அந்தப்பெயரில் செயற்பட்ட இடத்தில் வந்து குவிந்தனர். தாமும் யாழ்ப்பாத்தவரே என்றும் தமது பூர்வீகம் யாழ்ப்பாணம் என்றும் பல ஊடகங்களுக்கும் அங்கிருந்து பிரச்சாரம் செய்ய ஆரம்பித்தனர்.
இவர்கள் தாமாக இங்கு வரவில்லை, இவர்கள் பின்னால் பலமான அரசியல் சக்திகள் இருக்கின்றன என்பது இதை வாசிக்கும் உங்களுக்கு மட்டும் இல்லை, கண் எங்கே, மூக்கு எங்கே..எனக்கேட்கும்போது முதல் முதலாக கண், மூக்கை தொட்டுக்காட்டும் சிறு குழந்தைக்கும் இந்தவிடயம் தெரிந்திருக்கும்.
புகையிரத நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் திடீர் என்று இந்த மாத முற்பகுதியில் மேற்படி நாவற்குழியில் குடியேறி பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாழத்தொடங்கிவிட்டார்கள். அதன் பின்னரும் பல குடும்பங்கள் வந்து குடியேறுவதாக ஒரு அதிர்ச்சி தகவலும் உண்டு.
இவர்கள் இங்கு குடியேறுவதற்கும் எமக்கும் எந்த தொடர்பும் இல்லை. என பூசனிக்காயை அல்ல பூகோளத்தையே சோற்றுக்குள் மறைக்கின்றது இராணுவம், அவர்களுக்கு பாதுகாப்பு வழங்கிக்கொண்டே!
இங்கு சிங்களவர்கள் காணி உரிமை அற்றவர்கள், முன்னர் வாடகைக்கே அவர்கள் இருந்தார்கள் என்று உண்மையை சொன்னார் முன்னாள் மீள்குடியேற்ற அமைச்சர்.
பாவம்..புதிய அமைச்சரவையிலேயே அவர் காணமற்போனதுதான் தர்மம்.
அதேவேளை யாழ்ப்பாணச் செயலகமும், இந்த மக்கள் இங்கு வாழ்ந்ததாக எந்த அத்தாட்சியும் இல்லை என்று தெரிவித்துள்ளது. இருந்தும் பயன் ஏதும் இல்லை.
எது எப்படியோ..இலங்கையில் எந்த பாகத்திலும் இலங்கையர் எவரும் சுதந்திரமாக வாழலாம். ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் தமது பணத்தைக்கொண்டு உரியமுறையில் காணிகளை வாங்கி வாழ்ந்துவந்தால் சரி.
சட்டவிரோதமாக எவர் செயற்பட்டாலும் அதை தடுப்பது அரசின்கடமையல்லவா?
தமிழர்கள் கொழும்பு உட்பட பல சிங்களப்பிரதேசங்களில் வாழ்க்கின்றார்கள்தானே என பல மேதாவிகள் கேள்விகளை தொடுகின்றனர்.
வாழ்க்கின்றார்கள்தான். தமது சொந்த பணத்திலே முறைப்படி காணிவேண்டி, சட்டப்படி அல்லவா அவர்கள் வாழ்;கின்றார்கள். சிங்கள பிரதேசம் ஒன்றில் தமிழ்க்குடியேற்றம் அரசாங்கத்தாலோ, அல்லது தம் இச்சைப்படியோ வரலாற்றில் நடந்துள்ளதா? நடக்கவும் விட்டுவிடுவார்களா என்ன?
பிரதேசங்களை பிரிக்கும் இடத்தில் சட்டவிரோத சிங்கள குடியேற்றங்களை அமைப்பது சிங்களப் பேரினவாத எண்ணத்திற்கு இன்று வந்த எண்ணம் இல்லை இது. குறிப்பாக சட்டவிரோத சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்ட இடங்களை பார்த்தீர்களேயானால், தமிழர்களின் நிலங்கள், பிரதேசங்களை பிரிக்கும் இடம் ஒன்றையே அதற்காக தெரிவு செய்திருப்பார்கள். வெலி ஓயாவில் இருந்து, ஜானகபுர வரை இன்று நாவற்குழியிலும் அதே (வலிகாமத்தையும், தென்மராட்சியையும் பிரிக்கும் நோக்கு) அதேபோல கூடியவிரைவில் வல்வைவெழியிலும், நாகர்கோவில் பக்கங்களிலும் இவ்வாறான குடிறேறங்கள் ஏற்பட்டாலும் சந்தேகம் இல்லை.
அனைவரினதும் அபிலாசைகளும், விருப்பங்களுக்கும் அமைய இனி ஒரு புதிய தேசம் என்றும், இலங்கையில் இனி சிறுபான்மை பெரும்பான்மை என்ற இனங்கள் இல்லை என்றும், இனியும் ஒரு இரத்தம் சிந்தும் சந்தர்ப்பம் நாட்டில் ஏற்படாது என்றும், யாவரும் ஓரினமே என்றும்!! துண்டை கழுத்தில் போட்டுக்கொண்டு, சொன்னால் மட்டும் நல்லாட்சி புரியமுடியாது.
எது எப்படியோ அன்றைய நாட்களில் “வெளிக்கிடடி விசுவமடத்துக்கு” என்ற தமிழ்நாடகம் அந்த சந்தர்ப்பத்தில் சக்கைபோடு போட்டதுபோல…
இன்று துரைமார் யாராவது, “யம்பங் நாவக்குலியட்ட” என்று சிங்கள நாடகம் போட்டால் நல்லா தூக்குமுங்கோ..
22 comments:
படமும் அந்த ஏரியா தானோ?
//அன்றைய நாட்களில் “வெளிக்கிடடி விசுவர்மடத்திற்கு” என்ற ஒரு நாடகம் சக்கை போடு போட்டது.//
உங்கள் பழங்கதைகளுக்கு என்றுமே தனி மதிப்பு (சந்திச்சவங்க சொல்லுறாங்க)
ஆருமை ஜனா அண்ணா.. எதைக்கொண்டுபோய் எதிலை தொடுத்திருக்கிறீங்கள் பாருங்கள்..தலையங்கம் படு சுப்பர்.
தமிழர்கள் கொழும்பு உட்பட பல சிங்களப்பிரதேசங்களில் வாழ்க்கின்றார்கள்தானே என பல மேதாவிகள் கேள்விகளை தொடுகின்றனர்.
வாழ்க்கின்றார்கள்தான். தமது சொந்த பணத்திலே முறைப்படி காணிவேண்டி, சட்டப்படி அல்லவா அவர்கள் வாழ்;கின்றார்கள்.//
இதை சரிவர விளங்காததால் தான் பிரச்சனையே!
கிளிநொச்சி A9 வீதிக்கருகில் விகாரைகள் கட்டுகிறார்கள் பார்க்கவில்லையா? பயணங்கள் இரவில் நடப்பதால் பலர் கிளிநொச்சியை கடக்கும் போது நித்திரையில் இருப்பார்கள்,
//////யாழ்ப்பாணம் புகையிரத நிலையம் என முன்பு ஒருகாலத்தில் அந்தப்பெயரில் செயற்பட்ட இடத்தில் வந்து குவிந்தனர். /////
அதுக்குள்ளேயும் ஒரு குசும்பா... தாங்க முடியலியே...
தொடர் பதிவுகளை அள்ளி வழங்கும் பதிவர் ஜனாவிற்கு வாழ்த்து மாலைகளை சூட்டிக் கொல்கிறேன்...
“வெளிக்கிடடி விசுவர்மடத்திற்கு”
அண்ணா அது விசுவமடு எனப் படித்ததாய் ஞாபகம் ஒரு முறை கவனியுங்கள்...
கண்ணுக்கு முன்னால் நடக்கும் விடயங்களை உங்களுக்கே உரிய எழுத்துநடையில் அருமையாக எழுதியுள்ளீர்கள். நீங்களாவது இது பற்றி எழுதுவது மகிழ்ச்சி நாங்க எழுதினால்த்தானே பலபேருக்கு பிடிக்குது இல்லை.
//யம்பங் நாவக்குலியட்ட//
அண்ணே, அப்ப நாவற்குழி எண்ட பெயர் இன்னும் மாத்தேல்லையோ?
கடைசிக்கு முதல் பந்தி தூக்கல் சார்.
சொல்ல வந்த வேண்டிய விடயத்தை நச் என்று நடுமண்டையில் இறக்கிய வாறு பதிவை தந்த ஜனா அண்ணாவுக்கு வாழ்த்துக்கள்!!!
"யம்பங் நாவக்குலியட்ட.."
Superb Situation Heading.
Nice Writing Jana. Keep it up.
@KANA VARO
நன்றி வரோ இரண்டாவது படம் அங்கே எடுக்கப்பட்டதுதான்
@KANA VARO
ஓ...அப்படியா? எல்லோருக்குமே பழைய நினைவுகள் ஒரு சுகம் தரும் அனுபவங்கள் அல்லவா?
@டிலான்
நன்றி டிலான். என்ன தவறணை ஒரே பூட்டிக்கிடக்கு. தெரியாக திறந்துவிடுங்கோவன்!
@ KANA VARO
என்ன வரோ வன்வேயை மட்டும் சொல்லுறீங்கள்? திரும்பி வரும்போது பகல்லதானே வாறாங்க?
@ம.தி.சுதா
நன்றி சுடுசோறு சீ..மன்னிக்கவும் சுதா..(குசும்பு இல்லை லொள்ளு)
@சமுத்திரன்.
நன்றி சமுத்திரன். கருத்து யுத்தங்கள், மாற்று கருத்துக்கள் எப்போதுமே தேவையானவையே. அதையும் ஏற்று ஆரோக்கியமாக பயன்படுத்துவதே சிறப்பு என்பது என் தாழ்மையான அபிப்பிராயம். தங்களுக்கு தெரியாததா என்ன?
@Subankan
கூடிய சீக்கிரமே உங்கள் சந்தேகமும் தீர்த்து வைக்கப்படும்.
@Ragavan
நன்றி. ராகவன்.
@Anuthinan S
நன்றி தம்பி அனுதினன்...றீட் அவன்யு எல்லாம் இப்ப எப்படி இருக்குது?
@Sivakaran
Thank you Siva.
Post a Comment