வலிந்த வான் தாக்குதல்கள், நெருப்புக்குண்டுகக்கும், இயந்திரப்பறவைகளின் வான்மறைப்பு என்பவற்றால் பாடசாலை என்பது அப்போது எங்களுக்கு பெரும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது.
அப்படி பாடசாலை நடந்தாலும்கூட ஹர்த்தால், மாணவர் அமைப்பு பகிஸ்கரிப்பு என்று நடக்கின்றது ஓடுங்கடா என்று பெரிய அண்ணாமார் வெள்ளையும் வெள்ளையுமாக வந்து எங்களை துரத்தி விடுவார்கள்.
இப்படி ஒரு கால கட்டத்தில் நீண்ட நாட்களின் பின்னர், இன்றைக்கு ஸ்கூல் தொடங்குதாம் என்ற மனோகரன் மாஸ்டரின் பேச்சை நம்பி நான் அவசர அவசரமாக வீட்டில் வெளிக்கிடப்படுத்தப்படுகின்றேன்.
பெரிய தந்தையார் வாஞ்சையுடன் தனது வாகனத்தில் அழைத்துச்சென்று பாடசாலை வாசலில் இறக்கி விடுகின்றார்.
டேய்.. ஜனா வந்திட்டான்டா என்ற உட்சாகமான சத்தம், எல்லாவற்றையும் மறந்து மனதுக்குள் துள்ளிக்குதிக்க சொல்லுகின்றது. இருந்தாலும் நான் நல்லபிள்ளை என்று பெரியப்பாவுக்கு பாசாங்கு காட்டி அவரது வாகனம் மறையும் மட்டும் டாட்டா காட்டிவிட்டு, கர்ணன்களை நீண்ட நாள் பிரிந்த துரியோதனன்போல கத்திக்கொண்டே உள்ளே நுளைகின்றேன்.
ஆண்டு 4 ஏ கிளாஸ் நீண்ட நாள் காணாத தன் அன்பு செல்லங்களை கண்டு வாரி அணைப்பதுபோன்ற உணர்வு கிளாஸிற்குள் சென்றபோது உணரப்பட்டது.
என்ன கொடுமை என்றால் மாணவர்கள் 60 வீதமானவர்கள் வந்திருந்தார்கள், ஆனால் ஆசிரியர்கள் பெரிதாக வரவில்லை. ஆசை தீர விளையாடிக்கொண்டிருந்தோம். நேரம் ஒரு 10.30 மணியிருக்கும் பேரிடி காதுகளை பிளந்துகொண்டு விழுவதுபோல அடுத்தடுத்து கூவிக்கொண்டு மூன்று ஷெல்கள் விழுந்தன. புhடசாலைக்கு மிக அண்மையில்த்தான் அவை விழுந்திருந்தன. யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளே அவை.
ஆசிரியர்கள் குஞ்சுக்கோளிகளின் ஆபத்தறிந்து எகக்காலத்துடன் கொக்கரிக்கும் கோழிகள்போல எங்களை இழுத்துக்கொண்டு ஷெல் மற்றும் விமானத்தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பாக இருக்க அமைக்கப்பட்டிருக்கும் பங்கர்களுக்குள் (பதுங்கு குழி) எங்களை அவசரமாகத்தள்ளுகின்றார்கள்.
என்னடா என் வெள்ளை உடுப்பின் அரைக்கை மடிப்படியில் ஏதோ பிசுபிசுக்கின்றதே என்று உணர்ந்து என் முழங்கைக்கு மேலே பார்த்த நான் திடுக்கிட்டப்போனேன்.
அந்த இடத்தில் இரத்தம் வழிந்துகொண்டிருந்தது. அரைக்கை வெள்ளைச்சட்டை சிவப்பாகிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த உடன்தான் எனக்கு வலிக்க ஆரம்பித்து.
அதற்குள் டேய்…ஜனா என்னடா இரத்தம் வருது! குண்டு பட்டுட்டா என்று மற்ற சினேகிதர்கள் கத்த ஆரம்பித்து விட்டார்கள். அந்த வேளையில்த்தான் எனக்கு வலிக்கவே ஆரம்பித்தது.
உண்மை என்னவென்றால் அந்தக்காயம் குண்டு அடிபட்டு வரவில்லை. அந்த பதுங்கு குழி வாசலில் நீட்டிக்கொண்டிருந்த ஒரு இரும்பு துண்டு கிழித்ததால்த்தான் அது ஏற்பட்டது என்பது சட்டென்று எனக்கு புரிந்தது.
பின்னர் என் அழுகைக்கு மத்தியில் மற்றவர்களுக்கும் அது புரிந்தது.
அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.
சரி..என் விடையத்திற்கு வருகின்றேன். கையில் இரத்தம் வழிந்துகொண்டிருக்க கிடைத்த ஒரு ஷெல் விழாத இடைவெளிக்குள் எனது பெரிய தந்தையார் வந்து என்னை அழைத்து சென்று ஒரு மருந்தகத்தில் காயத்திற்கு மருந்து கட்டிவிட்டார்.
வீட்டில் வந்து பெரும் மனக்குழப்பத்துடன் பத்திரமாக இருந்தேன்.
இப்போதைக்கு ஸ்கூலுக்கு போகவேண்டாம் என்ற ஒருமித்த கட்டளை வீட்டில் விழுந்தது.
மறுநாள் வேறு வழியில்லை. வீட்டில் இருக்கவும் பைத்தியம் பிடித்தது. எனது மைத்துனன் ஒருவன் லைபிரரிக்குப்போறேன் வாரியா? என்று வீட்டில் வந்து கேட்டான் அவன் 8ஆம் வகுப்பு படிப்பவன், நான் அரைவாசி.
அவனுடன் போவதென்பதால் பத்திரமா கூட்டிப்போய் வா என்று அவனிடம் என்னை ஒப்படைத்தனர். அப்போ நல்லூர் கோவிலுக்கு பின் புற வீதியில், போராளி ஒருவரின் பெயரில் ஒரு படிப்பகம் இருந்தது. அங்குதான் கூட்டிப்போனான்.
புத்தகங்கள் மீது எனக்கு காதலை ஏற்படுத்திய முதலாவது சம்பவம் அது. என்னை விட்டுவிட்டு, அவன் கற்கண்டு சஞ்சிகையை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தான். நான் அங்கிருந்த புத்தங்கள் ஒவ்வொன்றையும் பிரமிப்பாக பார்த்துக்கொண்டிருந்தேன்.
அங்கே எனக்கு அந்த வேளைகளில் பிடித்தமான “கோகுலம்” புத்தகம் இருக்கா என்று தேடினேன். அதில் வரும் 16 பக்க வண்ணக்கதைகள் எனக்கு ரொம்ப பிடிக்கும். அங்கே அது இல்லை. பெரும்பாலும் ரஷ்ய மொழிபெயர்ப்பு புத்தகங்களே தொகையாக இருந்தன.
நமக்கு காரியம் ஆகாது! என்ற எண்ணத்துடன் அங்கிருந்த சட்டம் ஒன்றில் சாய்ந்துகொண்டே வீதியில் வருவோர் போவோரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன் அப்போது என் பின் புறமிருந்து வாஞ்சையாக ஒரு கை என் தலையை தடவிவிட்டது. திரும்பி பார்த்து பிரமித்து நின்றேன்.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.
சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்.
- இலைகள் உதிரும் -
39 comments:
//////////அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.//// என்ன சொல்வதென்றே தெரியவில்லை ...(
////என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.
சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்/// ஒரு எதிர்பார்ப்பை விட்டு சென்றுள்ளீர்கள்... மிகவும் ஆவலாக உள்ளது யார் என்று அறிய... பார்ப்போம் "என் ஊகம்" சரியா என்று அடுத்த பதிவில் )
சிறப்பு ஜனா !தொடர்ந்தது எழுதுங்கள்.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.
சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்.
நானும் " ஒருவரை " மனதில் நினைக்கிறேன்! இலங்கையில் சேகுவேரா ரேஞ்சில் இருப்பவர், அவர் மட்டும் தான்! அவரைத் தவிர்த்து வேறு எவரையாவது குறிப்பிட்டால், அடுத்த பதிவுக்கு நோ கமெண்ட்ஸ்! நோ வோட்ஸ்!!
வரலாற்றுப் பதிவு???hehe
பாஸ் புத்தகம் மேல காதலா??
உன்னதமான காதல் இது தான்!!என்னிக்கும் தோற்காது!!
ஹிஹி ஓட்டவடை...அது யாரு மாப்பு??
ஒரு எதிர் பார்ப்போட விட்டுடீங்களே சகோ..
வணக்கம் சகோ, சேமம் எப்படி?
வலிந்த வான் தாக்குதல்கள், நெருப்புக்குண்டுகக்கும், இயந்திரப்பறவைகளின் வான்மறைப்பு என்பவற்றால் பாடசாலை என்பது அப்போது எங்களுக்கு பெரும் கேள்விக்குறியாகத்தான் இருந்தது.//
இந்த வலிகளுக்குள், புரிந்து கொள்ள முடியாத சின்ன வயசிலை நாங்கள் பண்ணுற காமெடி என்ன என்றா,
எப்ப ப்ளேன் வரும்?
எப்ப குண்டு கீழை பதியும்?
எப்போ வீட்டை போகலாம் என்று ஆர்வக் கோளாறோடு பத்து வயசு வரைக்கும் இருந்திருக்கிறேன்.
அவ்...
டேய்.. ஜனா வந்திட்டான்டா என்ற உட்சாகமான சத்தம்,//
அண்ணாச்சி இதில் டபுள் மீனிங் இல்லையே. வலைக்கும் நீங்க மீண்டும் வந்திட்டீங்க என்று நமக்கும் சந்தோசம் தான்.
கர்ணன்களை நீண்ட நாள் பிரிந்த துரியோதனன்போல கத்திக்கொண்டே உள்ளே நுளைகின்றேன்.//
பாருங்க மொக்கை ரசிகர்களே, ஒரு வரலாற்றுப் பதிவினுள் மொக்கை. வாழ்க தமிழ்!
அருமையாக சுவை கூட்டி எழுதுறீங்க.
ஆண்டு 4 ஏ கிளாஸ் நீண்ட நாள் காணாத தன் அன்பு செல்லங்களை கண்டு வாரி அணைப்பதுபோன்ற உணர்வு கிளாஸிற்குள் சென்றபோது உணரப்பட்டது.//
நானும் அதே பள்ளியில் தான் படித்தேன். மத்தியம் தானே. 1999
யாழ்ப்பாணக் கோட்டை இராணுவ முகாமிலிருந்து ஏவப்பட்ட எறிகணைகளே அவை.//
இத்தைய ஒரு கோரத்திற்கு தான் நண்பன், தோழன் விபுலானந்தனும் பலியானனான்.
அன்றைய தினமே யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஒரு மாணவத்தலைவனாக இருந்த பொன்.விபுலானந்தன் என்ற மாணவன் கோட்டையில் இருந்து குண்டுமாரி பொழிவதையடுத்து விரைந்து சென்று மாணவர்கள் அனைவரையும் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்திவிட்டு திரும்பும் பொழுது குண்டடிபட்டு தன் உயிரை தனது கல்லூரி மண்ணிலேயே விட்டிருந்தார்.//
சகோ நான் மேலே பதிவைப் முழுமையாக படிக்காது தோழன் விபுலானந்தன் பற்றி குறிப்பிட்டேன். நீங்கள் பதிவில் கூறியிருக்கிறீர்கள். ஆஹா.. எப்படி ரசனை.
என் வாழ்வில் மரணப்படுக்கை வரை மறக்கமுடியாத புண்ணிய தரிசனம் அது.//
பாஸ்...நிஜமாவா பாஸ்...நீங்கள் அப்பவே அவரைக் கண்டு விட்டீங்களா. நாம எல்லாம் எவ்ளோ நாள் தவமிருந்தோம் தெரியுமா.
ஆவலைத் தூண்டி விட்டுப் பதிவினை நிறுத்தி விட்டீர்களே.
///சித்தர்களும், சில யோகிகளும் வலம் வந்ததாக கூறப்படும் நல்லூர் மண்ணிலே அன்று ஒரு சேகுவாராவை கண்டேன்./// அவர் ஊரெழுவை சேர்ந்தவர். நல்லூர் வீதியில் உயிர் விட்டவர். [பொறுக்க முடியல்ல அது தான் சொல்லிப்புட்டன்;-) ]
நமக்கெல்லாம் இந்த கொடுப்பனவு இல்லையே. ஒருவேளை அவர் காலத்தில் பிறந்திருந்தால் பார்த்திருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கும்..(
இப்படியான பதிவுகளுக்கு றோயல் சலூட். தொடர்ந்து எழுதுங்கள்...
அடுத்த பதிவிற்காகக் காத்திருக்கிறேன் ஜனா அண்ணா
நீண்ட நாளுக்குப் பின் வாரீர்கள் வாருங்கோ அங்கே மைந்தனுடன் கிரேட் எஸ்கேப் ! உண்மையில் இப்படி பயத்தில படிப்பின் அருமைபுரியவில்லை அன்நாளில் இப்ப ஜோசிக்கிறம்! நீங்கள் பார்த்தது அவரா என மனது என்னுகிறது என் ஊகம் சரி என்றாள் அவர் ஊரேலுக்காரர் பொறுக்கிறேன் அடுத்தபதிவுக்கு முந்துகிறேன் வாசிக்க!
@நிகழ்வுகள்
பொன்.விபுலானந்தன்போல போர் தின்ற மாணவர்கள் இன்னும் அதிகம்தான்.
உங்கள் ஊகம் அனேகமாக சரியாகத்தானே இருக்கும் :)
@shanmugavel
நன்றி சண்முகவேல் ஐயா..
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நீங்கள் மனதில் வைத்திருப்பவர்தான் இவர். உண்மைதான் அவரைத்தவிர வேறு எவரும் அந்தளவு உயரத்தில் இருக்க முடியாது :)
ரொம்பத்தான் வெருட்டுறீங்க போங்க :)
@மைந்தன் சிவா
வாங்க மைந்தன் சிவா... புத்தகம் மீதான் காதலும் தோற்க சான்ஸ்ஸஸ் நிறைய இருக்கு :)
நோட்டட்- பின்னூட்டங்களுக்கு ரிப்ளே பண்ணுறன்
@ வேடந்தாங்கல் - கருன் *!
வீட்டிலை நிறைய சீரியல்கள் பார்க்கிறாங்க கரூன்...:)
@நிரூபன்
வணக்கம் நிரூ சேமத்து நேக்கு ஏது குறை..பகவானை சேவிச்சுட்டே இருக்கேனோல்லையோ அவா பார்த்துப்பா :)
உண்மைதான் இளங்கன்று பயமறியாது..பயங்கரத்தில்க்கூட கிலுகிலுப்பு தேடும் வேடிக்கை வயசு அது :)
டபிள் மீனிங் என்றால் என்ன நிரூ????
வலைக்கு வெளியே போனால்த்தானே திரும்பி வாறத்துக்கு... நாம இப்படித்தான் அப்ப்ப பவர் கட்டாவோம்..ஆனால் மீண்டும் பவர் புல்லா வந்துடுவோம்...ஹி.ஹி.ஹி.
அடப்பாவிகளா... இதெல்லாம் மொக்கை இல்லையடாப்பா....
அடடா..சகோதரம்... என்னைவிட இரண்டு வயது இளையவனா??? அப்ப அ;ணாச்சியை தெரியாமல் இருந்திருக்க முடியாதே :)
ஸோ.. வீ ஆர் சென்ரலைட்ஸ்..
நண்பன் விபுலானந்தன் அல்ல அண்ணா விபுலானந்தன். அவர் 1988 ஆம் ஆண்டு உயர்தரம்.
ஆஹா..எவ்வளவோ நாள் தவமிருந்தீர்களா??? அப்படி என்றால் ஹெஸ்ஸங் பிழையா இருக்கும்போல இருக்கே???
நன்றி நிரூ
@ கந்தசாமி.
ஓஹோ.. அப்ப நீங்க சி;னப்பையனா??? கண்டிப்பாக இந்த தொடர் உங்களுக்கானதே
@ கார்த்தி
நன்றி ஐயா..தொடர்ந்து வாருங்கள்
@sinmajan
நன்றி சின்மயன் எங்க கனநாளாக ஆளைக்காணவில்லை???
@ Nesan
அடடா..கில்லாடிதான் நீங்கள்...
Jana அண்ணா கடுமையா யோசித்தன். பாடகி பிரசாந்தினி பற்றிய என்ன தகவலை நான் மி்ஸ் பண்ணினேன்? பிடிக்கமுடியவில்லையே...
இயலுமெனில் எனது பதிவில் பின்னூட்டமாக கூறவும்!!
ஆகா! பெரிய எதிர்பார்ப்பு ஒன்றை ஏற்படுத்தி நிறுத்திட்டீங்களே!
@ கார்த்தி
கொஞ்சம் ட்ரை ப்ணி பாரும் வரும்
@FOOD
இதென்ன பயங்கரம் அண்ணா... இனித்தான் இருக்கு பயங்கரமே...
சேர்த்த கண்ணீர் தேக்கி வைத்தால் சமுத்திரம் மிச்சம்.
ஜீ...
அப்படியா ஜீ... அறிந்த எதிர்பார்ப்புத்தான்..
எதிர்ப்பார்ப்பொன்றைத் தந்துவிட்டு சென்றிருக்கின்றது பதிவு.பார்ப்போம் அடுத்த பதிவில்
எதிர்ப்பார்ப்பொன்றைத் தந்துவிட்டு சென்றிருக்கின்றது பதிவு.பார்ப்போம் அடுத்த பதிவில்
@ Tharsan
நன்றி தர்சன் தொடர்ந்து வாருங்கள்.
@வடலியூரான்
நன்றி வடலியூரான்.
Post a Comment