சுஜாதா 76
எழுத்து துறையில் மூன்று தலைமுறை இளைஞர்களை கட்டி இழுத்துவைத்திருந்த வியப்பான ஒரு எழுத்தாளர், அதிலும் தமிழ் எழுத்தாளர் சுஜாதா என்னும் எஸ்.ரங்காநாதன் என்ற இயற்பெயர் கொண்ட இந்த மனிதன்தான்.
ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் எப்போதும் தனது படைப்புக்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று.
சுஜாதா ஒரு சிறுகதை, நாவல், துப்பறியும் கதை, குறுநாவல், இலக்கிய ஆராய்வு, விஞ்ஞானக்கதை, விஞ்ஞானப்புனைகதை, அறிவியல் தர எழுத்தாளர் என்பதையும் கடந்து அவர் ஒரு பொக்கிசமான தகவற்களஞ்சியம் என்பதே யதார்த்தமானது.
“ஜெனரேசன் கப்” என்பது தனக்கும் தலைமுறை கடந்த வாசகருக்கும் இடையில் சற்றும் விழுந்துவிடாது இறுதிவரை காத்துக்கொண்டமையே பெரும் ஆச்சரியமாக உள்ளது.
சுஜாதாவினுடைய எழுத்தை இரசிப்பவர்களுக்கு, போனசாக அவரால் பல்வேறு பட்ட தகவல்களும், அறிவியலும், ஏன் சிக்கலான சில கோட்பாடுகளும் கூட, புளிப்பு மிட்டாயில் இனிப்பு தடவி கொடக்கப்பட்டு செரித்துக்கொண்டதுபோல பல தகவல்கள் கிடைத்துவிட்டிருக்கின்றன என்பது உண்மையிலும் உண்மை.
அடுத்து நேர்த்தியான ஒரு வாசித்தலுக்கு வாசிப்புத்துறைக்கு ஒரு சிறந்த ஹைடாகக்கூட சுஜாதாவின் எழுத்துக்கள் இருந்திருக்கின்றமை வெட்ட வெளிச்சம்.
சுஜாதாவால் பல அருமையான படைப்புக்கள் மேற்கோள் காட்டப்பட்டு, அல்லது ஏதாவது ஒரு பகுதியில் கூறப்பட்டு வாசகர்கள் அதையும் படிக்கவேண்டும் என்ற தனது ஆவலை ஆங்காங்கே வெளிப்படுத்தியிருப்பார்.
ஜெஸ்… சுஜாதா சுஜாதாதான். வேறு உவமைகள் கிடையாது.
உலகப்பத்திரிகை சுதந்திரம்!
உலகத்தின் முகத்தை உலகம் பார்க்க ஒரு காலக்கண்ணாடியாக இருப்பதே பத்திரிகை. உலகின் போக்கையே மாற்றக்கூடிய சக்தி இந்த பத்திரிகைகளுக்கு உண்டு என்றால் அது மிகை இல்லைத்தான். காலச்சக்கரத்தில் பத்திரிகைகளாலேயே பல ஆட்சிகள் கலைந்து போயிருக்கின்றன, பல வழக்குகள், நியாயங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன, பல மறைக்கப்பட்ட உண்மைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றன, இத்தனையும் ஏன் ஒடுக்கப்பட்ட சமுதாயங்களின் ஆன்மக்குரலாக பத்திரிகைகள் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஓங்கி ஒலித்திருக்கின்றன என்பதற்கு வரலாற்றின் சுவடுகள் சாட்சி.
வளர்ந்த நாடுகளில் தற்போது பத்திரிகை சுதந்திரம் குறிப்பிடத்தக்க அளவுக்கு பேணப்பட்டுள்ளது என்பதற்கு தற்போதைய நடைமுறைகளே சாட்சியாக இருக்கின்றன. ஆனால் அடக்குமுறைகளுக்கு உட்பட்டு பத்திரிகை சுதந்திரம் கேள்விக்குறியாக இருப்பது மூன்றாம் உலக நாடுகளில்த்தான்.
கடந்த 10 ஆண்டுகளில் சில இடங்களில் பத்திரிகைச்சுதந்திரத்திற்கு மிலேசத்தனமான அடக்குமுறைகள் கைக்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மூன்றாம் உலக நாடுகளில் பல ஊடகவிலாளர்கள் கொலை செய்யப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, ஏன் நேரடியாக உயர் மட்டங்களால் எச்சரிக்கவும் பட்டு வருவது வேதனையானது என்பதுடன் கேவலமானதும் கூட.
ஒருநாட்டின் வளர்ச்சியை கணிப்பிடுவதற்கு முக்கிமாக அந்த நாட்டின் பத்திரிகை சுதந்திரமும் கணிக்கப்படவேண்டும் என தற்போது ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் ஏகமனதாக வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.
இதேவேளை இந்த பத்திரிகை சுதந்திரத்தையே அரசியலுக்கு பயன்படுத்தும் விதமாக இன்று பல்வேறு நாடுகளில் ஒவ்வொரு கட்சியினரும் தமக்கான பத்திரிகைகளையும், பிற ஊடகங்களையும் வசப்படுத்தி வருகின்றமை மறுபுறத்தே பெரு வேதனையையே தோற்றுவிக்கின்றது. பத்திரிகா தர்மம் என்பதையே இவை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளாகவே கருத்தப்படவேண்டும்.
உண்மையில் எந்த ஒரு நாடு ஊடகசுதந்திரத்தை அடக்க முனைகின்றதோ அந்த நாடு 100 ஆண்டுகள் பின்னோக்கிப்போக தலைப்படுகின்றது.
இன்று உலக பத்திரிகை சுதந்திர தனம்.
இன்றைய காட்சி
மரினாவில் இன்னும் கிரிக்கட் விளையாடத்தடையா?
ஹசானின் கெட்ட நேரமா! இலங்கை கிரிக்கட்டின் கெட்ட நேரமா!!
ஆட்ட நிர்ணய சதியில் விளையாட்டு வீரர்கள், நாடுகளின் தலைகள் உருளத்தொடங்கி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தினாலும்கூட, ஸ்ரீ லங்கா அணி தொடர்பாக இதுவரை பெரிதாக ஒரு ஆட்ட நிர்ணய சதி குற்றசாட்டுகளும் எழுந்ததில்லை. அந்த அளவுக்கு கனவான் விளையாட்டை, கனவான் தனமாகவே இலங்கை கிரிக்கட் கடைப்பிடித்து வருவதாகவே பலரினதும் அபிப்பிராயங்கள் இருந்து வந்தன.
இருந்த போதிலும், கடந்த உலகக்கோப்பை இறுதி போட்டி, பல தரப்பினர் மனதிலும் சிறிய சந்தேகங்களை உருவாக்கிவிட்டது என்பது உண்மைதான்.
அடுத்தடுத்த இராஜிநாமாக்களும், விலகல்களும், சிரேஸ்ர வீரர்களின் சலிப்பான பேட்டிகளும் இதற்கு மேலும் தூபம் போட்டுக்கொண்டிருந்தது.
இந்த நிலையில் முன்னாள் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் ஹசான் திலகரட்னவின் கருத்து திடீர் என அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கின்றது.
இந்த நிலையில் ஹசானுக்கு ஆதவரவான குரல்களும் எதிரான குரல்களும் எழும்பத்தொடங்கிவிட்டன. இந்த நிலையில் சற்றுமுன் வந்த செய்திகளின் படி ஸ்ரீ லங்கா புலனாய்வுப் பிரிவினரால் ஹசான் இதுதொடர்பான விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
என்னமோ ஏதோ..பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும், இது ஹசானின் கெட்டகாலமா அல்லது ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கெட்டகாலமா என்று!
இந்த வாரவாசிப்புக்கள்.
இந்த வார வாசிப்புக்காக குறிப்பாக முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், சுய முன்னேற்றத்திற்கான புத்தகங்கள், நிர்வாகம் சம்பந்தமான புத்தகங்களையே வாசித்துக்கொண்டிருக்கின்றேன். (மை பெஸ்ட் ஸ்ரெப், டெவலெப்மென்ட் போர் ஈச் அதர்ஸ், கவ் ரூ கிளியர் யுவர் ஓன் வே.. என்பன அவற்றில் சில)
இருந்த போதிலும் கைவசம் வாசித்தவைகள் தவிர தமிழில் இது சம்பந்தமான புத்தகங்கள் கிடைப்பது அரிதாகவே இருப்பதால் இணையத்தேடுதலுக்கு போனால்,
ஈ புத்தகங்களாக சில கிடைக்கின்றன. ஏற்கனவே வாசித்தவைகள்தான் பெரும்பாலும்.
என்றாலும் கூட “சவாலே சாமாளி” என்ற ஆடியோ புத்தகத்தை தரவிறக்கம் செய்யக்கூடியதாக இருந்தது.
இவற்றை படிப்பதில், கேட்பதில் இன்ரஸ்டிங்காக இருப்பவர்கள் கீழே கிளிக் பண்ணி அதை தரவிறக்கலாமே…
மியூசிக் கபே
மழைதருமோ என்ற கேள்வியுடன் ஆரம்பித்துவிட்டு மனதுக்குள் மெலடி மழை தூவிவிட்டு போகின்றது இந்த பாடல்.
இந்தவாரப்புகைப்படம்
இன்றைய ஊடக சுதந்திர தினத்துடன் தொடர்பு பட்ட கொலம்பியாவை சேர்ந்த பத்திரிகையாளரே இவர். ஆண்டு தோறும் இவர் பெயராலேயே சிறந்த பத்திரிகையாளர் ஒருவருக்கு யுனஸ்கோ விருது வழங்கி கொளரவிக்கின்றது.
இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.
ஜோக் பொக்ஸ்
வீடுகளில் பெரும்பாலும் டி.வி ரிமோட் யார் கையில் இருக்கும் என்று ஒரு பாலர் பாடசாலையில் ஒரு சர்வே எடுத்தாங்க..
அதில பெரும்பாலான மாணவ மாணவிகள் அம்மா கையிலதான் என்று தெரிவித்திருந்தாங்க சரிதான்..சர்வே முடிவு நூறு வீதம் அம்மாக்கள் கையிலதான் ரிமோட் என்று எழுதப்போகும் நேரத்தில ஒரு பையன் அவசரமாகச் சொன்னால் எங்க வீட்டில டி.வி. ரிமோட் அப்பா கையிலதான் இருக்கும் என்றான்..
ஆச்சரியமாக அப்படியா என்று சர்வே எடுக்கவந்தவர் கேட்டு முடிப்பதற்குள் சொன்னான்..
ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!
14 comments:
:)
சுஜாதா பற்றிய கருத்துக்கள் அருமை.சவாலே சமாளி -நன்றி
Waiting for hasaan thilakaratne!!!
அண்ணா அருமை சவாலே சமாளியை திருட முயற்சிக்கிறேன்...
அப்பாடா எத்தனை நாளுக்குப் பிறகு cocktail அருந்த கிடைத்திருக்கிறது அருமை.
சுஜாதா எனக்கும் அவரைப் பற்றி இதே கருத்துத்தான். முன்பொருமுறை எழுதியும் இருக்கிறேன்.
பத்திரிகை சுதந்திரமா? அப்படின்னா? ஹெலோ நாம ஸ்ரீலங்காவில் இருக்கிறோம்.
ஹஷான் பேசவில்லை அவர் போட்டிருக்கும் பச்சை சட்டை பேசுகிறது அவரது அரசியலுக்கு க்ரிக்கெட்டை இழுத்தது சரியல்ல.
சுய முன்னேற்ற புத்தகங்கள் முன்பு படிப்பதுண்டு, கோப் மேயர் ஐப் படித்த போது எனக்கு என்னமோ நானும் பெரிய பில் கேட்ஸ் ஆகி விடுவேன் என்றே யோசித்திருக்கிறேன்.இப்போது ஆர்வமில்லை.
சலனப் படஙள் ரெண்டும் பார்க்கவில்லை நாளைக்குப் பார்க்கிறேன் அண்ணா.
Guillermo Cano இதுதான் அந்த நபரினுடைய பெயர்...........
பரிசு எப்ப பாசலில் வரும்?????????
சுவாரஸ்யம்.. அ
கேபிள் சங்கர்
சுஜாதா - தல! தலதான்!
தன்னம்பிக்கை - நானும் ஒரு கோப்மேயரின் புத்தகம் வாசித்து பாதிலயே நொந்து போனவன்! சும்மா போங்க பாஸ்! :-)
கலக்கல்ஸ்! :-)
அனைத்து துறைகளிலும் புகுந்து பல நிகழ்வுகளை பகிர்ந்திருக்கும் விதம் சிறப்பு அதிலும் சுஜாதா பற்றிய முதல் அறிமுகம் சிறப்பு
புது செய்திகளுடம் மியூசிக் கபே சேர்ந்து நல்லா வந்து இருக்குது. அந்த பாடல், தெலுங்கு டப்பிங்கா?
His writing style is unique and he connects with readers with a feel good factor. And Mr.Sujatha is also a humble and generous person.
ஆம்..இன்று தமிழ் எழுத்துலகத்தை விட்டு மறைந்தாலும் எப்போதும் தனது படைப்புக்களால் வாழ்ந்துகொண்டிருக்கும் சுஜாதாவின் பிறந்த தினம் இன்று.//
நினைவுகளோடு சங்கமித்து விட்ட, எழுத்தோவியத்தினை மறக்க முடியுமா?
ஒருநாட்டின் வளர்ச்சியை கணிப்பிடுவதற்கு முக்கிமாக அந்த நாட்டின் பத்திரிகை சுதந்திரமும் கணிக்கப்படவேண்டும் என தற்போது ஐ.நா எடுத்துள்ள தீர்மானம் ஏகமனதாக வரவேற்கப்படவேண்டிய ஒன்றே.//
அதானே போகிற போக்கில் பத்தாயிரம் ரூபா தாளும் வந்து விடும் போல இருக்கே.
இன்றைய காட்சியின் வருகைக்காக எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.
//
இது ஹசானின் கெட்டகாலமா அல்லது ஸ்ரீ லங்கா கிரிக்கட்டின் கெட்டகாலமா என்று!//
கிரிக்கெட்டிலும் நம்ம நாட்டு அரசியலின் சித்து விளையாட்டுக்கள் என்பதற்கு இதனை விட வேறென்ன வேண்டும்..
ஆட்ட நிர்ணய சதியினை விட, அரசியல் அழுத்தங்களும் அதிகமாக இருக்கும் சகோ.
//இந்த வாரவாசிப்புக்கள்//
சவாலே சமாளி..பகிர்விற்கு நன்றிகள், இனித் தான் படிக்க வேண்டும் சகோ.
//மழை தருமோ...
ரசிக்க வைக்கும் பாடல்...நினைவுகளை கிளறுகிறது.
இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.
John B. Oakes//
சரியா பாஸ்...
பரிசு ஒன்றும் இல்லையா.
ஆனால்…அப்பாவை இயக்கும் ரிமோட் அம்மாவிடம்தான் இருக்கு!//
அவ்.....இந்தக் கால குடும்ப வாழ்வைப் படம் பிடித்திருக்கிறீங்க சகோ.
சகோ, தாமதமான வருகையினைப் புரிந்து கொள்வீர்கள் என நினைக்கிறேன்.
இவர் யார் என்பதை கெட்டிக்காரர்கள் பின்னூட்டத்தில் தெரிவிக்கிலாம்.
விரைவில் அவர் பற்றிய முழுமையான பதிவை தர உள்ளேன்.
John B. Oakes//
சரியா பாஸ்...
பரிசு ஒன்றும் இல்லையா.
Post a Comment