பெண்:
செம்பகப்பூ தோட்டத்திலே
செக்கல்பட்ட நேரத்திலை..
சேர்த்துவைச்ச காசைக்கொண்டு
“சேட்டு” ஒன்று வாங்கிவந்தேன்..
எங்கம்மா மச்சாள் பெற்றவனே
எருமை துரத்திப்;போனவனே..
வாருமையா இந்தப்பக்கம்..
வசம்பை வைச்சு தைச்சுடுவேன்..
தெத்திப்பல்லால் தெறிக்கும் எச்சில்
தெப்பமாக நனையவைக்கும்..
தெற்குப்பக்கம் நீ பார்த்தால்
வடக்காய் இருந்து பதில் தருவேன்..
ஆண்:
போதுமடி போக்கிலியே
போடியார் பெற்ற பொக்கட்டியே
“சேட்டு” ஒன்றை தந்துவிட்டு
சேறுபூசும் மூஞ்சூறே..
ஆதாரமாய் இருந்ததெல்லாம்..- உங்கப்பனுக்கு
சேதாரமாய் கொடுத்துப்புட்டான் எங்கப்பன்
கொடுத்த சொத்து வரட்டுமென்று
கொத்திக்கிறேன் உன்னை இன்று
பெண்:
அத்தனைக்கும் ஆசைப்படும்
அத்தைமகன் நீ எனக்கு
அடியளவில் தூரம் விட்டு
அங்குலத்தில் பார்ப்பதென்ன?
ஆண்:
தூரமில்லை தூறலில்லை
பக்கம் வந்தால் செத்துடுவாய்..
உதட்டு வைத்தியம் பார்க்கப்போவாய்..
இடுப்பு நோக இருக்கமாட்டாய்…
கண்ணளக்கும் இடத்தை எல்லாம்..
கையளக்கும் இந்தநொடி..
அச்சாரம்போடாமலே தூழி
முச்சாரம் ஆகிடும் 90 நாளில்..
பெண்:
வாய்சொல்லில் பேரழகா..
மாமான் பெத்த மாட்டழகா…
மதினி என்னை தொட்டுப்பார்க்க
மருண்டு வழிக்கும் முழி அழகா..
எத்தனைநாள்தான் ஏச்சுப்புட்டேன்..
அப்படி இப்படி காட்டிப்புட்டேன்
அப்படியும் புரியாத தேவாங்கே..
அண்ணாந்து பார்க்கும் அலவாங்கே..
வானத்தில் ஏறி வைகுண்டம் போகாத நீதான்
என் கூட்டுக்குள் வந்து கோழி பிடிப்பாயோ!
****ஓன்றுமில்லை கிராமியப்பாடல்கள், நாட்டார் பாடல்களில் ஆண்பெண் நக்கல் நையாண்டிப்பாடல்கள் சுவை கூட்டும், படிக்கும்போதே ஒரு மெட்டு நடைபோடும்.
அப்படியான கிராமிய நடையில் பதிவுகள் வருவதை இதுவரை அறிந்ததில்லை.
அதுதான் ஒரு புது முயற்சி.
இது ஒரு மைத்துனன் மைத்துனிக்கு இடையில் நடக்கும் சம்பாசனை, அவள் அவனுக்கு ஒரு சேட் (மேல் சட்டை) வாங்கிவந்து அவனுக்கு காத்திருக்கின்றாள்.
இருவரினதும் தாய்மார்கள் மைத்துனிகள், இந்த ஆணின் தந்தையின் தங்கைதான் அவளது அம்மா. இருவருக்கிடையிலான நையாண்டியே இந்தப்பாடல், போடியார் என்பது மட்டக்களப்பில் பாவிக்கும் ஒரு வார்த்தை, பொக்கட்டி என்றாள் கட்டையானவள் என்று அர்த்தம்..
அடுத்து முக்கியமாக அவள் அவனை பிடிக்கமுடியாது என்று சொன்னது முட்டை இடும் கோழியைத்தான் (தப்பா எல்லாம் நினைக்கக்கூடாது)
இதுதான் விளக்கம்.
33 comments:
உண்மையில் இது புது முயற்சி ஜனா ! வாழ்த்துக்கள்.நன்று
திடீரெண்டு பாட்டு போட நான் பயந்திட்டன்.....! இது புது முயற்சிதான்! வாழ்த்துக்கள்!
ஹிஹி ஏன் முட்டை போடாத அடை காக்கும் கோழி??
அதை இலகுவாக பிடித்துவிடலாம் என??ஹிஹி ஆனால்
கொத்தும் மோசமாக!!
கொக் கொக் கொக் கொக் கொக்கரக்கோ
போடியார் என்பது மட்டக்களப்பில் பாவிக்கும் ஒரு வார்த்தை,
இந்த விளக்கம் காணாது! இன்னும் கொஞ்சம் விளக்கமா சொல்லியிருக்கலாம் போடியார் என்றால் என்ன என்பதை!!
கவிதை அருமையாக இருக்கிறது.
ரசித்து படித்தேன்.
வாழ்த்துக்கள்.
எப்போதும் பிடிக்கும் இந்த நாட்டுப்புறப்பாடல் என்னிடம் சில சிக்கியிருக்கு வரும் சில பொழுதுகளில்.
போடியார் என்பது வேளாண்மை விவசாயம் பல ஏக்கர் கணக்கில் சொந்தமாய் செய்யவல்லவர்.
போடி என்றால் உழவர் பெருமகன்.
போடியார் என்பது குடிமக்களுக்கு தலைமை பூண்டு போஷிப்பார் என்பது போஷி என்ற சங்கத் தொடர்பைக் காட்டுகிறார் பண்டிதர் வி.சீ. கந்தையா.(மட்டக்களப்புத் தமிழகத்திலிருந்து)
இன்று வயற்சொந்தக்காரர்களின் கெளரவப்பட்டமாகவும் அமைகிறது.
வித்தியாசமான முயற்சி, கவிதை நடை அருமை, உண்மையிலே மெட்டு போட வைக்கிறது ...
அருமை. இதை போல, இன்னும் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். :-)
சந்தம் கலந்த கிராமியப் பாடல் அருமை சகோ. தொடர்ந்தும் இது போன்ற பல பதிவுகளை எதிர்பார்க்கிறேன். இது ஒரு வித்தியாசமான முயற்சி சகோ.
ரசித்து படித்தேன்
நல்லாருக்கு தேவையானவங்க யாரும் யூஸ்பண்ணிக்கலாம் !
எருமை துரத்திப்;போனவனே
சேறுபூசும் மூஞ்சூறே.
மாட்டழகா
அண்ணாந்து பார்க்கும் அலவாங்கே..
மருண்டு வழிக்கும் முழி அழகா.
அழகான வரிகள் சென்பகப்பூ உண்மையில் எத்தனை அழகு தொடருங்கள் மட்டக்களப்பு போடியார் வாழ்க்கை இன்னும் மாறவில்லை என்கிறான் என் நண்பன். துறை நீலாவணன்(எழில்வேந்தன் தந்தை) அழகாய் பல கவிதை இயற்றியதாக கேள்விப்பட்டேன்!
நான் வட இலங்கை சங்கீதசபை பரீட்சை எடுக்கும்போது இது மாதிரி பல பாடல்களை படித்திருக்கிறேன்!!
//Chitra said... on May 26, 2011 1:37 AM
அருமை. இதை போல, இன்னும் பாடல்களை அறிமுகப்படுத்துங்கள். :-)//
அறிமுகப் படுத்திறதா? அது அவர் எழுதிய பாடல் அக்கா!
அண்ணே! உங்களுக்குள்ள ஒரு பாடலாசிரியர் கோமா ஸ்டேஜில இருந்தது தெரியாமப் போச்சே இவ்வளவு நாளும்?
//அடுத்து முக்கியமாக அவள் அவனை பிடிக்கமுடியாது என்று சொன்னது முட்டை இடும் கோழியைத்தான் (தப்பா எல்லாம் நினைக்கக்கூடாது)//
எவ்வளவோ நம்புறோம்! இத நம்ப மாட்டமா? :-)
@shanmugavel
நன்றி சண்முகவேல்
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
திடீரென்று பாட்டப்போட்டால் பயப்படக்கூடாது...ஏனென்றால் போடுவது நாமளெல்லோ :)
@மைந்தன் சிவா
ம்ம்ம்... அனுபவம் பேசுது.. கனக்க பிடிபடுதுபோல :)
@ ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
பதிலை விரிவாக சிதறல்கள் - ரமேஸ்.. அருமையாக கீழே தந்திருக்காரே :)
@ Rathnavel
நன்றி ஐயா..
@றமேஸ்-Ramesh
நன்றி ரமேஸ்.. அருமையான விளக்கம். :)
@ FOOD
நன்றிகள் சார்...
@கந்தசாமி.
நன்றி கண்டோஸ். நீங்க மெட்டு என்றதும் தான் நினைவுக்கு வந்திச்சு.. இதேபோல தாளலயங்களும் இப்போ பெரிதாக இல்லாமல் போகின்றன அல்லவா?
@Chitra
அறிமுகம் இல்லையக்கா இது அரங்கேற்றம் :)
@நிரூபன்
நன்றி நிரூ..
உண்மையை சொல்லப்போனால், உங்கள் கிராமிப்பதிவை படித்தபோதுதான் இந்தப்பதிவுக்கான கரு மண்டைக்குள் பத்திக்கொண்டது.
@பார்வையாளன்
நன்றிகள் நண்பா..
@Balavasakan
ஆஹா... எப்படி எல்லாம் யோசிக்கிறீங்க டாக்டர்.
@ Nesan
உண்மைதான். நீலாவணன் கவிதைகளுக்கு நான் பெரும் இரசிகன்..
மக்கிமாக "ஊர் எல்லாம் கூடி இழுக்கும் தேர்" கவிதை எப்போதும் என் பேவர்.
அதில் முந்தாநாள் ஏறி முழுநிலவை தொட்டுவந்தவனின் சுற்றம்.. என்று உவமை கொடுக்கும் சிறப்பு என்னை அபரீதமாக பதின்மவயதுகளில் தொட்டுக்கொண்டது.
@கார்த்தி
ஆஹா.. சங்கீதமெல்லாம் அப்போ படித்திருக்கீங்களா! பதிவர்களே நோட் திஸ் பொயிண்ட்
@ஜீ...
முதலாவதுக்கு :
ஆ...அது...
இரண்டாவதுக்கு:
உர்ர்ர்ர்ர்....
மூன்றாவதுக்கு :
நீங்க ரொம்ப மோசம் ஜீ..
புதிய முயற்சிக்கு வாழ்த்துக்கள்
iஇது சினிமாப்பாட்டா? அண்னன் அண்ணீக்கு விட்ட ரூட்டா? ஹி ஹி
Post a Comment