Monday, May 23, 2011

இலைதுளிர்காலத்து உதிர்வுகள்……06

திடுக்கிட்டு திரும்பிய நான் ஆர்வமாக அந்த முகத்தை பார்க்கின்றேன். முழுமையாக மழிக்கப்பட்டிருந்த கேசம், அடர்த்தியாக மேவி வாரப்பட்டிருந்த தலைமுடி, மெல்லிய நீல மேற்சட்டை, முழங்கைக்கு கீழே நேர்த்தியாக மடித்து விடப்பட்டிருந்தது. அப்போதைய கறுப்கு ஹரா துணியில் ஜீன்ஸ் அணிந்து அழகாக மேற்சட்டை உள்ளே விடப்பட்டிருந்தது.
அப்போதுதான் அந்த உருவத்தை முதல் முதலில் பார்க்கின்றேன். மனதில் இனம்புரியாத ஒரு பயம் தொற்றிக்கொள்கின்றது. நான் ஏதும் குழப்படி செய்கின்றேன் என்று நினைத்து என்னை இவர் அடிக்கப்போகின்றாரோ என்ற சிறுவயது பேதமை அது!

மென்மையான, அனால் ஆழுத்த மான குரல் என்னைநோக்கி விழுகின்றது. தம்பிக்கு என்ன பெயர்?
ஜனா… ஜனார்த்தனன்..
ஏன் பயப்படுறீங்கள் மாமா ஒன்றும் பிடித்துக்கொண்டு போகமாட்டேன்..
ம்ம்ம்….
எங்கே படிக்கின்றீர்கள், எத்தனையாம் ஆண்டு? எங்கே இருக்கின்றீர்கள் என்ற கேள்விகளுக்கு கொஞ்சம் உசாராக பதிலளிக்கின்றேன்.
தம்பி… கெட்டிக்காரன் போல இருக்கு மாமா கேள்வி கேட்கவே?
பதிலாக அசடு வழிய நெழிந்துகொண்டு சிரித்திருக்க வேண்டும் நான் அப்போது..

சரி..உலகத்தில பெரிய நாடு எது?
சோவியத் ஜூனியன் என்றேன் சட்டென்று..
ஓம்..தம்பி நாலாம் ஆண்டெல்லே எங்க ஈழத்து புலவர்கள் இரண்டு மூன்று பேரிண்டை பெயர் சொல்லும் பார்ப்பம்?
ஆ…. சின்னத்தம்பி புலவர், சோமசுந்தரப்புலவர், கல்லடி வேலாயுதம்….
கேட்டிக்காரன் தான்…
சரி பள்ளிக்கூட புத்தகம் தவிர வேற என்ன புத்தகங்கள் படிக்கிறனீங்கள்?
கோகுலம், அம்புளிமாமா, வாண்டுமாமா, அர்சுனா இப்படி மா…மா..

சரி.. ஏன் இங்கை ஒன்றையும் படிக்க பிடிக்வில்லையோ தம்பிக்கு?
சரி வாரும்… நான் எடுத்து தாறன் என்று அலமாரிகளில்தேடி கொஞ்சம் சிறுவர் கதைப்புத்தகங்களை கொண்டுவந்து போட்டுவிட்டு, சிரித்தார்.
பிறகு இப்போது எனக்கு நினைவு வருகின்றது… சிறுவர்களுக்கான நூல்களாக சில பெரியோர்கள் பற்றி வந்த மெல்லிய புத்தகங்களை காட்டினார்.
ஆபிரகாம் லிங்கன், பாராதியார், காந்தி, போல பலர் பற்றி இருந்தன சின்ன சின்ன புத்தகங்களாக
தம்பி..கதைப்புத்தகங்கள் தவிர இவைகளையும் நீங்கள் படிக்கவேண்டும், அப்பத்தான் நல்ல கெட்டிக்கானாக வரலாம், பேச்சுப்போட்டிகளிலை பேசலாம், பரிசுகள் வாங்கலாம், ரீச்சர்ஸ், பிரின்ஸிபல் எல்லாம் பாராட்டுவார்கள் என்ன!
என்று அன்பாக சொன்னார்.

பேச்சுக்கள் ஒன்றும் வராமல் இன்னும் திரு… திரு என்று முழித்த படியே வெருண்டுகொண்டு நின்றேன் நான்.
வீடு பக்கத்திலைதானே.. இரண்டு.. இரண்டு புத்தகங்களாக வீட்டை கொண்டுபோய் படிக்க போவதென்றாலும் பறவாய் இல்லை.
என்று விட்டு அங்கிருந்த பொறுப்பான ஒருவரிடம், இங்க…! இந்த தம்பி கேட்கும் இரண்டு புத்தகங்களை கொடுங்கோ, தம்பி படிச்சுப்போட்டு திரும்பித்தருவார், பிறகு ரெண்டு ரெண்டாக தம்பியிட்ட கொடுங்கோ என்றார்.

பிறகு என்னிடம்…தம்பி பத்திரமாய் கொண்டுபோய் கிழிக்காமல் படிக்கவேண்டும், பேந்துவந்து இந்த அண்ணாட்ட குடுத்துட்டு வேற புத்தகம் எடுத்து கொண்டுபோம் என்ன என்றார்.
ஓம்..என்று உற்சாகத்துடன் தலையாட்டினேன்.
இவன்தான் தியாகத்திற்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் மனிதன், அகிம்சையின் மறுஉருவம், போற்றுதலுக்கு அப்பாற்பண்ட புண்ணியமான மாமனிதன் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கிவில்லை.

சரி தம்பி…என்று என் தலையை கோதிவிட்டு, அங்கிருந்த ஒரு மோட்டார் பைக்கில், முடமாவடி சந்திவழியாக சென்று மறையும்வரை அந்த உருவத்தை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருந்தேன்.
(இதை எழுதும்போதும் என் கண்களில் வழியும் நீரை இப்போதும் மறைக்கமுடியவில்லை)

இன்றும்கூட நல்லூர் மேற்குவீதியில் உள்ள அந்த நெல்லி மரத்தடியை பார்க்கும்போதும், யாழ்ப்பாணக் கோட்டை பகுதியில் நிற்கும்போதும் இதயத்தில் அசரீதியாக அந்த இடங்களில் தீர்க்க தரிசனமாக இவன் உதிர்ந்த வசனங்கள் காதுகளில்கேட்டு, கண்களை நனைக்கின்றது.

இரண்டு புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு அரக்க பரக்க முழித்துக்கொண்டு நின்ற என் அருகில் வந்த மைத்துனன் டேய்.. வாடா வீட்ட போகலாம் என்றான்.
ஓன்றுமே பேசாமல் வீடு சென்றடைந்து சாப்பிட்டுவிட்டு, எடுத்துவந்த முதலாவது புத்தகத்தை பார்த்த நான் திடுகிட்டேன். அது ஒரு சிறுவர் புத்தகம்தான் ஆனால் ஆங்கிலப்புத்தகம். ஆனால் அழகான நீழமான பின்னல் பின்னிய பெண்ணின் படம், இளவரச, இளவரசி கதை என்று படங்களைப்பார்த்து புரிந்தது!
அதை பிறகு வீட்டில் கேட்டு அறியலாம் என்று வைத்துவிட்டு, கொண்டுவந்த காந்தி பற்றிய புத்கத்தை திருப்புகின்றேன்.
காந்தி சிறுவயதாக இருந்தபோது தனது தாயாரின் நோன்பு நாளில் தாயார் உணவருந்திவிடவேண்டும் என்ற பாசம் கலந்த பதைபதைப்புடன் தொடங்கியது அந்த புத்தகம்.
ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!

அந்தவேளையில் பேரிடியாக ஒரு செய்தி கிழக்கில் இருந்து எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கின்றது. வீட்டில் அனைவரும் ஆளாளுக்கு அழுதுகொண்டிருக்கின்றார்கள்.
ஏன் எனப்புரியமால் நான் பரிதவித்துக்கொண்டிருக்கின்றேன்.
என்ன பிரச்சினை என்று ஒன்றும் புரியவில்லை.. அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…

-இலைகள் உதிரும் -

31 comments:

Unknown said...

வருகைக்கு நன்றிகள் முதலில்!

Unknown said...

சின்ன வயசிலேயே பெரிய ஞானம்...ஞானப்பால் குடித்தீர்களோ??ஹிஹி

Unknown said...

என்னய்யா ஒவ்வொரு பதிவு என்டிலையும் ஒவ்வொரு திருப்பம் வைக்கிறீர்கள்..

pichaikaaran said...

சரளமான நடை

shanmugavel said...

ஜனா ,நீங்கள் அதிர்ஷ்டசாலி !நல்ல அறிமுகம் சிறு வயதில் கிடைத்துவிட்டது.முடிவில் வைக்கும் சஸ்பென்ஸ் ஆவலைத்தூண்டுகிறது.நன்று.

sinmajan said...

அருமையாக ஒரு காலத்தைப் பதிந்து வைக்கிறீர்கள்..தொடருங்கள் ஜனா அண்ணா :)

Anonymous said...

முதன் முதலாக ஒரு பதிவை படித்து கண்கலங்குகிறேன் :(

Anonymous said...

கடந்த பதிவில் பின்னூட்டத்தில் நான் சொன்னது போல நீங்க பெரிய அதிஸ்டசாலி. ஒரு அகிம்சைவாதியின் கையால் காந்தியின் பற்றிய புத்தகத்தை வாங்கியுள்ளீர்கள்...

அவர் இறக்கும் போது நான் பிறக்கவில்லை ஆனாலும் இன்றும் நல்லூர் வீதியில் நின்று மக்கள் கதறிய அந்த காணோளியை பார்க்கும் போதும் நெஞ்சு கனத்துவிடும்.

Anonymous said...

///அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…

/// யாரை தான் விட்டு வைத்தது இந்த யுத்தம் :(

கார்த்தி said...

/* ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது! */

ஒரு நண்பன் எனக்கு சொன்ன ஒரு கருத்து. காந்தி பற்றி கட்டுக்கட்டாக புத்தகம் எழுதுவார்கள் திலீபன் தப்பென்பார்கள்...
உலகத்தில் எப்போதும் முதலிடத்திலிருக்கும் அகிம்சையின் கடவுள் அந்த மனிதர். அவரிடம் நீங்கள் புத்தகம் பெற்று படித்ததால்தான் நீங்கள் இவ்வாறு பூரணமாக இரக்கிறீர்கள். கடவுளிடம் கதைப்பது என்பது சும்மாவா?

கார்த்தி said...

தயவுசெய்து பிராசாந்தினி பற்றி நான் விட்ட தகவலை சொல்லுங்கள். மண்டை வெடிக்கும்போல இருக்கு!!

Chitra said...

அயலவர்கள் வந்து கேட்கும்போது வீட்டார்கள் சொன்ன பதிலில்த்தான் அறிந்துகொண்டேன். இந்த யுத்தத்தில் என் குடும்பத்தில் முதலாவது இழப்பு நிகழ்ந்துவிட்டது என்று…


...... மனதை கனக்க வைக்கும் வரிகள். ...... ம்ம்ம்.....

சக்தி கல்வி மையம் said...

மனதை கனத்த வைத்த பதிவு...

test said...

பார்ரா!!! யாரெல்லாம் வந்து அண்ணனைச் சந்திச்சிருக்காங்க என்று!

//ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!//
உண்மை! உண்மை!

நிரூபன் said...

இவன்தான் தியாகத்திற்கு ஒரு முத்திரை பதிக்கப்போகும் மனிதன், அகிம்சையின் மறுஉருவம், போற்றுதலுக்கு அப்பாற்பண்ட புண்ணியமான மாமனிதன் என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கிவில்லை.//

அஃதே...........அஃதே.......அஃதே......நீங்கள் பெரிய அதிஷ்டசாலி தான் பாஸ்.
நமக்கெல்லாம் இப்படியொரு வாய்ப்பு வரலையே என்று நோகுறேன் பாஸ்...

நிரூபன் said...

இடங்களில் தீர்க்க தரிசனமாக இவன் உதிர்ந்த வசனங்கள் காதுகளில்கேட்டு, கண்களை நனைக்கின்றது.//

ஒல்லியான, நீண்ட ஜீன்ஸ் போட்ட, உயரமான அந்தத் தோற்றம்...
பார்க்கும் போதே எல்லோர் மனங்களையும் இலகுவில் ஈர்த்து விடும் சகோ.

மக்கள்................வெடிக்......
சுதந்...........................மலர்.................
இவ் வரிகளுக்குச் சொந்தக்காரர். இவரின் இதே வரிகள் 2002ம் ஆண்டு தையில் யாழ் பல்கலையில் பொங்............தமி.....வாயிலாக நனவாகியது அல்லது நிறைவேறியது.

நிரூபன் said...

ஒரு முழு அகிம்சையின் கையினாலே ஒரு அகிம்சையை பற்றி படிக்கும் பாக்கியமல்லவா இது!//

அண்ணாச்சி, தேகமெல்லாம் புல்லரிக்க வைத்து விட்டீர்களே!
நிஜமாகவே உங்கள் எழுத்தினுள் நான் உள் இழுக்கப்பட்டு விட்டேன்.

Jana said...

@மைந்தன் சிவா
நன்றி மைந்தன்.
உண்மைதான் சின்னவயசில் குடித்த ஞானப்பால்கள் நிறைய ஆனால் இன்றுவரை ஜீரணமாகாமல் நெஞ்சுக்குள்ளே முற்றுப்பெறாத ஒரு ஆச்சரியக்குறியாக தொக்கி நிற்பதுதான் பெரிய கவலை

Jana said...

@பார்வையாளன்
நண்றி நண்பரே

Jana said...

@shanmugavel
நன்றி சண்முகவேல்.. அன்று அதிஸ்ரசாலியாகத்தான் நானும் உணர்ந்தேன். ஆனால் இன்று அத்தனையும் நினைக்கும்போது..இதயம் சுக்குநூறாக வெடிக்கின்றது.

Jana said...

@sinmajan
நன்றி சின்மஜன் நீண்ட நாட்களாக ஆளைக்காணவில்லை:)

Jana said...

@ கந்தசாமி.
நன்றி கண்டோஸ்..(கந்தசரியின் சோட் நேம்) கண்ணீர் விட்டா அன்று அவர்கள் வழர்த்தார்கள் ???

Jana said...

@கார்த்தி
நன்றி கார்த்தி உங்கள் நணபர் சொன்னது உண்மைதான்.

Jana said...

@FOOD
நன்றி ஐயா.. எல்லாம் தங்கள் போன்றவர்களின் அசீர்வாதம்தான்.

Jana said...

@Chitra
உண்மைதான் சித்ரா அக்கா.. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏராளம் கதையிருக்கும்.

Jana said...

@ !* வேடந்தாங்கல் - கருன் *!
நன்றி கருன்..கண்டிப்பாக உங்களை கலங்கவைக்கும் என்று எனக்கு தெரியும்.

Jana said...

@ ஜீ...
உண்மைதான் ஜீ...

Jana said...

@ நிரூபன்
உள்ளீர்க்கப்பட்டிருக்கும் உங்களை வெளிவிடுவதாக உத்தேசம் இல்லை :)

maadhumai said...

I am sure that when we are reading your memories, we are recollecting our memories of school days also.Those memories (in Eelam) are more stubborn...Keep writing...

Jana said...

@maadhumai
Thank you Maadhumai .

தனிமரம் said...

உண்மையில் நீங்கள் கெட்டிக்காரர் அவரை நேரில் பார்த்திருக்கிறீகள் நான் தொலைவில் பல தலைகள் மறைக்கும் போது நல்லூரில் வேறு வடிவத்தில் பார்த்தேன் ! விதியை நோவதைத்தவிர என்ன செய்யமுடியும்?

LinkWithin

Related Posts with Thumbnails