1984, 1985 காலங்கள் என்று நினைக்கின்றேன். அப்போது நாங்கள், முதலாம், இரண்டாம் வகுப்புக்களில் படித்துக்கொண்டிருந்த காலங்கள். வீட்டிலே பெரியவர்கள், தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால் இருந்து கிரிக்கட் மச் பார்த்துக்கொண்டிருப்பார்கள். எல்லா மச்களும் அப்போது பார்க்கமுடியாது. எங்கள் தேசிய தொலைக்காட்சி ரூபவாஹினியில் இலங்கை அணி ஆடினால் காட்டுவார்கள், அல்லது இந்திய நஷனல் தொலைக்காட்சியில் காட்டுவார்கள். அப்போது ரூபவாஹினியைவிட யாழ்ப்பாண பிரதேசங்களில் இந்திய தொலைக்காட்சி புள்ளி இல்லாமல் விழுவதாக நினைவு உள்ளது.
அப்போதெல்லாம் ஒன்றும் புரியாமல் பார்த்திருக்கின்றேன். என்றாலும்கூட, கவாஸ்கர், கபில்தேவ், டிலீப் வென்ஸாகர், ஸ்ரீ காந்த் என்ற பெயர்கள் மனதில் நின்றன. ஆப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இந்திய அணி இரசிகர்களே மிக அதிகம் என்பதை விட இந்திய அணி இரசிகர்களாகவே முழுப்பேரும் இருந்தனர் என்றே சொல்லவேண்டும்.
அப்படியான வேளைகளில் 1986, 1987 காலங்களில் மெல்ல மெல்ல கிரிக்கட் பார்க்கும் ஆசைகள் குடிகொள்ளத்தொடங்கியது. அப்போது எதேட்சையாக பாகிஸ்தான் அணி விளையாடிய போட்டி ஒன்றை பார்த்தபோதே இம்ரான் ஹான் என்ற அந்த வேகப்பந்துவீச்சாளர் என் மனதிற்குள்ளும் பந்தை எறிந்தார்.
உண்மையிலேயே முதன் முதலில் நான் இரசிகனான ஒரு கிரிக்கட் வீரர் இம்ரான் ஹானேதான். அவரது நடை, ஸ்ரைல், பந்துபோட ஓடிவரும் பாங்கு, அப்பீல் பண்ணும் இரகம், விக்கட் விழுத்தியதும் சக வீரர்களுடன் அதை கொண்டாடும் பண்பு என அத்தனையும் நச் என்று மனதுக்குள் குடிகொண்டன.
அப்புறம் என்ன? எங்கள் விளையாட்டுக்களிலும், இம்ரான் ஹான்போல ஸ்ரெப் எடுத்து ஓடிவந்து போடுவேன்.. ஆனால்.. பந்தின் வேகம் இம்ரான் ஹான் ஸ்பின்போட்டால் எப்படி போகுமோ அப்படி இருந்தது.
அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில், சென்ரலைட்ஸ், ஜொனியன்ஸ் கிரிக்கட் அணியில் இருந்தவர்கள்கூட இம்ரான்போல முடிவளர்த்து, அவரது ஸ்ரைலை பின்பற்றியது கவனிக்கத்தக்கதாக இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக இம்ரான் ஹான் பைத்தியம் என்னை பிடித்து, ஸ்ரிக்கர்ஸ், கலண்டர்ஸ், படங்கள் என சேகரிக்க ஆரம்பித்தேன். பக்கத்தில் இருந்த நூலகத்திற்கு போய் ஸ்போட்ஸ்ராரை ஆவலுடன் எடுத்து படம் பார்ப்பேன்.
இம்ரான் ஹானின் ஒரு படம் இருந்தால், அந்தப் பக்கத்தை மற்றவர்கள் பின்பு காணமாட்டார்கள்.
இப்படி அவர்மேல் கிட்டத்தட்ட ஒரு வெறியே ஏற்பட்டது எனக்கு. இந்தியாவுடன் பாகிஸ்தான் விளையாடும்போது, சுற்றத்தின்தாக்கம், பக்கத்தில் இருந்து பார்ப்பவர்கள் அடிப்பார்கள் என்ற காரணத்தால், இந்தியா ஜெயிக்கவேண்டும் ஆனால் இந்தியாவின் 10 விக்கட்களையும் இம்ரான் ஹானே எடுக்கவேண்டும் என வேண்டிக்கொள்வேன்.
1992 வேள்ட் கப்.. அப்போ யாழ்ப்பாணத்தில் மின் சாரம் என்ன? மண்ணெண்ணையே கிடையாது. அப்போது நடக்கின்றது இறுதி ஆட்டம். ரேடியோவில் ஆவலாக கேட்டேன். என் ஆதஸ்ன நாயகனின் கரத்தில் உலக்கோப்பை..!! கற்பனை செய்தேன். பின்னர் விடவில்லை.. அப்போ பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஒரு அண்ணா.. கொழும்பு சென்று வரும்போது அந்த இறுதி ஆட்டத்தின் வீடியோ கொப்பி கொண்டுவந்தார். அவரது வீட்டில் ஜெரேட்டருக்கு மண்ணெண்ணை என் பங்காக கொடுத்து ஆசைதீர அந்த இறுதி போட்டியை அல்ல இம்ரானை பார்த்து இரசித்தேன்.
அவர் புற்றுநோய்க்காக மருத்துவமனை கட்டியது, தனது தாயை அளவுக்கும் அதிகமாக நேசித்தது, பொது சேவைக்கு முன்னுரிமை கொடுத்தது எல்லாம் என்னை பெரிதும் கவர்ந்தது.
ஆனால் பின்னர் தாம், முன்னர் போட்டிகளின்போது குளிர்பான மூடிகளால் பந்தை சுரண்டியது, அரசியலுக்கு சென்றது என்பவை எனக்கு மனதில் சிறு வருத்தத்தை ஏற்படுத்தின.
இன்றும் அன்று ஒரு கிரிக்கட்டராக இவரை இரசித்தபின்னர் அந்த அளவுக்கு நான் யாரையும் இரசித்து இல்லை. இருந்தபோதிலும் இவர் அளவுக்கு இல்லாது விடினும் பின்னர் என் மனதுக்குள் அரவிந்த டி சில்வாவும், இன்றுவரை சச்சினும் உள்ளதும் ஏற்றுக்கொள்ளவேண்டியதே.
ஆண்டுகள் பல கடந்தாலும், இம்ரானின், வேகம், ஸ்ரைல், பந்துவிச்சு அத்தனையும் மதிற்குள் அதே சீதோஸ்ணத்தில் பக்குவமாகவே உள்ளது.
HAPPY BIRTHDAY IMRAN
15 comments:
அவரது பழைய போட்டிகளை இப்போது பார்த்தாலும் ஒரு கிழகிழுப்புத் தான்... எனது வாழ்த்துக்களும் சேரட்டும்...
வரும் ஞாயிறு யாழ்ப்பாணம் சென்ரல் மைதானத்தில் சறீலங்கா கிறிக்கேட் சபையின் ஏற்பாட்டில் கிறிக்கெட் போட்டி ஒன்று இருக்குதாமே...
ராணுவ அணியொன்றுக்கெதிராக ஒரு கறுத்த இம்ரான் கானைக் காணலாம் என நினைக்கிறேன் தயாராயிருங்கள்...
//அப்புறம் என்ன? எங்கள் விளையாட்டுக்களிலும், இம்ரான் ஹான்போல ஸ்ரெப் எடுத்து ஓடிவந்து போடுவேன்.. ஆனால்.. பந்தின் வேகம் இம்ரான் ஹான் ஸ்பின்போட்டால் எப்படி போகுமோ அப்படி இருந்தது.//
ஹாஹா..
சின்ன வயசில நான் ஒரு ரிங்பொட்டில் வைத்திருந்தேன் அதில் இம்ரானின் படமும் சச்சினின் படமும் போடப்பட்டிருந்தது என்று நினைக்கிறேன். முதலாமாண்டில் ஆசிரியர் இது யார் எண்டு கேட்க? அசாருதீன் என்று சொல்ல, சிரித்து விட்டு அந்த ஆசிரியை சரியான பெயரைச் சொல்லித்தந்தார். அப்போதுதான் இம்ரான்கான் எனக்கு அறிமுகமானார்..:)
//ஆண்டுகள் பல கடந்தாலும், இம்ரானின், வேகம், ஸ்ரைல், பந்துவிச்சு அத்தனையும் மதிற்குள் அதே சீதோஸ்ணத்தில் பக்குவமாகவே உள்ளது.//
அதே
கலக்கல்ஸ் தல..:)
யாம்பவான் சர்வதேச போட்டிகளில் விளையாடியதை அதே தருணத்தில் பார்க்க முடியவில்லை. இதே கவலை எனக்கு இலங்கை வீரர் மகாநாமாவின் போட்டிகளை பார்க்கவில்லை என்பதிலும் உண்டு. நான் கிரிக்கெட் பார்க்க ஆரம்பித்த தருணத்தில் மகாநாம இலங்கை அணியில் ஏற்பட்ட குழப்பத்தால் நின்று விட்டார். அப்போது எனக்கு வெறும் ஒன்பது வயது தான்(நம்புக்கப்பா)
தான் மட்டும் வளராமல் அடுத்த சந்ததியையும் வளர்த்துவிட்ட வள்ளல் இம்ரான் கான். இப்போது அவரை போன்ற வீரர்களை காண்பது அரிது.
அறியாத வயதுகளில் 1992 உலக கிண்ண போட்டிகளில் அவரை ரசித்திருக்கிறேன்
இம்ரான்கானைப் பற்றி நிறை கேள்வி பட்டிருக்கின்றேன். அவரை இரசிக்கமுடியவில்லை காரணம் என் வயது. நாங்க சின்ன பொடியனுங்க. ஆனால் பின்னர் வஸிம் அக்ரம், வக்காரை இரசித்தேன்.
//அப்போதெல்லாம் யாழ்ப்பாணத்தில் இந்திய அணி இரசிகர்களே மிக அதிகம் என்பதை விட இந்திய அணி இரசிகர்களாகவே முழுப்பேரும் இருந்தனர் என்றே சொல்லவேண்டும்.//
அப்போ இப்போது இந்திய அணியை இரசிப்பதில்லையா சார்?
சுடுசோறு என்றாலே அது உங்களுக்குத்தானே சுதா.
@ம.தி.சுதா
கறுத்த இம்ரான்கானா? முடியலையே ராசா??? அது
சரி..மழை நிற்குமா என்ன?
@ Bavan
நன்றி பவன்..அது சரி..சச்சினையா, இம்ரானையா நீங்கள் அஷாருதீன் என்றீர்கள்??
@KANA VARO
ஆம் வரோ..மஹாநாமவும் ஒரு சிறந்த வீரர்தான் எனக்கு அவரது "பட்" செய்யும் ஸ்ரைல் ரொம்பி படிக்கும். அதேபோல ஜொன்டி ரொட்ஸ்சுக்கு அடுத்தபடியான களத்தடுப்பாளராக அவரை குறிப்பிடலாம்.
@யோ வொய்ஸ் (யோகா)
சரியாகச்சொன்னீர்கள் யோ.
@டிலான்
வயதிலைதான் நீங்க சின்னபெடியன் டிலான். அப்புறம் ஆம் தாங்கள் குறிப்பட்ட புயல் இரட்டையர்கள் ஒரு கலக்கு கலக்கியவர்களே
@Ragavan
அதெல்லாம் 1987ற்கு பிறகு மாறிச்சிடிச்சு சார்.
//Jana said...
@ Bavan
நன்றி பவன்..அது சரி..சச்சினையா, இம்ரானையா நீங்கள் அஷாருதீன் என்றீர்கள்??//
ஹிஹி இம்ரானைத்தான்..:D
Post a Comment