சுபாங்கன்…. தமிழ் பதிவர்களுக்கு மிகவும் பரிச்சயமான ஒரு பெயர். முக்கியமாக இலங்கை வலைப்பதிவர்களில் மிக முக்கியமான ஒரு நபர். தனது மென்மையான அணுகுமுறையால் பதிவுலகிலும் நட்பு வட்டத்தை மிக அகலமாக கொண்டிருக்கும் ஒரு பதிவர்.
2008ஆம் ஆண்டு டிசெம்பர் மாதத்தில் ஓர் நாள் சூராவளி என பதிவுலகத்தில் சுழன்றபடி வந்து குதித்தவர் சுபாங்கன். ஆனால் இற்றைக்குவரைக்கும் தென்றாலாகவே வீசிக்கொண்டிருக்கின்றார்.
அவரது முதற்பதிவு மட்டும் இயற்கை அனர்த்தம் அல்ல, அவரது இணைய வலையுலக பிரவேசிப்புக்கூட ஒரு இயற்கை அனத்தம்தான் போல!
ஆரம்பத்தில் தனது வயதிற்கே ஆன பதிவுகளை பொழிந்துகொண்டிருந்த அவரது எழுத்து ஓடை, பின்னர் மெல்ல மெல்ல மெருகேறி, கூடுதல் மெருகேறி இன்று அந்த ஓடை நதியாகி நிற்கின்றது.
உணர்வோட்டமான கதைகள், காதல் சுவை கொட்டும் எழுத்துக்கள், ஆஹா..போடவைக்கும் சில உவமான உவமேயங்கள் இவரது எழுத்துக்களின் இலக்கணம். சுஜாதாவின் மேல் இருக்கும் அதீத பற்று ஒருசிலவேளைகளில் இவரது எழுத்துக்களில் சஞ்சாரம் செய்துவிடுவதும் உண்டு.
சரலைக்கற்களும் மணல்களும் கொட்டிக்கிடக்கும் விடயப்பரப்புகளுக்குள்ளும்கூட, மிக இலாவகமாக தனது எழுத்துச் சைக்கிளை புத்திசாலித்தனமாக ஓடவைக்கும் புத்திக்கூர்மை சுபாங்கனிடம் உண்டு. புதியதொன்றை அறிந்துவிட்டால் அதை அக்குவேறு ஆணிவேறாக படித்துவிடவேண்டும் என்ற ஆர்வம் பலதடவை பிரமிக்க வைத்துள்ளது.
தான் ஒரு நல்ல பிள்ளை என அவர் சொல்வதோ இப்படி
நாகரீக உலகத்தில்
யாருமே சொற் கேட்பதில்லை
காதல் கிறக்கத்தில் கைகள்
கட்டிளம் கன்னியரில் கண்கள்
கண்டதையும் சுவைக்கும் நாக்கு
கதறலையும் விரும்பும் காது
கெட்ட மணத்தையும் வெறுக்காத மூக்கு
நான் என்ன செய்ய
ஆனால்
நான் ஒரு நல்ல பிள்ளை
ஆரம்பத்தில் கண்ணுக்கு முன்னால் எவர் தென்பட்டாலும் அவரைப்ப்றியும் எழுதிவிடுவோமோ என அவர் நினைத்ததும், விமர்சம் செய்வதற்காகவே பல படங்களை பார்த்தாகவேண்டும் என்று முனைப்பு காட்டியவைகளும், அதேவேளை அதன்மூலம், படங்களை மட்டும் இன்றி அதன் சகல நுட்பங்களையும் அவர் கற்றவைகளும், பெற்றவைகளும் அவரது பதிவுகளில் பளிச் என்றன.
சிறுகதைகள் புனைய இவர் எத்தனித்த காலங்கள்தான், இவருக்கே இவரை யார் என்று அறியவைத்ததுபோன்ற எண்ணத்தை தோற்றுவித்திருக்கும் என்று எண்ணலாம்.
சாதாராண வாழ்வியலில் சில அடிப்படை தத்துவங்களைக்கூட மிக இலாவகரமாக கையாளும் தேர்ச்சியை இவரது வாசிப்புக்கள் இவருக்கு கொடுத்திருக்கின்றன.
அது மட்டும் இன்றி புகைப்படங்கள் எடுப்பது தொடர்பிலும் சுபாங்கனுக்கு ஆர்வம் மிக அதிகம். தனது கண்களால் கைது செய்பவைகளை, தனது கமராவினுள் சிறை வைக்கவேண்டும் என்ற ஆர்வம் மிக மிக அதிகம்.
அருமையான படங்களை கிளிக்குள் பண்ணி சேமித்துவைத்துள்ளார். சில புகைப்படப்பதிவுகளையும் பதிவேற்றியுள்ளார்.
ஐந்தறைப்பெட்டி என்ற அவரது வலைமனை இப்போ தரங்கம் ஆகி சிலிர்துக்கொண்டு நிற்கின்றது. அடிப்படையில் இன்னும் சில மாதங்களில் ஒரு இலத்திரனியல் பொறியிலாளனாக வெளிவரவுள்ள அவர், எழுத்துக்களில் ஒரு குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேறியுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும்.
இதோ..இந்தவார மூன்று கேள்விகளும் பதிவர் சுபாங்கனின் பதில்களும்…
கேள்வி : பதிவு எழுத வந்ததால் நீங்கள் பெற்றுக்கொண்டவைகள் எவை?
சுபாங்கன் : பதிவெழுத வந்ததனால் பெற்றுக்கொண்டவை அல்ல பெற்றுக்கொண்டவர்கள்.. முக்கியமாக நண்பர்கள். அதுவும் இரசனை உள்ள நண்பர்கள், ஒரே அலைவரிசை கொண்ட நண்பர்களை பெற்றுக்கொண்டேன்.
பால்ய நண்பர்கள், கல்லூரி, பல்கலைக்கழக தோழர்கள் மட்டத்தில் இருந்து, இந்த நட்பு வித்தியாசமானது. அதாவது பல தரப்பு வயதுகளை கொண்டவர்களும் எனக்கு நண்பர்களாக கிடைத்துள்ளனர். முதலில் எழுத்துக்கள் மூலம் சந்தித்து கொண்டமையினால், அவர்களை நேரில் சந்திக்கும்போதுகூட முதல் சந்திப்பதுபோன்ற எண்ணம் வருவது கிடையாது. இது ஒரு ஆரோக்கியமான நட்பாக உள்ளது.
அடுத்து பதிவுகளை எழுத வந்தமையினால், என் எழுத்துக்கள் வளப்படுத்தப்பட்டுள்ளது, வாசிப்பு அதிகரித்துள்ளது, பல விடயங்களிலும் கவனம் செலுத்த ஏதுவாக உள்ளது.
என் இயல்புகளில்க்கூட குறிப்பிடத்தக்க மாற்றங்கள் பதிவுக்கு வந்ததால் எனக்கு கிடைத்தது.
கேள்வி : தாங்கள் பதிவெழுத வந்த கதை?
சுபாங்கன் : பதிவெழுத வந்தகதை ஒன்றும் பெரிய கதை கிடையாது. 2008 ஆம் ஆண்டு கடைசிகளில் கொழும்புக்கு வந்திருந்தேன், அப்போது திடீர் என்று ஏற்பட்ட தனிமை, பொழுதுபோக்கு என்பவற்றுக்காகவே எழுத முற்பட்டேன்.
ஆரம்பத்தில் வலைப்பதிவுகள் என்று ஒன்று இருக்கின்றது எனத்தெரியாத போது, முக நூலில் (Facebook) பல கவிதைகள், குறிப்புக்களை எழுதுவேன், பின்னர் அதை வலையில் எழுத ஆரம்பித்தேன்.
கேள்வி : பதிவு எழுதுவதால் நீங்கள் கண்டுள்ள திருப்தி என்ன? ஆத்ம திருப்தி என்று கூட வைத்துக்கொள்ளுங்கள்!
சுபாங்கன் : திருப்தி ஆத்ம திருப்தி என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எதுவும் இல்லை. எனினும் அந்த அளவுக்கு திருப்திப்பட்டுக்கொள்ளும் அளவுக்கு இன்னும் முன்னேறவேண்டும் என்றே கருதுகின்றேன்.
(இறுதியாக சொன்னது - ஆண்ணே நான் புள்ளைப்பூச்சி அண்ணே..இசகு பிசாக எழுதி, இந்தப்புள்ள பூச்சிக்கு கொடுக்கு முளைக்க பண்ணிப்புடாதீங்க)
நல்லது நண்பர்களே.. இந்தவாரம் சுபாங்கன் பற்றிய தகவல்கள், அவரது எழுத்துக்கள் பற்றிய ஒரு சிறு ஆய்வு! என்பவற்றை பார்த்தோம் அல்லவா? அடுத்த ஞாயிறு இன்னும் ஒரு பதிவருடன் உங்களிடம் வருகின்றேன்.
நன்றி.
31 comments:
எங்கள் சின்னமாமா பற்றிய பதிவும் படமும் கலக்கல். நல்ல முயற்சி வாழ்த்துக்கள் நண்பா.
ஹொக்ரெயில் என்று வந்து பார்த்தால் இங்கு சுபாவின் படம் கிடக்கிறது.... நீங்கள் சொன்னது அத்தனையும் 100 வீத உண்மையாகும் அந்த மென் பூவை பதிவர் சந்திப்பிற்கு முன் ஒரு பதிவு போடச் சொல்லுங்களேன்...
வணக்கங்கள் சுபாங்கன் அண்ணை.
எனக்கு வலைப்பதிவை அறிமுகப்படுத்தியதும் சுபா அண்ணா தான்:)
பதிவுலக சின்னமாமா, சிறீலங்கன் சுஜாதா என்றெல்லாம் அழைக்கப்படும் பதிவர் சுபாங்கன் அண்ணா பற்றி அழகான அலசல்..:)
சுபா அண்ணா Rocks..:P
நன்றி ஜனா அண்ணே..;)
//அடுத்த ஞாயிறு இன்னும் ஒரு பதிவருடன் உங்களிடம் வருகின்றேன்//
உங்கள் முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள் அண்ணா
:-)))
எங்கள் சின்ன மாமா பற்றி எங்களுக்கு அறிமுகம் செய்தமைக்கு நன்றி. ;-)
பதிவர்களை அறிமுகம் செய்யும் உங்கள் முயற்சிக்கும் வாழ்த்துக்கள். :-)
;) நல்லா இருக்கு
ஆகா, அறிமுகத்துக்கு நன்றி அண்ணா :)
ஆகா !! சொல்லவே இல்லை ..கலக்கல்
ஜனா அண்ணே +சுபாங்கன் !!
நல்ல முயற்சி ஜனா.. தொடருங்கள்
சுபாங்கன் என்னும் நண்பரை பெற்று தந்தது பதிவுலகமே.
சுபாங்கனின் தீவிரமான ரசிகர்களில் நானும் ஒருவன்
அட நம்ம சின்ன மாமா. வாழ்த்துக்கள் தொடரட்டும்
வாவ் சுபாங்கன். அனேகம் அறிந்த விடயமாயிருந்தும் அறிமுகமாக எழுதிய நல்ல முயற்சி தொடர்கவே.
வாழ்த்துக்கள் இருவருக்கும்்
நல்ல முயற்சியொன்று ஜனா..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
சுபாங்கன் பற்றி ரசித்து எழுதியுள்ளீர்கள்.
ஒரு கவிஞன் நிச்சயம் மென்மையானவன் தானே? :)
இவரது கவிதைகள்,ரசிப்புக்கள்,புகைப்படங்கள் எனக்கும் பிடித்தவை :)
LOSHAN
www.arvloshan.com
நல்ல முயற்சியொன்று ஜனா..
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
சுபாங்கன் பற்றி ரசித்து எழுதியுள்ளீர்கள்.
ஒரு கவிஞன் நிச்சயம் மென்மையானவன் தானே? :)
இவரது கவிதைகள்,ரசிப்புக்கள்,புகைப்படங்கள் எனக்கும் பிடித்தவை :)
LOSHAN
www.arvloshan.com
நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்! :)
@வந்தியத்தேவன்
நன்றிகள் நண்பா..அதுசரி சின்னமாமா பற்றி பெரியமாமாவுக்கு தெரியாதவைகளா என்ன?
@ ம.தி.சுதா
என்ன சுதா ஞாபக மறதியும் வந்திட்டா உங்களுக்கு?
ஹொக்ரெயில் செவ்வாய்க்கிழமைகளில் மாத்தியாச்சுத்தானே!
பூ.. இப்ப பூப்பிடுங்குவதில் ரொம்ப பிஸி..சந்திப்புக்கு முன்னர் காதல் கதை ஒன்று வரலாம்.
@டிலான்
சுப வணக்கங்களோ?
@Bavan
நன்றி பவன் அதுதான் நீங்கள் 64 அடி பாயுறீங்களோ!
@டிலீப்
நன்றி டிலீப். உங்களுடனும் வருவேன்
@கன்கொன் || Kangon
நன்றி கன்கொன்
இதில் "செல்லக்....... தொட்டிலிலே"
என்று பாடும் மாமா எந்தமாமா?
@கானா பிரபா
நன்றி கானா பிரபா
@ Subankan
பதிவெழுதிய எனக்கா? வணக்கம் சொன்ன டிலானுக்கா?
@Balavasakan
நன்றி Dr.வாசகன்.
@SShathiesh-சதீஷ்.
நன்றி சதீஸ்..சின்ன மாமாமேல உங்களுக்கும் அன்புதானா?
@றமேஸ்-Ramesh
ம்ம்ம்..அது சரி..அறியாத விடயங்களும் நிறைய இருக்கு..விரைவில் நேரில் சந்திப்போம் தானே அப்போ பேசிக்கலாம்.
@LOSHAN
நன்றி லோஷன்.
ஒரு கவிஞன் நிச்சயம் மென்மையாவன்தான்.தாங்கள் குறிப்பட்ட விடங்களில் சுபாங்கன் என்னையும் கவர்ந்துள்ளார்.
@ KANA VARO
நன்றி வரோ.. முயற்சிகள் தொடரும்.
என்னண்ணை Profile படம் மாத்தியிருக்கிறீங்கள் எண்டு விளங்குது. படம் ஒண்டுமே விளங்கல. ஹீ ஹீ
சுபாங்கன் - இலங்கையின் சுஜாதா - சின்னமாமா
என்னையும் கவர்ந்த ஒருவர்.
உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
Post a Comment